TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 8.4 – இராமானுசர் – நாடகம்

8.4 இராமானுசர் – நாடகம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 8.4 – இராமானுசர் – நாடகம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Ramanujar - Nadagam

10th Std Tamil Text Book – Download

பாடநூல் வினாக்கள்

குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் – கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி.

காட்சி – 1

இடம் : வகுப்பறை

பாத்திரங்கள் : குகன், செழியன், தமிழாசிரியர் மற்றும் மாணவர்கள்

குகன் செழியா! வந்துவிட்டாயா.
செழியன் வந்துவிட்டேன் குகன். இன்று நம் தமிழாசிரியர் அவர்கள் மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்று சில குறிப்புகளை வழங்குகிறேன் என்றாரே! அவர் அறைக்கு செல்வோமோ?
குகன்  செல்வோம் செழியன்! இதுவரை நான்கைந்து முறை சென்று பார்த்தோம். ஆசியரைச் சந்திக்க முடியவில்லை.
செழியன்  இன்று கட்டாயம் நம்மை சந்திப்பார்.

காட்சி – 2

இடம் : வகுப்பறை

பாத்திரங்கள் : குகன், செழியன், ஆசிரியர்

மாணவர்கள் இருவரும் வணக்கம் ஐயா
ஆசிரியர் வணக்கம்
குகன் ஐயா! உள்ளே வரலாமா?
ஆசிரியர் வாருங்கள்! வந்ததன் காரணம் கூறுங்கள்.
செழியன் ஐயா வாழ்வில் முன்னேற சில குறிப்புகளைச் சொல்லி அறிவுரை கூறுகிறேன் என்றீர்களே.. அதற்காகத்தான் வந்தோம்.
ஆசிரியர் நல்லது. உங்களுக்கு மூன்று உதாரணஙகள் கூறப்போகின்றேன். முதலில் கொக்கைப் போல வாய்ப்பு கிட்டும் வரைக் கொக்கைப்போல காத்திருக்க வேண்டும். வாய்ப்பு கிட்டியவுடன் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதைத்தான வள்ளுவர் “கொக்கொக்க” எனப் பாடியுள்ளார்
குகன் சரிங்க ஐயா! இனிமேல் நாங்கள் அவசரப்பட்டு எதையும் சிந்திக்காது செயல்பட மாட்டோம்.
ஆசிரியர் இரண்டாவதாக, “கோழியைப் போல!”
செழியன் ஆமாங்க ஐயா! அதென்ன கோழியைப் போல்…..
ஆசிரியர் கோழி, குப்பையக் கிளறினாலும் குப்பைக்குள் இருந்தாலும் தனக்குத் தேவையான உணவை மட்டும் கொத்தித் தின்னும். அதுபோல இந்த சமுதாயத்தில் உங்களை கெடுக்கும் குப்பைகளைப் போல பல இருந்தாலும் உமக்கு தேவையான நன்மணிகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும்.
இருவரும் நன்றாகப் புரிந்தது ஐயா!
ஆசிரியர் மூன்றாவதாக, உப்பைப் போல
குகன் ஆம், ஐயா “உப்பைப்போல்” என்பதன் விளக்கம் தாருங்கள்
ஆசிரியர் கூறுகிறேன்! உப்பைக் கண்ணால் பார்க்கலாம். சுவையை நாவில் இட்டு உணரலாம். அதுபோல ஒவ்வொருவரின் வெளித்தோற்றம் எப்படி இருந்தாலம் அவர்களின் குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்த நடந்து கொள்ள வேண்டும். மிக அருகில் இருந்தாலும், மிக தூரம் இருந்தாலும் துன்பம் தான். உப்பு குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் உண்ண முடியாது. அளவோடு இருந்தால் தான் ருசிக்க முடியும். நாமும் அளவோடு இருப்போம்.
இருவரும் மிக்க மகிழ்ச்சி ஐயா! எம் அறிவுக் கண்களைத் திறந்து நாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டீர்கள். நன்றி! ஐயா!

கற்பவை கற்றபின்

1. கருத்துகளை உரைநடையாக படிப்பதிலும் நாடகமாகப் படிப்பதிலும் நீங்கள் உணரும் வேறுபாடுகள் குறித்த கலந்துரையாடுக

கலந்துரையாடல்

கலந்துரையாடுபவர்கள் : மீனாட்சி, கயல்விழி, கண்ணன்

மீனாட்சி அனைவருக்கும் வணம்ககம்! பொழுதில் அனைவரும் ஒன்றாய் உள்ளோம். இப்பொழுதை நல்ல முறையில் கழிக்க வேண்டும்.
கயல்விழி நாம் இன்று கல்வி தொடர்பான செய்திகளைக் கலந்துரையாடலாமா?
மீனாட்சி இராமானுசரைப் பற்றி கலந்துரையாடலாமா?
கயல்விழி ஓ… கலந்துரையாடலாமே!
மீனாட்சி ஆம்! அதற்கென்ன..
கண்ணன் உரைநடையைப் படிபதற்கும் நாடகத்தை படிப்பதற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி பேசுவோமா..
கயல்விழி ஓ… தாராளமாக.. நானே தொடங்கி வைக்கிறேன். உரைநடை நீண்ட வாக்கிய அமைப்பி உடையதாக இருக்கும். எனவே படிப்பதற்கு சலிப்பாக இருக்கும்.
மீனாட்சி சரியாகச் சொன்னாய். நாடகமாகப் படிக்கும்போது கதைப்போக்கில் அமைந்து விடுகிறது.
கண்ணன் கதைப்போக்கில் அமைவதால் படிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
கயல்விழி உரையாடல் வடிவில் கருத்தக்கள் இருப்பதால் நேரில் பேசிக் கேட்பதுபோல் உள்ளது.
மீனாட்சி கதைமாந்தர்கள் பெயர் நினைவுக்கு வரும்போதே அவர்கள் கூறும் கருத்தும் நினைவுக்கு வந்துவிடும்.
கயல்விழி ஆம் மீனாட்சி, உரைநடையை நாம் தான் சொல்லிச் சொல்லிப் பார்த்து நினைவுக்கு கொண்டு வர வேண்டும்.
கண்ணன்
ஆம் தோழிகளே! நம் கலந்துரையாடலில இருந்து ஒரு கருத்தை உரைநடையில் படிப்பதை விட நாடக வடிவில் படிப்பதே எளிது என்பதை உணர்ந்து கொண்டோம் அல்லவா!

2. இந்நாடகம் வெளிப்படுத்துவது போன்று இராமானுசர் வாழ்க்கை நிகழ்வுகள் சிலவற்றைத் தொகுத்து அவை குறித்த உங்களின் கருத்துகளை எடுத்துரைக்க.

  • இராமானுசர் தினமும் ஆற்றில் குளிக்கப் போகுமுன் முதலியாண்டான் என்ற அந்தணச் சீடரின் கரம் பற்றி நீராடப் புகுவார்.
  • நீராடி முடித்த பின் அந்தணர் அல்லா “உறங்காவில்லி தாசரின்” கரம் பற்றி எழுவார்.
  • இது வரணாசிரம் தருமத்துக்கும் எதிரானது என்றும், பிராமணன் கீழக் குலத்தோனைத் தொடுவது தவறல்லவா? இது நீர் அறியாததா? இதற்கான காரணம் என்ன என்றனர் பிற சீடர்கள்

இராமானுசர் பின்வருமாறு பதில் கூறினாராம்

  • எத்தனை தன் ஞானம் பெற்றாலும், உயர்குலத்தில் பிறந்தோம் என்ற எண்ணம் எனக்குள் ஆணவமாக இருந்தால் இறைநிலை அடைய முடியாமல் போய்விடும் அல்லவா?
  • எனவே இப்பிறவியின் அகங்காரத்தைப் போக்க அகங்காரமே சிறிதும் இல்லாத இந்த அடியவனைத் தீண்டி என்னைச் சுத்தம் செய்து கொள்கிறேன் என்றார்.
  • “சாதியை ஒழிப்போம். ஆன்மீகத்தால் சமத்துவம் வளர்ப்போம். உயர்வு தாழ்வு நீக்குவோம் என்று வெறும் வாய்ப்பேச்சு பேசாதவராய்த் தன் செய்கையால் வாழ்ந்து காட்டியவர் இராமானுசர். அவர் வழியை நாமும் பின்பற்றவோம்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. பிரம்மகமலம் _____________ ஒருமுறை மலர்கிறது.

  1. ஆண்டுக்கு
  2. மாதத்திற்கு
  3. நாளுக்கு
  4. தலைமுறைக்கு

விடை : ஆண்டுக்கு

2. தண்டு கொடிக்கு இணையாளவர்கள் _____________

  1. பூரணர்
  2. கூரேசர்
  3. இராமானுசர்
  4. முதலியாண்டாள், கூரேசர்

விடை : முதலியாண்டாள், கூரேசர்

3. தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலர்வது _____________

  1. மூங்கில்
  2. சண்பகம்
  3. குறிஞ்சி
  4. முல்லை

விடை : மூங்கில்

4. பூரணரின் மகன் பெயர் _____________

  1. நாராயணன்
  2. செளம்ய நாராயணன்
  3. செளம்ய ராஜன்
  4. முதலியாண்டான்

விடை : செளம்ய நாராயணன்

5. நான்மட்டுமே தண்டனை பெற்று நரகம் சேர்வேன்
மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும் – என்று கூறியவர்?

  1. இராமானுசர்
  2. பூரணர்
  3. கூரேசர்
  4. முதலியாண்டான்

விடை : இராமானுசர்

6. செளம்ய நாராயணன் _____________ அடைக்கலப்படுத்தப்ட்டான்.

  1. பூரணரிடம்
  2. கூரேசரிடம்
  3. இராமானுசரிடம்
  4. முதலியாண்டானிடம்

விடை : இராமானுசரிடம்

7. பிறவிப் பிணியைத் தீர்க்கும் அருமருந்து _____________

  1. திருமந்திரம்
  2. மந்திரம்
  3. திருநீறு
  4. துறவு

விடை : திருமந்திரம்

8. திருமகள் _____________ திருப்பாதங்களைப் புகலிடமாக கொள்டவள்

  1. சிவன்
  2. நான்முகன்
  3. நாராயணன்
  4. முருகன்

விடை : நாராயணன்

9. _____________ என்று பூரணர் இராமானுசரை அழைத்தார்?

  1. முதலாழ்வரே
  2. இளையாழ்வாரே
  3. மூத்தாழ்வரே
  4. இரண்டாம் ஆழ்வாரே

விடை : இளையாழ்வாரே

10. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் மலரும் மலர்  _____________

  1. குறிஞ்சி
  2. சண்பகம்
  3. பிரம்மகமலம்
  4. முல்லை

விடை : குறிஞ்சி

11. கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
      தேர்வண் பாரிதண் பறம்பு நாடே! – இப்பாடல் வரி எந்நூலில் இடம் பெற்றுள்ளது?

  1. அகநானூறு
  2. புறநானூறு
  3. நற்றிணை
  4. கலித்தொகை

விடை : புறநானூறு

12. பிரான் மலை _____________ மாவட்டத்தில் அமைந்துள்ளது

  1. மதுரை
  2. திருநெல்வேலி
  3. தென்காசி
  4. சிவகங்கை

விடை : சிவகங்கை

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment