5.1 மதராசப்பட்டினம்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 5.1 – மதராசப்பட்டினம் We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1) சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல, அது நம்பிக்கை மையம் – காரணம் –
- நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
- மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு
- மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
- அ, ஆ, இ – அனைத்தும்
விடை : அ, ஆ, இ – அனைத்தும்
2) கூற்று : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
- கூற்று சரி, காரணம் தவறு
- கூற்று தவறு, காரணம் சரி
- கூற்று தவறு, காரணம் தவறு
- கூற்று சரி, காரணம் சரி
விடை : கூற்று சரி, காரணம் சரி
3. பொருத்துக.
அ) திருவல்லிக்கேணி ஆறு | 1) மாவலிபுரச் செலவு |
ஆ) பக்கிங்காம் கால்வாய் | 2) கல் கோடரி |
இ) பல்லாவரம் | 3) அருங்காட்சியகம் |
ஈ) எழும்பூர் | 4) கூவம் |
- 1, 2, 4, 3
- 4, 2, 1, 3
- 4, 1, 2, 3
- 2, 4, 3, 1
விடை : 4, 1, 2, 3
குறு வினா
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
- காலின் மெக்கனிசியின் தொகுப்புகளைக் கொண்டு 1869-ல் உருவாக்கப்பட்ட நூலகம்.
- ஓலைச்சுவடிகள், தாள்சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகள் காணப்படுகிறது.
சிறு வினா
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
- சென்னை நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு.
- அந்தப் பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குதல் மிகக் கடினம்.
- இந்திய சாரசனிக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்று சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றன.
- ஆவணங்களை முறையாகக் கையாளும் ஆவணக் காப்பகம் (மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபீஸ்) சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது.
- தென்னிந்திய வரலாற்றை, பண்பாட்டை அறிவதற்கு எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம் துணை நிற்கின்றன.
- இந்தியாவின் பொதுநூலகம் கன்னிமாரா நூலகம் நவீனமாக வளர்ந்து வரும் பெரிய நூலகம்.
நெடு வினா
“ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு” – நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
முன்னுரை:-
ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு என்பதில் நான் பார்த்து வளர்ந்த சென்னை நகரத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சென்னை:-
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் ‘சென்னை’ இன்று தமிழகமெங்கும் பரவி வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்.
அவ்வகையில் இந்தியாவின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகவும் தமிழகத்தின் தலைநகராகவும் திகழ்கின்றது. சென்னை என்று அழைக்கப்படும் பகுதியும் அதன் சுற்றுப்பகுதிகளும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிந்தே வாழந்த்ததற்கான தடயங்களை கொண்டுள்ளன.
மானுட எச்சம்:-
பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடரி, இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏ ற்ப டுத்தியது. கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்றும் கிடைக்கும் தொல்பழங்கால மானுட எச்சங்கள் இப்பகுதியின் பழமையை நமக்கு உணர்த்துகின்றன. இன்று சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர், கி.பி.(பொ.ஆ.) 2ஆம் நூற்றாண்டில் ’தாலமி’ என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.
பாடல் பெற்ற தலம்:-
திருவொற்றியூர், திருவான்மியூர் , மயிலாப்பூர், திருமுல்லைவாயில் ஆகியவற்றில் உள்ள கோயில்கள் பாடல் பெற்ற, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தலங்களாக உள்ளன.
நீர்நிலைகளும் வடிகால்களும்:-
சென்னை, வடசென்னைக்குக் கொற்றலையாறு, மத்திய சென்னைக்குக் கூவம், தென்சென்னைக்கு அடையாறு, அதற்கும் கீழே பாலாறு, இந்த நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடிய பக்கிங்காம் கால்வாய் மற்றும் காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா என 18 பெரிய ஓடைகள், 540க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் அக்காலத்தில் வடிகால்களைப் பெற்றிருந்தது. ஆனால் அவை எங்கு போயின என்னு தெரியவில்லை
நகரம் – உருவாக்கம்:-
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளையர் நகரம்’ (White’s Town) என்று அழைக்கப்பட்டது . வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ‘கருப்பர் நகரம்’ (Black’s Town) என அழைக்கப்பட்டது . கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் துணி வணிகத்தையே செய்த காரணத்தால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். அவர்களால் வண்ணாரப்பேட்டை சிந்தாதிரிப்பேட்டை (சின்னதறிப்பேட்டை) முதலான புதிய பகுதிகள் தோன்றின. வடசென்னைப் பகுதிகள் மதராசப்பட்டினம் என்றும் தென்சென்னைப் பகுதிகள் சென்னைப்பட்டினம் என்றும் வழங்கப்பட்டன. ஆங்கிலேயர் இரண்டையு ம் இணைத்து மதராஸ் என்று அழைத்தனர். பின்பு அதுவே மெட்ராஸ் ஆகி, இன்று நம் சென்னையாக ஆகி இருக்கிறது. அது இன்று சென்னையாக உள்ளது. ஆங்கிலேயர்களின் அதிகார மையமான இந்நகரம் ஆங்கிலேயரை எதிர்க்க முதல் தளமாக அமைந்த நகரமாக விளங்கியது.
கல்லூரிகள் – பள்ளிகள்:-
- 1715இல் உருவான ‘புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி’
- 1812இல் உருவான சென்னைக் கோட்டைக் கல்லூரி
- 1837இல் தொடங்கப்பட்ட கிறித்தவக் கல்லூரி
- 1840இல் உருவான பிரசிடென்சி பள்ளி (மாநிலக் கல்லூரி)
- 1857இல் சென்னைப் பல்கலைக்கழகம்
- 1914இல் தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி
போன்ற கல்லூரி பழமை வாய்ந்த அறிவின் நகரமாக விளங்குகிறது.
பண்பாட்டு அடையாளங்கள்:-
சென்னை நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு. அதன் பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குதல் மிகக் கடினம். இநதிய சராசனிக் கட்டடக்கலை இன்றும் சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட கட்டடங்காளக தமிழ்நாடு ஆவணக் காப்பகம், எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம் போன்றை விளங்குகின்றன.
நம் சென்னை (இன்றைய சென்னை):-
இன்று சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல அது நம்பிக்கை மையம். சென்னையை மையமிட்டு தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் ஏற்படுத்தி நேரடி, மறைமுக வாய்ப்புகள் உருவாகின்றன. கணினி மென்பொருள், வன்பொருள் வாகன உற்பத்தியில் இன்று சென்னை முதலிடம் வகிக்கிறது. இந்திய அளவில் மென்பொருள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. மின்னணுப் பொருள் உருவாக்கும் மையமாகவும் திகழ்கிறது.
முடிவுரை:-
இத்தகு பெருமை கொண்ட சென்னை நகரம் நான் பார்த்து வாழ்ந்த காலகட்டத்தில் பெருமை கொண்ட பழமையைப் பறைசாற்றும் நகரமாக விளங்குகிறது.
கற்பவை கற்றபின்
ஒரு திட்டமிட்ட பெருநகரம் உருவாவதற்கு நீவிர் தரும் பரிந்துரைகளை, ‘கனவு நகரம்’ என்னும் தலைப்பில் ஒப்படைவாக உருவாக்குக.
கனவு நகரம்
- தமிழகத்தின் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக மாற்றுவது. இதற்காக நாவல்பட்ட கிராமம் ஒன்றையும் உருவாக்கினர். ஆனால் அந்த கனவுத் திட்டம் இன்று காலாவதியாகிவிட்டது. அத்திட்டத்தைப் பரிந்துரை செய்து நிறைவேற்றுவதே என் கனவு.
- திருச்சியை இரண்டாவது தலைநகரமாக மாற்றி 1000 ஏக்கரில் அண்ணா நகர் பகுதியைத் துணை நகரம் என்ற பெயரில் உருவாக்கினோம். பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்வதற்கு வசதி செய்யப்பட்டு அகலமான சாலைகள், ஆரம்ப சுகாதரதிட்டம் உள்ளிட்ட பசுமை தொழிற்காலைகள், தரமான கல்வி நிலையங்களின் பாதாள சாக்கடைகள் அமைக்க வேண்டும்.
