TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 4.3 – இடையீடு

4.3 இடையீடு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 4.2 – இதில் வெற்றி பெற. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Idaieedu

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • இடையீடு கவிதை, சி. மணியின் (சி. பழனிச்சாமி) ‘இதுவரை’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
  • இக்கவிதை குறியீடுகளைக்கொண்டு அமைந்தது. அதனால் பன்முகப் பொருள் கொண்டது.
  • இக்கவிதை, கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண்ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது.
  • 1959ஆம் ஆண்டுமுதல் ‘எழுத்து’ இதழில் இவரின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன.
  • இவர் ‘நடை’ என்னும் சிற்றிதழையும் நடத்தியவர்.
  • இவர் படைத்த இலக்கணம் பற்றிய ‘யாப்பும் கவிதையும்’ என்னும் நூலும், ‘வரும் போகும்’, ‘ஒளிச்சேர்க்கை’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
  • ஆங்கிலப்பேராசிரியரான இவர் ‘தாவோ தே ஜிங்’ எனும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
  • இவர் புதுக் கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர்;
  • இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர்;
  • விளக்கு விருது,தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்;
  • வே. மாலி, செல்வம் என்ற புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.

பாடநூல் வினாக்கள்

சிறு வினா

இடையீடு – எவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது?

இடையீடு என்ற கவிதை, கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண்ணம் எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன் குறியீடாக குறிப்பிடுகிறது.

குறு வினா

“மூன்றான காலம் போல் ஒன்று” -எவை? ஏன்? விளக்குக.

மூன்றான காலம் போல் ஒன்று” – என்பது எண்ணம், வெளியீடு, கேட்டல்

எண்ணம்:-

நம் மனதில் உள்ளவையே எண்ணம்

வெளியீடு:-

நம் மனதில் எண்ணியதை வெளியிடுவது வெளியீடு

கேட்டல்:-

  • நாம் வெளியிட்டதை கருத்து வேறுபாடின்றி கேட்பது கேட்டல்
  • எண்ணம் மொழியாக உருவாக்கப்பட்டு வெளிப்படுத்தி கேட்கிறவர்கள் சொல்லுகின்ற கருத்துகளைப் புரிதல். இவற்றில் மாற்றமடையலாம்.
  • எப்படி மூன்று காலம் ஒரே நேரத்தில் கூற முடியாதோ அப்படியே இந்த மூன்றும் ஒன்றாக வருவதில்லை.

கற்பவை கற்றபின்

இதழ்களில் வெளிவந்துள்ள கவிதைகளில் இரண்டினைத் திரட்டி, வகுப்பறையில் படித்துக் காட்டி, அவை கவிஞனின் மனநிலையை எவ்விதம் வெளிப்படுத்துகின்றன என்பதை விளக்கவும்.

கர்பிணித்தாய் வேலைக்குச் சென்றாள் கருவும் சுமந்து சுமையை கூலி இல்லாமல் தலை விதியால் தலைவி வயிற்றைக் கழுவ வேலைக்குச் செல்கிறாள். இது விதியின் செயல். பிறக்கும் முன்னே பேதை என்ன பாவம் செய்தது சுமை தாங்க?

வறுமையின் பிடியில் வாடும் உயிர்களைப் படம் பிடித்தது போல, சொல்லால் ஓவியம் தீட்டி மனதை மெழுகாய் உருக வைக்கிறது இக்கவிதை.

ஏழையின் வீட்டினுள் காய்கிறது நிலவு கூரையும் இல்ல குளிச்சியுமில்லை ஏழை பாவம் என்ன செய்வான். எண்சாண் உடம்பில் ஒருசாண் வயிற்றுக்கே பாடுபடுகிறான். ஒட்டிய வயிறும் கட்டிய மனைவியும் எட்டாத செல்வமும் இவனது உடைகள். எதிர்காலம் இவனுக்கு இரட்டு, நிகழ்காலம் என்னவோ வெறுமைதான். பகலில் பாடுபடும் இவனுக்கு ஓய்வெடுக்கம் இரவில் கரைகூட இல்லை இவன் வீட்டில்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. கவிஞர் சி. மணியின் கவிதைகள் எந்த ஆண்டு முதல் எழுத்து .இதழில் வெளிவந்தது?

  1. 1957
  2. 1960
  3. 1959
  4. 1956

விடை : 1959

2. விளக்கு என்னும் சிற்றிதழை நடத்தியவர்

  1. புதுமைபித்தன்
  2. சி.மணி
  3. கு.அழகிரிசாமி
  4. சுப்பிரமணியன்

விடை : சி.மணி

3. கூற்று 1 – குதிரை வரையக் குதிரை வராது; கழுதையும் வரலாம் இரண்டும் கலக்கலாம்.

கூற்று 2 – கனியின் இனிமை கனியில் மட்டுமல்ல; சுவைப்போன் பசியை, சுவை முடிச்சை சார்ந்தது.

  1. கூற்று 1 மட்டும் சரி
  2. கூற்று 2 மட்டும் சரி
  3. கூற்று இரண்டும் தவறு
  4. கூற்று இரண்டும் சரி

விடை : கூற்று இரண்டும் சரி

4. கூற்று 1 – சொல்ல விரும்பியதெல்லாம் எழுத்தில் வருவதில்லை.

கூற்று 2 – எலிக்குப் பொறிவைத்தால் விரலும் விழுவது உண்டு

  1. கூற்று 1 மட்டும் சரி
  2. கூற்று 2 மட்டும் சரி
  3. கூற்று இரண்டும் தவறு
  4. கூற்று இரண்டும் சரி

விடை : கூற்று 2 மட்டும் சரி

5. கவிஞர் சி. மணி மொழியெர்த்த சீன  மெய்யில் நூல்

  1. தாவோ ஜி ஜிங்
  2. தாவோ லி ஜிங்
  3. தாவோ ஜிங்
  4. தாவோ ஸி ஜிங்

விடை : தாவோ ஜிங்

6. புதுக்கவிதையில் அங்கதம் சுவையை மிகுதியாகப் பயன்படுத்தியவர்.

  1. புதுமைபித்தன்
  2. சி.மணி
  3. கு.அழகிரிசாமி
  4. சுப்பிரமணியன்

விடை : சி.மணி

7. இருத்தலின்  வெறுமையை சிரிப்பும் கசப்புமாக சொன்னவர்.

  1. புதுமைபித்தன்
  2. சி.மணி
  3. கு.அழகிரிசாமி
  4. சுப்பிரமணியன்

விடை : சி.மணி

8. பொருந்தாததை தேர்க

  1. கனியின் இனிமை சுவைப்போன் பசியை சுவை முடிச்சைச் சார்ந்தது
  2. சொல்ல வந்தது சொல்லில் வந்தாலும், கேட்பதில் சிக்கல் உண்டு.
  3. நீர்தேடி அலையும் போது இளநீரும் கிடைக்கும்.
  4. எத்தனையோ ஏமாற்றங்கள் குறி தவறிய மாற்றங்கள் புழுங்கப் பலவுண்டு

விடை : எத்தனையோ ஏமாற்றங்கள் குறி தவறிய மாற்றங்கள் புழுங்கப் பலவுண்டு

8. பொருந்தாதைத் தேர்க

  1. கவிஞர் சி.மணி, வே.மாலி. செல்வம் என்னும் புனைப்பெயர்களில் எழுதியுள்ளார்.
  2. கவிஞர் சி.மணி, ஆசான் கவிதை விருது பெற்றவர்
  3. கவிஞர் சி.மணி ‘வரும்போகும்’ என்னும் சிற்றிதழை நடத்தி வந்தார்.
  4. கவிஞர் சி.மணி எழுத்து இதழில் எழுதியவர்

விடை : கவிஞர் சி.மணி ‘வரும்போகும்’ என்னும் சிற்றிதழை நடத்தி வந்தார்.

9. சி.மணி பேராசிரியராகப் பணியாற்றி துறை

  1. தமிழ்
  2. ஆங்கிலம்
  3. கணிதம்
  4. இயற்பியல்

விடை : ஆங்கிலம்

10. “வரும்போகும், ஒளிச்சேர்க்கை” என்னும் கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர் …………….

  1. வேணுகோபாலன்
  2. சி.மணி
  3. ஆத்மாநாம்
  4. இரா.மீனாட்சி

விடை : சி.மணி

11. எம்மூன்றும் எப்போதும் ஒன்றல்ல என்கிறார் சி.மணி

  1. எண்ணம், வெளியீடு, கேட்டல்
  2. பார்த்தல், கேட்டல், ரசித்தல்
  3. பார்த்தல், கேட்டல், கவனித்தல்
  4. உணர்தல், நினைத்தல், செய்தல்

விடை : எண்ணம், வெளியீடு, கேட்டல்

சிறு வினா

1. கல்வி எவற்றையெல்லாம் நமக்கு வழங்கிறது?

  • சாதிக்கும் திறனையும் சறுக்கல்களில் நம்பிக்கையும் தருகிறது.
  • நமக்குத துணை நின்று காக்கும் அறிவையும் வழங்கிகிறது.

2. கற்பித்தல், கற்றல் இரண்டிற்கும் இடையே நிகழும்விளைவுகள் யாவை?

  • கற்பித்தல், கற்றல் இரண்டிற்கும் இடையே இடையீடுகள் நேர்வது உண்டு.
  • எதிர்பாராத நல்ல விளைவிகளும் கிடைப்பது உண்டு.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment