வேலைக்கேற்ற கூலி
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 9 – வேலைக்கேற்ற கூலி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
வாங்க பேசலாம்
கதையை உம் சொந்த நடையில் கூறுக?
அழகாபுரி மன்னர் நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தார். அவரை எல்லோரும் புகழ்ந்து பேசுவர். இரத்தினபுரி மன்னர் இதனைக் கேள்விப்பட்டார். அவர் தன்னுடைய அமைச்சர்களிடம் “நானும் நன்றா ஆட்சி புரிகிறேன். நம் நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன். நம் நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன். ஆனால் என்னை யாரும் புகழவில்லையே” என்று கேட்டார்.
அமைச்சர் ஒருவர் கொஞ்சம் தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். “நான் சொல்வதை தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் அழகாபுரி மன்னருடன் ஒரு நாள் முழுவதும் இருந்து அவர் குடிமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை அறிந்து கொண்டால் அதனை நாமும் பின்பற்றலாம்” என்று கூறினார்.
அதன்படி இரத்தினபுரி மன்னர் அழகாபுரி நாட்டுச் சென்றார். இரு மன்னர்களும் நலம் விசாரித்துக் கொண்டனர். பிறகு இருவரும் அரசவைக்குச் சென்றனர். அழகாபுரி மன்னர் முடிந்த அளவு தீர்த்து வைக்கிறேன்” என்றார் மன்னர்.
விறகுவெட்டி “தன்னைப் போன்றோர்க்கு நாள்தோறும் இரண்டு ரூபாய் கூலியும் மன்னரிடம் பணிபுரிபவருக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டினான். மன்னன் “இதுபோல் எக்குறையும் வரக்கூடாது என்பதில் நான் கவனமாகத்தான் இருக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள். உங்கள் ஐயத்தை தீர்த்து வைக்கிறேன்” என்றார்.
மன்னர் அமைச்சர்களுள் ஒருவரையும விறகு வெட்டியையும் பார்த்து “அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதே? என்று பாரத்துவிட்டு வாருங்கள்” என்று கூறினார். விறகுவெட்டி வெளியல் சென்று உடனே திரும்பி வந்து ” ஒரு வண்டி செல்கிறது” என்று கூறினான்.
அந்ந வண்டியில் என்ன இருக்கிறது? எந்த ஊரிலலிருந்து வருகிறது? என்று மன்னர் கேட்ட கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் வெளியல் சென்று வந்து அவன் பதிலளித்தான். அப்போது அமைச்சர் உள்ளே நுழைந்தார். “நீங்கள் என்ன பார்த்ததீர்கள்?” என்று அமைச்சரிடம் மன்னர் கேட்டார்.
அமைச்சர் ஒரு கேள்விக்கு பல பதில்களை கூறி முடித்தார். விறகு வெட்டியோ மன்னர் கேட்ட ஒவ்வொரு வினாவிற்கும் வெளியே சென்று வந்து பதிலளித்தான். அமைச்சர் கூறியதைக் கேட்டு விறகுவெட்டி தன் தவற்றை உணர்ந்தான்.
மன்னரிடம் விறகுவெட்டி “அமைச்சரின் அறிவுக்கூர்மையும் என்னுடைய அறியாமையையும் புரிந்துக கொண்டன். அவரவர் திறமைக்கேற்ற வேலைக்கேற்ற கூலி கொடுப்பதுதான் நியாயம் என்பதை புரிந்து கொண்டேன்” என்றான்.
சிந்திக்கலாமா!
அமைச்சர் வண்டிக்காரரிடம் எல்லாத் தகவல்களையும் பெறுவதற்கு என்னென்ன கேள்விகளைக் கேட்டிருப்பார்? எழுதுங்கள்
- வண்டியில் என்ன இருக்கிறது?
- வண்டி எந்த ஊரில் இருந்து வருகிறது?
- எத்தனை மூட்டைகள் வண்டியில் இருக்கிறது?
- வண்டியிலுள்ள மூட்டைகளில் என்ன இருக்கிறது?
- எங்கிருந்து வண்டி வருகிறது?
- எங்கே வண்டி வருகிறது?
- யாரெல்லாம் வண்டியில் பயணம் செய்கிறார்கள்?
- வண்டி எப்போது திரும்பி வரும்?
- என்ன காரணத்திற்காக வண்டி விரைந்து செல்கிறது?
வினாக்களுக்கு விடையளிக்க
1. அழகாபுரி மன்னர் தம் குடிமக்களை எவ்வாறு நடத்தினார்?
அழகாபுரி மன்னர் அமைச்சர், விறகுவெட்டி என்ற வேறுபாடின்றி அனைவரையும் சரிசமாக நடத்தினார்.
2. விறகுவெட்டி, மன்னரிடம் தம் மனக்குறையாக என்ன கூறினார்?
மன்னர் விறகு வெட்டியான எங்களைப் போன்றோர்க்கு நாள்தோறும் இரண்டு ரூபாய் கூலியும் அமைச்சர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதுவும் தனக்குரிய மனக்குறையாக விறகுவெட்டி மன்னரிடம் கூறினான்.
3. மன்னர் அமைச்சரிடமும் விறகுவெட்டியிடமும் என்ன வேலை அளித்தார்?
அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறது? என்று பார்தது வரும்படி மன்னர் அமைச்சரிடமும், விறகுவெட்டியிடமும் கூறினார்
படத்தைப்பார்ப்போம் வினாக்கள் உருவாக்குவோம்
- வரிகுதிரை ஏன் கவலையுடன் காணப்படுகிறது?
- யானை என்ன செய்கிறது?
- சீறி பாயக்கின்ற விலங்கு எது?
- கரடி என்ன செய்கின்றது?
- குரங்கு எதில் ஊஞ்சலாடுகிறது?
மொழியோடு விளையாடு
சொல் உருவாக்கப்புதிர்
சொல் உருவாக்கப்புதிர் வடிவங்களை க்கொண்டு அவற்றிற்குரிய எழுத்துகளை எழுதிச் சொல் உருவாக்குக. ஒவ்வொரு வடிவமும் ஓர் எழுத்தைக் குறிக்கும்
விடை : வரி
விடை : திரை
விடை : குதி
விடை : வரை
விடை : குரை
விடை : குதிரை
விடை : வரிக்குதிரை
சொல் எழுதுக சொற்றொடர் அமை
மனம் : மனிதருக்கு நல்ல மனம் வேண்டும்
மணம் : பூக்கள் மணம் வீசும்
கலை : சீதா பேச்சு கலையில் சிறந்தவள்
களை : பயிர்களுக்கு இடையில் தோன்றுவது களை
கழை : மூங்கில் மறுபெயர் கழை
கரை : கோகிலா கடற்கரையில் நடந்து வந்தாள்
கறை : துணியில் கறை படியாமல் விளையாட முடியாது
இலை : தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது
இளை : உணவு உண்ணாத மனிதன் உடம்பு இளைக்கிறது
இழை : ஆடை பருத்தி இழையால் ஆனது
விடுபட்ட எழுத்துகளை நிரப்பி விடுகதைக்கு விடையைக் கண்டுபிடிக்க.
1. கரைந்து அழைப்பேன் நான் யார்?
விடை : காகம்
2. கடலில் கிடைப்பேன் நான் யார்?
விடை : சங்கு
3. சமையலுக்கு உதவுவேன் நான் யார்?
விடை : வெங்காயம்
4. இனிப்பாய் இருப்பேன் நான் யார்?
விடை : கரும்பு
நீண்ட தூரம் தாவிடுவேன் தவளையும் இல்லை
குதித்துக் குதித்து ஓடிடுவேன் குதிரையும் இல்லை
பையைத் தான் கொண்டிருப்பேன் சட்டையும் இல்லை
கண்டுபிடித்த எழுத்துகளை ஒன்று சேர்த்தால் வருவேன் நான் யார்?
விடை : கங்காரு
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…