TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 9.2 – சித்தாளு

9.2 சித்தாளு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 9.2 – சித்தாளு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - sithalu

10th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • முகம்மதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்.
  • இவர் எண்பதுகளில் கணையாழி என்னும் இதழில் எழுத தொடங்கினார்.
  • கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு என பலதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர்.
  • மீட்சி, சுபமங்களா, புதிய பார்வை, குங்குமம், கொல்லிப்பார்வை, குமுதம், இலக்கிய வெளிவட்டம் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
  • நதியின் கால்கள், ஏழாவது சுவை, சொல்லாத சொல் ஆகிய கவிதை தொகுதிகள் இதுவரை வெளியாகி உள்ளன.
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத் தொகுதிகள் ஆகியவற்றுடன கப்பலுக்குள் மச்சான் என்னும் நாவலையும் படைத்துள்ளார்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. இவள் தலையில் எழுதியதோ
    கற்காலம்தான் எப்போதும் … இவ்வடிகளில் கற்காலம் என்பது

  1. தலைவிதி
  2. பழைய காலம்
  3. ஏழ்மை
  4. தலையில் கல் சுமப்பது

விடை : தலையில் கல் சுமப்பது

குறு வினா

‘வாழ்வில் தலைக்கனம்’, ‘தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?

‘வாழ்வில் தலைக்கனம் (அகந்தை) பிடித்தவர்கள் இடையில் ஏழ்மை காரணமாகித் தலையில் கல் சுமந்து ‘தலைக்கனமாகவே வாழ்கிறாள் சித்தாள்

சிறு வினா

1. “சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது” – இடஞ்சுட்டிப் பொருள் தருக.

இடம் சுட்டல்:-

“சித்தாளு” என்னும் தலைப்பில் நாகூர் ரூமி எழுதியுள்ள கவிதையில் இவ்வடி இடம் பெற்றுள்ளது

பொருள்:-

சித்தாளின் துன்பங்களைச் செங்கற்கள் அறிவது இல்லை

விளக்கம்:-

  • அடுத்த வேளை உணவுக்காக சுமைகளை இறக்காமல் சுமக்கும் இவர்களின் மரணம் கூட சிறிதளவே சலனத்தை ஏற்படுத்தும்.
  • பல இன்னல்களின் நடுவே தன் வாழ்வைத் தொலைக்காதிருக்க சுமை சுமக்கும் சித்தாள்களின் மனச்சுமையைச் செங்கற்களும், கற்களும் அறியாது

கற்பவை கற்றபின்

மனிதநேயத்தை வெளிப்படுத்தும் புதுக்கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.

வானம் பார்த்த பூமியாய்
வற்ண்டு கொண்டிருக்கின்றது
மனித நேயம்
மனிதா,
உன்னையும் விலங்கையும்
வேறுபடுத்துவது மனிதநேயம்தான்
ஆதலால் மனிதநேயம் வளர்ப்போம்
புதியதோர் உலகம் படைப்போம்
உடல் என்பதில்
வேற்றுமை இருப்பினும்
உயிர் என்பதில்
ஒற்றுமை கொண்டு
துயரம் கண்டதும்
கண்ணீர் விடுத்து
இஷ்டப்பட்டு இனிதே உதவுவதே
இறைவன் விரும்பும் மனிதநேயம்…

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • கற்காலம் – இருபெயராட்டுப் பண்புத்தொகை
  • புலம்புவார் – வினையாலணையும் பெயர்
  • செங்கற்கள் – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

புலம்புவார் = புலம்பு + வ் + ஆர்

  • புலம்பு – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • ஆர் – படர்க்கை வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

1. நாகூர் ரூமி இயற்பெயர் ____________

  1. முகம்மதுரஃபி.
  2. முகம்மது மீரான்
  3. முகம்மது இஸ்மாயில்
  4. முகம்மது ரசூல்

விடை : முகம்மதுரஃபி.

2. நாகூர் ரூமி பிறந்த மாவட்டம் ____________

  1. நெல்லை
  2. மதுரை
  3. திருச்சி
  4. தஞ்சை

விடை : தஞ்சை

3. நாகூர் ரூமி முதன் முதலில் எழுதிய இதழ் ____________

  1. குங்குமம்
  2. கணையாழி
  3. தென்றல்
  4. புதிய பார்வை

விடை : கணையாழி

4. நாகூர் ரூமி எழுதிய புதினம் (நாவல்) ____________

  1. சொல்லாத சொல்
  2. ஏழாவது சுவை
  3. கப்பலுக்குப் போன மச்சான்
  4. சுபமங்களா

விடை : கப்பலுக்குள் போன மச்சான்

5. சிறிதளவே சலனத்தை ஏற்படுத்துவது ____________

  1. தலைக்கனம்
  2. அடுத்தவர் கனவு
  3. சித்தாளின் மரணம்
  4. சித்தாளின் புலம்பல்

விடை : சித்தாளின் மரணம்

6. தொழிலாளர்களின் மனச்சுமையை அறியாதது ____________

  1. கட்டடம்
  2. செங்கற்கள்
  3. கம்பிகள்
  4. மணல்

விடை : செங்கற்கள்

7. தன் வாழ்வு தொலைக்காமல் காக்க தலையில் கை வைப்பவர் ____________

  1. சித்தாளு 
  2. பொறியாளர்
  3. உழவர்
  4. காவலர்

விடை : சித்தாள

8. நாகூர் ரூமியின் கவிதைத் தொகுப்புகளில் ஒன்று

  1. கப்பலுக்குப் போன மச்சான்
  2. நதியின் கால்கள்
  3. கொல்லிப்பாவை
  4. மீட்சி

விடை : நதியின் கால்கள்

9. இன்னலில் இருக்கும் தொழிலாளர் நிலையை நினைப்பவர்கள் ____________

  1. முதலாளிகள்
  2. அமைச்சர்கள்
  3. கவிஞர்கள்
  4. மக்கள்

விடை : கவிஞர்கள்

10. தன் வாழ்வு தொலைக்காமல்
தற்காத்து வைப்பதற்காக – இத்தொடரில் உள்ள நயம்?

  1. மோனை நயம்
  2. எதுகை நயம்
  3. இயைபு
  4. உவமை அணி

விடை : மோனை நயம்

11. “சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாதது” எனக்குறிப்பிடும் கவிஞர் ____________

  1. கண்ணதாசன்
  2. ஜெயகாந்தன்
  3. பாரதியார்
  4. நாகூர் ரூமி

விடை : நாகூர் ரூமி

12. மாறுபட்ட ஒன்றினைக் கண்டறிக

  1. மீட்சி
  2. சுபமங்களா
  3. ஏழாவது சுவை
  4. புதிய பார்வை

விடை : ஏழாவது சுவை

13. “கப்பலுக்கு போன மச்சான்” என்பது நாகூர் ரூமியின் ____________

  1. படைப்புகள் வெளியான இதழ்
  2. சிறுகதைத் தொகுதி
  3. கவிதைத் தொகுதி
  4. நாவல்

விடை : நாவல்

குறு வினா

1. நாகூர் ரூமியின் படைப்புகள் வெளியான இதழ்களை கூறுக

  • மீட்சி
  • இலக்கிய வெளிவட்டம்
  • கொல்லிப்பார்வை
  • குமுதம்
  • புதிய பார்வை
  • குங்குமம்
  • சுபமங்களா

2. நாகூர் ரூமி எவ்வகை தளங்களில் இயங்கி வருபவர்?

கவிதை, குறுநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு என பலதளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர்

3. நாகூர் ரூமியின் கவிதை தொகுதிகள் யாவை?

  • நதியின் கால்கள்
  • ஏழாவது சுவை
  • சொல்லாத சொல்

4. நாகூர் ரூமி படைப்புகள் யாவை?

மொழிபெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைத் தொகுதிகள் கப்பலுக்குள் மச்சான் என்ற நாவல்

5. சித்தாள் கற்கள் சுமக்க காரணம் யாது?

  • வாழ்வைத் தொலைக்காமல் தன்னைக் காக்கவும்.
  • அடுத்த வேளை உணவுக்காகவும் சித்தாள் கற்களைச் சுமக்கிறாள்.

6. “தலைக்கனமே வாழ்வாக ஆகிப்போனது இவளுக்கு” – ஏன்? யாருக்கு?

செங்கற்களைச் சுமந்து, சித்தாளுக்கு தலைக்கனமே வாழ்வாகிப் போனது.

7. “சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாதது” என்று கவிஞர் நாகூர் ரூமி கூறுவதன் உள் நோக்கம் யாது?

  • சித்தாள் தலையில் சுமக்கும் செங்கற்கள் சுமைகளை விட,
  • அவளது மனதில் சுமக்கும் வறுமை உள்ளிட்ட சுமைகள் ஏராளம் ஆகும்

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment