TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 1.2 – தமிழ்மொழியின் நடை அழகியல்

1.2 தமிழ்மொழியின் நடை அழகியல்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12h Standard Tamil Lesson 1.2 – தமிழ்மொழியின் நடை அழகியல். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Tamil Mozhiyin nadai azhagiyal

12th Std Tamil Text Book – Download

நூல்வெளி

  • தி.சு.நடராசன் எழுதிய ‘தமிழ் அழகியல்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள் தொகுக்கப்பட்டுப் பாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
  • திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் தி.சு.நடராசன் குறிப்பிடத்தக்கவர்.
  • திறனாய்வாளராகப் பரவலாக அறியப்படும் இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
  • கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள் உள்ளிட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்

  1. யாப்பருங்கலக்காரிகை
  2. தண்டியலங்காரம்
  3. தொல்காப்பியம்
  4. நன்னூல்

விடை : தொல்காப்பியம்

2. கருத்து 1: இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.

கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

  1. கருத்து 1 சரி
  2. கருத்து 2 சரி
  3. இரண்டு கருத்தும் சரி
  4. கருத்து 1 சரி, 2 தவறு

விடை : இரண்டு கருத்தும் சரி

3. பொருத்துக.

அ) தமிழ் அழகியல் 1) பரலி சு. நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ 2) தி.சு. நடராசன்
இ) கிடை 3) சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி 4) கி. ராஜநாராயணன்
  1. 4, 3, 2, 1
  2. 1, 4, 2, 3
  3. 2, 4, 1, 3
  4. 2, 3, 4, 1

விடை : 2, 3, 4, 1

குறு வினா

1. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

  • ‘நடைபெற்றியலும்’ (கிளவியாக்கம், 26) என்றும் ‘நடைநவின்றொழுகும்’ (செய். 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
  • கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்
  • மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.

2. “படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக”– இச் சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக.

ஓசை நயமிக்க சொற்கள்

படாஅம் ஈத்த, கெடாஅ நல்லிசை, கடாஅ யானை, நல்லிசை

ஓசை நயமிக்க சொற்கள்

  • படாஅம், கெடாஅ, கடாஅ – செய்யுளிசையளபெடைகள்
  • ஈத்த – பெயரெச்சம்
  • நல்லிசை – பண்புத்தொகை

3. விடியல், வனப்பு – இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க.

பூத்துக் குலுங்கும் பூக்களின் மணத்திலும் பறவைகளின் ஒலிகளிலும் விடியலின் வெளிச்சமாக உதிக்கம் கதிரவனின் தோற்றம் வனப்பை எடுத்துரைக்கும்.

சிறு வினா

சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் – விளக்குக.

  • எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும் இசையிலிருந்தும் தான் தோன்றுகிறது.
  • சங்கப்பாடல்களில் ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்கின்றன.
  • இதனையே அந்தப் பனுவல் பாடல்களின் ஒலிப்பின்னல் என்கிறோம். இந்த ஒலிக்கோலங்கள் உணர்ச்சிகளைக் காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

கடந்தடு தானை மூவிருங்கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கரிதே;
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;

  • உயிர் ஒலிகள் குறிப்பாக நெடில் ஒலிகளின் வருகையும், சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பவரல் தன்மை பெற்றிருப்பதும், இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாக விளங்கியதை உணர்த்தும்.

சான்று :- “படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை கடாஅ யானைக்” – இவ்வரிகள் ஒலிக்கோலத்தின் பண்பை உணர்த்துகிறது.

நெடு வினா

கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.

கவிதையின் நடையைக் கட்டமைப்பன:-

பாட்டு அல்லது நடைஅழகியியல் கூறுகளில் ஒலிக்கோலங்களும் சொற்களின் புலமும் தொடரியல் போக்குகளும் முக்கியமானவை

கவிதை – நடையியல்:-

மொழியின் தனிச்சிறப்பான கூறுகளும் அவற்றைக் கையாளுகின்ற வகைமைகளும் கவிதையின் உந்துசக்தியாக அமைகின்றன. மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது . கவிதையின் இயங்காற்றல் தான் நடை.  நடைபெற்றியலும்’ (கிளவியாக்கம், 26) என்று தொல்காப்பியம் கூறுகிறது.

ஒலிக்கோலங்கள்:-

எந்தத் தொன்மையான மொழியும் சமிக்ஞையிலிருந்தும் இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது. ஓசையும் பொருளும் இணைந் து கலைவடிவம் கொள்கின்றன. இதனையே அந்தப் பனுவலின் – பாடலின் – ஒலிப்பின்னல் என்கிறோம்.

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக

இதில் பல உயிர் ஒலிகள் வருகையும் திரும்பவரல் தன்மையும் இவற்றோடு சேர்ந்து நிகழ்த்தப்பெறும் சொல் விளையாட்டுகளும் இங்கே கவனத்திற்குரியன.இந்த ஒலிக்கோலம் சங்கப்பாடல்களில் முக்கியமான ஒரு பண்பு.

சொற்புலம்:-

சொல் வளம் என்பது, ஒரு பொருள் குறித்து வரும் பல சொல்லாய்ப் பல பொருள் குறித்துவரும் ஒரு சொல்லாய் வருதலும் பல துறைகளுக்கும் பல சூழல்களுக்கும் பல புனைவுகளுக்கும் உரியதாய் வருதலும் உணர்வும் தெளிவும் கொண்டதாய் வருதலும் என்று செழிப்பான தளத்தில் சொல், விளைச்சல் கண்டிருப்பதைக் குறிப்பது ஆகும். சங்க இலக்கியத்தில் இது மலர்ந்தும் கனிந்தும் கிடக்கிறது

முல்லைக்கலியில், காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன. சொல்வளம் என்பது, தனிச் சொற்களாய் நிறைந்து அமைவதையும் குறிக்கும்;

தொடரியல் போக்குகள்:-

ஒலிக்கோலமும் சொற் புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்தி கட்டி வரப்புயர்த்தும் பணிகளைத் தொடரியல் வடிவம் செய்கின்றது. பரிமாறப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள் நடந்தும் ஏறியிறங்கியும் திரும்பியும் சுழன்றும் இயஙகுகின்றன.

தாெடர்மைப்பு:-

தாெடர்மைப்பு என்பது, எழுவாய் + செயப்படுபொருள் அல்லது பிறவற்றுடன் கூடிய அமைப்பு + பயனிலை என்று வருவதே மரபு. ஆனால் சங்கப் பாடல்கள் பலவற்றில் இது பிறழ்ந்துவருகிறது.

சான்று ; பேரெயின் முறவலாரின், நம்பி நெடுஞ்செழியனுடைய சாவு சடங்கு பாடல்

“இடுகவொன்றோ, சுடுகவொன்றோ
படுவழிப்படுக இப்புகழ் வெய்யோன் தலையே

இதன் இறுதி அடி பிறழ்வோடு அமைந்துள்ளது. ஏனைய 20 அடிகளில் தொடர் வரிசையாகவும் நேர்படவும் செல்கின்றன. ஒவ்வொர் அடியும் வினைமுற்றுகளோடும், தன்னிறைவோடு முடிகின்றன. இப்படி 18 பண்புகளை  வரிசைபடுத்திய பிறகு, தொகுத்துச் சொல்லுவது போல (ஆங்குச் செய்பவையெல்லாம் செய்தனன் ஆதலின்) கூறிவிட்டுப் போடா போ – புதைத்தால் புதை, சுட்டால் சுடு என்று அலுத்துக் கொள்கிறது.

இறுதியாக:-

நடையியல் என்பது வடிவமைப்பின் பகுதிகளையும் முழுமையினையும் சார்ந்தே இருக்கிறது. அத்தகைய நடை அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே முதன்மை ஆதாரம். மேலும் சங்க இலக்கியம் அதனுடைய தனித்துவ மிக்க சமூக – பண்பட்டுத் தளத்தில் குறிப்பிட்ட சில பண்புகளையும் போக்குகளையும் சொந்த மரபுகளாக கொண்டு விட்டது. எனவே, கவிதைகளை கட்டமைக்கும் அழகியல் கூறுகள் சங்க இலக்கியத்தில் பரவிக் காணப்படுகின்றன.

கூடுதல் வினாக்கள்

1. கவிஞர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு – குன்றம் – ஒளியும் குன்றும் பாடலில் இடம்பெற்றுள்ள நடைச்சிறப்பினைத் தொகுத்து உரையாக வழங்குக.

ஒளியும் குன்றும்
அருவிகள் வைரத்தொங்கல்
அடர்கொடிப் பச்சைப்பட்டே
குருவிகள் தங்கக் கட்டி
குளிர்மலர் மணியின் குப்பை
எருதின் மேல் பாயும் வேங்கை
நிலவுமேல் எழுந்த மின்னல்
சருகெலாம் ஒளிசேர் தங்கத்
தடுகள் பாரடா நீ

– பாரதிதாசன்

இயற்கை வருணணையைப் பாரதிதாசன் செம்மைப் படுத்துவதில் வல்லவர்.

இப்பாடலில், வானுயர்ந்த மலையின் அழகை தனக்கே நடையில் உருவகப்படுத்துகிறார்.

  • மலையினின்று விழும் வெண்மையான அருவிகள் மலையாகிய பெண்ணின் காதில் அணிந்திருக்கும் வைரத்தாலான தொங்கலாக உள்ளது.
  • மலையில் அடர்த்தியாகப் படர்ந்திருக்கும் பசுமையான கொடிகள் அப்பெண் உடுத்தியிருக்கும் பச்சைப் பட்டாடையாகக் காணப்படுகிறது.
  • மலையில் காணப்படம் குருவிகள் சூரிய ஒளியின் காரணமாகக் தங்கத் கட்டிகளாக காணப்படுகிறன்றன.
  • பூத்திருக்கும் பூக்கள் நவமணிகள் ஆகக் காட்சியளிக்கின்றன.
  • எருதின் மேல் பாயும் வேங்கைக் காட்சிகள் முன் வைக்கப்படுகிறது.
  • நிலவின் மேல் ஓடுகின்ற மின்னலின் வரிகள் விழுந்த கிடக்கும் சருகுகள் ஒளியின் பிரகாசத்தால் தங்கத்தகடுகளாக காட்சியளிக்கின்றன.

2. தமிழின் சொல்வளத்தை வெளிப்படுத்தும்படியாக யானை / மலர் குறித்த பல சொற்களை அகராதியில் கண்டு பட்டியலிடுக.

யானை

  • வேழம்
  • களிறு
  • களபம்
  • மாதங்கம்
  • கைம்மா
  • உம்பர்
  • கரி
  • தும்பி
  • ஆனை
  • களபம்
  • கயமுனி
  • கைம்மலை
  • குஞ்சம்
  • வல்விலங்கு
  • துங்கல்
  • வாணரம்
  • கடகம்
  • துடியடி

மலர்

  • அரும்பு
  • போது
  • நளை
  • முகில்
  • புஷ்பம்
  • நறுவி
  • வீதி
  • மெகெகுள்
  • செம்மலர்
  • பொதும்பர்
  • அலர்
  • மகரந்தம்
  • பொம்மல்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. கருத்து 1 : சொல்லில்தான் உணர்வும் பொருளும் பொதிந்து கிடக்கின்றன.
கருத்து 2 : தமிழ் அழகியலைக் கட்டமைப்பதற்குச் சங்க இலக்கியமே முதன்மை ஆதாரம்

  1. கருத்து 1 சரி
  2. கருத்து 1, 2 சரி
  3. கருத்து 2 சரி
  4. கருத்து 1, 2 தவறு

விடை : கருத்து 1, 2 சரி

2. கருத்து : தொன்மையான மொழி சமிக்கைஞையிலிருந்தும் இசையிலிரந்தும் தான் தொடங்குகிறது.
விளக்கம் : மொழித்தோன்ற அடிப்படையாக இருப்பது ஒலியே. ஒலியை வெவ்வேறு வடிவங்களில் உச்சரிக்கும்போது மொழித் தோன்றுகிறது.

  1. கருத்து சரி விளக்கம் தவறு
  2. கருத்தும், விளக்கம் சரி
  3. கருத்தும், விளக்கம் தவறு
  4. கருத்து தவறு விளக்கம் சரி

விடை : கருத்தும், விளக்கம் சரி

3. கருத்து 1 : முல்லைக்கலியில் எருதுகளின் பல இனங்களை காட்டும் சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன
கருத்த 2 : சொல்வளம் ஒரு பண்பாட்டின் அடையாளமாகவும் இருக்கிறது.

  1. கருத்து 1 சரி
  2. கருத்து 2 சரி
  3. கருத்து 1, 2 சரி
  4. கருத்து 1, 2 தவறு

விடை : கருத்து 1, 2 சரி

4. “தமிழ்மொழியின் நடை அழகியல்” என்னும் கட்டுரையின் ஆசிரியர் _____________

  1. ஒளவை நடசராசன்
  2. பாலசுப்பிரமணியம்
  3. பாரதியார்
  4. தி.சு. நடசராசன்

விடை : தி.சு. நடசராசன்

5. _____________ இழுமெனும் மொழியால் விழுமியது பயக்கும் வகையின் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன.

  1. தமிழில்
  2. ஆங்கிலத்தில்
  3. தெலுங்கில்
  4. வடமொழியல்

விடை : தமிழில்

6. மலரும் மணமும் போல கவிதையுடன் இரண்டறக் கலந்திருப்பது

  1. தலைவன் தலைவியன் அன்புணர்வு
  2. தமிழர்களின் அழகுணர்வு
  3. வள்ளலின் வள்ளன்மையுணர்வு
  4. பக்தர்களின் தெய்வ உணர்வு

விடை : தமிழர்களின் அழகுணர்வு

7. அறியப்பட்ட வரலாற்றுக் காலத்தின் தொடக்கமாக தோற்றம் தருவது

  1. புராணம்
  2. சங்க இலக்கியம்
  3. கல்வெட்டு
  4. கடவுளரின்

விடை : சங்க இலக்கியம்

8. அழகியலை உருவாக்குவதற்கு தளம் அமைத்துத் தருவது

  1. தொல்காப்பியம்
  2. சங்க இலக்கியம்
  3. நன்னடத்தை
  4. புராணம்

விடை : தொல்காப்பியம்

9. சங்க இலக்கியம் பாடற்பொருளாக வடிவமைத்துள்ளவை

1. அகத்திணை சார்ந்த செய்திகள்
2. புறத்திணை சார்ந்த செய்திகள்

  1. 1 சரி
  2. 2 சரி
  3. இரண்டும் தவறு
  4. இரண்டும் சரி

விடை : இரண்டும் சரி

10. அகன் ஐந்திணைகளைப் பேசுவது __________

  1. நன்னூல்
  2. தண்டியலங்காரம்
  3. தொல்காப்பியம்
  4. புற்பொருள் வெண்பாமாலை

விடை : தொல்காப்பியம்

11. சங்கப்பாடல்களில், தொடரியில் பிறழ்வு பெரிது காணப்படுவது

  1. பாடலின் முதலில்
  2. பாடலின் நடுவில்
  3. பாடலின் இறுதியில்
  4. பாடலின் மூவிடத்தும்

விடை : பாடலின் இறுதியில்

12. ஒரு பொருளை குறித்து வரும்  பலசொல், பல பொருள் குறித்து வரும் ஒருசொல் __________ எனப்படும்

  1. சொற்புலம்
  2. ஒலிக்கோலம்
  3. சொற்றொடர் நிலை
  4. சொற்பொருள் தொடர்நிலை

விடை : சொற்புலம்

13. தொகைநிலை, தொகைமொழி பற்றிப் பேசும் தொல்காப்பியத்தில் இயல்

  1. எச்சவியல்
  2. இடையியல்
  3. உவமையில்
  4. எழுத்தியல்

விடை : எச்சவியல்

14. “இடுக வொன்றோ சுடக வென்றோ, படுவழிப் படுக இப்புகா் வெய்யோன் தலையே” என்ற புறநானூறு அடிகளில் குறிப்பிடும் மன்னர்

  1. நம்பி நெடுஞ்செழியன்
  2. அறிவுடைநம்பி
  3. செங்குட்டுவன்
  4. கிள்ளிவளவன்

விடை : பேரெயின் முறுவலார்

15. தம்பி அழகியல் என்னும் நூலின் ஆசிரியர் _____________

  1. ஒளவை நடராசன்
  2. தமிழண்ணல்
  3. வல்லிக்கண்ணன்
  4. தி.சு. நடராசன்

விடை : தி.சு. நடராசன்

16. தி.சு.நடராசன் _____________ ஆகப் பணிபுரிந்தார்.

  1. மாவட்ட ஆட்சியர்
  2. பேராசிரியர்
  3. வழக்குரைஞர்
  4. மருத்துவர்

விடை : பேராசிரியர்

குறு வினா

1. பாடலின் தளத்தை ஏர் நடத்தி பண்படுத்திப் போகின்றவை எவை?

ஒலிக்கோலம், சொற்புலம், சொற்றொடர் நிலை

2. பண்டைய கவிஞர்களுக்கு இயல்பாக இருந்த உணர்வு எது?

கவிப்பொருளை அமைக்கின்ற விதத்தில் உணர்ச்சிகளைப் பாய்ச்சும் விதத்தல் தீங்கவிகளைச் செவியாரப் பருகச்செய்து கற்றோர் இதயம் கனியும் வண்ணம் படைக்கும் அழவியல் உணர்வு, பண்டைக் கவிஞர்களுக்கு இயல்பாக இருந்தது.

3. மொழியின் வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை?

உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை, இறைச்சி

4. ‘லட்சியம்’ பொருள்களோடு இரண்டற இணைத்து விடுவது எது?

அகன் ஐந்திணைகளப் பேசுகிறது தொல்காப்பியம் புணர்தல், பிரதல் முதலான ஐந்திணைகளை இன்பம் பொருள், அறம் ஆகிய அறவியல் ‘லட்சியப்’ பொருள்களோடு இண்டற இணைத்த விடுகிறது.

5. எந்த தொன்மையான மொழியும் எவற்றிலிருந்து தொடங்குகிறது?

எந்த தொன்மையான மொழியும் சமிக்கையிலிருந்தும் இசையிலிருந்தும் தான் தொடங்குகிறது.

6. சொல்லில் புதைந்து கிடப்பன யாவை?

  • சொல்லில்தான் உணர்வும் பொருளம் பொதிந்து கிடக்கின்றன.
  • கலையும் பண்பாடும் வரலாறும் அரசியலும் பொதிந்து கிடக்கின்றன.

7. தொடரியில் வடிவம் பணிகள் யாவை?

ஒலிக்கோலமும் சொற்புலமும் சொற்றொடர் நிலையும் பாடலின் தளத்தை ஏர் நடத்திப் பண்படுத்திப் போகின்றன என்றால், பாத்திகட்டி பணிகளைத் தொடரியில் வடிவம் செய்கின்றது.

8. தி.சு. நடராசன் படைப்புகளினை கூறக?

கவிதையெனும் மொழி, திறனாய்வுக்கலை, தமிழ் அழகியல், தமிழின் பண்பாட்டு வெளிகள்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment