3.3 கண்ணியமிகு தலைவர்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 3.3 – கண்ணியமிகு தலைவர். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காயிதேமில்லத் ______________ பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.
- தண்மை
- எளிமை
- ஆடம்பரம்
- பெருமை
விடை : எளிமை
2. ‘காயிதே மில்லத்’ என்னும் அரபுச் சொல்லுக்குச் ______________ என்பது பொருள்.
- சுற்றுலா வழிகாட்டி
- சமுதாய வழிகாட்டி
- சிந்தனையாளர்
- சட்ட வல்லுநர்
விடை : சமுதாய வழிகாட்டி
3. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதேமில்லத் ______________ இயக்கத்தில் கலந்து கொண்டார்.
- வெள்ளையனே வெளியேறு
- உப்புக் காய்ச்சும்
- சுதேசி
- ஒத்துழையாமை
விடை : ஒத்துழையாமை
4. காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் ______________
- சட்டமன்றம்
- நாடாளுமன்றம்
- ஊராட்சி மன்றம்
- நகர் மன்றம்
விடை : நாடாளுமன்றம்
5. ’எதிரொலித்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- எதிர் + ரொலித்தது
- எதில் + ஒலித்தது
- எதிர் + ஒலித்தது
- எதி + ரொலித்தது
விடை : எதிர் + ஒலித்தது
6. “முதுமை+மொழி” என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______________
- முதுமொழி
- முதுமைமொழி
- முதியமொழி
- முதல்மொழி
விடை : முதுமொழி
குறு வினா
1. விடுதலைப் போராட்டத்தில் காயிதே மில்லத் அவர்களின் பங்கு பற்றி எழுதுக.
- நாடு முழுவதும் விடுதலைப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஒத்துழையாமை இயக்கதத்தில் பங்கு கொள்ள காந்தியடிகள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
- காந்தியடிகளின் இத்தகைய வேண்டுகோள் காயிதேமில்லத்தின் மனதில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியது.
- கல்வியை விட நாட்டின் விடுதலையே மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.
2. காயிதே மில்லத் அவர்கள் தன் குடும்பத்திலும் எளிமையைக் கடைப்பிடித்தார் என்பதற்குச் சான்றாக உள்ள நிகழ்வை எழுதுக.
காயிதே மில்லத் அவர்கள் தன் மகனுக்கு திருமண செய்ய முடிவு செய்தார். பெரிய தலைவர் என்பதால் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடக்கும் என அனைவரும் நினைத்தனர். பெண் வீட்டாரிடம் மணக்கொடை வாங்காமல் மிக எளிமையாக மகன் திருமணத்தை நடத்தினார்
சிறு வினா
ஆட்சி மொழி பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தை விளக்குக.
ஆட்சி மொழி தேர்வு செய்யும் கூட்டத்தில் காயிதே மில்லத் “பழமையான மொழிகளில் ஒன்றைத்தான் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழி என்று தான் நான் உறுதியாகச் சொல்வேன்.
மண்ணிலே முதன் முதலாகப் பேசப்பட்ட மொழி திராவிட மொழிகள் தான். அவற்றுள் இலக்கிய செறிவு கொண்ட தமிழ் மொழி தான் மிகப்பழமையான மொழி. அதனைத் தான் நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சிந்தனை வினா
நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் எத்தகைய மக்கள் நலப்பணிகளைச் செய்வீர்கள்?
- தமிழை உலகமொழி ஆக்குவேன்.
- ஏழ்மை நிலையை ஒழித்து, அனைத்தும் அனைவருக்கும் என்பதை நடைமுறைக்கு கொண்டு வருவேன்.
- சாதி, மத ஏற்றத் தாழ்வுகளை நீக்குவேன்.
- இந்திய நதிகளை இணைப்பேன்.
கற்பவை கற்றபின்
எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த பிற தலைவர்கள் குறித்து வகுப்பறையில் பேசுக.
அனைவருக்கும் வணக்கம். எளிமையின் அடையாளமாகத் திகழ்ந்த காந்தியடிகள். அவர்களை பற்றி பேசுகிறேன்.
காந்தியடிகள் எளிமையின் சிகரமாக வாழ்நதவர். சிறிய துண்டு பென்சில், காகிதம் ஆகியவற்றைக் கூட குப்பையில் போடாமல் பிற பயன்பாட்டிற்காக வைத்துக் கொள்வார். ஆடம்பரத்தை அறவே வெறுத்தார். வழக்கத்திற்கு மாறாக வெறும் ஓரணாவைச் செலவு செய்த தன் மனைவியை கண்டித்தார். உண்ணக் கஞ்சி இல்லாதவர் மத்தியில் ஆடம்பரமாக அணிவது பாவம் என்றார். எளிமையான கதர் உடையே உடுத்தினார். தமது குடும்பத்தார் அனைவரையும் அதனையே உடுத்தச் செய்தார். நாமும் அவர் போல எளிமையாக வாழ்வோம். நன்றி.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கண்ணியமிகு என்னும் அடைமொழியால் சிறப்பிக்கப்படும் தலைவர் _______________
- காந்தியடிகள்
- காயிதே மில்லத்
- பெரியார்
- நேரு
விடை : காயிதே மில்லத்
2. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் மூண்ட ஆண்டு ___________
- 1962
- 1972
- 1982
- 1992
விடை : 1962
3. காயிதே மில்லத்தின் இயற்பெயர் ___________
- முகமது அலி
- முகமது ஜின்னா
- முகமது மைதீன்
- முகமது இசுமாயில்
விடை : முகமது இசுமாயில்
4. ஜமால் முகமது கல்லூரியை உருவாக்கியவர் ___________
- காந்தியடிகள்
- காயிதே மில்லத்
- பெரியார்
- நேரு
விடை : காயிதே மில்லத்
5. காயிதே மில்லத் ___________யை “நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
- தாய் மொழி
- தமிழ் மொழி
- ஆங்கில மொழி
- உருது மொழி
விடை : தமிழ் மொழி
வினாக்கள்
1. காயிதே மில்லத் பற்றி அறிஞர் அண்ணாவின் கருத்தினை எழுதுக
தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்.
2. காயிதே மில்லத் பற்றி தந்தை பெரியாரின் கூற்றினை கூறுக
இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்
3. எந்த முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தார்.
“கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை“ என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தார்.
4. காயிதே மில்லத் மேற்கொண்ட அரசியல் பணிகள் யாவை?
- 1946 முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்
- இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினர்
- இந்தியா விடுதலை பெற்றபின் மாநிலங்களவை உறுப்பினர்
- மக்களவை உறுப்பினர்
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…