TN 8th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 3.3 – கொங்குநாட்டு வணிகம்

3.3 கொங்குநாட்டு வணிகம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 3.3 – கொங்குநாட்டு வணிகம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - kongunattu vanigam

8th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் ____________

  1. தொல்காப்பியம்
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. சிலப்பதிகாரம்

விடை : தொல்காப்பியம்

2. சேரர்களின் தலைநகரம் ____________

  1. காஞ்சி
  2. வஞ்சி
  3. தொண்டி
  4. முசிறி

விடை : வஞ்சி

3. பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது ____________

  1. புல்
  2. நெல்
  3. உப்பு
  4. மிளகு

விடை : நெல்

4. “ஆன்பொருநை” என்று அழைக்கப்படும் ஆறு ____________

  1. காவிரி
  2. பவானி
  3. நொய்யல்
  4. அமராவதி

விடை : அமராவதி

5. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ____________

  1. நீலகிரி
  2. கரூர்
  3. கோயம்புத்தூர்
  4. திண்டுக்கல்

விடை : கோயம்புத்தூர்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் ____________

விடை : சேலம்

2. “சுங்குடிச் சேலை”களுக்குப் புகழ்பெற்ற ஊர் ____________

விடை : சின்னாளப்பட்டி (திண்டுக்கல்)

3. சேரர்களின் நாடு ____________ எனப்பட்டது.

விடை : குடநாடு

4. பின்னலாடை நகரமாக ____________ விளங்குகிறது.

விடை : திருப்பூர்

குறு வினா

1. மூவேந்தர்களின் காலம் குறித்து எழுதுக.

மூவேந்தர்களின் காலத்தை வரையறுத்துக் கூறமுடியவில்லை. வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. இதனால் இவர்கள் பன்னெடுங் காலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை அறியலாம்.

2. கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?

கொங்குநாட்டுப் பகுதியில் காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருநை (அமராவதி) ஆகிய ஆறுகள் பாய்கின்றன.

3. ‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?

தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல். மலர் உற்பத்தியில் முதலிடம் வகிப்பதால், தமிழ்நாட்டின் ஹாலந்து என்று திண்டுக்கல் போற்றப்படுகிறது.

சிறு வினா

1. கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை?

  • வடக்கு எல்லை – பெரும்பாலை
  • தெற்கு எல்லை – பழனி மலை
  • மேற்கு எல்லை – வெள்ளி மலை
  • கிழக்கு எல்லை – மதிற்கூரை

2. கரூர் மாவட்டம் பற்றிய செய்திகளைச் சுருக்கி எழுதுக.

  • கரூர் நகரத்திற்கு “வஞ்சிமா நகரம்” என்ற பெயரும் உண்டு.
  • கிரேக்க அறிஞர் தாலமி கரூரைத் தமிழகத்தின் முதன்மை உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
  • நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிரடப்படுகின்றன.
  • கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன.
  • கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகக் கரூர் விளங்குகிறது.
  • தோல் பதனிடுதல், சாயம் ஏற்றுதல், சிற்ப வேலைகள் போன்ற தொழில்களும் நடைபெறுகின்றன.
  • பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாகக் கரூர் விளங்குகிறது.

நெடு வினா

கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டுவணிகம் குறித்து எழுதுக.

உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கி உள்ளனர். கடல் வணிகத்தில் சேர நாடு சிறப்புற்றிருந்தது.

உள்நாட்டு வணிகம்

  • சேர நாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்று இருந்தது
  • மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லின் விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்து என்பர்.
  • உப்பும், நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை அகநானூற்றின் 390வது பாடல் மூலம் அறியலாம்

வெளிநாட்டு வணிகம்

  • முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது.
  • இங்கிருந்து தான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானை, தந்தங்கள், மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • பொன்மணிமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடுகள் அமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டன.

சிந்தனை வினா

நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து வேறு எவையெல்லாம் உதவும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து கலைகள் பலவும், அறிவியல் கோட்பாடுகளும், பண்டைய தமிழறிஞர்களின் சிந்தனைகளை மீட்டுக் கொணர்வது, பொதுமைப் பண்பு, புத்தாக்க சிந்தனைகளும், பழைய நாகரிகங்களை வெளிக்கொணரும் அகழாய்வுகளும், பழந்தமிழ் இலக்கியங்களும் உதவும் என்று நான் கருதுகிறேன்.

கற்பவை கற்றபின்

உங்கள் மாவட்டம் பற்றிய செய்திகளைத் திரட்டி எழுதுக

எங்களுடைய மாவட்டம் தென்காசி மாவட்டம் ஆகும். முன்னொரு காலத்தில் தென்காசியை ஆட்சி புரிந்த பராகிராம பாண்டிய மன்னன் சிவபெருமானின் பக்தர்களுக்காக தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கோபுரத்தை கட்டினார். இங்குள்ள கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது. மேலும் இங்கு சுற்றுலாத்தளங்களான குற்றாலம், தேனருவி, புலியருவி, ஐந்தருவி அமைந்துள்ளன.

தென்காசியை அடுத்த மேலகரத்தில் திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றி திருகூடராசப்ப கவிராயர் பிறந்துள்ளார்.

விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் செங்கோட்டையில் பிறந்துள்ளார்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. மூவேந்தர்களில் பழமையானவர்கள் _____________

  1. சேரர்
  2. சோழர்
  3. பாண்டியர்
  4. பல்லவர்

விடை : சேரர்

2. விற்கொடி உடைய அரசன் _____________

  1. பல்லவன்
  2. பாண்டியன்
  3. சோழன்
  4. சேரன்

விடை : வில்

3. மீன் கொடியினை உடைய அரசன் _____________

  1. பாண்டியன்
  2. பல்லவன்
  3. சோழன்
  4. சேரன்

விடை : பாண்டியன்

4. சேரர்களின் ‘பூ’ _____________

  1. வேப்பம்பூ
  2. பனம்பூ
  3. அத்திப்
  4. தாழம்பூ

விடை : பனம்பூ

5. “கொங்குமண்டலச் சதகம்” என்னும் நூலை இயற்றியவர் _____________

  1. கண்ணதாசன்
  2. வாணிதாசன்
  3. கார்மேகக் கவிஞர்
  4. காளமேகப்புலவர்

விடை : கார்மேகக் கவிஞர்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கடற்போர் வெற்றி கண்ட சேரன் ___________

விடை : செங்குட்டுவன்

2.கோவன்புத்தூர் என்னும் பெயரே ___________ என்று மருவி வழங்கபட்டு வருகிறது

விடை : கோயம்புத்தூர்

3. பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டவது பெரியநகரம் ___________

விடை : ஈரோடு

4. தமிழகத்திலேயே ___________ இடம் பெறும் ஒரே ஊர் ஈரோடு

விடை : மஞ்சள் சந்தை

5. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா ___________

விடை : நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா

6. ஆயத்த ஆடைப் பூங்கா அமைந்துள்ள இடம் ___________

விடை : திருப்பூர்

6. முட்டைக் கோழி வளர்ப்பிலும், முட்டை உற்பத்தியிலும் இந்தியாவிலேயே முதன்மை வகிக்கும் மாட்டம் ___________

விடை : நாமக்கல்

7. மாங்கனி நகரம் ___________

விடை : சேலம்

8. பின்னலாடை நகரம் ___________

விடை : திருப்பூர்

9. மஞ்சள் சந்தை ___________

விடை : ஈரோடு

10. தமிழ்நாட்டின் ஹாலந்து ___________

விடை : திண்டுக்கல்

11. ஏழைகளின் ஊட்டி ___________

விடை : ஏற்காடு

பொருத்துக

1. தூத்துக்குடி தூங்கா நகரம்
2. சிவகாசி தீப நகரம்
3. மதுரை முத்து நகரம்
4. திருவண்ணாமலை குட்டி ஜப்பான்
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

குறு வினா

1. மூவேந்தர்கள் யாவர்?

சேரர், சோழர், பாண்டியர்

2. சேரநாட்டின் துறைமுகப் பட்டினங்கள் யாவை?

தொண்டி, முசிறி, காந்தளூர்

3. கொங்கு நாட்டு பகுதிகள் யாவை?

சேலம் மற்றும் கோவை பகுதிகள்

4. கொங்கு நாட்டுப் பகுதிகள் யாவை?

சேலம், கோவை பகுதிகள் கொங்கு நாட்டுப் பகுதிகள் ஆகும்

5. ஒரு நாட்டின் மக்களின் நாகரிக நல வாழ்விற்கு அடிப்படை எவை?

  • உழவுத் தொழில்
  • கைத்தொழில்

6. நீலகிரி மாவட்டத்தில் பெருமளவு பயிரிடப்படும் பயிர்கள் யாவை?

  • காப்பி
  • தேயிலை
  • உருளைக்கிழங்கு
  • கேரட்
  • முட்டைகோஸ்

7. கோவை மாவட்டத்தில் பெருமளவு பயிரிடப்படும் பயிர்கள் யாவை?

  • நெல்
  • வாழை
  • கரும்பு
  • காய்கறிகள்
  • பூக்கள்

8. திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமளவு பயிரிடப்படும் பயிர்கள் யாவை?

  • நெல்
  • சோளம்
  • திணை வகைகள்
  • வாழைப்பழம்
  • காய்கறிகள்
  • மலர்கள்

9. ஈரோடு மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்கள் யாவை?

  • நெல்
  • நிலக்கடலை
  • மஞ்சள்
  • கரும்பு
  • பருத்தி

10. திருப்பூரில் பயிரிடப்படும் பயிர்கள் யாவை?

  • நெல்
  • கரும்பு
  • பருத்தி
  • வாழை

11. நாமக்கல் மாவட்டத்தில் பயிரிடப்படும் பயிர்கள் யாவை?

  • நெல்
  • கரும்பு
  • சோளம்
  • நிலக்கடலை
  • பருத்தி
  • திராட்சை
  • ஆரஞ்சு
  • காப்பி
  • பாக்கு
  • ஏலம்

12. முசிறி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் யாவை?

முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது.

ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்

  • மிளகு
  • முத்து
  • யானைத் தந்தங்கள்
  • பட்டு
  • மணி

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்

  • பொன்
  • மென்மைமிக்க புடவைகள்
  • சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள்
  • பவளம்
  • செம்பு
  • கோதுமை

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment