TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 2.3 – நெடுநல்வாடை

2.3 நெடுநல்வாடை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12h Standard Tamil Lesson 2.3 – நெடுநல்வாடை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Nedunalvaadai

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல் நெடுநல்வாடை.
  • இது பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று ;
  • 188 அடிகளைக் கொண்டது;
  • ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
  • இப்பாடலின் பெயர் இருவகையில் பொருள் சிறந்து விளங்குகிறது.
  • தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால் நெடுவாடையாகவும் போர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருப்பதால் நெடுநல்வாடை எனும் பெயர் பெற்றது.

சொல்லும் பொருளும்

  • புதுப்பெயல் – புதுமழை
  • ஆர்கலி – வெள்ளம்
  • கொடுங்கோல் – வளைந்த கோல்
  • புலம்பு – தனிமை
  • கண்ணி – தலையில் சூடும் மாலை
  • கவுள் – கன்னம்
  • மா – விலங்கு

இலக்கணக்குறிப்பு

  • வகைஇ – சொல்லிசை அளபெடை
  • பொய்யா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்;
  • புதுப்பெயல், கொடுங்கோல் – பண்புத்தொகைகள்

உறுப்பிலக்கணம்

கலங்கி = கலங்கு + இ

  • கலங்கு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

புணர்ச்சி விதி

1. இனநிரை = இனம் + நிரை

  • ம்வ்வீறு ஒற்றழிந்து உயரீறு ஒப்பவும்” என்ற விதிப்படி “இனநிரை” என்றாயிற்று

2. புதுப்பெயல் = புதுமை + பெயல்

  • ஈறுபோதல்” என்ற விதிப்படி “புது + பெயல்” என்றாயிற்று
  • இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “புதுப்பெயல்” என்றாயிற்று

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.பொருத்துக

அ) குரங்குகள் 1) கன்றுகளைத் தவிர்த்தன
ஆ) விலங்குகள் 2) மேய்ச்சலை மறந்தன
இ) பறவைகள் 3) மேய்ச்சலை நடுங்கின
ஈ) பசுக்கள் 4) மரங்களிலிருந்து வீழ்ந்தன
  1. 1, 3, 4, 2
  2. 3, 1, 4, 2
  3. 3, 2, 1, 4
  4. 2, 1, 3, 4

விடை : 3, 1, 4, 2

2. பொய்யா வானம்” புதுப்பெயல் பொழிந்தென” – தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு

  1. வினைத்தொகை
  2. உரிச்சொல் தொடர்
  3. இடைச்சொல் தொடர்
  4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

விடை : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

குறு வினா

1. இனநிரை – பிரித்து புணர்ச்சி விதி எழுதுக

இனநிரை = இனம் + நிரை

  • ம்வ்வீறு ஒற்றழிந்து உயரீறு ஒப்பவும்” என்ற விதிப்படி “இனநிரை” என்றாயிற்று

சிறு வினா

வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?

  • வாடைக் காலத்தில் மேகம் மழைய வலப்பக்கமாக சூழ்ந்து பூமி குளிரும் படி மழையைப் பெய்தது.
  • தாழ்வான பகுதியில் வெள்ளம் பெருகியது.
  • கோலர்கள் தாங்கள் மேயவிட்டிருந்த எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை மேடான நிலங்களுக்கு மாற்றினார்.
  • பழகிய நிலத்தை விட்டுப் புது இடத்தை அடைத்தால் வருந்தினர்.
  • தண்ணீர் தாழ்வான பகுதியில் நிரம்பிவிடும் என்பதால் பாதுகாப்பிற்காக மேடான பகுதிக்குச் சென்றனர். நீர்த்துளிகள் மேலபடுவதாலும், வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.

நெடு வினா

நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லி வடிக்க?

  • ஐப்பசி மாதம் அடை மழைக்காலம் என்பார்கள். பழந்தமிழர் ஐப்பசி,கார்த்திகை மாதங்களை கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர். பருவ மாற்றங்களால் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை மாற்றம் பெறுகிறது.
  • முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழை குளிரால் ஏற்படும் தாக்கத்தினை நெடுநல்வாடை வருணனை செய்கிறது.
  • தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
  • பழகிய நிலத்தை விட்டுப் புது இடத்தை அடைத்தால் வருந்தினர்.
  • தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
  • தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர். அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது. பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றியபோதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
  • விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின
  • மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழந்தன. பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன.
  • மலையையே குளிரச் செய்வன போன்றிருந்தது  என்று நக்கீரர் மழைக்கால வருணனையினை நெடுநல்வாடையில் பதிவு செய்கிறார்.

கற்பவை கற்றபின்

தற்கால வாழ்க்கைமுறையில் மழை, குளிர் காலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.

ஆசிரியர் மாணவ – மாணவியருக்கு வணக்கம், இன்று மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் பாதிப்புப் பற்றி உங்களோடு கலந்துரையாட வந்துள்ளேன்.
மாணவர்கள் ஐயா! அறிந்த கொள்ள மிக ஆவலாக இருக்கிறோம்.
ஆசிரியர் மிக்க மகிழ்ச்சி! சொல்கிறேன்.
மாணவர்கள் உறுதியாக ஐயா! நாங்கள் உங்ள் அறிவுரைப்படியே நடத்த கொள்வோம் ஐயா!
ஆசிரியர் நல்லது, அன்பு மாணவர்களே!

முதலாவதாக மழைக்காலப் பாதிப்பு

  • மழைக்காலங்களில் மழை – ஆடை அணிந்து கொள்ளவில்லை என்றால் சளி, சுரம் இவைகளி் வாயிலாக உடல் பாதிப்புக்கு உள்ளாகும்.
  • வீட்டினைச் சுற்றி மேடான அமைப்பு இல்லை எனில் மழை நீர் தேங்கும். நீர் தேங்கினால் கொசுத் தொல்லை ஏற்படும் அபாயம் எற்படும்.
  • மழைக்காலத்தில் மின்கம்பங்களுக்கு அருகில் நிற்றல், மரங்களுக்கு கீழே நிற்றல் போன்ற செயல்களாலும் பாதிப்பு மற்றும் ஆபத்து எற்படும்.
  • மொட்டை மாடியின் மேல் நீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும். தேங்கினால் மேற்கூரை நீரினால் ஊறி வீடே இடிந்த விழும் சூழல் ஏற்படும்.
  • குளிர்காலங்களில், தலைக்கு கம்பளி ஆடை, காதுக்கு அடைப்பானும் அணிய வேண்டும். இல்லையெனில் குளிர்காற்று காதில் புகுந்து காய்ச்சல், சளி தொந்தரவினை உண்டாக்கும். அதிகமான குளிர் சிறு குழந்தைகளுக்குச் சிறுசிறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
  • எனவே, “வருமுன்னர் காப்போம்” என்னும் கூற்றுப்படி நம்மை நாமே காக்க முற்பட வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • முனைஇய – சொல்லிசை அளபெடை
  • புடையூஉ – இன்னிசை அளபெடை
  • பனிப்ப, பரப்பி, கலங்கி, நலிய, மறப்ப, வீழ – வினையெச்சங்கள்

உறுப்பிலக்கணம்

1. படிவன = படி + வ் + அன் + அ

  • படி – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • அன் – சாரியை
  • அ – வினையெச்சவிகுதி

பலவுள் தெரிக

1. “ஆர்கலி” என்ற சொல்லின் பொருள்

  1. சூரியன்
  2. வெள்ளம்
  3. கடல்
  4. நிலா

விடை : வெள்ளம்

2. “கலங்கி” – பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை

  1. கல + ங் +க் + இ
  2. கலங்கி + இ
  3. கலங்கு + க் + இ
  4. கலங்கு + இ

விடை : கலங்கு + இ

3. போர்மேற்சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு

  1. கடவை
  2. சிவிரம்
  3. கூதிர்ப்பாசறை
  4. தெற்கு

விடை : கூதிர்ப்பாசறை

4. ஆயர்கள் சூடியிருந்த மாலை

  1. காந்தள் மாலை
  2. மல்லிகை மாலை
  3. குறிஞ்சி மாலை
  4. வாகை மாலை

விடை : காந்தள் மாலை

4. வலனேற்பு – புணர்ச்சி விதிகளில் பொருந்துபவை

  1. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
  2. இனமிகல்
  3. ஆதிநீடல்
  4. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

விடை : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

5. இனநிரை – புணர்ச்சி விதிகளில் பொருந்துபவை

  1. மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
  2. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
  3. இனமிகல்
  4. ஆதிநீடல்

விடை : மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்

6. வெற்றி பெற்ற அரசனும் வீரரும் சூடுகின்ற பூ 

  1. வாகை
  2. மல்லிகை
  3. காந்தள்
  4. குறிஞ்சி

விடை : வாகை

7. போர் மேற்கொண்ட அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு __________

  1. கூதிர்பாசறை
  2. கடவை
  3. சிவிரம்
  4. வீடாரம்

விடை : கூதிர்பாசறை

8. ஆயர்கள் சூடியிருந்த மாலை __________

  1. வாகை மாலை
  2. மல்லிகை மாலை
  3. காந்தள் மாலை
  4. குறிஞ்சி மாலை

விடை : காந்தள் மாலை

9. நெடுநல்வாடையை இயற்றியவர் __________

  1. கபிலர்
  2. நக்கீரர்
  3. பரணர்
  4. திருமூலர்

விடை : நக்கீரர்

10. நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன் __________

  1. பாண்டியன் நெடுஞ்செழியன்
  2. சோழன் கரிகாலன்
  3. மாங்குடி மருதனார்
  4. கூடலூர்கிழார்

விடை : பாண்டியன் நெடுஞ்செழியன்

11. நக்கீரரின் தந்தை

  1. மாங்குடி மருதனார்
  2. வெள்ளைக்குடி நாகனார்
  3. மதுரைக் கணக்காயனார்
  4. இவர்களில் எவருமிலர்

விடை : மதுரைக் கணக்காயனார்

12. நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது.

  1. 188
  2. 196
  3. 150
  4. 101

விடை : 188

13. கண்ணி என்பது

  1. கழுத்தில் அணியும் மாலை
  2. தலையில் சூடும் மாலை
  3. கையில் அணியும் மாலை
  4. காலில் அணியும் தழல்

விடை : தலையில் சூடும் மாலை

14. கூதிர் பருவத்திற்குரிய மாதங்கள்

  1. தை, மாசி
  2. மார்கழி, தை
  3. பங்குனி, சித்திரை
  4. ஐப்பசி, கார்த்திகை

விடை : ஐப்பசி, கார்த்திகை

15. முல்லை நிலத்தில் குளிரால் நடுங்கியவை

  1. பறவைகள்
  2. பசுக்கள்
  3. குரங்குகள்
  4. எருதுகள்

விடை : குரங்குகள்

குறு வினா

1. நெடுநல்வாடை குறிப்பு வரைக

  • தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்பமிகுதியால்  நெடுவாடை (நீண்ட வாடை)யாக இருந்தது.
  • பாேர்ப் பாசறையிலிருக்கும் தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாகவும் இருந்தது.

2. கூதிர்ப்பாசறை என்றால் என்ன?

போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு.

3. கூதிர்ப்பருவம் என்பது என்ன?

ஐப்பசி, கார்த்திகை இரண்டு மாதங்களும் கூதிர்ப் பருவமாகும்.

4. நக்கீரர் – குறிப்பு வரைக

  • மதுரை கணக்காயனாரின் மகன் நக்கீரர்
  • அகநானூற்றில் 17 பாடல்கள், குறுந்தொகையில் 8 பாடல்கள், நற்றிணையில் 7 பாடல்கள், புற நானூற்றில் 3 பாடல்கள் பாடியுள்ளார்.
  • இறையனார் களவியலுக்குச் சிறந்த உரையினை தந்தவர்.
  • கபிலர், பரணர் காலத்தினைச் சார்ந்தவர்
  • பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாக கெண்டு 188 அடிகளை உடைய நெடுநல்வாடையினை இயற்றினார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment