TN 8th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 1.5 – வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

1.5 வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 1.5 – வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - Vallinam Migum idangalum Miga idangaum

8th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக.

சுட்டுத் திரிபு வல்லினம் மிகும்
திசைப் பெயர்கள் வல்லினம் மிகும்
பெயரெச்சம் வல்லினம் மிகாது
உவமைத் தொகை வல்லினம் மிகும்
நான்காம் வேற்றுமை விரி வல்லினம் மிகும்
இரண்டாம் வேற்றுமை தொகை வல்லினம் மிகாது
வினைத் தொகை வல்லினம் மிகாது
உருவகம் வல்லினம் மிகும்
எழுவாய்த் தொடர் வல்லினம் மிகாது
எதிர்மறைப் பெயரெச்சம் வல்லினம் மிகாது

சிறு வினா

1. சந்திப்பிழை என்றால் என்ன?

வல்லினம்மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் தவறாகும். இதனைச் சந்திப் பிழை அல்லது ஒற்றுப்பிழை எனக் கூறுவர்

2. வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக.

இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரும் இடத்திலும், நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வரும் இடத்திலும் வல்லினம் மிகும்.

சான்று : தலையைக் காட்டு, எனக்குத் தெரியும்

3. வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தனை எழுதுக.

 1. அது சென்றது
 2. காய் தின்றேன்
 3. இலை பறித்தேன்
 4. எழுதாத பாடல்
 5. எழுதும்படி சொன்னேன்

மொழியை ஆள்வோம்

கேட்க.

நாட்டுப்பற்றை வளர்க்கும் நாடகங்களின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.

கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.

நான் விரும்பும் தலைவர்

தாயே! தமிழே! வணக்கம்

நான் விரும்பும் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களே! ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஏழ்மையான சூழலில் வளர்ந்து, நன்கு கல்வி கற்று, ஒழுக்கத்தில் சிறந்து, பேராசிரியராகி, அறிவியல் மேதையாகி, குடியரசுத் தலைவராகய உயர்ந்தார். தேவைக்காக தலைவர் ஆவோர் மத்தியில் சேவைக்காக தலைவராகிய ஒரு உன்னத தலைவர். கனவு காணாதே என்று சொன்னவர் மத்தியில் கனவு காணுங்கள் என ஊக்கப்படுத்திய தலைவர். “தூங்கும் போத வருவது கனவல்ல, உன்னைத் தூங்க விடாமல் செய்வது தான் கனவு என்ற இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டியவர். புத்தகங்கள் கனவுகள் வளர்க்கும் என்ற அடிக்கடி கூறுவார். புத்தங்களே ஒருவன் சிறக்க வைக்கும் என எண்ணம் கொண்டவர். அப்துல்கலாம் வழியில் நாமும் கனவுகளைக் காண்போம். எண்ணற்ற புத்தகங்களைப் படிப்போம். அவரைப்போல உயர்வோம் என்ற சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்.

நான் முதலமைச்சர் ஆனால்…

அனைவருக்கும் வணக்கம்

நான் முதல்வரானால் என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் உங்கள் முன் என்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்கிறேன். மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் என்பதையே இலட்சியமாக கொண்டுள்ளேன். எதிர்காலத்தில் நான் முதலமைச்சரானால் வேளாண்மையை முன்னேற்றம் செய்வேன். விவசாயிகள் அனைவரையும் அரசு ஊழியர் ஆக்குவேன். கல்வி என்பது பணம் இல்லாமல் கிடைக்கும் நிலையை உருவாக்குேவன். தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்களுக்கு மட்டுமே அரசுக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் சேரும் வகையில் சட்டம் கொண்டு வருவேன். தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை வகுத்த்து செயல்படுத்துவேன் என்ற சொல்லி நிறைவு செய்கிறேன்.

நன்றி! வணக்கம்!

சொல்லக்கேட்டு எழுதுக.

அனைவருக்கும் தலைவராகும் விருப்பம் இருக்கலாம். ஆனால் சிறந்த ஆளுமைப் பண்பும் அனைவரையும் கட்டுப்படுத்தும் திறனும் இருப்பவர்களால் தான் தலைவர்கள் ஆக முடிகிறது. எடுத்துக்காட்டாகப் பின்வரும் நிகழ்வைக் காணலாம். ஒரு விளையாட்டு அணியின் தலைவருக்கான தேர்வு நடந்தது. அணியின் பயிற்சியாளர் வீரர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளக் கேட்டுக்கொண்டார். சிலர் தங்களைத் தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப் என அறிமுகப்படுத்திக்கொள்ள, ஒருவர் மட்டும் தன்னை ‘இந்தியர்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர்தான் அணியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காரணம் மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டியதும், ‘இந்தியர்’ என்று குழுவாகச் சிந்தித்ததுமே ஆகும். இப்படிப்பட்ட தகுதிகள் இருந்தால் நீங்களும் தலைவர் ஆகலாம்.

அறிந்து பயன்படுத்துவோம் – எதிர்மறைச் சொற்கள்

வந்தது நீ அல்ல; பார்த்தது நான் அல்ல; நான் படித்த புத்தகம் இது அல்ல என்றெல்லாம் பேசுகின்றோம். இவையெல்லாம் சரியான தொடர்கள் அல்ல. எதிர்மறை வினைமுற்றுகள் பல உண்டு. அவற்றை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.

தன்மை

 • ஒருமை – நான் அல்லேன்.
 • பன்மை – நாம் அல்லோம்.

முன்னிலை

 • ஒருமை – நீ அல்லை
 • பன்மை – நீவீர் அல்லீர்

படர்க்கை

 • ஆண்பால் – அவன் அல்லன்
 • பெண்பால் – அவள் அல்லள்
 • பலர்பால் – அவர் அல்லர்
 • ஒன்றன்பால் – அஃது அன்று
 • பலவின் பால் – அவை அல்ல.

‘வேறு, உண்டு, இல்லை’ – ஆகியவை மூவிடத்திற்கும், ஐம்பாலுக்கும் பொதுவான சொற்கள் ஆகும்.

பிழைகளைத் திருத்தி எழுதுக.

1. அதைச் செய்தது நான் அன்று.

 • அதைச் செய்தது நான் அல்லேன்

2. பானையை உடைத்தது கண்ணன் அல்ல.

 • பானையை உடைத்தது கண்ணன் அல்லேன்

3. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை.

 • மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று

4. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.

 • சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்

5. பகைவர் நீவீர் அல்லர்.

 • பகைவர் நீவீர் அல்லீர்

எதிர்மறைச் சொற்களால் நிரப்புக.

1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை ___________

 • அல்ல

2. உங்களோடு வருவோர் ___________ அல்லோம்.

 • நாம்

3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் ___________

 • அல்லள்

4. ஈ மொத்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன ___________

 • அல்ல

5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் ___________ அல்லை.

 • நீ

கட்டுரை எழுதுக.

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு

முன்னுரை

இனிவரும் காலம் இளைஞர்கள் காலம். எனவே தான் இளைஞர்கள் நம் நாட்டின் வளர்ச்சிக்காகத் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.

இளைஞர்களின் சிறப்புகள்

இன்றைய இளைஞர்கள் திறமையிலும் அறிவிலம் சிறப்பு வாய்ந்தவர்களாக இருக்கினறனர். எனவே தான் அன்று விவேகானந்தர் என்னிடம் நூறு இளைஞர்களைக் கொடுங்கள். இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் டாக்டர் அப்துல் கலாம் அவர்களும் நம் நாட்டு இளைஞர்களின் கையில் தான் நம் நாட்டின் எதிர்காலம் உள்ளது என்று கூறினார்.

நாட்டு வளர்ச்சி

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வி, பொருளாதாரம், தொழில்துறை முன்னேற்றம் ஆகியவற்றை சார்ந்து அமைகிறது. ஒரு நாட்டினுடைய வளர்ச்சி என்பது அந்த நாட்டு இளைஞர்களின் வளர்ச்சி என்றே கூறலாம.

இளைஞர்களின் பங்கு

நன்கு கல்வி கற்ற இளைஞர்களால் தான் ஒரு நாடு வளர்ச்சியல் மேலாேங்கும். அத்தகைய வகையில் நன்கு கல்வி கற்று இளைஞர்கள் பலர் நம் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டுள்ளனர். எண்ணற்ற தொழில் துறைகளில் நம் இளைஞர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நம் நாட்டின் இளைஞர்கள் எண்ணற்ற புரட்சியினை எற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடைந்து நாட்டின் வளர்ச்சி மேலோங்கி நிற்கிறது.

உழவுத்தொழிலின் புதுமைகள்

நம் நாட்டின் முதன்மையான தொழில் உழவுத் தொழில் ஆகும். நலிந்து வரும் உழவர்களை காப்பாற்றுவதற்காக நவீன செயல்பாடுகளை நம் நாட்டு வேளாண்மைத் துறை மாணவர்கள் செய்துள்ளனர். வேளாண் பெருக்கத்திற்கு உரிய வழிகளை நம் இளைஞர்கள் தங்கள் ஆய்வின் மூலம் செய்து காட்டி அதிக வளர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர்.

முடிவுரை

“ஒரு நாட்டின் முதுகெலும்பு அந்த நாட்டு இளைஞர்கள்” என்றார் மகாத்மா காந்தி. அது முற்றிலும் உண்மையே! நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக செயல்பட்டு வருபவர்கள் இளைஞர்களே! என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

மொழியோடு விளையாடு

வட்டத்திலுள்ள எழுத்துகளால் சொற்களை உருவாக்குக

8th Standard - Vallinam Migum idangalum Miga idangaum - Sorkalai Uruvaaku

கருமை கடுமை
கரும்பு கடமை
நாடு பழமை
களை கடம்
வித்து வேற்றுமை
வேழம் கல்
கற்பு புதுமை
பல் நாற்று
வேல் நாடகம்
புல் நாம்
வேம்பு

சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துக.

 1. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
 2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
 3. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
 4. அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
 5. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
 6. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.

விடை :-

 1. அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
 2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
 3. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
 4. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
 5. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
 6. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.

நிற்க அதற்குத் தக…

என் பொறுப்புகள்…

 1. தலைமைக்குரிய பண்புகளை அறிந்து வளர்த்துக்கொள்வேன்.
 2. சமூக மாற்றத்திற்குக் காரணமான தலைவர்களின் வரலாறுகளை அறிந்து போற்றுவேன்.

கலைச்சொல் அறிவோம்.

 • குதிரையேற்றம் – Equestrian
 • ஆதரவு – Support
 • கதாநாயகன் – The Hero
 • வரி – Tax
 • முதலமைச்சர் – Chief Minister
 • தலைமைப்பண்பு – Leadership
 • வெற்றி – Victory
 • சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly

மொழியோடு விளையாடு

இந்தியப் பிரதமர்களின் பெயர்ப்பட்டியலை இணைத்தில் தேடி எடுத்து எழுதுக

 • ஜவஹர்லால் நேரு
 • குல்ஜாரிலால் நந்தா
 • லால் பகதூர் சாஸ்திரி
 • இந்திராகாந்தி
 • மொரார்ஜி தேசாய்
 • சரண் சிங்
 • ராஜீவ் காந்தி
 • வி.பி.சிங்
 • சந்திரசேகர்
 • பி.வி.நரசிம்மராவ்
 • அடல்பிகாரி வாஜ்பாய்
 • தேவே கெளடா
 • ஐ.கே.குஜ்ரால்
 • மன்மோகன் சிங்
 • நரேந்திரமோடி

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment