TN 6th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 3.4 – ஒளி பிறந்தது

3.4 ஒளி பிறந்தது

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 3.4 – ஒளி பிறந்தது.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

6th Standard Tamil Guide - Oli Piranthathu

6th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

1. சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல்கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தது. தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளது. எவ்வகையான செயற்கைக் கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது. அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது. நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுள்ளன. பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி பெற்றுள்ளோம். இவற்றையெல்லாம் இந்தியாவின் வெற்றிகளாகக் கருதுகின்றேன்.

2. தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?

போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களைப் பொருத்திக் கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன். பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் கார்பன் இழைையக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் எனக்குப் பெருமகிழ்வை அளித்ததாகக் அப்துல் கலாம் கூறுகிறார்.

கூடுதல் வினாக்கள்

1. அப்துல்கலாம் வெற்றியடையும் வழிகளாக என கூறுவன எவை?

  • அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனியுங்கள்
  • வியர்வை! வியர்வை! வியர்வை!

2. அப்துல்கலாம் உலகின் முதல் விஞ்ஞானியாக யாரைக் கூறுகிறார்?

அப்துல்கலாம் கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகின் முதல் விஞ்ஞானியாக கூறுகிறார்.

3. அப்துல்கலாம் சூரியனுக்கு செல்லும் வழியென கூறியவை யாவை?

  • சூரியன் தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதால் ஒளியையும் வெப்பத்தையும் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.
  • அவ்வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு இன்றைய சூழலில் கவசங்கள் இல்லை.
  • வருங்காலத்தில் அதிகபட்ச வெப்பத்தைத் தாங்கும் கருவிகள் கண்டறியப்படலாம்.
  • அப்போது மனிதன் சூரியனையும் கூடச் சென்றடையலாம் என அப்துல் கலாம் யோசனை கூறியுள்ளார்.

4. அப்துல்கலாமுக்கு மிகவும் பிடித்த நூல் எது?

அப்துல்கலாமுக்கு தமிழில் மிகவும் பிடித்த நூல் திருக்குறள் ஆகும்.

5. அப்துல்கலாமின் வாழ்விற்கு வலு சேர்த்த குறள் எது?

‘அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்’

6. ‘லிலியன் வாட்சன்’ எழுதிய நூல் எது?

‘லிலியன் வாட்சன்’ எழுதிய நூல் விளக்குகள் பல தந்த ஒளி

7. விளக்குகள் பல தந்த ஒளி நூலில் கிடைத்ததாக கலாம் கூறியவை யாவை?

  • அறிவு
  • தன்னம்பிக்கை
  • மகிழ்ச்சி

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment