முளைப்பாரி பாடல்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 4 – முளைப்பாரி பாடல். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
வாங்க பேசலாம்
முளைப்பாரி பற்றி அறிந்து வந்து வகுப்பறையில் பேசுக
ஒரு பானையில் மண் நிரப்பி அதில் நவதானியங்களை நெருக்கமாக தூவி, அதை வெயில் அதிகம் படாத ஒரு இடத்தில் நாலைந்து நாட்களுக்கு வைத்துவிடுவார்கள். தினமும் பானையில் இருக்கும் மண்ணிற்கு நீர் ஊற்றி வருவார்கள். எனேவ, பயிர் வகை, விதைகள் நெருக்கமாக பானையில் முளைத்து, வளர்ந்து நிற்கும் பானையை நோன்பிருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். இதையே முளைப்பாரி என்கிறோம். முளைப்பாடி இல்லாத மாரியம்மன் விழா இல்லை முளைப்பாரி பல்லாயிரம் வருட விவசாய வாழ்க்கையின் தொடர்ச்சியான விவசாய சடங்கு.
இது போன்று வேறு பாடல்களைக் கேட்டறிந்து வந்து வகுப்பறையில் பாடி மகிழ்க.
தன்னானே தானேனன்னே தன்னா நன்னானேதானேதன்னானே தானேனன்னே தன்னா நன்னானேவாசலிலே வேப்பங்கொத்து சொரு வைக்கனுண்டி வீடுவாசெல்லலாம் சாணமிட்டு மண்பானை கூட்டுக்குள்ளே அதில்மாட்டெருவும் ஆட்டெருவும் வளைபோட்ட பொண்டுகெளல்லாம் சின்னமுனைப்பூவும் பூத்துநிக்க கறிச்சோறு தின்பதெல்லாம் காரியத்தை நெஞ்சுக்குள்ளே முளைப்பாரி ஒப்பதாம் மும்மாரி பெஞ்சிடனும் ஆடியிலே கொடியேத்தி பாரியாத்தான் தூக்கிவந்தா தன்னானே தானேனன்னே |
சிந்திக்கலாமா?
மாட்டு எருவையும், ஆட்டு எருவையும் வயலுக்கு இடவேண்டும் என்று தாத்தா கூறுகிறார் ஆனால் அப்பாவோ, உடனே பலன் தருவது செயற்கை உரம் தான் என்கிறார். யார் கூறுவது சரி?
இருவரும் கூறுவது சரிதான்
மாட்டு எருவையும், ஆட்டு எருவையும் வயலுக்கு இடுவதனால் அவைகள் இயற்கை உரமாக இருப்பதனால், இயற்கை வேளாணமைக்கு உதவுகிறது. உடலுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத ஆரோக்கியமான உணவுப்பொருட்களை தருகிறது. மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிரிகள் வாழவும் வழிவகை செய்கிறது.
செயற்கை உரம் இடுவதால் உடனே பலனைத்தரும். ஆனால் அதனால் வேதிப்பொருட்கள் மண்ணில் கலந்து மண் வளம் பாதிக்கப்படுகிது. நூண்ணுயிருகளும் அழிந்து விடுகிது. மனித உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். வேதிப்பொருட்கள் கலந்த உணவையே தருகிறது. அதனால் மனிதன் தனது ஆரோக்கியத்தை இழந்து பல நோய்களுக்கு உட்படுகிறான். இருவர் கூறுவதும் சரியாக இருந்தாலும், இயற்கை உரங்களை வயலுக்கு இடுவதே நல்லது. அதுவே மனித ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.
பொருள் தருக
1. முளைப்பாரி = ______________
விடை : முளையிட்ட நவதானியங்கள் நிறைந்த சிறு மண்பாண்டம்
2. தையலர் = ______________
விடை : பெண்கள்
3. ஓலைக்கொட்டான் = ______________
விடை : ஓலையால் முடையப்பட்ட சிறு கூடை
4. மாட்டாந்தொழு = ______________
விடை : மாடு கட்டும் இடம்
5. ஆட்டாந்தொழு = ______________
விடை : ஆடு கட்டும் இடம்
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “இரண்டெடுத்து” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………………
- இரண் + டெடுத்து
- இரண்டு + எடுத்து
- இரண்டெ + டுத்து
- இரண்டெ + எடுத்து
விடை :இரண்டு + எடுத்து
2. “பொங்கலிட்டு” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
- பொங்கல் + இட்டு
- பொங்கல் + லிட்டு
- பொங்க + இட்டு
- பொங் + கலிட்டு
விடை பொங்கல் + இட்டு
3. “ஆடு + எரு” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் …………………………..
- ஆடுஎரு
- ஆடெரு
- ஆட்டெரு
- ஆடொரு
விடை: ஆட்டெரு
4. “செவ்வாய் + கிழமை” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் ……………………….
- செவ்வாய்கிழமை
- செவ்வாய்க்கிழமை
- செவ்வாகிழமை
- செவ்வாக்கிழமை
விடை: செவ்வாய்க்கிழமை
5. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக
- சோளத்தட்டு = சோளம் + தட்டு
- மாட்டெரு = மாடு + எரு
இப்பாடலில் ஒரே சொல் இரண்டு முறை அடுத்தடுத்து வருவதைக் கண்டறிந்து எழுதுக -அடுக்குத்தொடர்.
கணுக்கணுவா, சுளைசுளையா
இப்பாடலில் இடம்பெற்றுள்ள ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.
|
|
இப்பாடலில் இடம்பெற்றுள்ள முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
|
|
மேகத்திலுள்ள பேச்சு வழக்குச் சொற்களைக் குடையிலுள்ள எழுத்து வழக்குச் சொற்களுடன் இணைத்துக் காட்டுக.
- ஒசந்த – உயர்ந்த
- செவ்வா – செவ்வாய்
- வாங்கியாந்த – வாங்கி வந்த
- ஊறவச்சி – ஊறவைத்து
- முறிச்சி – முறித்து
- மொளபோட்ட – முளைக்க வைத்த
அறிந்து கொள்வோம்
நவதானியங்கள் எவை என அறிந்து கொள்வோமா…
|
|
செயல் திட்டம்
பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான எழுத்து வழக்குச் சொற்களை எழுதுக
பேச்சுவழக்கு | எழுத்து வழக்கு |
படிச்சான் | படித்தான் |
ஓடியாந்தான் | ஓடி வந்தான் |
காத்தால | காலையிலே |
நோம்பு | நோன்பு |
இங்கிட்டு | இந்தப்பக்கம் |
போயிட்டு வாறேன் | போய் வருகின்றேன் |
சிலவு | செலவு |
பதட்டம் | பதற்றம் |
ஆப்பை | அகப்பை |
அண்ணாக்கயிறு | அரைஞாண் கயிறு |
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…