TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 7.3 – மெய்க்கீர்த்தி

7.3 மெய்க்கீர்த்தி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 7.3 – மெய்க்கீர்த்தி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - meikeerthi

10th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள கொண்ட இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி பாடமாக உள்ளது.
  • இம்மெய்க்கீரத்திப் பகுதியின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் ஒரு சேர உணர்த்துவதாக உள்ளது.
  • இவருடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு. அதில் ஒன்று 91 அடிகளை கொண்டது. அதில் 16-33 வரையான அடிகள் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன.
  • இப்பாடப் பகுதிக்கான மூலம் தமிழ் இணையக் கல்விக் கழகத்திலிருந்து பெறப்பட்டது.
  • முதலாம் இராராசன் காலந்தொட்டு மெய்க்கீர்திகள் கல்லில் வடிவமைக்கப்பட்டன.
  • மெய்க்கீரத்திகளே கல்வெட்டின் முதல் பகுதியில் மன்னரைப் பற்றி புகழ்ந்து இலக்கிய நயம்பட எழுதப்படும் வரிகள்.
  • இவை புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள் –

  1. மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்
  2. மிகுந்த செல்வம் உடையவர்
  3. பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்
  4. நெறியோடு நின்று காவல் காப்பவர்

விடை : நெறியோடு நின்று காவல் காப்பவர்

குறு வினா

மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்தும் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக புகழும் பெருமையும் அழியாத வகையில் அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் ஆகும்.

சிறு வினா

பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.

பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.

சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடை ய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன் கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை ; ஏனைய பகுதிகள் உள்ளன.எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.

மையக்கருத்து

பேரரசனது புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. இது சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சியாண்டு கூறுமிடத்தில் அமைக்கப் பெறும். மன்னனுடைய வெற்றிகளையும், வரலாறுகளையும் கூறும். முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டு தான் மெய்க்கீர்த்தி காணப்பபடுகிறது. இதன் கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படுவதில்லை. இதன் பின் வந்த மெய்க்கீர்த்திகள் வமிச பரம்பரையை விரித்துக் கூறுகின்றன.

நெடு வினா

பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்தி பாடலின் நயத்தை விளக்கு

இரண்டாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி

முன்னுரை:-

நம் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள இரண்டாம் இராராச சோழனது மெய்க்கீர்த்தி பாடல், சோழ நாட்டின் வளத்தையும், மன்னனின் சிறப்பையும் நயமுடன் எடுத்துரைக்கிறது.

சோழ நாட்டின் வளம்:-

நாட்டு வளம் மக்கள் வளம்
யானைகள் மட்டும் பிணிக்கப்படுகின்றன. மக்கள் பிணிக்கப்படுவதில்லை
சிலம்புகள் மட்டும் புலம்பும் மக்கள புலம்புவதில்லை
ஓடைகள் மட்டும் கலக்கமடையும். மக்கள் கலக்கம் அடைவதில்லை
மாங்காய் மட்டும் வடுப்படும் மக்கள் வடுப்படுவதில்லை
மலர்கள் மட்டும் பறிக்கப்படுகின்றன மக்கள் உரிமை பறிக்கப்படுவதில்லை
காடுகள் மட்டும் (கொடியவனாய்) கொடி உடையதாய் இருக்கும். மக்கள் கொடியவராய் இல்லை
வண்டுகள் மட்டும் கள்(தேன்) உண்டு மயங்கும் மக்கள் கள் உண்பதில்லை
மலை மூங்கில் மட்டுமே வெறுமையாய் இருக்கும் மக்களிடையே வறுமை இல்லை
வயிலில் நெற்கதிர்ககள் மட்டும் பேராக எழுகின்றன சாேழநாட்டில் போர் இல்லை
நீண்ட மலைகளை இருள் சூழ்ந்திருக்கின்றன நாட்டில் வறுமை இருள் இல்லை
மான்களின் கண்கள் மருள்கின்றன மக்கள் கண்களில் மருட்சியில்லை
குளத்து மீன்கள் பிறழ்ந்து செல்கின்றன மக்கள் நிலை பிறழ்வதில்லை
செவிலியரே சினங்கொள்வார் வேறு யாரும் சினம் கொள்வதில்லை
புலவர் பாட்டில் பொருள் மறைந்து இருக்கிறது சோழ நாட்டில் யாரும் பொருளை மறைப்பதில்லை
இசைப்பாணேர தெருவில் கூடி ஆடிப் பாடுவர் மக்கள் தெருவில் ஆடுவதில்லை

மன்னனின் சிறப்பும் பெருமையும்:-

மன்னன் மக்களுக்கு காவல் தெய்வமாக, தாயாக, தந்தையாக இருக்கிறான். மகன் இல்லாதோர்க்கு மகனாக இருக்கிறான். உலக உயிர்களுக்கு உயிராக, விழியாக. மெய்யாக, புகழ் பெற்ற நூலாக புகழ் அனைத்துக்கும் தலைவனாக விளங்குகிறான்.

முடிவுரை:-

சோழ அரசனின் பெருமையும் அவன் காலத்தில் நாடு பெற்றிருந்த வளத்தையும் மெய்க்கீர்த்திப் பாடல் வழியாக நயம்பட உரைக்கிறது.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக்குறிப்பு

  • வருபுனல், எழு கழனி – வினைத்தொகை
  • இளமான், நெடுவரை – பண்புத்தொகை
  • மாமலர் – உரிச்சொல் தொடர்

பகுபத உறுப்பிலக்கணம்

கடிந்து = கடி + த்(ந்) + த் + உ

  • கடி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாகத் திகழும் சங்க இலக்கிப் பாடல்கள் _____________

  1. புறநானூறு
  2. பதிற்றுப்பத்து
  3. குறுந்தொகை
  4. அகநானூறு

விடை : பதிற்றுப்பத்து

2. பல்லவர் கால கல்வெட்டும், பாண்டியர் கால செப்பேடும் சோழர் காலத்தில் _____________ எனப் பெயர் பெற்றது

  1. மெய்க்கீர்த்தி
  2. மெய்யுரை
  3. நூல்
  4. செப்பம்

விடை : மெய்க்கீர்த்தி

3. _____________ இந்திரன் முதலாகத் திசைபாலர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றது போல் ஆட்சி செய்தவன்

  1. இளஞ்சேரலாதன்
  2. இராஜேந்திர சோழன்
  3. முதலாம் இராசராசன்
  4. இரண்டாம் இராசராசன்

விடை : இரண்டாம் இராசராசன்

4. _____________ நாட்டில் பிறந்தொழுகுவது கயற்குலம்

  1. சேர
  2. சோழ
  3. பல்லவ
  4. பாண்டிய

விடை : சோழ

5. “காவுகளே கொடியவாயின” – இதில் “காவு” என்பதன் பொருள் _____________

  1. மலைக்குகை
  2. காடுகள்
  3. யானைகள்
  4. கடல்

விடை : காடுகள்

6. “இயற்புலவரே பொருள் வைப்பார்” – எதில்?

  1. சான்றோர் அவையில்
  2. இல்லத்தில்
  3. செய்யுளில்
  4. மன்றத்தில்

விடை : மன்றத்தில்

7. “முகம் பெற்ற பனுவலென்னவும்” – பனுவல் என்பதன் பொருள் _____________

  1. நூல்
  2. வால்
  3. கோல்
  4. பால்

விடை : நூல்

8. கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தில் எனப் பட்டங்கள் பெற்றவன் _____________

  1. இளஞ்சேரலாதன்
  2. இராஜேந்திர சோழன்
  3. முதலாம் இராசராசன்
  4. இரண்டாம் இராசராசன்

விடை : இரண்டாம் இராசராசன்

9. _____________ காலந்தொட்டு மெய்கீர்த்தி கல்லில் வடிக்கப்பட்டது.

  1. பல்லவர்
  2. பாண்டியர்
  3. முதலாம் இராசராசன்
  4. இராஜேந்திர சோழன்

விடை : முதலாம் இராசராசன்

10. இரண்டாம் இராசராச சோழனின் மெய்கீர்த்தியின் வரிகள் _____________

  1. 81
  2. 91
  3. 101
  4. 111

விடை : 91

11. “அழியாத கல் இலக்கியம்” எனப் போற்றபடுவது _____________

  1. மெய்க்கீர்த்தி
  2. சிற்பங்கள்
  3. செப்பேடு
  4. ஓவியம்

விடை : மெய்க்கீர்த்தி

12. சோழ நாட்டில் சிறைப்படுவன _____________

  1. வண்டுகள்
  2. வருபுனல்
  3. காவுகள்
  4. மா

விடை : வருபுனல்

13. திரிபாலர் ____________ ஆவார்

  1. அறுவர்
  2. எழுவர்
  3. பதின்மர்
  4. எண்மர்

விடை : எண்மர்

14. புகழ் அனைத்திற்கும் தலைவனானவன் ____________ 

  1. சேரர்
  2. பல்லவர்
  3. ஒட்டக்கூத்தர்
  4. இராசராச சோழன்

விடை : இராசராச சோழன்

15. உலக உயிர்களுக்கு எல்லாம் உயிராக இருக்கிறவன் ____________ 

  1. இராசராச சோழன்
  2. ஒட்டக்கூத்தர்
  3. சேரர்
  4. பல்லவர்

விடை : இராசராச சோழன்

16. தாயில்லாதவருக்கு தாயாக இருக்கிறவன் ____________ 

  1. ஒட்டக்கூத்தர்
  2. இராசராச சோழன்
  3. சேரர்
  4. பல்லவர்

விடை : இராசராச சோழன்

பொருத்துக

1. பிணிப்பு அ. நீர்
2. புனல் ஆ. கட்டுதல்
3. கழனி இ. இருள்
4. மை ஈ. வயல்
விடை ; 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ

பொருத்துக

1. முகம் அ. மலை
2. வரை ஆ. செவிலித்தாய்
3. கைத்தாய் இ. நூல்
4. பனுவல் ஈ. முன்னுரை
விடை ; 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

குறு வினா

1. இரண்டாம் இராசராசனின் பட்டங்கள் யாவை?

கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி

2. திசாபாலர் எண்மர் யாவர்?

இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்

3. இராசராசனின் நாட்டில் புலம்புவதும், அடைக்கப்படுவதும் எது?

  • சோழ மன்னனின் ஆட்சியில் சிலம்புகளே புலம்புகின்றன. மக்கள் எதனை நினைத்தும் துன்புற்றுப் புலம்புவதில்லை.
  • நீர் மட்டும் தேக்கி வைக்கும்பொருட்டு அடைக்கப்படும். மக்கள் எதற்காகவும் சிறைபடுத்தி அடைக்கப்படுவதில்லை.

4. காவல்நெறி பூண்டு ஆண்டவன் இராசராசன் என்பதை மெய்க்கீரத்தி எவ்வாறு கூறுகின்றது?

  • தந்தையில்லாதோருக்குத் தந்தையாய் இருந்தான்.
  • தாயில்லாதோருக்குத் தாயாய் திகழ்ந்தான்.
  • மகனில்லாதோருக்கு மகனாய் இருந்தான்.
  • உலகின் உயிர்களுக்கெல்லாம் உயிராக இருந்து காவல் நெறி, பூண்டு ஆண்டான் என்று மெய்க்கீரத்தி போற்றுகிறது.

5. இராசராசசோழனின் புகழ் பற்றி எழுதுக

  • விழி பெற்ற பயனாகவும்,
  • மெய் பெற்ற அருளாகவும்,
  • மொழி பெற்ற பொருளாகவும்,
  • புகழ் பெற்ற நூல் போலும்

புகழ் அனைத்திற்கும் தலைவனாய் பெருமையுற்று நின்றான்.

6. மெய்க்கீர்த்தி குறிப்பு வரைக.

  • அரசர்கள் தம் வரலாறும், பெருமையும் காலம் கடந்து நிலைத்து நிற்கச் செய்யும் சாசனம்
  • பல்லவர் கல்வெட்டுகளிலும், பாண்டியர் செப்பேடுகளிலும், முளைவிட்ட இவ்வழக்கம் சோழ காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது.
  • முதலாம் இராராசன் காலந்தொட்டு மெய்க்கீர்திகள் கல்லில் வடிவமைக்கப்பட்டன.
  • மெய்க்கீர்த்தி ஒரு மன்னரின் ஆட்சிச் சிறப்பு, நாட்டு வளம் ஆகியவற்றை ஒரு சேர உணர்ந்துவதாக உள்ளது.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment