3.1 நானிலம் படைத்தவன்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 3.1 – நானிலம் படைத்தவன். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
சொல்லும் பொருளும்
- மல்லெடுத்த – வலிமைபெற்ற
- சமர் – போர்
- நல்கும் – தரும்
- கழனி – வயல்
- மறம் – வீரம்
- எக்களிப்பு – பெருமகிழ்ச்சி
- கலம் – கப்பல்
- ஆழி – கடல்
பாடலின் பொருள்
தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான். முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன்.
பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான். ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள்தோறும் அனுப்பி வணிகம் செய்தான். கப்பலில் உலகை வலம் வந்தான். அவன் எதற்கும் அஞ்சாதவன். ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுபவன்.
ஆசிரியர் குறிப்பு
- முடியரசனின் இயற்பெயர் துரைராசு.
- பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
- திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் __________
- மகிழ்ச்சி
- துன்பம்
- வீரம்
- அழுகை
விடை : வீரம்
2. “கல்லெடுத்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- கல் + அடுத்து
- கல் + எடுத்து
- கல் + லடுத்து
- கல் + லெடுத்து
விடை : கல் + எடுத்து
3. “நானிலம்” என்னும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
- நா+னிலம்
- நான்கு+நிலம்
- நா+நிலம்
- நான்+நிலம்
விடை : நான்கு+நிலம்
4. “நாடு+ என்ற” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______
- நாடென்ற
- நாடன்ற
- நாடுஎன்ற
- நாடுஅன்ற
விடை : நாடென்ற
5. “கலம்+ ஏறி” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______
- கலம்ஏறி
- கலமறி
- கலன்ஏறி
- கலமேறி
விடை : கலமேறி
சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. மாநிலம்
- தமிழ்நாடு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் ஆகும்
2. கடல்
- உலகில் பெருங்கடல்கள் ஏழு
3. பண்டங்கள்
- இனிப்பு பண்டங்கள் அனைவருக்கும் அதிகமாக பிடிக்கும்
நயம் அறிக
1. நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை சொற்களை எழுதுக
- கல்லெடுத்து – மல்லெடுத்த
- பெருமை – மருதம்
- பண்டங்கள் – கண்டங்கள்
- ஊராக்கி – பேராக்கி
- முக்குளித்தான் – எக்களிப்பு
- அஞ்சாமை – அஞ்சுவதை
2. நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள மோனை சொற்களை எழுதுக
- கல்லெடுத்து – கலமேறி
- மல்லெடுத்து – மறத்தால்
- நானிலத்தை – நாகரிக
- பண்டங்கள் – பயன்நல்கும்
- முக்குளித்தான் – முத்தெடுத்து
குறு வினா
1. நான்கு நிலங்கள் யாவை?
நான்கு நிலங்கள் என்பவை முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என்பவை ஆகும்.
2. தமிழன் எதற்கு அஞ்சினான்?
தமிழன், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.
3. தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?
முத்து, ஏலம், மிளகு ஆகியவற்றைக் வணிகம் நோக்குடன் கப்பலில் கண்டங்களைச் சுற்றி வந்தான்
சிறு வினா
1. தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினார்?
- தமிழன் கற்களும், முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பை திருத்தி பண்படுத்தினான்.
- தனது உடல் வலிமையால் வளத்தை பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையை பெற்றான்.
- முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என் நிலத்தை நான்கு வகைப்படுத்திய நாகரிக மனிதன் தமிழன் தான்.
2. தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?
- தமிழன் கற்களும், முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பை திருத்தி பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தை பெருக்கினான்.
- ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையை பெற்றான். முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என் நிலத்தை நான்கு வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன்
- பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களில் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றி கொடியை நாட்டினான்.
- முத்து, ஏலம், மிளகு ஆகியவற்றைக் வணிகம் நோக்குடன் கப்பலில் கண்டங்களைச் சுற்றி வந்தான். எதற்கும் அஞ்சுவான் ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.
சிறு வினா
1. தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினார்?
காடுகளில் வாழ்ந்த மனிதன் ஒரே இடத்தில் நிலையாக தங்கி வாழவில்லை. காடுகளில் வாழ்ந்தான். மரக்கிளைகளிலும், மரப் பொந்துகளிலும், குகைகளிலும் தங்கினான்.
ஆதிமனிதன் சிக்கிமுக்கிக் கற்களைப் பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான். குளிர், வெயில், மழை போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அதனால் இலைகள், தழைகள், மரப்பட்டைகள், விலங்குகளின் தோல்கள் ஆகியவற்றை உடையாக பயன்படுத்தினான்.
அக்காலத்தின் முக்கிய மாற்றம் உணவு ஆகும். அக்காலத்தில் தான் சக்கரமும் உருவாக்கப்பட்டது. அதன் விளைவாக பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் சென்றான். மேலும் சக்கரத்தை பயன்படுத்தி மண்பாண்டங்கள் செய்தான்.
உலோகத்தை கண்டுபிடித்தான். செம்பினால் கருவிகள் செய்தான். பயிரிடல் மூலமாக நிலையாக ஓரிடத்தில் தங்க ஆரம்பித்தான். தனக்காக வீடுகள் கட்டிக் கொள்ள ஆரம்பித்தான். இதன் விளைவாக ஊர்கள் தோன்றின. ஊர் அமைப்பிலிருந்து நகர அமைப்பாக அவனது வாழிடம் தோற்றம் பெற்றன. குளம், தானியக் களஞ்சியம், சாக்கடை வசதி என்று பெரும் மாற்றம் கண்டது. காட்டு வாழ்வு கிராம வாழ்வாகவும், ஊர் வாழ்வாகவும், நகர வாழ்வாகவும் விரிவானது. நகர வாழ்வைத் தொட்ட மனிதன் நாகரிக வாழ்வு வாழ ஆரம்பித்தான்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ____________ என்னும் சொல்லின் பொருள்போர்
- வலிமை
- துன்பம்
- கடமை
- சமர்
விடை : சமர்
2. கழனி என்ற சொல்லின் வேறு பெயர் ____________
- தோட்டம்
- காடு
- வயல்
- தோப்பு
விடை : வயல்
3. வீரகாவியம் படைத்தவர் ____________
- முடியரசன்
- தமிழன்பன்
- பாரதிதாசன்
- பாரதியார்
விடை : முடியரசன்
4. கடல் என்பதற்கு ____________ என்ற பெயர்
- பறவை
- காடு
- ஆழி
- கப்பல்
விடை : ஆழி
குறு வினா
முடியரசன் – குறிப்பு வரைக
- முடியரசனின் இயற்பெயர் – துரைராசு
- பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை ஆகிய நூல்களை எழுதியுள்ளார்
- திராவிட நாட்டின் வானம்பாடி என்றும் கவியரசு என்றும் பாராட்டப் பெற்றவர்
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…