2.6 திருக்குறள்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 2.6 – திருக்குறள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
மனப்பாடப் பாடல்
கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு.பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன். |
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. ஆண்மையின் கூர்மை ________
- வறியவருக்கு உதவுதல்
- பகைவருக்கு உதவுதல்
- நண்பனுக்கு உதவுதல்
- உறவினருக்கு உதவுதல்
விடை : பகைவருக்கு உதவுதல்
2. வறுமை வந்த காலத்தில் ________ குறையாமல் வாழ வேண்டும்.
- இன்பம்
- தூக்கம்
- ஊக்கம்
- ஏக்கம்
விடை : ஊக்கம்
3. ‘பெருஞ்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- பெரிய + செல்வம்
- பெருஞ் + செல்வம்
- பெரு + செல்வம்
- பெருமை + செல்வம்
விடை : பெருமை + செல்வம்
4. ‘ஊராண்மை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- ஊர் + ஆண்மை
- ஊராண் + மை
- ஊ + ஆண்மை
- ஊரு + ஆண்மை
விடை : ஊர் + ஆண்மை
5. ‘திரிந்து + அற்று’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________
- திரிந்ததுஅற்று
- திரிந்தற்று
- திரிந்துற்று
- திரிவுற்று
விடை : திரிந்தற்று
பொருத்துக.
1. இன்பம் தருவது | அ. நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் |
2. நட்பு என்பது | ஆ. குன்றிமணியளவு தவறு |
3. பெருமையை அழிப்பது | இ. செல்வம் மிகுந்த காலம் |
4. பணிவு கொள்ளும் காலம் | ஈ. சிரித்து மகிழ மட்டுமன்று |
5. பயனின்றி அழிவது | உ. பண்புடையவர் நட்பு |
விடை :- 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ, 5 – அ |
குறு வினா
1. எது பெருமையைத் தரும்?
காட்டு முயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதை விட யானைக்குக் குறி வைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும்.
2. நண்பர்களின் இயல்பை அளந்துகாட்டும் அளவுகோல் எது?
துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவுகோலாகும்.
3. இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது?
பண்பு உடைய சான்றோர்களால் இவ்வுலகம் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது
4. நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
- நட்பு, சிரித்துப் பேசி மகிழ்வதற்கு மட்டும் உரியது அன்று;
- நண்பர் தவறு செய்தால் அவரைக் கண்டித்துத் திருத்துவதற்கும் உரியது.
படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.
கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
கூடுதல் வினாக்கள்
சொல்லும் பொருளும்
- கான – காடு
- நகுதல் – சிரித்தல்
- நட்டல் – தவறு செய்தல்
- பிடித்தல் – திருத்துதல்
- ஆய்ந்து – ஆராய்ந்து
- கேண்மை – நட்பு
- கடை இறுதி
- மண்புக்கு – மண்ணுக்கு
- மாய்வது அறிவது
- களம் – பாத்திரம்
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. ________ நட்பு பழகப் பழக இன்பம் தரும்
- பகைவர்
- பண்புடையவர்
- அன்புடையவர்
- நண்பர்
விடை : பண்புடையவர்
2. நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் கருவி ________
- துன்பம்
- இன்பம்
- வலிமை
- பொறுமை
விடை : துன்பம்
3. பெருமை அழியக் காரணமாய் இருப்பது ________
- குன்றிமணியளவு தவறு
- பெரிய இன்பம்
- பேராசை
- பொறுமை
விடை : குன்றிமணியளவு தவறு
சிறு வினா
1. நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவது போலப் இன்பம் தருவது எது?
நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோலப் பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.
2. செல்வம் மிகுந்த காலத்திலும், வறுமை வந்த காலத்திலும் எவ்வாறு வாழவேண்டும்?
செல்வம் மிகுந்த காலத்தில் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும். வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் பெருமித உணர்வுடன் வாழவேண்டும்.
5. நற்பண்பு இல்லாதவன் பற்றி திருக்குறள் கூறுவதென்ன?
தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும். அதுபோல நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும்.
குறு வினா
1. பிறது மொழிதல் அணியை விளக்குக
இப்பாடலின் பயின்று வரும் அணி : பிறிது மொழிதல் அணி
இலக்கணம்:-
உவமை மட்டும் பொருளை பெற வைப்பது பிறது மொழிதல் அணி ஆகும்.
எ.கா.
கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
விளக்கம்:-
மேலே குறிபிப்பிடப்பட்டுள்ள திருக்குறளில் உள்ள உவமை, “விடா முயற்சியே பெருமை தரும்” என்னும் பொருளை பெற வைப்பதால் பிறது மொழிதல் அணி ஆயிற்று
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…