TN 8th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 1.4 – ஆன்ற குடிப்பிறத்தல்

1.4 ஆன்ற குடிப்பிறத்தல்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 1.4 – ஆன்ற குடிப்பிறத்தல்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

8th Standard Tamil Guide - aandra kudipirathal

8th Std Tamil Text Book – Download

நூல்வெளி

  • பி.ச. குப்புசாமி சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர்.
  • இவர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாறறி ஓய்வு பெற்றவர்.
  • ஜெயகாந்தனாேடு நெருங்கிப் பழகி ஜெயகாந்தனாேடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியுள்ளார்.
  • இவர் எழுதிய ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி இங்குத் தரப்பட்டுள்ளது.

மதிப்பீடு

திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக.

முன்னுரை

ஒரு மாணவனின் உள்ளததில் ஆசிரியர் விதைத்த விதை எவ்வாறு பய்ன தந்நது என்பதை இக்கதை மூலம் காணலாம்.

காணாமல் போன வேட்டி

ஒரு சிற்றூர் பள்ளியின் தலைமை ஆசரியர் அவர். எளிய குடிசை வீடு தான் அவருடைய வீடு. ஒருநாள் காலை எட்டு முழு வேட்டியைத் தும்பைப் பூவைப் போலத் துவைத்து கொடியில் காயப் போட்டு விட்டு, பள்ளிக்குச் சென்றிருந்தார். பள்ளி முடிந்து வந்து பார்க்கும் போது, அந்த வேட்டியைக் காணவில்லை

ஊர் மக்கள் கூற்று

கிணற்றில் பல முறை தண்ணீர் எடுப்பதற்குச் சிகாமணி தான் அந்தப் பக்கம் அடிக்கடி வந்தான். எல்லோரும் வேலைக்கு போய் இருந்த நேரத்தில், அவன் அந்த வேட்டியை எடுத்து இருப்பான். சிகாமணியின் தந்தை பண்டுக் கிழவர். இவனும் ஒரு திருடன். இவன் மகனும் ஒரு திருடன் என்று ஊரார் கூறினார்கள்.

திருக்குறள் வகுப்பு

சிகாமணியின் மகன் சகாதேவன். அவனும் அந்த ஆசிரியரின் பள்ளியில் தான் நான்காம் வகுப்பு படிக்கிறான். வேட்டி விஷயத்தை அந்தப் பையனிடம் அவர் காட்டிக் கொள்ளவில்லை

அன்புடைமை ஆன்ற குடிபிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

என்னும் குறளை ஆசிரியர் நடத்தத் தொடங்கினார். சிறந்த குடியில் பிறப்பது யார் கையில் உள்ளது? எனவே திருவள்ளுவர் அப்படி கூறியிருக்க மாட்டார். அப்பன் திருடனாக இருக்கலாம். மகன் நல்லவனாக இருப்பான் என்று விளக்கம் தந்தார்.

சகாதேவன் செயல்

மதிய உணவிற்காக ஆசிரியர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞன் ஆசிரியரின் வேட்டியைக் கொண்டு வந்தான். இதனைச் சகாதேவன் கொடுத்தததாகவும் தாங்கள் நடத்திய பாடத்தால், அப்பா திருடி வைத்திருந்த உங்களுடைய வேட்டியை அவன் கொடுக்க சொன்னான் என்றான். ஊரார் ஒன்று கூடி விட்டனர்.

ஆசிரியரின் எண்ணம்

சிகாமணி தான் திருடன் என்பதை, அவன் மகன் சகாதேவன் சொல்லி விட்டான். “அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கலாம் வாருங்கள்” என்று ஆசிரியரை ஊரார் அழைத்தனர். சிகாமணிக்கு தண்டனை கிடைத்தால், சகாதேவனுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஆசிரியர் எண்ணினார். ஊரார் எவ்வளவு கூறியும் ஆசிரியர் ஏற்றுக் கொள்ளவில்லை. என் வீட்டில் திருடு போகவில்லை என்று நான் சாட்சியம் சொல்வேன் என்றார். மக்களுக்கு எல்லாம் புரிந்தது.

முடிவுரை

“வள்ளுவரின் குறட்பாக்கள் ஒருவரின் மனதை மாற்றம் செய்யும் என்பதில் ஐயமில்லை” என்பதை இக்கதை வாயிலாக நாம் அறிய முடிகின்றது. உலகப்பொதுமறை கற்று அதன் வழி நடப்போம்.

கற்பவை கற்றபின்

திருக்குறள் கருத்துக்களை உணர்த்தும் கதைகளை அறிந்து வகுப்பில் பகிர்கள

ஒருநாள் முயலும் ஆமையும் போட்டி ஒன்றை வைத்துக் கொண்டது. தொலைவில் தெரிந்த மலையுச்சியை யார் அடைகிறார்களோ? அவர்கள் தான் வெற்றி பெற்றவர் என்பது அப்போட்டியின் விதி. ஆமை மெதுவாகத்தான் செல்லும்; முயல் வேகமாகச் செல்லும். அதனால் முயல் ஆமையின் மீது அலட்சியம் கொண்டது.

முயல் ஒரு மரத்தடியின் தூங்கிவிட்டது. ஆனால் ஆமை மெதுவாக நகர்ந்த நகர்ந்து சென்று கொண்டே இருந்தது. ஆமையிடம் முயற்சி இருந்ததால், அது மலையுச்சியைப் போய் சேர்ந்தது.

முயல் முயற்சி செய்யாததால் கண்விழித்து பார்த்தது, தான் முயற்சி செய்யாததால் தோற்றுப் போனதை எண்ணி மிகவும் வருந்தியது. இதைத்தான் திருவள்ளுவர்.

“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்”

என்றார்

கூடுதல் வினாக்கள்

1. மனிதனின் வாழ்வில் கல்வியின் பங்கு யாது?

ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் உயர்த்துவதில் கல்வி பெரும்பங்கு வகிக்கிறது.

2. கல்வியின் நோக்கங்களை எழுதுக

புதிய செய்திகளைக் கற்பது மட்டும் கல்வியன்று. மனிதனின் உள்ளத்தில் புதைந்துகிடக்கும் நற்பண்புகளை வெளிக்கொண்டு வருவதும் அவனது வாழ்வில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதும் கல்வியின் நோக்கங்களாகும்.

3. பி.ச. குப்புசாமி – குறிப்பு வரைக

  • பி.ச. குப்புசாமி சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவர்.
  • இவர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாறறி ஓய்வு பெற்றவர்.
  • ஜெயகாந்தனாேடு நெருங்கிப் பழகி ஜெயகாந்தனாேடு பல்லாண்டு என்னும் நூலை எழுதியுள்ளார்.
  • இவர் எழுதிய ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் என்னும் நூலிலிருந்து ஒரு பகுதி இங்குத் தரப்பட்டுள்ளது

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment