TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 6.4 – மெய்ப்பாட்டியல்

6.4 மெய்ப்பாட்டியல்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 6.4 – மெய்ப்பாட்டியல். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Meipattiyal

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • நம்பாடப் பகுதி தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் மெய்ப்பாட்டியலில் இடம் பெற்றுள்ளது.
  • தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் என்பதை அறிவோம்.
  • அது பழந்தமிழரின் நாகரிகச் செம்மையினைத் தெள்ளத்தெளிய விளக்கும் ஒப்பற்ற பெருநூலாகும்.
  • தமிழ்மொழியின் அமைப்பை விதிகளாக்கி விளக்குவதோடு தமிழ்க் கவிதையியலின் நுட்பங்களையும் பேசுகிறது.
  • தொல்காப்பியப் பொருளதிகாரம் கவிதைகளுக்கான பொருண்மை, உறுப்புகள், உத்திகள், அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்தியம்புகிறது.
  • தொல்காப்பியத்தின் ஆசிரியரான தொல்காப்பியரைத் தமிழ்ச் சான்றோர்,  “ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியன்” என்று போற்றுகின்றனர்.
  • நூல் முழுமைக்கும் இளம்பூரணர் உரை எழுதியுள்ளார்.

சொல்லும் பொருளும்

  • நகை – சிரிப்பு
  • இளிவரல் – சிறுமை
  • மருட்கை – வியப்பு
  • பெருமிதம் – பெருமை
  • வெகுளி – சினம்
  • உவகை – மகிழச்சி

இலக்கணக்குறிப்பு

  • நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை – தாெழிற்பெயர்கள்
  • தொல்நெறி – பண்புத்தொகை

உறுப்பிலக்கணம்

1. நகை = நகு + ஐ

  • நகு – பகுதி (நகை ஆனது விகாரம்)
  • ஐ – தொழிற்பெயர் விகுதி.

2. மருட்கை = மருள் + கை

  • மருள் – பகுதி (“ள்” “ட்” ஆனது விகாரம்)
  • கை – தொழிற்பெயர் விகுதி.

3. வெகுளி = வெகுள் + ஐ

  • வெகுள் – பகுதி
  • ஐ – தொழிற்பெயர் விகுதி.

பாடநூல் வினாக்கள்

குறு வினா

1. எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?

1. நகை (சிரிப்பு)
2. அழுகை
3. இளிவரல் (சிறுமை)
4. மருட்கை (வியப்பு)
5. அச்சம் (பயம்)
6. பெருமிதம் (பெருமை)
7. வெகுளி (சினம்)
8. உவகை (மகிழ்ச்சி)

என்பன எண்வகை மெய்ப்பாடுகளாகும் – தொல்காப்பயிர்

சிறு வினா

ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலையைக் கற்பனையாகப் படைக்க.

வியப்பு:-

நீண்ட  நாளாக எனக்கு கால் முட்டியில் வலி தீரவில்லை என உறவுக்காரர் பக்கத்து ஊர் தர்காவில் மெளலவி ஒருவர் ஓதுகிறார். உடல் நோயெல்லாம் தீரந்து விடுகிறது போய் பார் என்றார். நம்பிக்கையோடு சென்றேன். வரிசையில் நின்றேன். என் முறை வந்தது. ஒரே வியப்பு! அழுகையும் வந்தது. அங்கே ஓதுகின்ற மெளலவி என் வாப்பா (தந்தை). வெட்கமும் வேதனையும் வந்தது. வாப்பாவிடம் இப்படியொரு மகத்துவமா!

அச்சம்:-

சனி, ஞாயிறு இரண்டு நாள் விடுமுறையில் ஆசிரியர் கொடுத்த வேலைகளை முடிக்காமல் திங்கள் கிழமை காலையில் எழுந்ததும் நினைவுக்கு வந்து, அன்று விடுப்பு எடுத்துப் பணிகளை முடித்துவிட்டு, மறுநாள் பள்ளி செல்லலாம் என்று நினைத்து தன் பெற்றோரிடம் தனக்கு உடல் நலமில்லை என்று பொய் கூறவது, அச்சத்திற்கு நல்ல சான்றாக இருக்கும்.

கற்பவை கற்றபின்

1. நீவிர் பார்த்த திரைப்படம் ஒன்றில் வெளிப்பட்ட மெய்ப்பாடுகள் குறித்து எழுதுக.

திரைப்பட உலகில், கலை வெளிப்பாட்டிற்காகவே தயாரிக்கப்பட்ட படங்களில் தில்லானா மோகனாம்பாள் போன்ற ஒரு படத்தைக் காவியமாகவே மக்கள் பாக்கின்றனர். இப்படத்தில் நடிப்புக்கலையில் பிரசித்திப் பெற்ற ஜோடிகளான சிவாஜி – பத்மினி இணை நவரசத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் நலந்தானா பாடல் காட்சி மெய் மயக்கச் செய்துவிடும்.

  • நலந்தானா, நலந்தானா, உடலும் உள்ளமும் நலந்தானா என்ற பாடல் காட்சியில் பத்மினியின் கண்களில் எண்வகை மெய்ப்பாடுகளையும் தாண்டிய ஒரு வெளிப்பாடு, அவரது புருவம் தவிக்கும் பாவனை எழுத்தில் விவரிக்க இயலாது.
  • இந்தப் பெண்பட்ட பாட்டை யார் அறிவார் – என்ற பாடல் காட்சியில் கண்களில் பனிக்க்கும் கண்ணீர் அழுகையை நமக்கிடையே வரவழைக்கும்.
  • சிவாஜியின் புண்பட்ட கைகளை துண்டு மறைத்திருக்கும். தனது முந்தானையால் விசிறிவிட்டுப் பார்க்கும் பத்மினியின் பார்வையில் வெளிப்படும் அச்சவுணர்வு நம்மை சிலிர்க்க வைக்கும்.

திரைப்படம் சொல்லாத கதையுமில்லை
கதை சொல்லாத காதலுமில்லை

2. எண்வகை மெய்ப்பாடுகளுக்கு ஏற்ற திரையிசைப் பாடல்களின் தொகுப்பு ஒன்றை உருவாக்குக

நகை சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
அழுகை உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே! ஞானத்தங்கமே!
இளிவரல் பாட்ஷா பாரு! பாட்ஷா பாரு!
படை நடுங்கும் பாட்ஷா பாரு!
மருட்கை நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகி என்றேன் நல்ல அழகி என்றேன்
அச்சம் சூரகாளி போல வாராடா
சுத்தி சுத்தி வாராட
பெருமிதம் வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்
வெகுளி குயிலப் புடிச்சி கூண்டில் அடச்சி
பாடச் சொல்லுகிற உலகம்
உவகை சந்தோஷம் காணாத நாள் உண்டா
சங்கீதம் பாடாத நாள் உண்டா

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை – இச்சொல்லுக்குரிய இலக்கணக்குறிப்பு

  1. பண்புத்தொகைகள்
  2. தொழிற்பெயர்கள்
  3. வினைத்தொகைகள்
  4. உவமைத்தொகைகள்

விடை : தொழிற்பெயர்கள்

1. “ஈட்டபுகழ் நன்தி பாணநீ- என்னும் நந்திக்கலம்பக பாடலில் இடம்பெறும் மெய்ப்பாடு

  1. நகை
  2. அழுகை
  3. மருட்கை
  4. வெகுளி

விடை : நகை

3. தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டியல் …………………. அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

  1. எழுத்து
  2. பொருள்
  3. சொல்
  4. யாப்பு

விடை : பொருள்

4. “அமரர்க்கு அரசன் தமர்வந்து ஈண்டி” என்று கண்ணகி வானூர்தியில் வானுலகு சென்ற காட்சியைக் காணும் குன்றவர்களின் மெய்ப்பாடு.

  1. நகை
  2. வெகுளி
  3. இளிவரல்
  4. அழுகை

விடை : அழுகை

5. “மையல் வேழமம் மடங்களின் எதிர்தர” என்னும் குறிஞ்சிப்பாட்டு அடிகளில் இடம்பெறும் மெய்ப்பாடு

  1. நகை
  2. வெகுளி
  3. அழுகை
  4. அச்சம்

விடை : அச்சம்

6. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்

  1. புறநானூறு
  2. நன்னூல்
  3. சிலப்பதிகாரம்
  4. தொல்காப்பியம்

விடை : தொல்காப்பியம்

7. தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர்

  1. இளம்பூரணர்
  2. பேராசிரியர்
  3. சேனாவரையர்
  4. நச்சினார்கினியர்

விடை : இளம்பூரணர்

8. தமிழ்மொழியின் அமைப்பை விதிகளாக்கி விளக்குவதோடு தமிழ்க் கவிதையியலின் நுட்பங்களையும் பேசும் நூல்

  1. திருக்குறள்
  2. தொல்காப்பியம்
  3. நாலடியார்
  4. யாப்பருங்காலக்காரிகை

விடை : தொல்காப்பியம்

9. ‘ஒல்காப்பெரும்புகழ்த் தொல்காப்பியன்’ எனப் பாராட்டப் பெற்றவர்

  1. இளம்பூரணர்
  2. சேனாவரையர்
  3. தொல்காப்பியர் 
  4. நச்சினார்கினியர்

விடை : தொல்காப்பியர்

10. பொருந்தாதவற்றை தேர்க

  1. பாணன் – வெகுளி
  2. கணைக்காலிரும்பொறை – நகை
  3. பாண்டியன் நெடுஞ்செழியன் – உவகை
  4. குந்தி – அழுகை

விடை : குந்தி – அழுகை

11. பொருந்தாதவற்றை தேர்க

  1. நகை – சிரிப்பு
  2. இளிவரல் – சிறுமை
  3. மருட்கை – சினம்
  4. பெருமிதம் – பெருமை

விடை : மருட்கை – சினம்

குறு வினா

1. மெய்ப்பாடு என்றால் என்ன?

இலக்கியத்தைப்  படிக்கின்றபோது அதன் பொருளை ஆழப்படுத்தும் வகையில் காட்டப்படும் உணர்ச்சி வெளிப்பாட்டு சுவையே மெய்ப்பாடு என்பர்.

2. தொல்காப்பியரைத் தமிழ்ச்சான்றோர் எவ்வாறு போற்றுகிறார்?

ஒல்காப் பெரும்புகழ் தந்த தொல்காப்பியன் என்று போற்றுகிறார்கள்

3. தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதியவர் யார்?

“சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்” என்று பாரதி இளங்கோவையும், சிலம்பையும் புகழ்கிறார்.

4. தொல்காப்பியம் – சிறுகுறிப்பு வரைக

  • தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் என்பதை அறிவோம்.
  • அது பழந்தமிழரின் நாகரிகச் செம்மையினைத் தெள்ளத்தெளிய விளக்கும் ஒப்பற்ற பெருநூலாகும்.
  • தமிழ்மொழியின் அமைப்பை விதிகளாக்கி விளக்குவதோடு தமிழ்க் கவிதையியலின் நுட்பங்களையும் பேசுகிறது.
  • தொல்காப்பியப் பொருளதிகாரம் கவிதைகளுக்கான பொருண்மை, உறுப்புகள், உத்திகள், அழகு ஆகியவற்றைச் சிறப்புற எடுத்தியம்புகிறது.
  • தொல்காப்பியத்தின் ஆசிரியரான தொல்காப்பியரைத் தமிழ்ச் சான்றோர்,  “ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியன்” என்று போற்றுகின்றனர்.
  • நூல் முழுமைக்கும் இளம்பூரணர் உரை எழுதியுள்ளார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment