2.3 பசிப்பிணி போக்கிய பாவை
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 2.3 – பசிப்பிணி போக்கிய பாவை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு ____________
- இலங்கைத்தீவு
- இலட்சத்தீவு
- மணிபல்லவத்தீவு
- மாலத்தீவு
விடை : மணிபல்லவத்தீவு
2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் ____________
- சித்திரை
- ஆதிரை
- காயசண்டிகை
- தீவதிலகை
விடை : ஆதிரை
சாெற்றொடரில் அமைத்து எழுதுக.
1. செடிகொடிகள்
- எங்கள் தோட்டத்தில் செடிகொடிகள் வளர்ந்திருந்தன
2. முழுநிலவு நாள்
- மும்பையில் முழுநிலவு நாள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது
3. அமுதசுரபி
- மணிமேகலை கையிலிருந்த ஓர் அட்சயபாத்திரம் அமுதசுரபி
4. நல்லறம்
- மணிமேகலை நல்லறம் போற்றியவள்
குறு வினா
1. அமுதசுரபியின் சிறப்பு யாது?
அமுத சுரபி பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல்
வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.
2. மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது?
வாழ்க்கைக்கு அறம் சாென்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது. எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவறை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூற வேணடும்.
மேலும் அவர்களுக்குப பெற்றோரை மதித்தல், முதியோரை பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும் என்று மணிமேகலை மன்னரிடம் வேண்டினாள்.
சிறு வினா
1. மணிபல்லவத்தீவு எவ்வாறு காட்சி அளித்தது?
எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள். பூத்துக் குலுங்கும் செடி கொடிகள். அடர்ந்த மரங்கள். இடையே பொய்கைகள். மனதை மயக்கும் காட்சிகள் என மணிபல்லவத்தீவு காட்சி அளித்தது
2. ‘கோமுகி“ என்பதன் பொருள் யாது?
கோமுகி என்து ஒரு பொய்கையின் பெயர். ‘கோ’ என்றால் பசு. முகி என்றால் முகம். பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப் பெற்றது.
சிந்தனை வினா
அறச்செயல்கள் என்று நீங்கள் எவற்றை எல்லாம் கருதுகிறீர்கள்?
பசித்தோர்க்கு உணவிடம், பிற உயிர்களை நேசித்தல், கொல்லாமை, உண்மையைப் பேசுதல், ஒழுக்கம் தவறாமை, பிறருக்கு பணம், உணவு, உடை போன்றவற்றை வழங்குதல், அன்பு செய்தல், துன்பத்தில் இருப்போருக்கு ஆறுதல் கூறல், குடிக்காமல் இருத்தல், தீய சொற்களைப் பேசாமல் இருத்தல்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. _________ பூம்புகார் நகரைச் சேர்ந்தவள்.
- கண்ணகி
- மணிமேகலை
- கோப்பெருந்தேவி
- ஆதிரை
விடை : மணிமேகலை
2. மணிமேகலையின் வேறு பெயர் _________
- பசிப்பிணி போக்கிய பாவை
- சமணத்துறவி
- தீயும் தீண்டாத தேவி
- வீர மங்கை
விடை : பசிப்பிணி போக்கிய பாவை
3. ____________ தோன்றுவது அமுதசுரபி பாத்திரம்
- சித்திரை முழுநிலவு நாள்
- வைகாசி முழுநிலவு நாள்
- பங்குனி முழுநிலவு நாள்
- புரட்டாசி முழுநிலவு நாள்
விடை : வைகாசி முழுநிலவு நாள்
4. ஐம்பெருங்காப்பியங்களில் பொருந்ததை கூறு
- மணிமேகலை
- வளையாபதி
- குண்டலகேசி
- கம்பராமயணம்
விடை : கம்பராமயணம்
5. “கோமுகி” என்பதன் பொருள் ____________
- ஆட்டின் முகம்
- கழுதையின் முகம்
- பசுவின் முகம்
- மனித முகம்
விடை : பசுவின் முகம்
6. தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவாேம்” என்றார் ____________
- பாரதிதாசன்
- சுரதா
- இராமலிங்கனார்
- பாரதியார்
விடை : பாரதியார்
7. “வெண்மணல்” பிரிக்க கிடைப்பது ____________
- வென் + மணல்
- வெண் + மணல்
- வெள்ளை + மணல்
- வெண்மை + மணல்
விடை : வெண்மை + மணல்
8. “கையிலிருந்த” பிரிக்க கிடைப்பது ____________
- கையில் + இருந்த
- கையிலி + ருந்த
- கையில் + லிருந்த
- கை + இருந்த
விடை : கையில் + இருந்த
8. பொருந்த இணையை தேர்ந்தெடு
- பேணல் – பாதுகாத்தல்
- பிணி – நோய்
- இல்லம் -காடு
- புள் – பறவை
விடை : இல்லம் -காடு
வினாக்கள்
1. உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குவது எது?
உணவே உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது.
2. “தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவாேம்” என்றவர் யார்?
பாரதியார்
3. பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது எதற்கு இணையானது?
பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது உயிர் கொடுப்பதற்கு இணையானது. அதுவே சிறந்த அறமாகும்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…