- பாதாள சாக்கடை நீரை சுத்தம் செய்ய தனி இயந்திரம், இயற்கை வேளாண் அங்காடி, குளிரூட்டப்பட்ட நூலகம் சிறாருக்கான தனி நூலகம் எனத் தனித் தானியாக நூலகங்கள் அமைக்க வேண்டும்.
- நெகிழி இல்லாத நகரமாகவும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகரமாகவும் உருவாக்க வேண்டும்.
- வீட்டுக்கு ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- தடையற்ற மின்சாரம், தூய்மையான குடிநீர், பாதுகாப்பு வசதி போன்ற வசதிகள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்வேன்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக.
1) தமிழகத்தின் தலைநகரம்
- மதுரை
- கோயம்புத்தூர்
- சென்னை
- திருச்சி
விடை : சென்னை
2) தென்னிந்தியாவின் நுழைவுவாயில்
- திருப்பதி
- திருவனந்தபுரம்
- திருச்சி
- சென்னை
விடை : சென்னை
3) சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணி நிறுவுவது
- அப்பகுதியின் மனித நாகரதிகத்தில் பழமையை ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை
- அப்பகுதியின் மனித நாகரதிகத்தில் பழமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை
- அப்பகுதிகளில் மனித வாழ்வு நடைபெறவில்லை என்பதை
- இவற்றில் எதுவுமில்லை
விடை : சென்னை
4) வள்ளல் பச்சையப்பர் _________ நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக குறிப்பு ஒன்று, அவரது நாட்குறிப்பில் உள்ளது .
- அடையாறு
- கெற்றலையாறு
- பாலாறு
- கூவம்
விடை : கூவம்
5) பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப.ஜீவானந்தம், உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்தவர்.
- பாரதிதாசன்
- பாரதியார்
- சுரதா
- சிலம்பு செல்வர்
விடை : பாரதிதாசன்
6) சென்னையிலே ஒருவாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும் – என்று “மாவலிபுரச் செலவு என்னும் தலைப்பில் கவிதையாக்கியவர்
- மயிலை சீனி. வேங்கடசாமி
- ப.ஜீவானந்தம்
- கண்ணதாசன்
- பாரதிதாசன்
விடை : பாரதிதாசன்
7) கி.பி. 1647இல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் “தொண்டமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்” என்று காணப்படும் குறிப்பால் அறியப்படும் செய்தி
- குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாறு
- வளமிகு சென்னையின் வணிக மேம்பாடு
- சென்னை மக்களின் செல்வ வாழ்க்கை
- இவற்றில் எதுவுமில்லை
விடை : குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாறு
8) மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியைக் ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெடுத்தவர்.
- பிரான்சிஸ்டே
- கால்பர்ட்
- இராபர்ட் கிளைவ்
- தாமஸ் பிட்
விடை : பிரான்சிஸ்டே
9) சென்னையில் கிடைத்தவற்றுள் மிகப் பழமையான கல்வெட்டு
- திருவல்லிக்கேணி கல்வெட்டு
- மயிலாப்பூர் கல்வெட்டு
- பல்லாவரம் கல்வெட்டு
- மாதவரம் கல்வெட்டு
விடை : பல்லாவரம் கல்வெட்டு
9) செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி ___________ என
அழைக்கப்பட்டது .
- கோட்டை நகரம்
- தமிழர் நகரம்
- கருப்பர் நகரம்
- வெள்ளையர் நகரம்
விடை : கருப்பர் நகரம்
10) கூவம் ஆற்றை ___________ என்றும் அழைத்தனர்
- திருவல்லிக்கேணி ஆறு
- மயிலாப்பூர் ஆறு
- படவபழனி ஆறு
- பல்லாவரம் ஆறு
விடை : திருவல்லிக்கேணி ஆறு
11) சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றிய நூற்றாண்டு
- கி.பி. 17
- கி.பி. 16
- கி.பி. 18
- கி.பி. 19
விடை : கி.பி. 18
12) ஆங்கிலேயருக்கும் சென்னை மாநருக்கும் ஏறத்தாழ 300 ஆண்டு காலமாக இருந்த உறவு முடிவுக்கு வந்த நான்
- 1942 அக்டோபர் 2
- 1947 ஆகஸ்ட் 15
- 1947 அக்டோபர் 2
- 1942 ஆகஸ்ட் 15
விடை : 1947 ஆகஸ்ட் 15
12) காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபட்ட நூலகம் …………..
- கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
- சரசுவதிமகால் நூலகம்
- கொல்கத்தா நூலகம்
- திருவனந்தபுரம் நூலகம்
விடை : கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
13) ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம் …………..
- அண்ணா நூற்றாண்டு நூலகம்
- சரசுவதிமகால் நூலகம்
- கொல்கத்தா நூலகம்
- கன்னிமாரா நூலகம்
விடை : அண்ணா நூற்றாண்டு நூலகம்
14) பொருந்தாதவற்றை தேர்க
- சென்னை இலக்கிய சங்கம் – 1812
- கன்னிமாரா நூலகம் – 1860
- கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – 1869
- அண்ணா நூற்றாண்டு நூலகம் – 2008
விடை : அண்ணா நூற்றாண்டு நூலகம் – 2008
14) பொருந்தாதவற்றை தேர்க
- சென்னை இலக்கிய சங்கம் – 1812
- கன்னிமாரா நூலகம் – 1860
- கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – 1869
- அண்ணா நூற்றாண்டு நூலகம் – 2008
விடை : அண்ணா நூற்றாண்டு நூலகம் – 2008
குறு வினா
1. தென்னிந்தியாவின் நுழைவு வாயில் எது?
தென்னிந்தியாவின் நுழைவு வாயில் சென்னை ஆகும்.
2. இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது எது?
பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடரி, இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
3. 12 – 13ஆம் நுற்றாண்டுகளில் புகழ்பெற்ற கிராமங்களாக இருந்தவைகளை எழுதுக.
சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் , வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, தாம்பரம் போன்ற பகுதிகள் கிழக்கிந்திய நிறுவனம் கால் பதிப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே 12 – 13ஆம் நுற்றாண்டுகளில் புகழ்பெற்ற கிராமங்களாக இருந்துள்ளன.
4. சென்னை நகரின் பழமையான கோயில்களை குறிப்படுக.
திருவொற்றியூர், திருமுல்லைவாயில், திருவான்மியூர், மயிலாப்பூர் இவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடல் பெற்ற தளங்கள் ஆகும்.
5. மெட்ராஸ் ரெக்காட் ஆபீஸ் – குறிப்பு வரைக
ஆவணங்களை முறையாகக் கையாளும் பழக்கம் கொண்ட ஆங்கிலேயர் உருவாக்கி மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபீஸ் சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது. இது, இன்று தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று வழங்கப்படுகி்றது.
6. சென்னை நகரில் காணப்படும் கால்வாய்கள் சிலவற்றை கூறு
பக்கிங்காம் கால்வாய், காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய்
7. சென்னையில் அக்காலத்தில் எத்தனை பெரிய ஓடைகள், சிறிய ஓடைகள் காணப்பட்டன.
- 18 பெரிய ஓடைகள், 540க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் அக்காலத்தில் வடிகால்களைப் பெற்றிருந்தது.
- மழைநீர், சிறிய ஓடைகள் வழியாகப் பெரிய ஓடைகளைச் சென்றடையும்;
8. பாதிதாசன் பக்கிங்காம் கால்வாயில் படகுப்பயணம் செய்தர்வர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
மயிலை சீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம்
9. கூவம் நதிக்கரையில் குளித்து விட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டவர் யார்
வள்ளல் பச்சையப்பர் கூவம் நதிக்கரையில் குளித்து விட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டவர்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…