TN 11th Standard Tamil Book Back Answers | Lesson 8.1 – தாகூரின் கடிதங்கள்

8.1 தாகூரின் கடிதங்கள்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 8.1 – தாகூரின் கடிதங்கள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

11th Standard Tamil Guide - Thakurin kadithangal

11th Std Tamil Text Book – Download

 

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

பூஐை, விஷயம், உபயோகம் – என்பவை முறையே _____________ என்று தமிழில் வழங்கப்படும்

  1. வழிபாடு, செய்தி, பயன்பாடு
  2. பயன்பாடு, வழிபாடு, செய்தி
  3. வழிபாடு, பயன்பாடு, செய்தி
  4. செய்தி, வழிபாடு, பயன்பாடு

விடை : வழிபாடு, செய்தி, பயன்பாடு

குறு வினா

1. நாட்டுபுறத்திலும், பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றைக் கூறுகிறார்?

  • நாட்டுப்புறங்களில் இருக்கும்போது, இயற்கையே சிறந்து விளங்கிறது.
  • பட்டணத்திலோ, மனித சமுதாயமே முக்கியமானதாகத் தலைதூக்கி நிற்கிறது.

2. பராம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என்றும் கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீக்கதரசி என்றும் அழைக்கப்பட்ட தாகூர் தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார் – நிறுத்தக்குறியிடுக

“பராம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்” என்றும். “கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீக்கதரசி” என்றும் அழைக்கப்பட்ட தாகூர், தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

சிறு வினா

“தாமஸிகம்” என்றால் என்ன?

  • நாகரிக வழக்கத்தில் காலத்துக்கு ஏற்றபடி சீக்கிரம் வாடிவிடும் மலர்களுடன் தொடர்பு உண்டு. தோட்டக்காரன் கைகளில் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கும். மலர்ச்செப்பினுள் வழக்கம்போல் போவதும் வருவதும் தான் அவற்றின் வேலை, இதனைத் தாமஸிகம் என்பர்.
  • ஸதூலப் பொருள்களுக்கு அப்பால் செல்ல இயலாமல், நம் மனம் திகப்படைந்து நின்றுவிடுகின்ற நிலை. அதாவது பூஜைக்கு தேவையான மலர்களைத் தவிர வேறு எந்தப் பூக்களுடன் நமக்கு அவசியம் எதுவும் இல்லை என்பதாம்.

நெடு வினா

“சிதறிய கடிதங்கள்” உணர்த்தும் கருத்துகளைச் சிதறாது விளக்குக

“சிதறிய கடிதங்கள்” உணர்த்தும் கருத்துகள்:-

தாகூரின் சிதறிய கடிதங்கள், ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் அரிய செய்திகளை உணர்த்துகின்றன. ஆற்று வெள்ளத்தில் இறந்து மிதந்து வந்த பறவையை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் தாகூர் அதன் இறப்பு எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை ஊகித்துத் தம் சிதறிய கடிதத்தில் கூறுகிறார்.

பறவை மரணம்:-

எதிர்க்கரை புலப்படாத வகையில் தளும்பிய நீரோடு பெருக்கெடுத்த “பத்மா” ஆறு ஒரு புறமாகப் புரண்டதால் சாய்ந்து, சரிந்த மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த சிறுபறவை கீழே விழுந்தது, ஆற்றில் வெற்று உடலாக மிதந்து வந்ததாகத் தாகூர் குறிப்பிடுகிறார். சிறு பறவையின் அழகு, கூட்டின் அழகு, உழைப்பின் சிறப்பு, ஓய்வு எடுக்கும் நிலை ஆகியவற்றை அந்தப் பறவையின் வரலாறாகச் சுட்டி, அந்த மரணத்தில் முடிக்கிறார்.

தம் சிந்தனைக்கான காரணம்:-

மனிதன் தன் சுகத்திற்குமுன், பிற உயிர்களின் சுகதுக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார். மற்றப் பிராணிகளை அற்பமாக நினைப்பதையும் காட்டுகிறார். பிற உயிர்களிடம் கருணை காட்டுவதை, நடக்க முடியாத அதிசயமாக நம் சரித்திரம் விட்டுவிடவில்லை. அதனால் ஒரு பறைவயின் சின்னஞ்சிறு வாழக்கைக் களிப்பு, எத்துணை அளவு இருக்கும் என்பதைத் தம்மால் சிந்திக்க முடிவதாகத் தாகூர் கூறுகிறார்.

அலட்சிய மனப்பான்மை:-

மரங்களில் மலரும் பூக்கள் பல, நம் நாட்டில் உள்ளன. அவற்றின் அனைத்துப் பெயர்களையும், மனிதன் அறிந்திருக்கவில்லை. இலக்கியங்களில் கூறப்பட்ட பல மலர்களின் பெயர்களை மட்டுமே அறிவோம். அவை, எவை எனத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. சில மலர்களின் பெயர்களை அறிவோம். ஆனால், ஆப்பெயருக்குரிய மமலர் எது என அறியோம். பறவைகள், மரங்கள், பூக்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவோர், ஆறுககளை மட்டும் நினைவில் கொள்கின்றனர்.

தோல்விகளுக்குக் காரணம்:-

நாகரிக வாழ்க்கையில் சீக்கிரம் வாடும் மலர்களுடன் மனிதனுக்குத் தொடர்பு உண்டு. நம் மனம் ஸ்தூலப் (போகப்) பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல் திகைத்து நின்று விடுகிறது. இதனைத் “தாமஸிகம்” என்பர். அதாவது “மெடீரியலிஸம்” உலகில் எத்தனையோ நேர்த்தியான புட்கள் (பறவைகள்) உள்ளன. அவற்றின் பெயர்களை அறியோம். இயற்கையிடம் அலட்சிய மனப்பான்மை வளர்வதே, நம் தோல்விகளுக்குக் காரணம். இயற்கையை அலட்சியப்படுத்தாமல், இயற்கையோடு இணைந்து வாழவும், இயற்கையே நேசித்து வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் வாழ்வில் உயரலாம் என்னும் கருத்துகளை எல்லாம் உணர்த்துவனவாகத் தாகூரின் கடிதங்கள் உள்ளன.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. கவித்துவ இயல்பு கொண்டவை

  1. அண்ணாவின் கடிதங்கள்
  2. நேருவின் கடிதங்கள்
  3. மு.வ. கடிதங்கள்
  4. தாகூரின் கடிதங்கள்

விடை : தாகூரின் கடிதங்கள்

2. ‘ஜாதீ’ என்பது ___________வில் வகை

  1. முல்லை பூ
  2. குறிஞ்சி பூ
  3. நெற்தல் பூ
  4. பாலை பூ

விடை : முல்லை பூ

3. விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் _________

  1. படேல்
  2. இராஜாஜி
  3. தாகூர்
  4. திரு.வி.க

விடை : தாகூர்

4. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற தாகூரின் நூல் ________

  1. புஷ்பாஞ்சலி
  2. கீதாஞ்சலி
  3. நாட்டியாஞ்சலி
  4. மக்கள் ஆட்சி

விடை : கீதாஞ்சலி

5. குருதேவ் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் __________

  1. தாகூர்
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : தாகூர்

6. ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு __________

  1. 1918
  2. 1917
  3. 1919
  4. 1920

விடை : 1919

7. ஜாலியன்வாலா பாக் படுகொலையை கண்டித்து தாகூர் திரும்பி அளித்த பட்டம் __________

  1. டாக்டர்
  2. முனைவர்
  3. சர்
  4. கவிஞர்

விடை : சர்

குறு வினா

1. தாகூரின் சிறப்புப் பெயர்கள் யாவை?

  • பாரம்பரியத்தில் வேரூன்றிய மனிதர்
  • கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி

2. வங்காளத்தின் நாட்டுப்பண் எது?

அமர் சேனார் பங்களா

3. தாகூரின் கடிதங்கள் நூலை மொழியாக்கம் செய்தவர் யார்?

தாகூரின் கடிதங்கள் நூலை மொழியாக்கம் செய்தவர் த.நா. குமாரசுவாமி

4. தாகூர் கற்று தேர்ந்த மொழிகள் யாவை?

தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், பாலி, ஆங்கிலம்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment