TN 3rd Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 8 – நட்பே உயர்வு

நட்பே உயர்வு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 8 – நட்பே உயர்வு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

3rd Standard Tamil Guide - Natpe Uyarvu

3nd Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

அன்பை மறவா முயல் கதையை உமது சொந்த நடையில் கூறுக.

காட்டில் முயலும் மானும் நெடுநாள் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. அக்காட்டில் வாழ்ந்த நரிக்கு மானை எப்படியாவது வேட்டையாடி விட வேண்டும் என்று தோன்றியது. அதனால் ஒரு தந்திரம் செய்தது. ஒரு நாள் மானிடம், “நண்பனே! நீ உன் நண்பன் முயல் மீது அளவுக்கு மீறிய பாசம் வைத்துள்ளாய் என்பதை நான் அறிவேன். உன்னை விட தான்தான் அழகு என்று சொல்லிக் கொண்டு முயல் அலைகிறது. அதனை நம்பாதே! உன்னை ஏதாவது ஆபத்தில் மாட்டிவிடும்” என்றது நரி.

நரியின் தந்திரத்தை அறியாமல் முயல் என்ன செய்துவிடும் என்று மான் கேட்டது. அதற்கு நரி “உன்னைச் சிங்கத்திற்கு இரையாக்கி விடும்” என்றது நரியை நம்பி மானும் நடுக்காட்டிற்கு சென்றது.

வெகுநேரம் ஆகியும் மானைக் காணாமல் முயல் தவித்தது. காட்டைச் சுற்றித் தேடி அலைந்தது. இறுதியில் நரியின் செயல் என அறிந்ததால், நரியிடம் “மானை விட்டுவிடு” என்று கதறியது. நரி முயலிடம் தான் கூறும் மூன்று புதிர்களுக்கு விடை கூறினால் விட்டுவிடுவதாகக் கூறியது.

நரியும் மூன்று புதிர்களைக் கூறியது. முயலும் அப்புதிர்களுக்கு சரியான விடைகளைக் கூறியது. நரி வேறு வழியின்றி மானை விடுவித்தது.

மான் மகிழ்ச்சியுடன் முயலுடன் ஒன்று சேர்ந்து வாழ்ந்தது.

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. ‘இரை’ என்ற சொல்லின் பொருள் _________

  1. உணவு
  2. இருப்பிடம்
  3. மலை
  4. இறைவன்

விடை : உணவு

2. ‘மகிழ்ச்சியுடன்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________

  1. மகிழ்ச்சி + யுடன்
  2. மகிழ்ச்சி + உடன்
  3. மகிழ் + உடன்
  4. மகிழ்ச் + சியுடன்

விடை : மகிழ்ச்சி + உடன்

3. “சொல்லி + கொண்டு” இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________

  1. சொல்லிக்கொண்டு
  2. சொல்கொண்டு
  3. சொல்லக்கொண்டு
  4. சொல்லிகொண்டு

விடை : சொல்லிக்கொண்டு

4. ‘முதுமை’ என்ற சொல்லின் எதிர்ச்சொல் _________

  1. தீமை
  2. சிறுமை
  3. பெருமை
  4. இளமை

விடை : இளமை

5. ‘சூழ்ச்சி’ என்ற சொல்லுக்குக் கதையின்படி தொடர்புடைய விலங்கு _________

  1. மான்
  2. முயல்
  3. நரி
  4. சிங்கம்

விடை : நரி

வினாக்களுக்கு விடையளி

1. முயல் எந்த விலங்குடன் நண்பனாகப் பழகியது?

முயல் முயலுடன் நண்பனாகப் பழகியது

2. மானை விட்டுவிடுவதற்காக நரி என்ன செய்தது?

மானை விட்டுவிடுவதற்காக நரி முயலிடம் தான் கூறும் மூன்று புதிர்களுக்கு விடை கூற வேண்டும் எனக் கூறியது.

3. மான் எதனால் மாட்டிக்கொண்டது?

நரியின் சூழ்ச்சி தெரியாமல் மான் மாட்டிக்கொண்டது?

4. மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதை ஏன் தவிர்த்தன?

நரி தந்திரம் மிக்க விலங்கு அதனால் மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதை தவிர்த்தன.

புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.

3rd Standard - Natpe Uyarvu - Puthiruku Poruthamana Padathai Nirappuga

1. உணவை எடுத்திடுவாள் உண்ணாமல் வைத்திடுவாள் உடல் மெலிந்த பெண்- அவள் யார்? 3rd Standard - Natpe Uyarvu - Puthiruku Poruthamana Padathai Nirappuga
2. வெள்ளையாம் வெள்ளைக்குடம் விழுந்தால் சல்லிக்குடம். அது என்ன? 3rd Standard - Natpe Uyarvu - Puthiruku Poruthamana Padathai Nirappuga
3. கொடிகொடியாம் பூங்கொடியாம் கிளிதின்னும் பழம் இதுவாம்- அது என்ன? 3rd Standard - Natpe Uyarvu - Puthiruku Poruthamana Padathai Nirappuga
4. தட்டு தங்கத் தட்டு தகதகக்கும் வெள்ளித்தட்டு தலைக்குமேல் உலாவரும் –அது என்ன? 3rd Standard - Natpe Uyarvu - Puthiruku Poruthamana Padathai Nirappuga
5. ஆயிரம் அறை கொண்ட மிகப்பெரிய மிட்டாய் கடை – அது என்ன? 3rd Standard - Natpe Uyarvu - Puthiruku Poruthamana Padathai Nirappuga
விடை : 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – இ

முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தி எழுதுக.

1. செல்லலாம் இரை தேடச் புல்வெளியில்

விடை : புல்வெளியில் இரை தேடச் செல்லலாம்

2. அழைத்துச் நண்பனை செல்கிறாய் எங்கு

விடை : நண்பனை எங்கு அழைத்துச் செல்கிறாய்

3. கட்டை முதுமையில் உயரம் இளமையில்

விடை : இளமையில் உயரம் முதுமையில் கட்டை

நெடிலைக் குறில் ஆக்குக

  1. கானல் – கனல்
  2. வாடை – வடை
  3. ஆடை – அடை
  4. தோடு – தொடு
  5. கோடு – கொடு
  6. பால் – பால்

மீண்டும் மீண்டும் சொல்லிப்பழகுவோம்

  1. விண்ணுக்கும் மண்ணுக்கும் பெண்ணுக்கும் கண்ணுக்கும் டண்ண கரம்
  2. உளி கொண்டு சிலையொன்று வடித்தான். உலகின் தலைசிறந்த கலையென்று மலைத்தான்.
  3. குட்டை மரமும் நெட்டைமரமும் மொட்டைத்தலையைத் தடவிக்கொண்டன

ஒரு சொல் பல பொருள் அறிக

3rd Standard - Natpe Uyarvu - Oru Sol Pala Porul Ariga

கார்

  • நிறம்
  • நீர்
  • பருவம்
  • குளிர்ச்சி
  • நெல்
  • அழகு

3rd Standard - Natpe Uyarvu - Oru Sol Pala Porul Ariga

களம்

  • நிலம்
  • போர்க்களம்
  • நெற்களம்
  • கறுப்பு
  • இருள்
  • உள்ளம்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment