3.4 தமிழ் ஒளிர் இடங்கள்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 7th Standard Tamil Lesson 3.4 – தமிழ் ஒளிர் இடங்கள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
மதிப்பீடு
நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால், சுற்றுலாக் கையேடு என்னும் பகுதியில் உள்ள இடங்களைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?
சரசுவதி மகால் நூலகம்
இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்று. இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1122 முதல் இயங்கி வருகின்றன. இங்குத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன.
தமிழ்ப் பல்கலைக்கழகம் – தஞ்சாவூர்
செம்மொழியாகிய தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம்
அமைய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படடையில் தமிழக அரசால் கி.பி. (பொ.ஆ.) 1981 இல் தோற்றுவிக்கப்பட்டது. வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது “ தமிழ்நாடு “ எனத் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ள து . 5 புலங்களும் 25 துறைகளும் உள்ளன.
உ.வே.சா நூலகம் – சென்னை
கி.பி. (பொ.ஆ.) 1942 இல் தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன. இங்கு 2128 ஓலைச்சுவடிகளும் 2941
தமிழ் நூல்களும் உள்ளன.
வள்ளுவர் கோட்டம் – சென்னை
இது தான் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை. தமிழக அரசு இதனை நிறுவியது. வள்ளுவர் சிலை 133 அடி உயரத்தில் உள்ளது. சிலையின் எடை 7000 டன் எடை கொண்டது. தமிழிரின் அடையாளம் இது.
சிற்பக் கலைக்கூடம் – பூம்புகார்
இது அதான் பூம்புகார் சிற்ப கலைக்கூடம் 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் சோழர்களின் தலைநகரம். இக்கூடம் எழுநிலை மாடம் கொண்டது. கண்ணகியின் வரலாறை விளக்கும் 49 சிற்பத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது.
இப்படி பல சிறப்புகள் கொண்ட இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.
கற்பவை கற்றபின்
1. உங்கள் மாவட்டத்திலுள்ள சுற்றுலா இடங்களின் சிறப்புகளை எழுதி வருக.
1. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
2. குற்றாலம் மெயின் அருவி
3. சிற்றருவி
4. அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில்
5. ஐந்தருவி
6. பழத்தோட்ட அருவி
7. குற்றாலம் படகு இல்லம்
8. பழைய குற்றால அருவி
9. புலியருவி
10. செண்பகாதேவி கோயில் மற்றும் அருவி
11. தேனருவி
12. குண்டாறு அணை
13. கண்ணுபுளிமெட்டு அருவி
14. மிக்கேல் அதிதூதர் திருத்தலம்
15. இலஞ்சி குமாரர் கோவில்
16. பூலித்தேவர் நினைவகம்
17. சங்கரநாராயண சுவாமி கோயில்
18. திருமலை கோயில்
19. புளியறை தட்சிணாமூர்த்தி திருக்கோயில்
20. கருப்பாநதி அணை
21. அடவிநயினார் அணை
22. எருமைசாவடி அருவி
23. குஷி நீர் பூங்கா
24. அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில்
25. தலையணை தீர்த்தப்பாறை அருவி
2. நீங்கள் கண்டுகளித்த இடங்களின் தனித்தன்மைகளை எழுதுக.
- நான் கண்டுகளித்த இடம் கற்றாலாம்.
- வேனிற் காலத்தில் குற்றாலத்தில் வீசும் காற்று மூலிகைகளின் அருங்குணங்களை இழந்து வரும் காட்டாற்று நீர் அருவியாக மூலிகை நீராகப் பொழியும்.
- தீராத நோய் கூட குற்றால அருவியில் குளித்தால் நீங்குமாம்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்வு செய்
1. தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ___________
- 1980
- 1981
- 1982
- 1983
விடை : 1981
2. உ.வே.சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு ___________
- 1948
- 1941
- 1942
- 1939
விடை : 1942
3. உ.வே.சா நூலகத்தில் ___________ ஓலைச்சுவடிகளும் ____________ தமிழ் நூல்களும் உள்ளன.
- 2124, 2947
- 2425, 2945
- 2126, 2943
- 2128, 2941
விடை : 2128, 2941
4. வள்ளுவர் கோட்டத்தின் உயரம் ___________
- 128
- 130
- 129
- 131
விடை : 128
5. திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு ___________ கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- 3,680
- 3,681
- 3,682
- 3,683
விடை : 3,681
6. “மருவூர்ப்பாக்கம்” என்னும் கடல் பகுதியும் “பட்டினப்பாக்கம்” என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகச் ___________ குறிப்பிடுகிறது.
- மணிமேலை
- சீவகசிந்தாமணி
- குண்டலகேசி
- சிலப்பதிகாரம்
விடை : சிலப்பதிகாரம்
குறு வினா
1. எந்த ஆண்டிலிருந்து தஞ்சை சரசுவதி மகால் நூலகம் இயங்கி வருவதாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றது.
தஞ்சை சரசுவதி மகால் நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1122 முதல் இயங்கி வருவதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
2. தமிழ்நாட்டின் மைய நூலகம் எது?
கி.பி. (பொ.ஆ.) 1896 இல் தொடங்கப்பட்ட கன்னிமாரா நூலகம் தமிழ்நாட்டின் மைய நூலகம் ஆகும்.
3. உலகத் தமிழ்ச் சங்கம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
மதுரை மாநகரின் தல்லாகுளம் பகுதியில் காந்தி அருங்காட்சியகம் அருகில்
உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுள்ளது.
4. தற்போது கீழ்த்திசை நூலகம் எங்கு இயங்கி வருகிது?
கீழ்த்திசை நூலகம் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் இயங்கி வருகின்றது
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…