TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 8.5 – பா-வகைகள் அலகிடுதல்

8.5 பா-வகைகள் அலகிடுதல்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 8.5 – பா-வகைகள் அலகிடுதல். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Pa-vagai alagiduthal

10th Std Tamil Text Book – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ……….

  1. அகவற்பா
  2. வெண்பா
  3. வஞ்சிப்பா
  4. கலிப்பா

விடை : அகவற்பா

குறு வினா

1. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

  • குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும்.
  • முதலடி நான்கு சீராகவும், இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்

எ.கா.:-

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

2. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

வஞ்சிப்பா தூங்கல் ஓசையும், கலிப்பா துள்ளல் ஓசையும் பெற்று வரும்

சிறு வினா

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

  • அகவல் ஓசை பெற்று வரும்.
  • ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
  • ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.
  • மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
  • ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு.

கற்பவை கற்றபின்

1. பாடநூலில் இடம்பெற்றுள்ள கவிதைகளையும் அவற்றின் பாவகைகளையும் வகைப்படுத்திப் பட்டியிலிடுக

குறள்வெண்பா

  • திருக்குறள்

வெண்பா

  • நீதி வெண்பா
  • திருவிளையாடற்புராணம்
  • தேம்பாவணி

கலிவெண்பா

  • முல்லைப்பாட்டு
  • பரிபாடல்

ஆசிரியப்பா

  • அன்னை மொழியே
  • மலைபடுகடாம்
  • திருமால் திருமொழி
  • முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
  • மெய்க்கீர்த்தி
  • சிலப்பதிகாரம்
  • ஞானம்
  • காலக்கணிதம்
  • ஏர் புதிதா?

இணைக்குறள் ஆசிரியப்பா

  • காற்றே வா
  • பூத்தொடுத்தல்
  • சித்தாளு

இணைக்குறள் ஆசிரியப்பா

  • கம்பராமாயணம்

2. வெண்பாவில் அமைந்த நூல்கள், ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக

வெண்பாவில் அமைந்த இலக்கியங்கள்

  • திருக்குறள்
  • நாடியார்

ஆசிரியப்பாவில் அமைந்த இலக்கியங்கள்

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • பெருங்கதை

கலந்துரையாடலில் கலந்துரையாடுபவர்கள் : இரகு, மது, சாந்தி

இரகு நண்பா! மது செய்யுள் பல எழுதப்பட்டாலும் நாம் இப்போது வெண்பாவிலும், ஆசிரியப்பாவிலும் எழுதப்பட்ட நூல்கள் பற்றி உரையாடுவோம்.
மது நல்ல செய்தி தான், வெண்பாவில் ஒன்றும் ஆசிரியப்பாவில் ஒன்றும் எடுத்துக் கொள்ளலாமா?
சாந்தி மது அண்ணா! வெண்பாவில் திருக்குறளும், ஆசிரியப்பாவில் சிலப்பதிகாரமும் பற்றி பேசலாமா!
இரகு பேசலாமே! முதலில வெண்பாவில் திருக்குறளைப் பற்றி பேசலாம்.
மது உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்றை தலைமையாகக் கொண்டு 133 அதிகாரத்தையும் 1330 பாக்கள் கொண்டு குறள் வெண்பாவில் பாடப்பட்ட நூல்.
சாந்தி இந்த நூலுக்கு பத்து பேர் உரை எழுதி உள்ளார்களாம்.
இரகு இன்று ஏராளமானவர் எழுதி உள்ளனர்.  பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை.
சாந்தி நாம் திருக்குறளை படிப்பதோடு இல்லாமல் திருக்குறளோடு குறள் கூறியுள்ளது போல் வாழ்வோம்.
மது சரி, வெண்பாவினால் அமைந்த நூலைப் பார்த்தோம்
சாந்தி ஆசிரியப்பாவில் அமைந்த நூல் தமிழில் முதன் முதலில் தோன்றிய காப்பியம் எது என்று சொல்லுங்கள்.
மது சிலப்பதிகாரம் சாந்தி!
இரகு இந்நூல் கோவலன், கண்ணகி, மாதவி என மூன்று மூன்றாக பாடினாலும் குடிமக்களைப் பற்றி பாடிய நூல்.
சாந்தி
  1. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்.
  2. உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
  3. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

என்னும் மூன்று உண்மைகளைக் கூறுகிறது.

இரகு ஒவ்வொரு நூலையும் பற்றி நாம் பேசிக்கொண்டே போகலாம். நேரம் போய்க் கொண்டே இருக்கிறது. வீட்டில் தேடுவார்கள். புறப்படுவோமா!
மூவரும் நல்லது. புறப்படுவோம்.

யாப்போசை தரும் பாவோசைகள் எவையெனப் பலர் குழந்தை குறிப்பிடுகிறார்.

செப்பலோசை

இருவர் உரையாடுவது போன்ற ஓசை

அகவலோசை

ஒருவர் பேசுதல் போன்ற – சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை

துள்ளலோசை

கன்று துள்ளினாற் போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை, அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது

தூங்கலோசை

சீர்தோறுந் துள்ளாது தூங்கி வரும் ஓசை தாழ்ந்தே வரும்

கூடுதல் வினாக்கள்

குறு வினா

1. யாப்பின் உறுப்புகள் யாவை?

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளைக் கொண்டது யாப்பு.

2. பாக்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பாக்கள் நான்கு வகைப்படும். அவை

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

3. பாவின் ஓசை வகையினை கூறுக

செப்பல், அகவல், துள்ளல், தூங்கல்

4. வெண்பாக்கள் எத்தனை வகைகள் உள்ளன?

  • குறள் வெண்பா
  • சிந்தியல் வெண்பா
  • நேரிசை வெண்பா
  • இன்னிசை வெண்பா
  • பஃறொடை வெண்பா

என்று ஐந்துவகை வெண்பாக்கள் உள்ளன.

5. ஆசிரியப்பாக்கள் எத்தனை வகைகள் உள்ளன?

நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என்று நான்கு வகை ஆசிரியப்பாக்கள் உள்ளன.

6. அலகிடுதல் என்றால் என்ன?

அலகிடுதல் என்பது சீரைப் பிரித்து அசை பார்த்து, அசைக்கேற்ற வாய்ப்பாடு காணுதல் ஆகும்.

7. ஓரசைச் சீர்களை எழுதுக

  • நேர் – நாள்
  • நிரை – மலர்
  • நேர்பு – காசு
  • நிரைபு – பிறப்பு

8. ஈரசைச் சீர்களை எழுதுக

  • நேர் நேர் – தேமா
  • நிரை நேர் – புளிமா
  • நிரை நிரை – கருவிளம்
  • நேர் நிரை – கூவிளம்

சிறு வினா

1. யாப்போசை தரும் பாவோசைகள் பற்றி புலவர் குழந்தை குறிப்பிடுவன பற்றி எழுதுக

செப்பல் ஓசை:-

இருவர் உரையாடுவது போன்ற ஓசை.

அகவல் ஓசை:-

ஒருவர் பேசுதல் போன்ற – சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை

துள்ளல் ஓசை:-

கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை. அதாவது தாழ்ந்து வரும்

தூங்கல் ஓசை:-

சீர்தோறும் துள்ளாது தூங்கி வரும் ஓசை. தாழ்ந்தே வரும்.

2. வெண்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

  • செப்பல் ஓசை பெற்று வரும்.
  • ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும். இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்.
  • இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும்.
  • இரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும். (கலிவெண்பா பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும்.)
  • ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும்.

3. பாவின் ஓசைகளை விவரி

செப்பல் ஓசை:-

செப்பலோசை வெண்பாவிற்குரியது. அறம் கூறும், குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன.

அகவல் ஓசை:-

அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா என்னும் ஆசிரியப்பா.

சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை , பெருங்கதை ஆகிய காப்பியங்களும் அகவற்பாவில் அமைந்தவை.

துள்ளல் ஓசை:-

செய்யுளில் இடையிடைேய உயர்ந்து வருவது துள்ளல் ஓசை. இது கலிப்பாவுக்கு உரியது.

தூங்கல் ஓசை:-

தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது. முன் வகுப்பில் கற்ற ஏழு வகைத் தளைகளையும் நீங்கள் நினைவுகூர்தல் நல்லது.

4. மூவசைச் சீர்களை எழுதுக

  • நேர் நேர் நேர் – தேமாங்காய்
  • நிரை நேர் நேர் – புளிமாங்காய்
  • நிரை நிரை நேர் – கருவிளங்காய்
  • நேர் நிரை நேர் – கூவிளங்காய்
  • நேர் நேர் நிரை – தேமாங்கனி
  • நிரை நேர் நிரை – புளிமாங்கனி
  • நிரை நிரை நிரை – கருவிளங்கனி
  • நேர் நிரை நிரை – கூவிளங்கனி

மொழியை ஆள்வோம்!

படித்துச் சுவைக்க

மரம் தேடிய களைப்பு
மின்கம்பியில்
இளைப்பாறும் குருவி.

– நாணற்காடன்

விற்பனையில்
காற்றுப் பொட்டலம்
சிக்கனமாய் மூச்சு விடவும்…

– புதுவைத் தமிழ் நெஞ்சன்

மொழிபெயர்க்க

Once upon a time there were two beggars in Rome. The first beggar used to cry in the streets of the city, “He is helped whom God helps”. The Second beggar used to cry, “He is helped who the king helps”. This was repeated by them everyday. The Emperor of Rome heard it so often that he decided to help the beggar who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the beggar felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour, the Emperor summoned him to his presence and asked him, “What have you done with the loaf of bread that I had sent you lately?” The man replied, “I sold it to my friend, because it was heavy and did not seem well baked” Then the Emperor said, “Truly he whom God helps is helped indeed,” and turned the beggar out of his palace.

முன்பொருநாள் ரோம் நகரில் இரண்டு பிச்சைக்காரார்கள் இருந்தனர். முதல் பிச்சைக்காரன் கடவுள் எப்படியாவது யார் மூலமாவது எனக்கு உதவுவார் என்று கண்ணீர் விட்டான். இரண்டாம் பிச்சைக்காரன் மன்னனைப் புகழந்து பாடினால் மன்னன் காப்பான் என்றான். தினமும் இருவரும் இப்படியே சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

ரோம் அரசன் தன்னைப் பற்றி பேசிப் புகழந்து எப்படியாவது தான் பாதுகாப்பேன் என்று நம்புகிற பிச்சைக்காரனுக்கு உதவ விரும்பினார்.

நீளமான ரொட்டிப் பொட்டலத்தில், ரொட்டித் துண்டுகள் நடுவே சில பொற்காசுகளை வைத்து கொடுத்தான்.

இரண்டாம் பிச்சைக்காரன் ரொட்டித்துண்டுகள் கனமாக இருக்கிறது விற்றால் பணம் சம்பாதிக்கலாம் என்று முதல் பிச்சைக்காரனான நண்பனிடம் விற்றுவிடுகிறான்.

இப்படியே ரொட்டித் துண்டை தினமும் விற்கிறான். அதனை வாங்கும் முதலாம் பிச்சைக்காரன் ரொட்டித்துண்டை வெண்டிப்பார்த்தால் தினமும் பொற்காசுகள் மின்னின.

தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லி பொற்காசுகளை எடுத்து வைத்து சேர்த்து வைத்தான். பிச்சை எடுப்பதை நிறுத்தி விடுகிறான்.

இரண்டாம் பிச்சைக்காரன் தொடர்ந்து வீதியில் பிச்சை எடுத்துக்கொண்டே இருக்கிறான். மன்னன் அவனை அழைத்து நான் கொடுத்த ரொட்டி பொட்டலங்களை என்ன செய்தாய் என்று கேட்டார்.

அது எடுத்து செல்ல கடினமாக இருந்தபடியால் என் பிச்சைக்கார நண்பனிடம் அதனை விற்று விட்டேன் என்றான்.

மன்னர் தனக்குள் நினைத்துக் கொண்டார். “கடவுள் தன்னைத் தேடுபவர்களுக்கு உண்மையிலே யார் மூலமாவது உதவுகிறார்” இரண்டாம் பிச்சைக்காரனிடம் திரும்பி, ‘சரி நீ போகலாம்’ என்று அரண்மனையில் இருந்து வெளியேறச் சொன்னார்.

மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

1. மனக்கோட்டை

விடை : முயற்சி இல்லாமல் முன்னேறலாம் என சிலர் மனக்கோட்டை கட்டுகிறார்கள்.

2. கண்ணும் கருத்தும்

விடை : கண்ணும் கருத்தாய் கவனமுடன் படிக்க வேண்டும்.

3. அள்ளி இறைத்தல்

விடை : பணத்தைக் கணக்குப் பார்க்காமல் அள்ளி இறைத்தல் நம்மை வறுமை நிலைக்கு தள்ளவிடும்.

4. ஆறப்போடுதல்

விடை : பிரச்சனைகளை பெரிதாக்கமல் ஆறப்போடுதல் நல்லது

பின்வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.

“தம்பீ? எங்க நிக்கிறே?”

“நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”

“அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு… நா வெரசா வந்துருவேன்”

“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு!”

“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”

“ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”

“இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம்

பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்…”

“சரிங்கண்ண

“தம்பி எங்கே நிற்கிறாய்?”

“நீங்கள் சொன்ன இடத்தில் தான் அண்ணா! எதிர்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது”

“அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் படித்துக்கொண்டிரு, நான் விரைாக வந்து விடுகிறேன்”

“அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து அதிக நாடகளாகிவிட்டன.”

“அவன் பாட்டியுடன் வெளியூர் சென்றிருக்கிறான். உங்கள் ஊருக்கே அவனைக் கூடிக்கொண்டு வருகிறேன்.”

“நிறைய நாளுக்கு முன்னால் சின்ன வயதில் பார்த்தது அண்ணா. அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும்”

“இப்போது உயரமாக வளர்நது விட்டான். உனக்கு அடையாளமே தெரியாது. ஊருக்கு என்னுடன் வருவான். பார்த்துக்கொள். சரி. தொலைபேசியை வைத்துவிடு. நான் புறப்படுகிறேன்.”

“சரி அண்ணா!”

மொழியோடு விளையாடு

கண்டுபிடித்து எழுதுக

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம் பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக…

ஒன்று

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

இரண்டு

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்

மூன்று

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்

நான்கு

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

ஐந்து

பொறிவாயில் ஐந்துவித்தான் பொய்நீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்

ஆறு

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

ஏழு

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

எட்டு

கோயில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

பத்து

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக.

1. கானடை

  • கான் + அடை = காட்டைச் சேர்
  • கான் + நடை = காட்டுக்கு நடத்தல்
  • கால் + நடை = காலால் நடத்தல்

2. வருந்தாமரை

  • வரும் + தாமரை = தாமரை மலர்
  • வரும் + தா + மரை = தாவும் மான் வருகிறது
  • வருந்தா + மரை = துன்புறாத மான்

3. பிண்ணாக்கு

  • பிண்ணாக்கு = எள், கடலை ஆட்டும்போது கிடைப்பது
  • பிள் + நாக்கு = பிளவுபட்ட நாக்கு

4. பலகையொலி

  • பலகை + ஒலி = பலகையால் ஏற்படும் ஒலி
  • பல + கை + ஒலி = பல கைகள் தட்டும் ஒலி

செயல்திட்டம்…

அகராதியில் காண்க

1. ஆசுகவி

கொடுத்த பொருளை உடனே பாடும் பாட்டு
அப்பாடலைப் பாடும் புலவன்

2. மதுரகவி

இனிமை பெருகப் பாடும் கவி
சொற்சுவை, பொருட்சுவை நிரம்பிய பாட்டு

3. சித்திரகவி

சித்திரத்தில் அமைத்தற்கு ஏற்ப பாடும் இறைக்கவி
21 நயங்களில் கவிதை ஏற்றுபவர்

4. வித்தாரகவி

விரித்துப் பாடப்பெறும் பாட்டு
விரிவாக பாடும் நூல்

 

  • Belief – நம்பிக்கை
  • Philosopher – மெய்யியலாளர்
  • Renaissance – மறுமலர்ச்சி
  • Revivalism – மீட்டுருவாக்கம்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

10th Standard Tamil Guide - Pa-vagai alagiduthal

மனம் நொந்து மறுகி
கேட்கவும் நா எழாது
வாழவும் வகை யறியாது
இரத்தலே வழி என்பதை
இறுதி முடிவு ஆக்கி
“ஈயெனன” இரத்தல் கொடிது
இரக்கத்துடன் ஈவாரைத்
தடுத்தல் அதனினும் கொடிதன்றோ”

நிற்க அதற்குத் தக…

நாம் எப்போது ஒரே மனநிலையில் இருப்பதில்லை. நம்மை சுற்றி நிகழும் செயல்களால் நம் அலைக்கழிக்கப்படுகிறோம். உடன் பயில்பவருடனோ, உடன் பிறந்தவருடனோ எதிர்பாராமல் சச்சரவு ஏற்படுகிறது… இந்தச் சமயத்தில் சினம் கொள்ளத் தக்க சொற்களைப் பேசுகிறோம்; கேட்கிறோம்; கைகலப்பில் ஈடுபடுகிறோம்; இதுகாறும் கற்ற அற்றங்கள் நமக்கு கொடுக்க வேண்டாமா? மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளும்…

நாம் செய்யவேண்டுவன (அறங்கள்) அறங்கள் தரும் நன்மைகள்
நல்ல சொற்களையே தேர்தெடுத்துப் பேசுதல் நல்ல நண்பர்களைப் பெறலாம்; எதிரிகளையும் நண்பராக்கலாம்
ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் மாற்றி பேசாதிருத்தல் தேவையற்ற சண்டையைப் பகையை தவிர்த்து அனைவருடனும் அன்பாய் வாழலாம்.
பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல் மன அமைதி பெறலாம். நண்பரிடத்தும் உறவினரிடத்தும் நற்பெயர் பெறலாம்.
பொய்தவிர்த்து உண்மை பேசுதல் உண்மை நம் வாழ்வை உயர்த்தும் அச்சமின்றி வாழலாம்.

அறிவை விரிவு செய்

  • அறமும் அரசியலும் – மு. வரதராசனார்
  • அபி கவி்தைகள் – அபி
  • எண்ணஙகள் – எம்.எஸ். உதயமூர்த்தி

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment