TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 6.2 – பூத்தொடுத்தல்

6.2 பூத்தொடுத்தல்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 6.2 – பூத்தொடுத்தல். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Poothoduthal

10th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • கவிஞர் உமா மேகஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.
  • தற்பாேது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழ்ந்து வருகிறார்.
  • நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பாெழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தாெகுதிகளைப் படைத்துள்ளார்
  • கவிதை, சிறுகதை, புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

மலர்கள் தரையில் நழுவும் எப்போது?

  1. அள்ளி முகர்ந்தால்
  2. தளரப் பிணைத்தால்
  3. இறுக்கி முடிச்சிட்டால்
  4. காம்பு முறிந்தால்

விடை : தளரப் பிணைத்தால்

சிறு வினா

நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.

இறுக்கி முடிச்சிட்டால்
காம்புகளின் கழுத்து முறியும்.
தளரப் பிணைத்தால்
மலர்கள் தரையில் நழுவும்.
வாசலில் மரணம் நிற்பதறிந்தும்
வருந்தாமல் சிரிக்கும்
இந்தப் பூவை
எப்படித் தொடுக்க நான்- நவீன கவிதை
கையாலே பூவெடுத்தா – மாரிக்குக்
காம்பழுகிப் போகுமின்னு
விரலாலே பூவெடுத்தா – மாரிக்கு
வெம்பி விடுமென்று சொல்லி
தங்கத் துரட்டி கொண்டு – மாரிக்குத்
தாங்கி மலரெடுத்தார்- நாட்டுப்புறப் பாடல்

விடை:-

நவின கவிதையில்

பூவின் மென்மை, அழகு, நளினத்தன்மை, எதற்கும் வருந்தாமல் சிரிக்கும் மலரைப்ப பெண்ணோடு ஓப்பிட்டுள்ளார்.

நாட்டுப்புறப் பாடலில்

பெண் தெய்வமாகிய மாரியோடு ஒப்பிட்டுப் பாடப்பட்டுள்ளது.

நவீன கவிதை கருத்து நாட்டுப்புறப் பாடல் கருத்து
பூவைக் இறுக்கி முடிச்சிட்டால் காம்பின் கழுத்து முறிவது போல பெண்களின் கழுத்து முறியும். மரியாகிய பெண் தெய்வத்திற்குக் கையாலே பூப்பறித்தால் காம்பு அழுகிவிடும் என்று கையாலே பூப்பறிக்கவில்லை.
தளப்பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவுவது போல பெண் தளர்ந்தால் வாழ்வு நழுவும். விரால் பூப்பறித்தால் பயனற்றதாய் வெம்பிவிடும் என்று விரலால் பூப்பறிக்கவில்லை.
வாசலிலே மரணம் வந்து நின்றாலும் வருந்தாமல் சிரிக்கும் பூவைப் போல பெண்ணும் வருத்தங்கள் வந்தபோது அவற்றைச் சுமையாகக் கருதாமல் கும்பத்தைக் காப்பாள். மேற்கண்ட காரணத்தால் மாரியாகி பெண் தெயவத்துக்குத் தங்கத் துரட்டி கொண்டு பூப்பறித்தார்.

மேற்கண்ட இரு பாடலிலும் பெண்ணை மலரோடு ஒப்பிட்டுப் பாடுவதை அறிய முடிகிறது.

கற்பவை கற்றபின்

ஒவ்வொரு நாளும் நீங்கள் பார்க்கும் காட்சிகளில் / எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் கண்டுணரும் அழகை மூன்று நிமிடங்கள் சொற்களில் விவரிக்க

காக்கையிடம் உணர்ந்தது:

தினமும் காலையில் வந்து மரத்தின் மீது அமர்ந்திருக்கும் ஒரு காக்கைக்கு உணவிடுவது வழக்கம். காக்கையின் இடது கால் ஊனம். இடது பக்க இறக்கை சரிந்திருக்கும். தன் உடன் வரும் காக்கைகள் செய்யும் அனைத்துச் செயல்களையும் ஊனமுற்ற காக்கையும் செய்ய தெரிந்து கொண்டு குறையிருப்பினும் குறையை மறந்து புதிய முயற்சியில் ஈடுபட வேண்டும்.

நிறைவு விழாவில் உணர்ந்தது:

ஒரு பள்ளியில் சிற்றுண்டி உணவகம் நடத்தி வந்த தம்பிதியினர் வயது முதிர்வு காரணமாக தங்கள் பணியை நிறைவு செய்யும் பொருட்டு காலை இறை வணக்கத்திற்குப் பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இனிப்பைப் பெற்றுக் கொண்ட அனைவரும் நன்றி என்ற வரத்த்தையை மட்டுமே கூறினர். ஆனால் ஒரு சிறுவன் மட்டும், “பாட்டி உடம்பை நன்றாகப் பாரத்த்துக் கொள்ளுங்கள்” என்றான். அச்சிறுவன் பிறர் மீது காட்டும் அன்பும் அக்கறையும் பெரியவர்களிடம் இல்லையே.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • இறுக்கி – வினையெச்சம்
  • தளர – பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

இறுக்கி = இறுக்கு + இ

  • இறுக்கு – பகுதி
  • இ – வினையெச்ச விகுதி

சிரிக்கும்  = சிரி + க் + க் + உம்

  • சிரி – பகுதி
  • க் – சந்தி
  • க் – எதிர்கால இடைநிலை
  • உம் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக.

1. _____________ கலைகள் மனித வாழ்விற்கு அழகு கூட்டுபவை

  1. கலைகள்
  2. செல்வம்
  3. கல்வி
  4. வெற்றி

விடை : கலைகள்

2. கவிஞர் உமா மேகஸ்வரி _____________யில் பிறந்தார்.

  1. திருநெல்வேலி
  2. தூத்துக்குடி
  3. கன்னியாகுமரி
  4. மதுரை

விடை : மதுரை

3. கவிஞர் உமா மேகஸ்வரி தற்போது வாழ்ந்து வருகின்ற மாவட்டம் _____________

  1. திருநெல்வேலி, வெங்கடேஷ்வரபுரம்
  2. தூத்துக்குடி, வல்லநாடு
  3. கன்னியாகுமரி, அகத்தீஸ்வரம்
  4. தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில்

விடை : தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில்

4. “இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?” என்ற கவிதையை எழுதியவர் _____________

  1. இந்திர பார்த்தசாரதி
  2. உமா மேகஸ்வரி
  3. இரா. மீனாட்சி
  4. தாமரை

விடை : உமா மேகஸ்வரி

சிறு வினா

1. பூக்களை தொடுக்கும் போது இறுக்கி முடிச்சிடுவதாலும், தளரப் பினைப்பதாலும் நிகழ்வது என்ன?

  • இறுக்கி முடிச்சிடுவதால் காம்புகளின் கழுத்து முறியும்.
  • தளரப் பினைப்பதால் மலர்கள் தரையில் நழுவும்.

2. பூத்தொடுத்தல் என்னும் கவிதையில் பூவை என்ற சொல் யாரைக் குறிக்கிறது? அப் பூவைத் தொடுப்பது எப்படி?

  • பூவை என்ற சொல் பெண்ணைக் குறிக்கிறது.
  • மனமாகிய நுட்பமான நூலால் மட்டுமே தொடுக்க முடியும்.

3. கவிஞர் உமா மேகஸ்வரி படைத்துள்ள  கவிதைத் தாெகுதிகளை கூறுக

  • நட்சத்திரங்களின் நடுவே
  • வெறும் பாெழுது
  • கற்பாவை

குறு வினா

கவிஞர் உமா மேகஸ்வரி பற்றி சிறு குறிப்பு வரைக

  • கவிஞர் உமா மேகஸ்வரி மதுரை மாவட்டத்தில் பிறந்தவர்.
  • தற்பாேது தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாழ்ந்து வருகிறார்.
  • நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பாெழுது, கற்பாவை உள்ளிட்ட கவிதைத் தாெகுதிகளைப் படைத்துள்ளார்
  • கவிதை, சிறுகதை, புதினம் என்று பல தளங்களில் படைத்து வருகிறார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment