TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 7.2 – ஏர் புதிதா?

7.2 ஏர் புதிதா?

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 7.2 – ஏர் புதிதா?. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Yer puthitha

10th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • ஏர் புதிதா? எனும் கவிதை கு.ப.ரா படைப்புகள் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
  • 1902-ல் கும்பகோணத்தில் பிறந்தவர்
  • மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
  • தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
  • இவரின் மறைவுக்கு பின்னர் இவரது படைப்புகளுள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

  1. உழவு, மண், ஏர், மாடு
  2. மண், மாடு, ஏர், உழவு
  3. உழவு, ஏர், மண், மாடு
  4. ஏர், உழவு, மாடு, மண்

விடை : உழவு, ஏர், மண், மாடு

குறு வினா

முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்?

  • முதல் மழை விழுந்தவுடன் நிலம் ஈர்த்தால் பண்பட்டது.
  • விரைந்து சென்று பொன் போன்ற ஏரிலே காளைகளைப் பூட்டி, நிலத்தை உழுதனர். ஊக்கத்துடன், வலிமையுடன் உழைத்தனர். நாற்று நட்டனர்.
  • மேலும் மழை பொழிய நிலம் குளிர்ந்தது. நாற்றுகள் நிமிர்ந்து வளர்ந்தன. கிழக்கும் வெளுத்தது. கவலையும் மறந்தது.

“முதல்மழை விழுந்ததும்
மேல் மண் பதமாகிவிட்டது
வெள்ளி முளைத்திடுது, விரைந்து போ நண்பா!”

கற்பவை கற்றபின்

‘முதல் மழை விழுந்தது’ தொடர்ந்து நிகழும் உழவுச் செயல்களை ‘ஏர் புதிதா?’ கவிதை கொண்டு வரிசைப்படுதி பேசுக

வணக்கம்!

  • உழுவோர் உலகுக்கு அச்சாணி எனப் போற்றும் வகையில்
  • உழவர் பெருமக்களை மனம் மகிழச் செய்யும் வகையில் முதல் மழை நிலத்திலே விழுந்து விட்டது.
  • மழையினால் நம் நிலம் சரியான நிலையில் பண்பட்டுள்ளது.
  • நண்பர்களே! சோம்பலினால் இன்னும் உறங்கிக் கொண்டு இருக்காதீர்கள்.
  • விடிந்தது, விரைந்து எழுந்து வா நண்பா! ஏரைப் பூட்டி வயலுக்கு விரைந்து செல்.
  • காடு நமக்குப் புதிதன்று. கரையும் நம் வசப்பட்டது தான். ஏர் நமக்குப் புதிதன்று
  • காளைகளும் புதியவையல்ல. பொன் ஏர் தொழுது, மாட்டைப் பூட்டி நிலத்தை உழுவோம்.
  • மண்புரளும் வகையில் அழுந்த நன்கு உழுவோ். மேலும் மழை பொழியும்.
  • நம் நிலமும் நெகிழ்ந்து குளிரும். புதிய ஊக்கத்துடன், புதிய வலுவுடன் உழைப்போம்.
  • நாற்று நிமிர்ந்து வளரும். எல்லை தெய்வம் நம்மைக் காக்கும். கவலைகள் இனி இல்லை. புதிய விடியலுக்கு அடையாளமாய் கிழக்கும் வெளுத்து விட்டது.
  • நிறைவாக

உழைப்போம்! நாமும் உயர்வோம்!! நாட்டையும் உயர்த்துவோம்!!!

என்று கூறி விடை பெறுகிறேன்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • தொழுது, விரைந்து, அழுத்து – வினையெச்சங்கள்
  • நண்பா – விளி வேற்றுமை

பகுபத உறுப்பிலக்கணம்

விரைந்து = விரை + த்(ந்) + த் + உ

  • விரை – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. சங்கத்தமிழரின் திணை வாழ்வு ____________ அடிப்படையாக கொண்டது.

  1. நெசவை
  2. போரினை
  3. கால்நடையை
  4. வேளாண்மையை

விடை : வேளாண்மையை

2. தமிழரின் தலையான தொழிலாகவும், பண்பாடாகவும் நிகழ்வது ____________

  1. கல்வி
  2. உழவு
  3. நெசவு
  4. போர்

விடை : உழவு

3. தமிழர் பண்பாட்டின் மகுடமாகத் திகழ்வது ____________

  1. பொன் ஏர் பூட்டுதல்
  2. நாகரிகம்
  3. உழுதல்
  4. கலை

விடை : பொன் ஏர் பூட்டுதல்

4. சித்திரை மாதம் நடத்தப்படும் விழா ____________

  1. தீப திருவிழா
  2. பொங்கல் திருவிழா
  3. தீபாவளி திருவிழா
  4. பொன் ஏர் பூட்டுதல்

விடை : பொன் ஏர் பூட்டுதல்

5. ஏர் புதிதா? என்னும் கவிதை இடம் பெற்றுள்ள நூல் ____________.

  1. அகலிகை
  2. ஆத்மசிந்தனை
  3. கு.ப.ரா. படைப்புகள்
  4. ஏர்முனை

விடை : கு.ப.ரா. படைப்புகள்

6. கு.ப.ரா. பிறந்த ஊர் ____________

  1. தஞ்சை
  2. கும்பகோணம்
  3. நெல்லை
  4. மதுரை

விடை : கும்பகோணம், 1902

7. கு.ப.ரா. பிறந்த வருடம் ____________

  1. 1904
  2. 1905
  3. 1903
  4. 1902

விடை : 1902

8. கு.ப.ரா. ஆசிரியராக பணிபுரிந்த இதழ்களில் ஒன்று ____________

  1. நகர ஊழியன்
  2. கிராம ஊழியன்
  3. தினமணி
  4. தினதந்தி

விடை : கிராம ஊழியன்

9. சுடுகி செல் – இதில் “சுடுகி” என்பதன் பொருள் ……………….

  1. விரைந்து
  2. செல்லுதல்
  3. மெதுவாக
  4. இயல்பாக

விடை : விரைந்து

10. நிலம் சிலிர்க்கும், நாற்று ___________

  1. வளரும்
  2. நிமிரும்
  3. வளையும்
  4. நெகிழும்

விடை : நிமிரும்

11. ஊக்கம் புதிது, உரம் புதிது – இதில் உரம் என்ற சொல் குறிப்பது ___________

  1. வலிமை
  2. சத்து
  3. வித்து
  4. பயிர் உரம்

விடை : வலிமை

12. உழுவோர் உலகத்தார்க்கு ____________ எனப் போற்றப்பட்டனர்.

  1. கற்போர்
  2. உழுவோர்
  3. போரிடுவோர்
  4. அச்சாணி

விடை : அச்சாணி

13. “வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா” என்று பாடியவர் ____________

  1. ம.பொ.சி
  2. கு.ப.ராஜகோபாலன்
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : கு.ப.ராஜகோபாலன்

14. பொருந்தாத இணையைக் கண்டறிக

  1. மண் புரளும்
  2. மேற்கு வெளுக்கும்
  3. மழை பொழியும்
  4. எல்லைத் தெய்வம் காக்கும்

விடை : மேற்கு வெளுக்கும்

பொருத்துக

1. முதல் மழை அ. பதமாகியது
2. மேல்மண் ஆ. முளைத்தது
3. வெள்ளி இ. தொழு
4. பொன்னேர் ஈ. விழுந்தது
விடை ; 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

சிறு வினா

1. கு.ப.ராவின் படைப்புகள் அடங்கிய நூல் தொகுப்புகளைக் குறிப்பிடுக

அகலிகை, ஆத்மசிந்தனை

2. கு.ப.ரா. ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்கள் யாவை?

தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன்

3. தமிழர் பண்பாட்டின் மகுடம் எது?

  • வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் நிகழ்வு பொன் ஏர் பூட்டுதல் ஆகும்.
  • தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.

4. கு.ப.ராஜகோபாலன் பன்முகத் தன்மைகள் யாவை?

சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர்

5. “விரைந்து போ நண்பா” எனக் கவிஞர் கூறக்காரணம் யாது?

முதல் மழை விழுந்து விட்டதாலும், மேல் மண் பக்குவமானதாலும், வெள்ளி முளைத்தாலும் ஏறினைப் பூட்ட விரைந்த போ என்கிறார் கவிஞர்

6. மண் எப்போது புரளும்?

மாட்டைத் தூண்டி, கொழுவை (கலப்பை இரும்பை) அழுத்தினால் மண் புரளும்

7. பொன் ஏர் பூட்டுதல் என்றால் என்ன?

வேளாண்மை செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பண்பாட்டு நிகழ்வு பொன் ஏர் பூட்டுதல் ஆகும்

8. கு.ப.ராஜகோபாலன் குறிப்பு வரைக

  • 1902-ல் கும்பகோணத்தில் பிறந்தவர்
  • மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
  • தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
  • இவரின் மறைவுக்கு பின்னர் இவரது படைப்புகளுள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

9. பொழுதேறப் பொன்பரவும் ஏர்டியில்
நல்லவேளையில் நாட்டவோம் கொழுவை” – இடம் சுட்டி பொருள் விளக்குக

இடம் சுட்டல்

கு.ப.ராஜகோபாலனின் கு.ப.ரா. படைப்புகளில் ஏர் புதிதா? என்ற கவிதையில் இவ்வரிகள் இடம் பெறுகின்றன.

பொருள் விளக்கம்

பொழுது விடிந்த ஏரின் அடியில் பொன்னொளி பரப்பும் நல்ல காலைப் பொழுதில் ஏர் முனையின் கலப்பை இரும்மை நிலத்தில் நாட்டுவோம்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment