TN 8th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 2.1 – ஒன்றே குலம்

2.1 ஒன்றே குலம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 2.1 – ஒன்றே குலம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - ondray kulam

8th Std Tamil Text Book – Download

மனப்பாடப் பாடல்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே

– திருமூலர்

சொல்லும் பொருளும்

  • நமன் – எமன்
  • நாணாமே – கூசாமல்
  • சித்தம் – உள்ளம்
  • உய்ம்மின் – ஈடேறுங்கள்
  • நம்பர் – அடியார்
  • ஈயில் – வழங்கினால்
  • படமாடக்கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்

பாடலின் பொருள்

மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை இல்லை. கூசாமல் செல்லவேண்டிய நல்வழி இதைவிட வேறு இல்லை. உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின் இவற்றை நினைத்து ஈடேறுங்கள்.

படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒருபொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும்.

நூல்வெளி

  • திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.
  • இவர் இயற்றிய திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது.
  • இது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _______க் கண்டு அஞ்சமாட்டார்கள்.

  1. புலன்
  2. அறனை
  3. நமனை
  4. பலனை

விடை : நமனை

2. ஒன்றே _______ என்று கருதி வாழ்வபதை மனிதைப் பண்பாகும்.

  1. குலம்
  2. குளம்
  3. குணம்
  4. குடம்

விடை : குலம்

3. ‘நமனில்லை‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. நம் + இல்லை
  2. நமது + இல்லை
  3. நமன் + நில்லை
  4. நமன் + இல்லை

விடை : நமன் + இல்லை

4. ‘நம்பர்க்கு + அங்கு’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______

  1. நம்பரங்கு
  2. நம்மார்க்கு
  3. நம்பர்க்கங்கு
  4. நம்பங்கு

விடை : நம்பர்க்கங்கு

குறு வினா

1. யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?

மனிதர் அனைவரும் ஒரே இனம். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே என்பதை மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை

2. மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்ய வேண்டியது யாது?

மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர்

  • மனிதர் அனைவரும் ஒரே இனம்.
  • இறைவன் ஒருவனே என்பதை ஏற்றல்
  • அடியவர்களாகிய மக்களுக்குக் காணிக்கை கொடுத்தல்

ஆகியவற்றை செய்ய வேண்டும்

சிறு வினா

மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?

  • படங்கள் அமைந்த கோயிலில் இருக்கக்கூடிய இறைவனுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால், அப்பொருள் நடமாடும் கோயில் ஆகிய உடம்பை உடைய அடியார்களுக்கு சேராது.
  • ஆகையால் அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கு கொடுப்பதை போன்றதாகும்.

சிந்தனை வினா

அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய உதவிகளை செய்யாம்?

  • வீட்டு வேலைகளில் பெற்றோருக்க உதவி செய்யலாம்.
  • பேருந்தில் செல்லும்போது பெரியவர்களுக்கு நம் இடத்தை விட்டுக் கொடுக்கலாம்.
  • முதியவர்கள் சாலையை கடக்கும்போது அவர்களுக்கு உதவலாம்.
  • வகுப்பில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தரலாம்.

கற்பவை கற்றபின்

பிறர் துன்பம் கண்டு வருந்தி அவர்களுக்குத் தொண்டு செய்த சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.

  • மானுக்குப் பிணையாக வேடனிடம் நின்றவர் முகமது நபி
  • முல்லைக்கொடி வளர தேர் கொடுத்தவர் பாரிவள்ளல்
  • பசுங் கன்றுக்காக தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொண்டறவர் மனுநீதிச்சோழன்
  • புறாவுக்காகத் தன் சதையை அறிந்து கொடுத்தவன் சிபிசக்கரவர்த்தி
  • வாடிய பயிரைக் கண்டு வாடியவர் வள்ளலார்
  • தாழ்த்தப்பட்டோரின் கஷ்டத்தைப் போக்க உதவியவர் தந்தை பெரியார்

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. நாயன்மார்கள் _______ பேர்

  1. 61
  2. 63
  3. 62
  4. 64

விடை : 63

2. ‘தமிழ் மூவாயிரம்’ என்று அழைக்கப்படும் நூல் _______

  1. திருக்குறள்
  2. திருப்பாவை
  3. திருவெம்பாவை
  4. திருமந்திரம்

விடை : திருமந்திரம்

3. ‘ஒன்றே குலம்’ எனும் கவிதைப் பாடல் அமைந்துள்ள நூல் _______

  1. திருக்குறள்
  2. திருப்பாவை
  3. திருமந்திரம்
  4. திருவெம்பாவை

விடை : திருமந்திரம்

4. பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை நூல் _______

  1. திருக்குறள்
  2. திருமந்திரம்
  3. திருப்பாவை
  4. திருவெம்பாவை

விடை : திருமந்திரம்

5. ‘எமன்’ என்னும் பொருள் தரும் சொல் _______

  1. நமன்
  2. சித்தம்
  3. நம்பர்
  4. கோயில்

விடை : நமன்

6. ‘அடியார்’ என பொருள் தரும் சொல் _______

  1. எமன்
  2. உள்ளம்
  3. கலை
  4. நம்பர்

விடை : நம்பர்

7. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறியவர் _______

  1. திருவள்ளுவர்
  2. திருமூலர்
  3. சுரதா
  4. பாதியார்

விடை : திருமூலர்

8. ‘நாணாமே’ என்பதன் பொருள் _______

  1. பேசாமல்
  2. கூசாமல்
  3. கூறாமல்
  4. கருதாமல்

விடை : கூசாமல்

பொருத்துக

1. நமன் அ. வழங்கினால்
2. சித்தம் ஆ. எமன்
3. நம்பர் இ. உள்ளம்
4. ஈயில் ஈ. அடியார்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

சிறு வினா

1. எதனை பாராட்டுவது தவறானது?

மனிதர்களிடையே பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவது தவறானது.

2. எவ்வாறு அன்பு காட்ட வேண்டும்?

உலகமக்கள் அனைவரையும் உடன் பிறந்தாராகக் கருதி அன்புகாட்ட வேண்டும்.

3. எது இறைத் தொண்டாகும்?

பிறருக்கு ஏற்படும் பசி முதலிய துன்பங்களைத் தமக்கு ஏற்பட்டதாகக் கருதி அவற்றைப்போக்க முயல்வதே மனிதர்களின் சிறந்த கடமையாகும். அதுவே இறைத் தொண்டாகும்.

4. நடமாடும் கோயில் என்று திருமூலர் யாரைக் கூறுகிறார்?

நடமாடும் கோயில் என்று திருமூலர் அடியார்களாகிய மக்களை கூறுகிறார்

5. திருமூலர் வாழ்க்கை குறிப்பு எழுதுக

  • திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்
  • பதினெண் சித்தர்களில் ஒருவர்
  • திருமந்திரம் என்ற நூலை எழுதியுள்ளார்

6. திருமந்திரம் நூற்குறிப்பு எழுதுக

  • திருமந்திரத்தை இயற்றியவர் திருமூலர்
  • 3000 பாடல்களைக் கொண்ட நூல் இது
  • பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை நூல்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment