TN 11th Standard Tamil Book Back Answers | Lesson 1.2 – பேச்சு மொழியும் கவிதை மொழியும்

1.2 பேச்சு மொழியும் கவிதை மொழியும் 

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 11th Standard Tamil Lesson 1.2 – பேச்சு மொழியும் கவிதை மொழியும் . We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

11th Standard Tamil Guide - Pechu mozhium Kathai mozium

11th Std Tamil Text Book – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க

அ) அ.முத்துலிங்கம் – யுகத்தின் பாடல் ஆ) பவணந்தி முனிவர் – நன்னூல்
ஆ) சு.வில்வரத்தினம் – ஆறாம் திணை ஈ) இந்திரன் – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
  1. அ, ஆ
  2. அ, ஈ
  3. ஆ, ஈ
  4. அ, இ

விடை : ஆ, ஈ

2. கவிஞர் “ஒரு திரவநிலையில், நாம் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்படிந்து நடந்து கொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது, உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைகிறது” – இவ்வரிகள் உணர்த்தும் கருத்து

  1. மொழி என்பது திட, திரவ நிலைகளில் இருக்கும்
  2. பேச்சுமொழி, எழுத்துமொழியைத் திட, திரவப் பொருள்களாக உருவகப்படுத்தவில்லை
  3. எழுத்துமொழியை விடப் பேச்சுமொழி எளிமையானது
  4. பேச்சுமொழியை விடப் எழுத்துமொழி எளிமையானது

விடை : எழுத்துமொழியை விடப் பேச்சுமொழி எளிமையானது

குறுவினா

1. பேச்சுமொழி எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?

எழுத்துமொழி, பேச்சுமொழிக்கு திரும்பும்போது வெளிப்பாட்டுச் சக்தி அதிகம் கொண்டதாக மாறிவிடுகிறது. எழுத்துமொழியைக் காட்டிலும் பேச்சுமொழி, உணர்ச்சி வெளிபாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.

சிறு வினா

1. “என்னுயிர் தமிழ்மொழி என்பேன்” என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.

  • எனக்கு உயிர்தந்தவள் தாய், தான் ஊட்டிய பாலோடு, உலகை அறிமுகம் செய்ய ஊட்டி வளர்த்த மொழி தமிழ். என் உயிரோடு கலந்து உடலோடு வளர்ந்தது. வளர்ந்தபின் வளமான மொழியை கற்றபோது, அதன் வளத்தோடு வீச்சும், ஆழம் புரிந்தது.
  • “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கு காணோம்” என் பாட்டன் பாரதி சொன்னதன் பொருளைப் புரிந்து கொண்டேன். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் கூறியதைத் தெளிந்தேன். “தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று நாமக்கல் கவிஞர் சொன்னதன் ஆழ்பொருள் அறிந்தேன். அதனால், என் தமிழை உயிரினும் மேலானதாக மதிக்கிறேன்.

2. கூற்று :- குறியீட்டுக் கவிதை என்பது பொருளை பதிவு செய்வதன்று; நினைவுகூரத்தக்க தருணங்களை பதிவு செய்வதாககும்.

கவிதை :- கூண்டு திறந்தது
சிறகடிக்கவா?
இல்லை! சீட்டெடுக்க

கூற்றில் குறியீடு எனக்குறிப்பிடுவது கவிதையில் எப்பொருளாக வந்துள்ளது?

குறியீட்டுக் கவிதை என்பது அந்தவேளையில் கண்டதன் நுண்பொருளை சிந்திக்கத் தூண்டும் எண்ணத்தைப் பதிவு செய்வதாகும்.

பறவைகளைக் கூட்டல் அடைத்து வைத்துச் சோதிடம் பார்ப்பதை அனைவரும் அறிவர். கூட்டைத் திறப்பது பறவைகளுக்குச் சுதந்திரம் தருவதற்காகவோ? அன்று

அது சிறகசைத்துப் பறப்பதை மறக்க அடித்து அடிமைப்படுத்தி விடுகிறார்கள். அதற்கென ஒரு கொத்தடிமைத் தொழிலை முடிவு செய்கிறார்கள். இந்தக் குறியீடு, சமூக அவலத்தை வெளிப்படுத்தும்; சுருக்கமாகச் சுட்டிக்காட்ட உதவும்.

நெடு வினா

நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.

முன்னுரை

கலைகளின் உச்சம் கவிதை என்பர். அக்கவிதையினை இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்றும் கூறினார் மகாகவி பாரதி, கவிதை எவ்வாறு நிகழ்கிறது; எழுத்து மொழியைக் கடந்து பேச்சுமொழி எவ்வாறு கவிதைக்கு நெருக்கமாக இருக்கிறது என்பவை பற்றிப் பேசுகிறது இக்கட்டுரை.

பேச்சுமொழி

  • எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது. எனவேதான் இலக்கிய வழக்கைக் (நெறியை) கைவிட்டுப் பேச்சுமொழிக்குத் திரும்பியவுடனே கவிஞனுடைய கவிதையின் மொழி, அதிக வெளிப்பாட்டுச் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது.
  • அதனால்தான் பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.
  • பேச்சு என்பது தன்னைத் திறந்து கொள்கிற ஒரு செயல்பாடு. பேச்சு என்பது மொழியில் நீந்துவது பேச்சு மொழியின்போது நமது உடம்பின் வெளிப்பாடுகள் நம்மை மொழியென்னும் நீரில் முன்னோக்கி நகரச் செய்கின்றன.
  • இதை உணர்ந்த கவிஞர்கள் சிலர் தங்களுடைய கவிதைகளை எதிரிலிருக்கும் வாசகனுடன் பேசுவது போல அமைகின்றனர். இதையே அவர்கள் நேரடி மொழி எனக் கருதுகின்றனர்.
  • பேச்சு மொழிக்கு ஒருபோது பழமை தட்டுவதில்லை. இது வேற்று மொழி ஆவதில்லை. அது எப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது. மாறிக்கொண்டும் இருக்கிறது. இம்மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா இல்லை இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது என்கிறார் மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மா பேச்சு மொழியில் ஒரு கவிதை செய்யப்படுகிறபோது அஃது உடம்பின் மேல் தோல் போல் இயங்குகிறது.

எழுத்துமொழி

  • ஒரு திரவ நிலையில்விரும்பும் வகையில் தன்னிடம் கீழ்படிந்து நடந்து கொள்ளும் மொழி, எழுத்துமொழியகப் பதவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியை போன்ற திடநிலையை அடைந்து விடுகிறது.
  • எழுத்து மொழி எழுவதை மட்டும்தான் மனிதனின் கை செய்கிறது. எழுத்து மொழியில் பேச்சை கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது. எழுத்து என்பது ஒரு வகையில் பார்த்தால் தனக்குத் தானே பேசிக் கொள்கிற பேச்சு.
  • பேச்சு மொழியில் ஒரு கவிதை செய்ப்படுகிறபோது அஃது உடம்பின் மேல் தோல் போல் இயங்கும். ஆனால் எழுத்து மொழியில் அதே சொற்கள் கவிதையின் உணர்வை, உணர்ச்சியற்ற ஆடைபோல் போர்த்தி மூடிவிடுகின்றன.
  • இதை உணர்ந்த கவிஞர்கள் சிலர் தங்களுடைய கவிதைகளை எதிரிலிருக்கும் வாசகனுடன் பேசுவது போல அமைகின்றனர். இதையே அவர்கள் நேரடி மொழி எனக் கருதுகின்றனர்.

முடிவுரை

  • பேச்சுமொழி, எழுத்துமொழி இவைகள் மூலம் எவ்வாறு மொழியை வெளிப்படுத்தலாம் என்பதை மேற்கண்ட கருத்துகளின மூலம் நாம் தெரிந்து கொண்டோம். எழுத்த மொழியை விட பேச்சுமொழியே வெளிப்படுத்தும் சிறந்த கருவியாக இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. “கவிதையினை இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தம்” என்றும், அதுவே “மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை” என்றும் கூறியவர் _____________

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. சுரதா
  4. ந.பிச்சமூர்த்தி

விடை : பாரதியார்

2. “மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் “உலகம்” என்பது “நான்” என்பதும், தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலைறிறுத்திக் கொள்கின்றன” எனக்கூறியவர் _____________

  1. இந்திரன்
  2. மனோரமா பிஸ்வாஸ்
  3. எர்னஸ்ட் காசிரார்
  4. ஸ்டெஃபான் மல்லார்மே

விடை : எர்னஸ்ட் காசிரார்

3. இந்திரனின் இயற்பெயர் _____________

  1. முத்துலிங்கம்
  2. இராசேந்திரன்
  3. ஜெயபாலன்
  4. வில்வரத்தினம்

விடை : இராசேந்திரன்

4. உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் மொழி _____________

  1. இலக்கியமொழி
  2. கவிதைமொழி
  3. பேச்சுமொழி
  4. எழுத்துமொழி

விடை : பேச்சுமொழி

5. மனோரமா பிஸ்வாஸ் எழுதிய கவிதை நூல் _____________

  1. உண்மையும் பொய்யும்
  2. உரைநடையும் கவிதையும்
  3. கடல் தேவதை
  4. பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்

விடை : பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்

6. வால்விட்மன் _____________ நாட்டைச் சேர்ந்தவர்

  1. இங்கிலாந்து
  2. ரஷ்ய
  3. சீன
  4. அமெரிக்க

விடை : அமெரிக்க

7. பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் _____________ 

  1. பாப்லா நெரூடா
  2. ஸ்டெஃபான்மல்லார்மே
  3. பாப்லோ நெரூடா
  4. வால்விட்மன்

விடை : ஸ்டெஃபான்மல்லார்மே

8. பாப்லோ நெரூடா _____________  நாட்டைச் சேர்ந்தவர்

  1. பிரான்சு
  2. அமெரிக்கா
  3. சிலி
  4. இங்கிலாந்து

விடை : பிரான்சு

9. இலத்தீன் அமெரிக்காவின் மிகச்சிறந்த கவிஞர் _____________ 

  1. பாப்லா நெரூடா
  2. ஸ்டெஃபான்மல்லார்மே
  3. பாப்லோ நெரூடா
  4. வால்விட்மன்

விடை : பாப்லோ நெரூடா

10. தமிழின் கவிதையில் நூலின் ஆசிரியர் _____________ 

  1. இந்திரன்
  2. பாரதியார்
  3. கா.சிவத்தம்பி
  4. ரவிவர்மா

விடை : கா.சிவத்தம்பி

11. பாப்லோ நெரூடா நோபல் பரிசு பெற்ற ஆண்டு _____________ 

  1. 1970
  2. 1971
  3. 1973
  4. 1972

விடை : 1971

12. சாகித்திய அகாதெமி விருது பெற்ற “பறவைகள் ஒரு வேளை தூங்க போயிருக்கலாம்” என்பது _____________ மொழி பெயர்க்கப்பட்டது.

  1. ஆங்கில மொழியிலிருந்து
  2. பிரெஞ்சு மொழியிலிருந்து
  3. இலத்தீன் மொழியிலிருந்து
  4. ஒரிய மொழியிலிருந்து

விடை : ஒரிய மொழியிலிருந்து

13. பறவைகள் ஒரு வேளை தூங்க போயிருக்கலாம் சாகித்திய அகாதெமியின் விருது பெற்ற ஆண்டு ___________

  1. 2008
  2. 2010
  3. 2009
  4. 2011

விடை : 2011

14. புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் ___________

  1. வால்விட்மன்
  2. பாப்லா நெரூடா
  3. ஸ்டெஃபான்மல்லார்மே
  4. கா. சிவதம்பி

விடை : வால்விட்மன்

15. குறியீட்டுக் கவிதையை உருவாக்கியவர் ___________

  1. வால்விட்மன்
  2. கா. சிவதம்பி
  3. பாப்லோ நெரூடா
  4. ஸ்டெஃபான்மல்லார்மே

விடை : ஸ்டெஃபான்மல்லார்மே

16. வாழ்க்கையின் வடிவமற்ற தன்மையைப் பேசும் கவிதை படைப்பவர் ___________

  1. வால்விட்மன்
  2. பாப்லா நெரூடா
  3. கா. சிவதம்பி
  4. ஸ்டெஃபான்மல்லார்மே

விடை : கா. சிவதம்பி

பொருத்துக

1. புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் அ. வால்ட் விட்மன்
2. குறியீட்டுக் கவிதைப் பதிவு செய்தவர் ஆ. மகாகவி பாரதியார்
3. தேசியக் கவியாகப் போற்றப்படுபவர் இ. பாப்லோ நெரூடா
4. இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்றவர் ஈ. ஸ்டெஃபான் மல்லார்மே
விடை : 1 – அ, 2 – ஈ, 3 – ஆ, 4 – இ

பொருத்துக

1. வால்ட் விட்மன் அ. ஆ. இரா. வேங்கடாசலபதி
2. ஸ்டெஃபான் மல்லார்மே ஆ. சங்கர் ஜெயராமன்
3. பாப்லோ நெரூடா இ. இராசேந்திரன்
4. மனோரமா பிஸ்வால் ஈ. வெ. ஸ்ரீராம்
விடை : 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ

பொருத்துக

1. மனோரமா பிஸ்வால் அ. ஆங்கில மொழி
2. ஸ்டெஃபான் மல்லார்மே ஆ. மலையாள மொழி
 3. பாப்லோ நெரூடா இ. ஒரிய மொழி
4. ஆற்றூர் ரவிவர்மா ஈ. பிரெஞ்சு மொழி
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ

சிறு வினா

1. இந்திரன் எழுதிய நூல்கள் யாவை?

சாம்பல் வார்த்தைகள், முப்படை நகரம், தமிழ் அழகியல், நவீன ஓவியம், பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்

2. வால்ட் விட்மனின் உலகப்புகழ் பெற்ற நூல் எது?

வால்ட் விட்மனின் உலகப்புகழ் பெற்ற நூல் “புல்லின் இதழ்கள்” (Leaves of grass) ஆகும்

3. நான் உதயமானது எப்போது என இந்திரன் கூறுகிறார்?

உலகம் என்பது மொழியினால் கட்டமைக்கப்பட்ட பிறகு, உலகத்திலிருந்து ‘நான்’ என்பது தனித்துப் பிரிந்து உதயமானதாக இந்திரன் கூறுகிறார்.

4. சொற்கள் எதற்கு உதவும்?

உணர்ச்சியினால் நிரம்பி இருக்கிறபோது, அந்த வேகத்தை பதிவு செய்வதற்குச் சொற்கள் உதவும்.

5. குறியீட்டுக்கவிதை என்பது யாது?

குறியீட்டுக்கவிதை என்பது, பொருளைப் பதிவு செய்வது அன்று; நினைவுகூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.

6. இந்திரன் கூறும் மூன்று கவிஞர்கள் யாவர்?

வால்ட் விட்மன், பாப்லோ நெரூடா, ஸ்டெஃபான் மல்லார்மே

7. எழுத்தாளர்களின் கடமை பற்றி மகாகவி பாரதி கூறுவன யாவை?

கலைகளின் உச்சம் கவிதை. அக்கவிதையினை, இயன்ற வரை பேசுவதுபோல் ஏற்றம், இறக்கம், உச்சரிப்பு, நிதானம், திருப்பித் திருப்பித் சொல்லுதல், இடையில் கொடுக்கும் மெளனம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு சொல்லில் வேறுபாடுகளை ஏற்படுத்த முடியும் என்கிறார்.

குறுவினா

1. பாப்லோ நெரூடா பற்றி குறிப்பு வரைக

  • தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டில் பிறந்தவர்.
  • இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர்.
  • தன்னுடைய கவிதைகளுக்காக 1971ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.

2. ஸ்டெஃபான் மல்லார்மே பற்றி குறிப்பு வரைக

  • ஸ்டெஃபான் மல்லார்மே பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.
  • ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • குறியீட்டியத்தை (Symbolism) தம் படைப்புகளில் கையாண்டவர்.

3. வால்ட் விட்மன் பற்றி குறிப்பு வரைக

  • வால்ட் விட்மன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.
  • கவிஞர்; இதழாளர்; கட்டுரையாளர்;
  • புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.
  • இவருடைய ‘புல்லின் இதழ்கள்’ (Leaves of grass) என்ற நூல் உலகப்புகழ் பெற்றது.

4. பேச்சுமொழி பற்றி இந்திரன் கூறும் கருத்துகள் யாவை?

  • எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது.
  • எனவேதான் இலக்கிய வழக்கைக் கைவிட்டுப் பேச்சுமொழிக்குத் திரும்பியவுடனே கவிஞனுடைய கவிதையின் மொழி, அதிக வெளிப்பாட்டுச் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது.
  • எழுத்துமொழி அப்படியன்று. எழுதுவதை மட்டும்தான் மனிதனின் கை செய்கிறது.
  • முகத்திலிருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது.
  • அதனால்தான், பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment