TN 3rd Standard Tamil Book Back Answers | Term – 1 | Lesson 6 – துணிந்தவர் வெற்றி கொள்வர்

துணிந்தவர் வெற்றி கொள்வர்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 6 துணிந்தவர் வெற்றி கொள்வர் We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

3rd Standard Tamil Guide - Thunithavar Vetri kolvar

3nd Std Tamil Text Book – Download

வாங்க பேசலாம்

1. போட்டி நடந்த இந்த வகுப்பறையில் நீ இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?

முயற்சி செய்திருப்பேன்

2. பளு தூக்குதல் போன்ற கடினமான வேலைகளை ஆண் பெண் இருவராலும் செய்ய முடியுமா? உனது கருத்து என்ன? வகுப்பறையில் கலந்துரையாடுக

ராகுல் பளுதூக்குதல், மல்யுத்தம் போன்ற போட்டிகளில் ஆண்கள் தான் சாதிக்க முடியும்.
கலா ஏன் எங்களால் முடியாது? கர்ணம் மல்லேஸ்வரி, மீராபாய் சானு போன்றோர் உலக போட்டிகளில் தங்கம் வென்று சாதித்துள்ளனரே!
காரத்திகா சுரேகா யாதவ் புனே முதல் மும்பை வரை ரயிலை ஓட்டினார். சுதேசா கடேதங்கர் கோபி பாலைவனதத்தை கடந்தார். அவனி சதுர்வேதி என்ற பெண்மணி முதல் இந்திய போர் விமானியானார். உஜ்வாலா பாட்டில் என்ற பெண்மணி இந்தியாவில் முதன் முதலில் கப்பலோட்டிய மாலுமி.
சாவித்திரி விண்வெளிக்கே இந்தியப் பெண்ணான கல்பனா சாவ்லா சென்றாரே
மகேஷ் இன்றைய காலக்கட்டத்தில் ஆணுக்கு நிகராக அத்தனை வேலைகளையும் பெண்களும் செய்ய முடியும்.

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

1. “வகுப்பறை” என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….

  1. வகுப்பு + அரை
  2. வகுப்பு + அறை
  3. வகு + அறை
  4. வகுப் + அறை

விடை : வகுப்பு + அறை

2. “இகழ்ச்சி” என்ற சொல் உணர்த்தும் பொருள் ……………………….

  1. மகிழ்ச்சி
  2. மதிப்பு
  3. அவமதிப்பு
  4. உயர்வு

விடை : அவமதிப்பு

3. “பெரிய” என்ற சொல்லின் எதிர்ச்சொல் ……………………………

  1. சிறிய
  2. நிறைய
  3. அதிகம்
  4. எளிய

விடை : சிறிய

4. “வெற்றி” என்ற சொல்லின் எதிர்ச்சொல் ………………………

  1. சாதனை
  2. மகிழ்ச்சி
  3. நன்மை
  4. தோல்வி

விடை : தோல்வி

5. “மண்ணைப்பிளந்து” என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

  1. மண் + பிளந்து
  2. மண்ணைப் + பிளந்து
  3. மண்ணை + பிளந்து
  4. மன் + பிளந்து

விடை : மண்ணை + பிளந்து

வினாக்களுக்கு விடையளி

1. மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் அறிவித்த போட்டி என்ன?

மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் அறிவித்த போட்டி பெட்டியை தூக்கி வரும் போட்டியாகும்.

2. மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்காததற்குக் காரணங்கள் யாவை?

பெட்டி உருவ அளவில் பெரியதாக இருந்ததால் மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்கவில்லை

3. கவியரசியின் வெற்றிக்குக் காரணம் என்ன?

கவியரசியின் வெற்றிக்குக் காரணம் முயற்சியாகும்.

பாடப் பொருளை வரிசைப்படுத்துவோமா?

3rd Standard - Thunithavar Vetri kolvar - Padaporulai Varisaipaduthuga

1. இவ்வளவு பெரிய பெட்டியினை நம்மால் தூக்க இயலாது என்றனர் சிலர். 3
2. ஆசிரியரும் மாணவரும் கவியரசியைப் பாராட்டினர். 5
3. தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி பெற்றாள். 4
4. ஆசிரியர் ஒரு போட்டியினை அறிவித்தார். 1
5. அறையின் நடுவே ஒரு பெட்டி இருந்தது. 2

பழத்திற்குள் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்கலாமா?

3rd Standard - Thunithavar Vetri kolvar - Palathirukul ulla eluthukalai kondu Sorkal Vuruvakalam

  • பெயர்
  • ஆடி
  • ஆசிரியர்
  • சரி
  • ஆதி
  • ஆசி
  • சிரி
  • அடி
  • பெட்டி
  • சட்டி
  • அதிசயம்

பொருத்தமான எதிர்ச்சொல் சாவியைக் கொண்டு பூட்டைத் திறப்போமா?

3rd Standard - Thunithavar Vetri kolvar - Poruthamana Ethirsoll Saviyai Kondu Putinai Thirapoma

  • சிலர் x பலர்
  • முடியாது x முடியும்
  • கடினமாக x எளிதாக
  • பொய் x உண்மை
  • விலகினர் x சேர்ந்தனர்

இணைந்து செய்வோம்

மாணவர்களுக்கு வேண்டிய குணங்களைக் கொண்ட மீன்களுக்கு மட்டும் வண்ணமிடுக

(துணிச்சல், தயக்கம், மகிழ்ச்சி, சோம்பல், சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை)

3rd Standard - Thunithavar Vetri kolvar - Manavarkaluku Vendiya Gunangal Konda Meenuku Mattum Vattamiduga

மாணவர்களுக்கு வேண்டிய குணங்கள்

  • துணிச்சல்
  • மகிழ்ச்சி
  • சுறுசுறுப்பு
  • தன்னம்பிக்கை

மொழியோடு விளையாடு

அம்புக்குறியுடன் கூடிய சுழல் அட்டையில் மொழிமுதல் எழுத்துகளை எழுதிக் கொள்ள வேண்டும். மாணவர்களை வட்ட வடிவில் அமர வைத்து இந்த அட்டையினைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அம்புக்குறியினை வேகமாகச் சுற்றி விடுவர். அம்புக்குறி எந்த எழுத்தில் நிற்கிறதோ, அந்த எழுத்தில் தொடங்கும் ஏதேனும் ஒரு சொல்லை அந்த மாணவர் கூறவேண்டும். இவ்வாேற அனைத்து மாணவரையும் பங்கேற்கச் செய்தல் வேண்டும். பயன்படுத்திய பின்பு எழுத்துகளை மாற்றி மீண்டும் பயன்படுத்தவேண்டும்.

  • – அம்மா, அன்பு, அமைதி, அழகு
  • – ஆசிரியர், ஆலயம், ஆகாயம், ஆனந்தம்
  • – இமயம், இன்பம், இனிமை, இட்லி
  • – உண்மை, உழைப்பு, உறுதி, உலகம்
  • – எறும்பு, எண்ணிக்கை, எட்டு, எலி, எண்
  • – கம்பி, கட்டிடம், கதவு, கட்டில்
  • – தம்பி, தட்டு, தயிர், தக்காளி
  • – நட்பு, நண்பன், நன்மை
  • – படம், பட்டம், பம்பரம், பம்பாய்
  • – மஞ்சள், மட்டை, மருந்து, மணல்

கலையும் கைவண்ணமும்

பயன்படுத்திய மற்றும் உபயோகமற்ற பொருள்களைக் கொண்டு பல்வேறு உருவங்கள் செய்து மகிழ்க.

3rd Standard - Thunithavar Vetri kolvar - Kaium Kalai vannamum

செயல் திட்டம் 

“முயற்சியுடையார், இகழ்ச்சியடையார்” என்பது போன்று தன்னம்பிக்கையை வளர்க்கும் ஏதேனும் ஐந்து பொன்மொழிகள் மற்றும் பழமொழிகளை எழுதித் தொகுத்து வருக.

  1. முடியும் என்றால் முயற்சி செய்; முடியாது என்றால் பயிற்சி செய்.
  2. நேரத்தை, வீணாக்கும்போது
    கடிகாரத்தை பார்
    ஓடுவது முள் அல்ல
    உன் வாழ்க்கை
  3. முயற்சி இல்லா இடத்தில் எதுவும் விளங்காது.
  4. நல்ல காரியங்கள் தாமாக வந்து சேர்வதில்லை.
  5. எதுவும் தாமாக வருவதில்லை, எல்லாவற்றையும் தேடியே ஆக வேண்டும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment