TN 4th Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 1 – அன்னைத் தமிழே!

அன்னைத் தமிழே!

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 1 – அன்னைத் தமிழே! We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

4th Standard Tamil Guide - Annai Thamilae

4th Std Tamil Text Book – Download

சிந்திக்கலாமா!

நாம் வளரும்போதே நம்முடன் சேர்ந்து வளர்வது தமிழ்மொழி எவ்வாறு கலந்துரையாடுக.

கவிதா அமுதா! நாம் பேசுவது என்ன மொழி?
அமுதா நாம் பேசுவது தமிழ்மொழி.
கவிதா  நாம் ஏன் தமிழ்மொழி பேசுகிறோம்?
அமுதா  தமிழ் நம் தாய்மொழி அதனாலேயே பேசுகிறோம்.
கவிதா  நாம் எப்போதிலிருந்து தமிழ்மொழி பேசுகிறோம்?
அமுதா  நாம் எப்போது பேசி பழகுகிறோமோ அப்போதிலிருந்து தமிழ் மொழியை பேசுகிறோம்.
கவிதா  ஏன் தமிழ் மொழியை பேச வேண்டும்?
அமுதா  நாம் தமிழ் நாட்டில் பிறந்ததனால் தமிழ்மொழி தாய்மொழியாக விளங்குகிறது. ஒவ்வொருவருக்கும் தாய்மொழி உயிர் போன்றது. உயிரை யாராவது வெறுப்பார்களா? அதனாலேயே தாய் மொழியாகிய தமிழ்மொழியைப் பேச வேண்டும்.
கவிதா  அப்படியானால் நாம் வளரும் போதே நம்முடன் சேர்ந்து வளருமா நம்முடைய தாய்மொழி?
அமுதா  ஆம்! கட்டாயமாக வளரும். எப்படியென்றால், நாம் முதலில் சொல்லிப்பழகிய எழுத்து அ. ஆ” சொல்லியப் பழகிய வார்த்த்தை “அம்மா, அப்பா”. ஆனால் இன்று தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் அறிந்துள்ளோம் வாசிக்கின்றோம். அதைப்போல அதிகமான சொற்களைப் பேசுகின்றோம், எழுதுகின்றோம், வாசிக்கின்றோம். அப்படியென்றால் நம்முடன் சேர்ந்து தமிழ்மொழியும் வளர்ந்துள்ளது என்றுதானே அர்த்தம். அதுதான் உண்மையும் கூட என்பது புரியவில்லையா?
கவிதா  புரிந்து கொண்டேன். உண்மைதான் அமுதா புரிய வைத்ததற்கு உனக்கு நன்றி!
அமுதா  நன்றி கவிதா!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. “அன்னை + தமிழே” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் __________

  1. அன்னந்தமிழே
  2. அன்னைத்தமிழே
  3. அன்னத்தமிழே
  4. அன்னைதமிழே

விடை : ஆ) அன்னைத்தமிழே

2. “பிறப்பெடுத்தேன்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. பிறப் + பெடுத்தேன்
  2. பிறப்பு + எடுத்தேன்
  3. பிறப் + எடுத்தேன்
  4. பிறப்ப + எடுத்தேன்

விடை : பிறப்பு + எடுத்தேன்

3. “மறந்துன்னை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________

  1. மறந்து + துன்னை
  2. மறந் + துன்னை
  3. மறந்து + உன்னை
  4. மறந் + உன்னை

விடை : மறந்து + உன்னை

4. “சிறப்படைந்தேன்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. சிறப்பு + அடைந்தேன்
  2. சிறப் + அடைந்தேன்
  3. சிற + படைந்தேன்
  4. சிறப்ப + அடைந்தேன்

விடை : சிறப்பு + அடைந்தேன்

5. “என்னில்” என்ற சொல்லின் பொருள் ____________________

  1. உனக்குள்
  2. நமக்குள்
  3. உலகுக்குள்
  4. எனக்குள்

விடை : எனக்குள்

வினாக்களுக்கு விடையளி

1. சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் யார்?

சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் தமிழன்னை ஆவாள்

2. எதைச் சொல்ல முடியவில்லை என்று இப்பாடலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்?

தமிழ்ச் சொல்லினால் தமிழன்னையின் புகழைச் சொல்ல முடியவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

3. இப்பாடலின் ஆசிரியர் அன்னைத் தமிழை எவ்விதம் புகழ்கிறார்?

என் அன்னையாகிய தமிழே! என் உயிரில் கலந்தவளே! என்னை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், என் உடன் சேர்ந்து வளர்பவளே! உன்னைப் புகழ்வதற்காகவே இவ்வுலகில் பிறந்துள்ளேன். சொல்லைக் கொண்டு விளையாடுவதற்குச் சொல்லிக் கொடுத்தவளே! அதே சொல்லினால் உனது புகழை என்னால் கூற முடியவில்லையே! என்று ஆசிரியர் அன்னைத் தமிழை எவ்விதம் புகழ்கிறார்

இப்பாடலில் இடம் ­பெற்றுள்ள ஒரே எழுத்தில் ­தொடங்கும் சொற்களை எடுத்து எழுதுக.

  • ன்னை – ன்னில்
  • ன்னை – லகில்
  • சொல்லில் – சொல்லித்
  • சொல்லித் – சொல்ல

இப்பாடலில் இடம் ­பெற்றுள்ள ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.

  • வளர்ப்பவளே – வளர்பவளே
  • கலந்தவளே – தந்தவளே
  • ன்னை – என்னை
  • ன்னை – உன்னை

செயல் திட்டம்

மொழியின் சிறப்பினைக் கூறும் இரண்டு பாடல்களை எழுதி வந்து படித்து / பாடிக் காட்டுக

1.

தமிழே உன்னை!

தேன் என்பேன் பால் என்பேன்
தெவிட்டாத சுவை என்பேன்

மலர் என்பேன் மணமம் என்பேன்
மயக்கும் நல் மது என்பேன்

கனி என்பேன் அமுது என்பேன்
கவலை நீக்கும் மருந்து என்பேன்

கலை என்பேன் சிலை என்பேன்
கற்பனை என்பேன் உடல் என்பேன்

உயிர் என்பேன் உள்ளத்தின் உணர்வென்பேன்

2.

தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்த
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

பாடலை நிறை செய்வோம்

4th Standard - Annai Thamilae - Padalai Niraivu Seivom

பட்டாம் பூச்சி பறந்து வா
பறக்கும் பூவாய் விரைந்து வா
பட்டுமேனி ஓவியம்
பார்க்க பார்க்கப் பரவசம்
தொட்டு உன்னைப் பார்க்கவா
தோழனாக ஏற்றுக் கொள்ள வா

சொல் உருவாக்கலாமா?

4th Standard - Annai Thamilae - Sol uruvakkalama

  • குழந்தை
  • கவியரசர்
  • அன்னை
  • அரசர்
  • தமிழ் மொழி
  • தந்தை

 வண்ணம் தீட்டி மகிழ்வோம்

4th Standard - Annai Thamilae - Vannam Theeti Magilvom

அறிந்து கொள்வோம்

4th Standard - Annai Thamilae - Arinthu kolvom

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

1. அன்னைத் தமிழே பாடலின் ஆசரியர் __________ ஆவார்.

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. நா. காமராசன்
  4. கவிமணி

விடை : நா. காமராசன்

2. “ஆவி” என்ற சொல்லின் பொருள் ………..

  1. உயிர்
  2. மரம்
  3. குதிரை
  4. உடல்

விடை : உயிர்

3. “வளர்ப்பு + அவளே” என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைப்பது ______________

  1. வளர்ப்பவளே
  2. வளர்ப்புஅவேளா
  3. வளர்த்தவளே
  4. வளர்அவளே

விடை : வளர்ப்பவளே

4. “பிறந்து + உள்ளேன்” என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைப்பது ______________ 

  1. பிறந்துஉள்ளேன்
  2. பிறந்தள்ளேன்
  3. பிறத்துள்ளேன்
  4. பிறந்துள்ளேன்

விடை : பிறந்துள்ளேன்

5. “இ + உலகில்” என்பதனைப் சேர்த்து எழுதக் கிடைப்பது ______________

  1. இத்துலகில்
  2. இத்தலகில்
  3. இவ்வுலகில்
  4. இஉலகில்

விடை : இவ்வுலகில்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment