TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 3.2 – விருந்தினர் இல்லம்

3.2 விருந்தினர் இல்லம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 3.2 – விருந்தினர் இல்லம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Virunthinar Illam

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் அழகாக மொழியாக்கம் செய்தவர் கோல்மன் பார்க்ஸ்.
  • அதனைத் தமிழில் ‘தாகங்கொண்ட மீனொன்று’ என்ற தலைப்பில் என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார்.
  • அத்தொகுப்பிலுள்ள கவிதையொன்று பாடப்பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
  • ஜலாலுத்தீன் ரூமி (இன்றைய) ஆப்கானிஸ்தான் நாட்டில், கி.பி. (பொ.ஆ.) 1207ஆம் ஆண்டில் பிறந்தார்.
  • பாரசீகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர். இவரது சூஃபி தத்துவப் படைப்பான ‘மஸ்னவி’ (Masnavi) 25,600 பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
  • மஸ்னவி என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கவிதைகளின் தொகுப்பு.
  • இவரின் புகழ்பெற்ற மற்றொரு நூல், ‘திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி’ (Collective Poems of Shams of Tabriz) என்பதாகும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது

  1. வக்கிரம்
  2. அவமானம்
  3. வஞ்சனை
  4. இவை அனைத்தும்

விடை : இவை அனைத்தும்

குறு வினா

எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தையும் ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு என்று உருவகப்படுத்திகிறார். இவைகளை நமது இல்லத்திற்கு வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக எண்ண வேண்டும்.

இவ்வாறு எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி உருவகப்படுத்துகிறார்

சிறு வினா

“வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக

இடம்:-

இக்கவிதை வரிகள் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய கவிதையின் ஆங்கில மொழியாக்கதத்தை தமிழில் “தாகங்கொண்ட மீளொன்று” என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார் என்.சத்தியமூர்த்தி, அத்தொகுப்பில் உள்ள “விருந்தினர் இல்லம்” என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்:-

வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் நம்மைத் தேடி வரும் நன்மையோ, தீமையோ எது வந்தாலும் அதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

விளக்கம்:-

வாழ்க்கை என்பது எல்லாம் கலந்த கலவை. நம் வாழ்க்கை விருந்தினர் இல்லம் போன்றது. நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் மகிழ்ச்சியுடன் வருபவர்களும் இருப்பர். துக்கங்களை கொண்டு வருபவர்களும் இருப்பர். அது போன்று தான நம் வாழ்க்கையும், ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், சிறிது விழிப்புணர்வு என பல வாழ்வியல் வடிவங்கள் நம்மைத் தினம் தினம் விருந்தினர்களைப் போலச் சந்திக்கலாம் அவற்றை எல்லாம் நாம் வரவேற்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு புதுப்புது அனுபவங்களைத் தரும். மகிழ்ச்சியால் மகிழ்ந்தாலும், துக்கத்தால் வெறுமையடைந்தாலும் துவண்டு விடக் கூடாது. ஏனெனில் எல்லாமே நமக்கு அனுபவங்களைக் கற்றுத் தரும். எனேவ எது வந்தாலும் விருந்தினரை எதிர்கொண்டு வரவேற்பது போல வரவேற்று அனுபவங்களைக் கற்றுத்தரும் வாழ்வியல் வடிவங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

கற்பவை கற்றபின்

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளில் உங்கள் மனம் கவர்ந்த சிலவற்றை வகுப்பறையில் படித்துக் காட்டுக.

லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதைகள்

மெளனம்

உன் மெளனத்தின் அடுக்குளிலிருந்த
வார்த்தைகளைப்
பிடித்துக் கொள்கிறேன்
சொற்களின் ஒலிகள்
செவிகளை வந்தடைத்
தேவையில்லை
எல்லா மெளனங்களும்
உன் வார்த்தைகளேயே
பேசிக் கொண்டிருக்கின்றன

கனவுகள்

கனவுகளைச் சட்டெனப் பற்றிக் கொள்
கனவுகள் இறந்துவிடலாம்
வாழ்வென்பது பறக்கவியலாத
இறக்கை உடைந்த ஒரு பறவையைப் போன்றது
கனவுகளைச் சட்டெனப் பற்றிக்கொள்
கணவுகள் தொலைந்து போகலாம்
வாழ்வென்பது வறண்டுபோன வயல் அதில்
பனிகெட்டியாக உறைந்து கிடக்கிறது.

எனது மக்கள்

இரவு அழகானது
எனது மக்களின் முகங்களைப் போலவே…
விண்மீன்கள் அழகானவை
எனது மக்களின் கண்களைப் போலவே…
சூரியனும் அழகானதுதான்
எனது மக்களின் ஒளிரும் ஆன்மாவைப் போலவே….

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்

  1. கோல்மன் ரூபன்
  2. கோல்மன் ஹிப்ஸ்
  3. கோல்மன் பார்க்ஸ்
  4. கோல்மன் ஹிக்ஸ்

விடை : கோல்மன் பார்க்ஸ்

2. “தாகங்கொண்ட மீனொன்று” என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்

  1. என். சத்தியமூர்த்தி
  2. ஆர். சத்தியமூர்த்தி
  3. எம். சத்தியமூர்த்தி
  4. எஸ். சத்தியமூர்த்தி

விடை : என். சத்தியமூர்த்தி

4. விருந்தினர் இல்லத்தில் ஒவ்வொரு காலையும் ஒரு

  1. புதுவரவு
  2. சங்கீத மேடை
  3. புதுமை
  4. ஆனந்தம்

விடை : புதுவரவு

5. ஒவ்வொரு விருந்தினரையும் நடத்தும் முறையாக விருந்தினர் இல்லம் குறிப்பிடுவது

  1. அன்பாக
  2. பாசமாக
  3. உறவாக
  4. கெளரவமாக

விடை : கெளரவமாக

6. ஜலாலுத்தீன் ரூமியின் கவிதையைத் தமிழாக்கம் செய்த என்.சத்தியமூர்த்தி இட்ட தலைப்பு

  1. தாகங்கொண்ட மீனொன்று
  2. தாகங்கொண்ட காகமொன்று
  3. மேகமீதில் விண்மீனொன்று
  4. மழைத்துளியும் மண்ணும்

விடை : தாகங்கொண்ட மீனொன்று

7. ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பான “மஸ்னவி” ________ பாடல்களைக் கொண்டதாகக் சொல்லப்படுகிறது.

  1. 23,500
  2. 25,600
  3. 24,600
  4. 26,500

விடை : 25,600

8. வக்கிரம் அவமானம் வஞ்சனை ஆகியவற்றை என்ன செய்ய வேண்டும் என்கிறார் ஐலாலுத்தீன் ரூமி

  1. அவற்றை வாயிலுக்கே சென்று சினத்துடன் சிதைக்க வேண்டும்
  2. அவற்றை அமைதியாக அனுபவிக்க வேண்டும்
  3. அவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்
  4. அவற்றைப் புதைகுழியில் இட்டுப் புதைக்க வேண்டும்

விடை : அவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்

குறு வினா

1. எவற்றையெல்லாம் வாசலுக்கு சென்று வரவேற்க வேண்டுமென ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிட்டுள்ளார்?

வக்கிரம், அவமானம், வஞ்சனை

2. எவையெல்லாம் எதிர்பாராத விருந்தாளிகளாக வாழ்வில் வந்து செல்லும்?

ஓர் ஆனந்தம், சற்று மனச்சோர்வு, சிறிது அற்பத்தனம், நொடிற்பொழுதேயான விழிப்புணர்வு

3. “மஸ்னவி” என்பது யாது?

“மஸ்னவி” என்பது ஆழமான ஆன்மீகக் கருத்துக்கள் நிரம்பிய இசைக்கருவிகளின் தொகுப்பு ஆகும்.

4. வரும் விருந்தினர்கள் எல்லாம் கெளரவமாகக் நடத்த வேண்டும் ஏன்?

  • வாழ்வில் சந்திக்குமு் அனைத்தையும் இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.
  • இன்பமோ, துன்பமோ அவை புது அனுபவங்களைத் தரும்.
  • துக்கங்கள் உன்னை முழுவதுமாகத் துடைத்தாலும் இனிமையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • புதிய மகிழ்ச்சிக்காக அந்த துக்க நிகழ்வுகள் உன்னைத் தயாரிக்கும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment