TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 4.4 – புறநானூறு

4.4 புறநானூறு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 4.4 – புறநானூறு We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Purananuru

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தபோது ஒளவையார் பாடிய பாடல் நமக்குப் பாடப்பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இப்பாடல் இடம்பெற்றுள்ள புறநானூறு, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இது புறப்பொருள் பற்றியது;
  • புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
  • தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.
  • அதியமானிடம் நட்புப் பாராட்டிய ஒளவை அவருக்காகத் தூது சென்றவர்;
  • அரசவைப் புலவராக இருந்து அரும்பணியாற்றியவர்;
  • இவர் பாடியதாக அகநானூற்றில் 4, குறுந்தொகையில் 15, நற்றிணையில் 7, புறநானூற்றில் 33 என 59 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

சொல்லும் பொருளும்

  • வாயிலோயே – வாயில் காப்போனே
  • வள்ளியோர் – வள்ளல்கள்
  • வயங்குமொழி – விளங்கும் சொற்கள்
  • வித்தி – விதைத்து
  • உள்ளியது – நினைத்தது
  • உரன் – வலிமை
  • வறுந்தலை – வெறுமையான இடம்
  • காவினெம் – கட்டிக்கொள்ளுதல்
  • கலன் – யாழ்
  • கலப்பை – கருவிகளை வைக்கும் பை
  • மழு – கோடரி

இலக்கணக் குறிப்பு

  • வயங்குமாெழி – வினைத்தாெகை
  • அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • அறிவும் புகழும் – எண்ணும்மை
  • சிறாஅர் – இசைநிறை அள்பெடை

புணர்ச்சி விதி

எத்திசை = எ + திசை

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “எத்திசை” என்றாயிற்று

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை இத்தொடரில் ‘கலன்’ உணர்த்தும் பொருள்

  1. போர்க்கருவி
  2. தச்சுக்கருவி
  3. இசைக்கருவி
  4. வேளாண் கருவி

விடை : இசைக்கருவி

குறு வினா

‘எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’ – யார்க்கு?

  • கலைத்தொழில் செய்வோருக்கு சோறு தட்டாது கிட்டும்.
  • கலைத்தொழிலில் இருக்கும் வல்லவர்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

சிறு வினா

வாயிலோயே எனத் தொடங்கும் ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை நிறுவுக. 

திணை விளக்கம்:-

பாடண் திணை என்பது பாடப்படும் ஆண்மகனின் புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.

சான்று விளக்கம்:-

  • வாயிலோயே எனத் தொடங்கும் ஒளவையாரின் புறநானூற்றுப் பாடலில், “பரிசிலர்க்கு அடையா வாயிலோயே! என்ற வரி இடம் பெற்றுள்ளது.
  • அதாவது தன்னை நாடிவரும் பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத அரண்மனை அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை
  • தன்னை நாடிவரும் புலவர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் வாரிவழங்கும் நல்ல உள்ளம் கொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி.
  • பரிசிலர் வரும்போது வாயிலை அடைக்காத குணம் உடையவன் என்றதால் அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை புலனாகிறது.

பொருத்தம்:-

தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியன் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

கற்பவை கற்றபின்

கல்வியின் சிறப்பை உணர்த்தும் திருக்குறள், நாலடியார் பாடல்களைத் திரட்டி வகுப்பறையில் உரையாடுக

யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.

  • யாதானும் நாடாமால்…….. கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடு, எல்லா ஊரும் சொந்த ஊர், அவ்வாறு இருக்க ஒருவன் சாகும்வரை ஏன் கல்வி கற்கக் கூடாது என்கிறார் வள்ளுவர்.
  • சாகும் வரை கல்வியைத் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது வள்ளுவனின் வற்புறத்தல்.

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஓருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

  • ஒரு பிறவியில் ஒருவன் கற்கின்ற கல்வியானது எழுகின்ற ஏழு பிறவியிலும் அவனுக்குப் பாதுகாப்பினைத் தரவல்லது.
  • ஏழு பிறவியிலும் தொடர்ந்து வரவல்லது கல்வி ஒன்றேயாகும்.

நாய்க்கால் சிறு விரல் போல் நன்கணியராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் – செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு

– நாலடியார்

  • நாலடியார் பாடலில், நாயின் கால் விரல்கள் நெருங்கி இருக்கும். அதுபோல நம்மை நெருங்கி இருப்பவர்கள் ஈயின் கால் அளவு கூட உதவமாட்டார்கள்.
  • வாய்க்காலின் தூரத்திலிருந்து வரும் தண்ணீர் பயிர் விளைச்சலுக்கும் உதவும். அதுபோல தூரத்திலிருந்து உதவி செய்யும் நல்லவர்களை நாம் நெருங்கிச் சென்று நட்பு கொள்ள வேண்டும் என்கிறது.

கூடுதல் வினாக்கள்

உறுப்பிலக்கணம்

காவினெம் = காவு + இன் + எம்

  • காவு – பகுதி
  • இன் – இறந்தகால இடைநிலை
  • எம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி

புணர்ச்சி விதி

காட்டகத்து = காடு + அத்து

  • நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்கள் ஒற்று இரட்டும்” என்ற விதிப்படி “காட்டு + அத்து” என்றாயிற்று.
  • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “காட்ட் + அத்து” என்றாயிற்று
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “காட்டகத்து” என்றாயிற்று

பலவுள் தெரிக.

1. செம்மாப்பு என்பதன் பொருள் தருக

  1. பெருமை
  2. புகழ்
  3. இறுமாப்பு
  4. வெற்றி

விடை : இறுமாப்பு

2. தாழும் நிலை வரினும் கலங்காதவர்

  1. கல்வி கற்றோர்
  2. செல்வம் உடையவர்
  3. ஞானம் பெற்றவர்
  4. செல்வாக்கு உடையவர்

விடை : கல்வி கற்றோர்

3. கூற்று 1 – இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்தவிடவில்லை

கூற்று 2 – கலைத்தொழில் வல்லவர்களுக்கு எத்திசை சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

  1. கூற்று இரண்டும் சரி
  2. கூற்று இரண்டும் தவறு
  3. கூற்று 1 சரி 2 தவறு
  4. கூற்று 2 சரி 1 தவறு

விடை : கூற்று இரண்டும் சரி

4. கூற்று 1 – அதியமானிடம் நட்பு பாராட்டிய ஒளவை அவருக்காக போர்க்களம் சென்றார்.

கூற்று 2 – அதியமானின் அரசவைப் புலவராக இருந்தவர் ஒளவையார்

  1. கூற்று இரண்டும் சரி
  2. கூற்று இரண்டும் தவறு
  3. கூற்று 1 சரி 2 தவறு
  4. கூற்று 2 சரி 1 தவறு

விடை : கூற்று 2 சரி 1 தவறு

5. சரியானதைத் தேர்க

  1. எம் யாழினை எடுக்கவில்லை; கருவிப்பையும் எடுக்கவில்லை
  2. கலைத்தொழில் வல்ல எங்களுக்கு எத்திைச சென்றாலும் ஒன்றும் கிடைப்பதில்லை
  3. தச்சனின் பிள்ளைகள் காட்டுக்குச் சென்றால் வெட்ட மரம் கிடைக்காது.
  4. விரைந்து ஓடும் குதிரையைக் கொண்டவன் நெடுமான் அஞ்சி

விடை : விரைந்து ஓடும் குதிரையைக் கொண்டவன் நெடுமான் அஞ்சி

6. பொருந்தியதைத் தேர்க

  1. அறிவும் புகழும் – வினைத்தொகை
  2. சிறாஅர் – இசைநிறையளபெடை
  3. வயங்கொழி – ஈறுகெட்ட  எதிர்மறைப்பெயரெச்சம்
  4. அடையா – எண்ணும்மை

விடை : சிறாஅர் – இசைநிறையளபெடை

7. “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்னும் சொல்லுக்குரிய புணர்ச்சி விதிக்கு பொருத்தமான சொல்

  1. எத்திசை
  2. உரனுடை
  3. வலுந்தலை
  4. மாய்ந்தென

விடை : எத்திசை

8. புறநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர்

  1. புறம், புறப்பொருள்
  2. நானூறு, புறப்பாட்டு
  3. புறம், புறப்பாட்டு
  4. நானூறு, புறப்பொருள்

விடை : இறுமாப்பு

9. அதியமானின் அரசவைப் புலவர்

  1. பானர்
  2. கபிலர்
  3. ஒளவையார்
  4. ஒக்கூர் மசாத்தியார்

விடை : ஒளவையார்

10. பரிசில் துறை என்பது

  1. பரிசு பெற்ற புலவன் மகிழ்ச்சியாக இல்லறம் திரும்புவது
  2. மன்னன் பரிசளித்து புலவரைப் பாராட்டுவது
  3. பரிசு வேண்டி வாயிலில் நிற்பது
  4. இவற்றில் ஏதுமில்லை

விடை : பரிசு வேண்டி வாயிலில் நிற்பது

11. அதியமானிடம் நட்புப் பாராட்டியவர்

  1. ஓதாலாந்தையர்
  2. ஒளவையார்
  3. பரணர்
  4. கபிலர்

விடை : ஒளவையார்

12. ஒளவையார் பாடிய பாடல்களில் நமக்குக் கிடைத்துள்ளவை

  1. 22
  2. 39
  3. 42
  4. 59

விடை : 59

13. ஒளவையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கையிலும் நூல்களிலும் பொருந்தாது

  1. அகநானூறு – 7
  2. புறநானூறு – 15
  3. குறுந்தொகை – 4
  4. நற்றிணை – 18

விடை : நற்றிணை – 18

சிறு வினா

1. புறநானூற்றுப் பாடல்களால் அறியப்படுபவை யாவை?

தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை

2. பாடான் திணை என்றால் என்ன?

  • பாடான் திணை =  பாடு + ஆண் + திணை
  • பாடண் திணை என்பது பாடப்படும் ஆண்மகனின் புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.
  • ஆண்மகனது ஒழுக்கலாற்றைக் கூறுவது பாடாண் திணையின் நோக்கமாகும்.

3. கல்வி கற்றோரின் சிறப்பு என்ன?

  • கல்வி கற்றோர் எந்த நிலையிலும் சிறந்தே இருப்பர்.
  • தாமும் எந்நிலை வந்தாலும் கலங்க மாட்டார்கள்.
  • அறிவால் உலகையே சொந்தமாக்கி கொள்வர்.
  • எங்கு சென்றாலும் மற்றவர் மதிப்பைப் பெறுவர்.

சிறு வினா

1. புறநானூறு – குறிப்பு வரைக

  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு
  • புறப்பொருள் பற்றிய 400 பாடல்களை கொண்டது.
  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
  • சங்ககால மக்களின் வாழ்க்கையை அறிவதற்கு கருவூலமாகத் திகழ்கிறது.
  • தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment