TN 4th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 7 – நீதிநெறி விளக்கம்

நீதிநெறி விளக்கம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 7 – நீதிநெறி விளக்கம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

4th Std Tamil Text Book – Download

நீதிநெறி விளக்கம்

அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவையஞ்சா ஆகுலச் சொல்லும் – நவையஞ்சி
ஈத்துணாச் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும்
பூத்தலின் பூவாமை நன்று

– குமரகுருபர்

நூல் குறிப்பு

  • நீதிநெறிகளை விளக்குவதற்குக் கருவியாக இருப்பதால் இந்நூல், நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.
  • திருக்குறளில் கூறப்பெற்றுள்ள அறவுரைகள் பலவற்றையும் தொகுத்துச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்நூல் விளக்குகிறது.
  • இந்நூலை இயற்றியவர் குமரகுருபரர்.

வாங்க பேசலாம்

1. செய்யுளின் பொருள் உணர்ந்து படித்து மகிழ்க.

  • பலர் நிறைந்த அவையிலே, உடல் நடுங்கித் தம் கருத்தை எடுத்துக்கூற முடியாமல் தடுமாறுபவர் பெற்ற கல்வியும்,
  • அவையினர் முன் கல்வியறிவில்லாதவர் பேசும் பொருளற்ற ஆரவாரச் சொல்லும்,
  • செய்யத் தக்கவற்றைச்செய்யாமையால் ஏற்படும் குற்றத்துக்கு அஞ்சிப் பிறருக்குக் கொடுத்து எஞ்சியவற்றை உண்ணாதவரின் செல்வமும்,
  • வறுமையுற்றவரிடத்தே உள்ள ஈகை போன்ற இனிய பண்புகளும் உண்டாதலை விட உண்டாகாமல் இருப்பதே நல்லது.

2. முதன்முதலில் மேடையில் பேசிய அனுபவத்தை வகுப்பில் பகிர்ந்து கொள்க.

  • நான் முதன்முதலில் மூன்றாம் வகுப்பில் மேடையில் பேசினேன். நான் பேச மேடையில் ஏறியதும் கைகளும், கால்களும் நடுங்கின.
  • நா வறட்சியுற்றது. என்னால் பேச முடியாமல் துன்புற்றேன்.
  • அப்பொழுது என் வகுப்பு ஆசிரியர் என் அருகில் வந்து “தைரியமாகப் பேசு, நான் உன் அருகில் இருக்கிறேன்” என்றார். நானும் தைரியமாகப் பேசினேன், பயம் போய்விட்டது.

சிந்திக்கலாமா!

ஜீனத் நன்றாகப் படிப்பவள். ஆனால், வகுப்பில் ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்லத் தயங்குவாள். அவள் கூச்சத்தை எவ்வாறு போக்கலாம்? 

  • முதலில் ஜீனத்தை சத்தமாக வகுப்பறையில் எழுந்து வாசிக்கச் சொல்ல வேண்டும்.
  • உனக்குப் பிடித்ததைப் பற்றிப் பேசு என்று கூற வேண்டும்.
  • அவனுடைய ஆசைகள் என்ன என்பதை அனைவரிடம் கூற வைத்தல் வேண்டும்.
  • இப்பொழுது அவளுடைய பயம் போய்விடும், அதன் பிறகு அவள் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறுவாள்.

சொல்பொருள்

  • மெய் – உடல்
  • விதிர்ப்பார் – நடுங்குவார்
  • கல்லார் – படிக்காதவர்
  • ஆகுலச்சொல் – பொருளற்ற ஆரவாரச் சொல்
  • நவை – குற்றம்
  • அஞ்சி – அச்சமுற்று
  • நல்கூர்ந்தார் – வறுமையுற்றார்
  • பூத்தல் – உண்டாதல்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. ‘நவை’ என்னும் சொல்லின் பொருள்?

  1. அச்சம்
  2. மகிழ்ச்சி
  3. வருத்தம்
  4. குற்றம்

விடை : குற்றம்

2. ‘அவையஞ்சி’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

  1. அவைய + அஞ்சி
  2. அவை + அஞ்சி
  3. அவை + யஞ்சி
  4. அவ் + அஞ்சி

விடை : அவை + அஞ்சி

3. “இன்னலம்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

  1. இன் + னலம்
  2. இன் + நலம்
  3. இனிமை + நலம்
  4. இனிய + நலம்

விடை : இனிமை + நலம்

4. ‘கல்லார்’ இச்சொல்லின் எதிர்ச்சொல்?

  1. படிக்காதவர்
  2. கற்றார்
  3. அருளில்லாதவர்
  4. அன்பில்லாதவர்

விடை : கற்றார்

வினாக்களுக்கு விடையளிக்க

1. கல்வி கற்றவரின் இயல்பு எவ்வாறு இருக்க வேண்டும்?

பலர் நிறைந்த அவையிலே, உடல் நடுங்கித் தம் கருத்தை எடுத்துக்கூறுவதே கல்வி கற்றவரின் இயல்பாகும்.

2. பொருளற்ற சொற்களை அவையினர் முன் பேசுபவர் யார்?

கல்வியறிவில்லாதவர் தான் பொருளற்ற சொற்களை அவையினர் முன் பேசுபவார்.

3. பூத்தலின் பூவாமை நன்று என்று நீதிநெறி விளக்கம் எவற்றைக் குறிப்பிடுகிறது?

தன்னால் செய்ய முடியாத செயல்களைச் செய்ய முயல்வதை விட செய்யாமல் இருப்பதே நன்று என்பதே இதன் பொருளாகும்.

முதல் எழுத்து ஒன்றிவரும் சொற்களைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக

  • வையஞ்சி – வையஞ்சா
  • ல்வியும் – ல்லார்
  • பூத்தலின் – பூவாம
  • வையஞ்சி – ல்கூர்ந்தார்

மொழியோடு விளையாடு

குறிப்புகளைப் படி. சொல்லிலிருந்தே சொல்லைக் கண்டுபிடி

4th Standard - Neethi Neri Vilakkam - Sollil Irunthu Solai Kandupidiவிலங்குகள் வாழுமிடம்

பாலைவனம் வனம்

4th Standard - Neethi Neri Vilakkam - Sollil Irunthu Solai Kandupidi

பூவின் வேறு பெயர்

பொன்மலர் மலர்

4th Standard - Neethi Neri Vilakkam - Sollil Irunthu Solai Kandupidi

பிறருக்குக் கொடுப்பது

கொடைக்கானல் கொடை

4th Standard - Neethi Neri Vilakkam - Sollil Irunthu Solai Kandupidi

விலங்குகளுக்கு மட்டும் உண்டு

வௌவால் வால்

4th Standard - Neethi Neri Vilakkam - Sollil Irunthu Solai Kandupidi

பால் தரும் வீட்டுவிலங்கு

கடற்பசு பசு

இணைந்து செய்வோம்

சங்கு சக்கரத்தைச் சுழற்றி கல்வியின் பெருமைகளை உணர்த்தும் சொற்றொடர்களை முறையாக எழுதுக

4th Standard - Neethi Neri Vilakkam - inainthu seivom

1. கல்வி கண் போன்றது

2. கல்வி நிகிர் ஏதுமில்லை

3. கல்வியே அழியாச் செல்வம்

அறிந்து கொள்வோம்

4th Standard - Neethi Neri Vilakkam - Arinthu kolvom

பொருள்:

ஊகாட்டின் நடுவே சுவைகள் நிறைந்த கொப்பாக கம்பீரமாக நிற்பது நல்ல மரங்கள் அல்ல; மாறாக கற்றறிந்த சபை நடுவே கொடுக்கப்பட்ட ஓலையை வாசிக்காமல் நிற்பவனே, “உண்மையான மரம்” என்று இப்பாடல் வரிகள் கூறுகின்றன

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. நீதிநெறி விளக்கம் – எழுதியவர்

  1. பாரதியார்
  2. திருவள்ளுவர்
  3. குமரகுருபரர்
  4. ஒளவையார்

விடை : குமரகுருபரர்

2. இனிய பண்புகளுள் ஒன்று …………

  1. புன்னகை
  2. ஈகை
  3. பாடுதல்
  4. புகழ்தல்

விடை : ஈகை

பொருத்துக

1. மெய் அச்சமுற்று
2. நவை குற்றம்
3. அஞ்சி உண்டாதல்
4. பூத்தல் குற்றம்
விடை : 1 – ஆ, 2 – ஆ, 3 – அ, 4 – இ

வினாக்களுக்கு விடையளிக்க

1. யாருடைய செல்வம் பயனற்றது?

செய்யத் தக்கவற்றைச் செய்யாமையால் ஏற்படும் குற்றத்துக்கு அஞ்சிப் பிறருக்குக் கொடுத்து எஞ்சியவற்றை உண்ணாதவரின் செல்வம் பயனற்றதாகும்,

2. எது இனிய பண்பு ஆகும்?

வறுமையுற்றவரிடத்தே உள்ள இனிய ஈகை போன்றவை இனிய பண்பு ஆகும்

3. நீதிநெறி விளக்கம் எனப் பெயர் காரணம் யாது?

நீதிநெறிகளை விளக்குவதற்குக் கருவியாக இருப்பதால் இந்நூல், நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment