TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 5.1 – மொழிபெயர்ப்புக் கல்வி

5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 5.1 – மொழிபெயர்ப்புக் கல்வி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - mozhipeyarpu kalvi

10th Std Tamil Text Book – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி

  1. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  2. காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  3. பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  4. சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

விடை : சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

குறு வினா

தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.

தாய்மொழித் தமிழும் உலகப் பொது மொழி ஆங்கிலமும் தவி, நான் கற்க விரும்பும் மொழி இந்தி

இந்தி கற்க விரும்புக் காரணம் :

  • இந்தி நமது நாட்டின் தேசிய மொழி.
  • இந்தி இந்திய பாராளுமன்ற மொழி.
  • பாராளுமன்ற விவாதங்களை அறிய உதவும் மொழி.
  • அரசு மற்றும் தனியார் வேலை வடக்கே கிடைத்தால் துணையாக இருக்கும் மொழி.
  • வட நாட்டு மக்களின் பண்பாட்டை புரிந்து கொள்ளும் உதவும் மொழி இந்தி.

சிறு வினா

1. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

  • என்னுடன் படித்த மாணவன் வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்கிறான்.
  • நான் அவனைக் கண்டு இளம் வயது படிப்பதற்கு உரியது, பணி செய்வதற்கு அல்ல.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா!
  • நாம் இன்று வேலைக்குச் செல்வதால் இன்றைய தேவைதான் பூர்த்தியாகும். நாளைய தேவை பூர்த்தியாகுமா?

கண்ணுடையார் என்பர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையார் கல்லா தவர்.  – என்கிறார் வள்ளுவர்

  • அப்துல்கலாம் அவர்கள் வறுமையில் வாடினாலும் காலை, மாலை வேலைக்குச் செல்வார் இடைப்பட்ட நேரத்தில் பள்ளிக்குச் சென்றதால் தான் உலகம் போற்றும் உத்தமர் ஆனார். இவர் போல நீயும் உழை; இடைப்பட்ட நேரத்தில் என்னோட பள்ளிக்கு வா. படித்தும் பணிக்கு போகலாம்.
  • அரசும், தொண்டு நிறுவனமும் உடை முதல் உணவு வரை இலவசமாகத் தருகிறது.

நாம் கல்வியால் இணைவோம்!
நம் தேசத்தை கல்வியால் உயர்த்துவோம்!!

2. ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு

ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசு வதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிேகட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிேகட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வார். இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

இப்பகுதியில் இருந்து 5 வினாக்களை உருவாக்குக

  1. ஐ.நா. அவையில் உறுப்பினர்கள் தம் மொழியில் பேசும்போது மொழி தெரியாதவர்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?
  2. மொழிபெயர்ப்பு என்றால் என்ன?
  3. பார்வையாளர்கள் அவையில் பேசுவோர் உரையை எப்படி புரிந்து கொள்கின்றனர்?
  4. மொழிபெயர்ப்பாளர்கள் எங்கு அமர்ந்திருப்பர்?
  5. ஐ.நா. அவையில் பேசுவோரின் பேச்சு எவ்வளவு நேரத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது?
  6. ஐ.நா. அவையில் செய்யப்பட்டுள்ள வசதி யாது?
  7. காதணி கேட்பியை எதற்குப் பயன்படுத்துவர்?
  8. விளக்குவது (Inter Preting) என்றால் என்ன?

நெடு வினா

தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை.

மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை’ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை

குறிப்புச் சட்டம்
  • முன்னுரை
  • வரையறை
  • தமிழ் இலக்கிய வளம்
  • கல்வி மொழி
  • பிற மொழி இலக்கியம்
  • அறிவியல் கருத்துகள்
  • பல்துறை கருத்துக்கள்
  • முடிவுரை

முன்னுரை:-

உலகம் தகவல் தொழில் நுட்பத்தினால் சுருங்கி விட்ட குழலில் கூட மொழிபெயர்ப்புத் துறை முக்கிய இடம் பெறுகிறது. இத்தகு மொழிபெயர்ப்பு கலை மக்களின் வாழ்வில் எத்தகு போக்கினைச் செய்கிறது என்பது பற்றிக் காண்போம்.

வரையறை:-

மொழி பெயர்ப்பு என்பது மூல மொழியில் உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை எவ்வித பொருள் மாற்றமும் இல்லாமல் வேறு மொழியில் பெயர்ப்பு செய்வது மொழிபெயர்ப்பு எனப்படும்.

தமிழ் இலக்கிய வளம்:-

தமிழ் இலக்கிய வளம் பெற வேண்டும் என்றால் பிற மொழியல் சிறந்து விளங்கிய நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்து தமிழில் மொழிபெயர்ப்புப் பணி நடைபெற்ற வருகிறது. அதனடிப்படையில் கம்பரின் இராமவதாரம், வில்லிபுத்தூராரின் வில்லிபாரதம் போன்ற காவியங்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டவையே.

கல்வி மொழி:-

மொழிபெயர்ப்பைக் கல்வியாக்குவதன் மூலம் அனைத்துலக அறிவை நாம் பெற்றுமப் பல்வேறு துறையில் சிறந்து விளங்க முடியும்.

பிற மொழி இலக்கியம்:-

ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கீதாஞ்சலியை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தப் பிறகு நோபல் பரிசு கிடைத்துள்ளது.

அறிவியல் கருத்துகள்:-

மொழிபெயர்ப்பு அறிவியல் சார்ந்த துறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. Tele என்ற ஆங்கிலச் சொல் தொலை என்பதனைக் குறிக்கும். இதன் அடிப்படையில் Telephone – Telescope – தொலைபேசி, தொலைநோக்கி என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

பல்துறை கருத்துக்கள்:-

கல்வி, அறிவியல், இலக்கியம் மட்டுமல்லாமல் பிற துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளன. வானொலி, திரைப்படம், இதழியியல், விளம்பரம் போன்ற துறைகளில் மொழிபெயர்ப்பு பணி சிறந்து விளங்குகிறது. தொலைக்காட்சித் தொடர்கள் வேற்று மொழிக்கு மாற்றப்படுவதால் அனைத்து மக்களையும் சென்றடைகிறது.

முடிவுரை:-

எந்த மொழியின் படைப்பாக இருந்தாலும் எதை மொழி பெயர்க்க வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்பதனை அறிந்து இலக்கண விதிமுறையுடன் செய்வதால் நிலைபெற்று விளங்கும்.

கற்பவை கற்றபின்

1. தாகூரின் கீதாஞ்சலி தமிழ்மொழிபெயர்ப்புப் பாடல் ஒன்றையும் கலீல் கிப்ரானின் கவிதை ஒன்றில் மொழிபெயர்ப்பையும் நூலகத்த்தல் படித்து எழுதி வருக

தாகூரின் கீதாஞ்சலி தமிழ்மொழிபெயர்ப்புப் பாடல்

நான் எந்தப் பாடலைப் பாடுவதற்காக இங்கு வந்தேனோ
இது இன்று வரை பாடப்படாமலேயே உள்ளது
என் இசைக்கருவிகளைச் சரி செய்வதிலேயே
என் நாட்களைக் கழித்து விட்டேன்

உண்மையில் நேரம் வரவில்லை
வார்த்தைகள் பொருத்தப்படவில்லை
ஆசையினால் வரும் வலி ஒன்றே என் இதயத்தில் உள்ளது
பூமலரவில்லை காற்று பெருமூச்சுவிடுகிறது

நான் அவனது முகத்தை பார்த்ததில்லை
அவனது குரலைக் கவனித்தது இல்லை
என் வீட்டிற்கு முன்னாள் உள்ள சாலையில் இருந்து
அவனது மெல்லிய காலடி ஓசையை மட்டும் கேட்டிருக்கிறேன்.

கலீல் கிப்ரான் கவிதைகள் : மொழிபெயர்ப்பு

நானொரு வார்த்தை சொல்ல
வந்தேன்!
நானதைச் சொல்ல வேண்டும்
இப்போது!
மரணம் என்னைத் தடுத்தால்
நாளைக்கு
உரைக்கப்படும் அது!
ஏனெனில்
நீடிக்கும் வரலாற்று நூலில்
வருங்கால்
ஒருபோதும்
புறக்கணிப்ப தில்லை
ஒரு ரகசியத்தை

2. மொழிபெயர்ப்புச் சிறுகதை ஒன்றை படித்து அதன் கதைச் சுருக்கத்தையும் உங்கள் கருத்துகளையும் வகுப்பறையில் பகிர்க

  • உருது மொழிச் சிறுகதை – கர்வத்தின் விலை
  • ஆசிரிரியர் – சிராஜ் அன்வர்
  • மொழிபெயர்த்தவர் – வல்லிக்கண்ணன்

சிப்பிப் புழு ஒன்றின் கதை இது

சிப்பிப் புழு உலகில் தானே அதி முக்கியமான ஜீவனாக எண்ணியது பட்டுப்புழுவும் பயன் உள்ளதே ஆனால் பட்டு முத்துக்களைப் போல் அதிக விலைப் பெற்றுத் தருவது இல்லை. எனவே தன்னை உயர்வாக எண்ணியது சிப்பிப்புழு

ஒரு நாள் கடலில் பெரும்புயல் வீசியது. சிப்பிப்புழு தன் கூட்டை மூடிக்கொண்டு, பாதுகாப்புகாகத் தரைக்குப் போகக் கூடாது என்று எண்ணி கடலுக்குள் இருந்துது. ஆனால் அலை சிப்பிப்புழுவை விட்டு வைக்கவில்லை. அதனைத் தூக்கி கடலில் வாரிப் போட்டது. புழு மெதுவாக சிப்பியைத் திறந்து வெளியில் மெதுவாக எட்டிப் பார்த்தது. அதற்குள் மற்றொரு அலை வந்தது அதனை மணலில் தூக்கிப் போட்டது. கடலுக்கு திரும்பிப் போக வழியில்லாமல் அங்கேயே கிடந்தது அது மிகவும் கோபம் அடைந்தது.

காகம் ஒன்று சிப்பியிடம் வெளியே வா என்றது; ஆனால் சிப்பிப்புழு அருவருப்பான முட்டாளான உன்னிடம் பேச முடியாது என்றது. காகம் எவ்வளவு சொல்லியும் சிப்பிப்புழு வெளியே வரவில்லை. மாறாக காகத்தை கேலி கிண்டல் செய்து கொண்டே இருந்தது. நான் முத்துக்களை உண்டாக்குவதால் தான் கடலுக்கு பெருமை என்று கர்வமாக சிப்பிப்புழு கூறியது. “முத்து செய்யும் பெரிய நபரைப் பார்க்கிறேன்” வெளியே வா என்றது காகம். ஆனால் முடிந்தால் நீ பெரிய புத்திசாலி என்றால் என் சிப்பியை நீயே திறந்து கொள் என்றது புழு.

நல்லது நீயே சொல்லி விட்டாய் என்ற சொல்லிக் காகம் சிப்பியைத் தன் அலகில் தூக்கி மேலே பறந்து போய்ப் பாறைகள் நடுவே போட்டது. சிப்பி தூள் தூளானது. காகம் சிப்பியைத தன் அலகால் கொத்தி விழுங்கியது. பிறகு காகம் முத்தைப் பார்த்து. முத்து அதனிடம் இருந்து விலகி, சாணக்குவியலில் விழுந்தது. காகம் உயரப் பறந்து மகிழ்வுடன் கத்திச் சென்றது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1. பிறநாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் ________ நிறுவப்பட்டன

  1. சுந்தந்திரத்திற்கு முன்
  2. விடுதலைக்குப் பின்
  3. குடியரசுக்கு முன்
  4. குடியரசுக்கு பின்

விடை : விடுதலைக்குப் பின்

2. மொழிபெயர்த்தல் என்னும் தொடரைக் தொல்காப்பியர் கையாண்ட இடம் ________

  1. பெயரியல்
  2. வினையியல்
  3. மரபியல்
  4. உயிரியல்

விடை : மரபியல்

விடை : விடுதலைக்குப் பின்

3. இராமாயண மகாபாரத தொன்மச் செய்திகள் இடம் பெற்றுள்ள தமிழ் இலக்கியம் ________

  1. சங்க இலக்கியம்
  2. பக்தி இலக்கியம்
  3. நவீன இலக்கியம்
  4. சிற்றிலக்கியம்

விடை : சங்க இலக்கியம்

4. மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் ________

  1. வி.சூ. நைப்பால்
  2. இரட்யார்ட் கிளிப்வ்
  3. வெங்கட்ராமன்
  4. இரவிந்திரநாத் தாகூர்

விடை : இரவிந்திரநாத் தாகூர்

5. விடை தர அவகாசம் வேண்டும் என்னும் பொருள் தரும் ஜப்பானிய சொல் ________

  1. மொகு சாட்டு
  2. மொகு சாஸ்ட்டு
  3. மொகு சாடு
  4. கசகு சாட்டு

விடை : மொகு சாஸ்ட்டு

6. கலிங்கத்துப்பரணி ________க் கதையைத் தழுவி படைக்கப்பட்ட நூல்

  1. வடகிழக்கு மொழி
  2. வடமேற்கு மொழி
  3. வடமொழி
  4. தென்கிழக்கு மொழி

விடை : வடமொழி

7. மொழிபெயர்ப்பு முயற்சியல் ஈடுபடும் நிறுவனங்கள் _______

  1. காதித்திய அகாதெமி
  2. தேசிய புத்தக நிறுவனம்
  3. தென்னிந்திய புத்தக நிலையம்
  4. இவை அனைத்தும்

விடை : இவை அனைத்தும்

8. பன்னாட்டு மொழிகளை கற்பிப்பவை __________

  1. தனியார் நிறுவனங்கள்
  2. வெளிநாட்டுதூதரங்கள்
  3. பள்ளிகள்
  4. இவை அனைத்தும்

விடை : இவை அனைத்தும்

9. “காசினியல் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப் பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று கூறியவர் __________

  1. குலோத்துங்கன்
  2. இராஜேந்திரன்
  3. இராஜராஜன்
  4. பராந்தகன்

விடை : குலோத்துங்கன்

10. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் __________

  1. மு.கு.ஜகந்நாதர்
  2. மணவை முஸ்தபா
  3. இரட்யார்ட் கிளிப்வ்
  4. வெங்கட்ராமன்

விடை : மணவை முஸ்தபா

11. உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்று கூறியவர் __________

  1. மணவை முஸ்தபா
  2. மு.கு.ஜகந்நாதர்
  3. இரட்யார்ட் கிளிப்வ்
  4. வெங்கட்ராமன்

விடை : மணவை முஸ்தபா

12. “மாபாரதம் தமிழ்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்று குறிப்பிடும் செப்பேட்டுக் குறிப்பு __________

  1. உத்திரமேரூர்
  2. மண்டகப்பட்டு
  3. ஆதிச்சநல்லூர்
  4. சின்னமனூர்

விடை : சின்னமனூர்

13. __________ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் தமிழில் ஆக்கப்பட்டன.

  1. 16
  2. 18
  3. 17
  4. 19

விடை : 18

14. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன __________ அந்நாட்டு படைப்பாளர் போலவே கொண்டப்பட்டவர்.

  1. வேர்ட்ஸ்வொர்த்
  2. ஷேக்ஸ்பியர்
  3. லாங்பெல்லோ
  4. ஜி.யு.போப்

விடை : ஷேக்ஸ்பியர்

15. மொழிபெயர்ப்பின் மூலம் பெற்றிருக்கக்கூடிய கொள்கை __________

  1. நடப்பியல்
  2. தத்துவவியல்
  3. இலக்கியத் திறனாய்வு
  4. திறனாய்வு

விடை : இலக்கியத் திறனாய்வு

16. 1942-ம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை இந்தி மொழியில் எழுதியவர்

  1. கணமுத்தையா
  2. வெ. ஸ்ரீராம்
  3. சசிதேவ்
  4. ராகுல் சாங்கிருத்யாளன்

விடை : ராகுல் சாங்கிருத்யாளன்

17. “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை கணமுத்தையா தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு

  1. 1942
  2. 1944
  3. 1947
  4. 1949

விடை : 1949

18. “வடம் (கயிறு), ஒட்டகம் என்ற இருபொருளுக்குரியச் சொல் ________

  1. Camel
  2. Cow
  3. Horse
  4. Rope

விடை : Camel

19 சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்று பாடியவர்

  1. வாணிதாசன்
  2. கண்ணதாசன்
  3. பாரதியார்
  4. பாரதிதாசன்

விடை : பாரதியார்

20. “தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்” என்று பாடியவர்

  1. பாரதியார்
  2. வாணிதாசன்
  3. கண்ணதாசன்
  4. பாரதிதாசன்

விடை : பாரதியார்

பொருத்துக

1. யூமா வாசுகி அ. 1942
2. முத்துமீனாட்சி ஆ. 1949
3. ராகுல் சாங்கிருத்யாளன் இ. 2016
4. கணமுத்தையா ஈ. 2018
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

பாரதியின் மொழிபெயர்புகளைப் பொருத்தி காட்டுக

1. பொருட்காட்சி அ. Strike
2. இருப்புப்பாதை ஆ. Revolution
3. புரட்சி இ. East Indian Railways
4. வேலைநிறுத்தம் ஈ. Exhibition
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

குறு வினா

1. மொழிபெயர்ப்பு குறித்து மணவை முஸ்தபா கூறுவது யாது?

ஒரு மொழியல் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என மணவை முஸ்தபா கூறுகிறார்

2. மொழி பெயர்ப்பின் இன்றியமையாமை யாது?

ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழி பெயர்ப்பு இன்றியமையாததாகும்.

3. மொழிபெயர்ப்பு குறித்து மு.கு.ஜகந்நாத ராஜா முஸ்தபா குறிப்பிடுவது யாது?

உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழி பெயர்ப்பு ஒரு காரணமாகிறது என்கிறார் மு.கு.ஜகந்நாத ராஜா.

4. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது?

ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுகிறார்கள்.

5. இப்போது நேரடியாக மொழிபெயர்க்கப்படும் நூல்கள் யாவை?

பிரெஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கா, லத்தீன், அமெரிக்கா, முதலான நாடுகளின் நூல்கள் நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டு கிடைக்க தொடங்கியிருப்பது நல்ல பயனைத் தரும்

6. Camel என்பதன் பொருள் கூறுக

Camel என்பதற்கு வடம் (கயிறு), ஒட்டகம் என இருபொருள் உண்டு.

7. இரவீந்திரநாத தாகூருக்கு நோபல் பரிசு எதற்காக கிடைத்துள்ளது?

இரவீந்திரநாத தாகூர் தன் கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தற்காக நோபல் பரிசு கிடைத்துள்ளது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment