TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 1.3 – இரட்டுற மொழிதல்

1.3 இரட்டுற மொழிதல்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 1.3 – இரட்டுற மொழிதல்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Iratura molithal

10th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி – கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்த இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • இப்பாடலை படைத்தவர் தமிழழகனார்.
  • சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்.
  • இலக்கணப் புலமையும் இளம் வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

சொல்லும் பொருளும்

  • துய்ப்பது – கற்பது, தருதல்
  • மேவலால் – பொருந்துதல், பெறுதல்

பாட நூல் மதிப்பீட்டு வினா

குறு வினா

1. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்தக்காட்டுத் தருக.

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.

எ.கா.:-

சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான் – இத் தொடர் எவ்வித மாற்றமுமின்றி இரண்டு விதமான பொருளைத் தருகிறது.

  • சீனியில் (சர்க்கரை) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது.
  • சீனிவாசனாகிய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிறார்.

சிறு வினா

தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.

பாடல் அடிகள் தமிழ் கடல்
முத்தமிழ் துய்ப்பதால் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழாய் வளர்ந்தது. முத்தினை அமிழ்ந்து தருகிறது.
முச்சங்கம் கண்டதால் முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.  வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது.
மெத்த வணிகலமும் மேவதால்  ஐம்பெருங்காப்பியங்கள் அணிகலனாய்ப் பெற்றது. மிகுதியான வணிகக் கப்பல்கள் வந்து சென்றது.
நித்தம் அணை கிடந்தே சங்கத்தவர் காக்க சங்கப் பலகையில் அமர்ந்து சங்கப் புலவர்கள் பாதுகாத்தனர். தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காத்தது.

கூடுதல் வினாக்கள்

1. அ) காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன். அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது கி.வா.ஜ., “அடடே காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!” என்றார்.

ஆ) ஒரு முறை ஒரு பெரிய வித்துவானுடைய இசைநிகழ்ச்சியை விமரிசனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது: “அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்.”

இ) தமிழறிஞர் கி.ஆ.பெ .விசுவநாதன் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது “இவர் பல்துறை வித்தகர்” என்று குறிப்பிட்டார்!

இவை போன்ற பல சிலேடைப் பேச்சுகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள் அவற்றை தொகுத்துச் சொல் நயங்களைப் பதிவு செய்து கலந்துரையாடுக

ஆசிரியர் இன்று வகுப்பிற்கு புதிதாக வந்த மாணவன் எங்கே?
மாணவர் இதோ உள்ளேன் ஐயா.
ஆசிரியர் உன் பெயர் என்ன?
மாணவர் கவியரசன்
ஆசிரியர் அப்படியனால் உனக்கு இருக்க வேண்டி நீண்ட வாலையும், கூர்மையான நகங்களையும் காணவில்லையே

(மாணவர்கள் அனைவரும் காரணம் புரியமாமல் சிரிக்கின்றன. அதற்கு ஆசிரியர் கூறிய விளக்கம் பின்வருமாறு

கவி என்றால் குரங்கு என்று ‘இன்னொரு பொருளும் உண்டு. ஆகவே தான் நீ குரங்குகளின் அரசனானால் உன் வாலையும், கூரிய நகங்களையும் எங்கே என்றேன்’ என விளக்கினார்..

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. “தமிழ், ஆழி இரண்டுக்கும் பொருள்படும் படியான” – இரட்டுற மொழிதலணி அமைய பாடிய ஆசிரியர் ____________

  1. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  2. எழில் முதல்வன்
  3. தமிழழகனார்
  4. தேவநேயப் பாவாணர்

விடை : தமிழழகனார்

2. கடல் ____________ வகையான சங்குகுகளை தருகிறது.

  1. இரண்டு
  2. மூன்று
  3. நான்கு
  4. ஐந்து

விடை : மூன்று

3. கடல் தன் அலையால் ____________ தடுத்து நிறுத்திக் காக்கிறது.

  1. மணலினை
  2. கப்பலினை
  3. சங்கினை
  4. மீனவர்களை

விடை : சங்கினை

4. “சந்தக்கவிமணி” எனக் குறிப்பிடப்படுபவர் ________

  1. பாரதியார்
  2. தமிழ் ஒளி
  3. சுரதா
  4. தமிழகனார்

விடை : தமிழகனார்

5 .ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது ________

  1. மலையாளம்
  2. தமிழ்
  3. ஆங்கிலம்
  4. உருது

விடை : தமிழ்

6. இரட்டுற மொழிதல் அணியின் வேறுபெயர் ________

  1. சிலேடை அணி
  2. வேற்றுமை அணி
  3. பிறதுமொழிதல் அணி
  4. சொற்பொருள் பின்வருநிலையணி

விடை : சிலேடை அணி

7. ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவது ________ அணியாகும்.

  1. வேற்றுமை
  2. பிறதுமொழிதல்
  3. இரட்டுற மொழிதல்
  4. சொற்பொருள் பின்வருநிலையணி

விடை : இரட்டுற மொழிதல்

8. தமிழழகனாரின் இயற்பெயர் ________

  1. ஆறுமுகம்
  2. சண்முகமணி
  3. ஞானசுந்தரம்
  4. சண்முகசுந்தரம்

விடை : சண்முகசுந்தரம்

9. தமிழழகனார் ________ சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்

  1. 10
  2. 12
  3. 14
  4. 16

விடை : 12

10. “முத்தமிழ் துயப்பதால்” என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு ________

  1. எட்டுத்தொகை
  2. பத்துப்பாட்டு
  3. தனிப்பாடல் திரட்டு
  4. சிற்றிலக்கியங்கள்

விடை : தனிப்பாடல் திரட்டு

வினாக்கள்

1. முத்தமிழ் எனப்படுவது யாது?

இயல், இசை, நாடகம்

2. தமிழ் எவற்றால் வளர்க்கப்பட்டது;

முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் தமிழ் வளர்க்கப்பட்டது

3. கடலிலிருந்து கிடைக்கும் பொருட்கள் யாவை?

  • முத்தும், அமிழ்தும் கிடைக்கிறது
  • வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று சங்குகள் கிடைக்கின்றன

4. இரட்டுற மொழிதல் அணி என்பது யாது? அதன் வேறு பெயர் யாது?

  • ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர்.
  • வேறுபெயர் – சிலேடை அணி

5. சிலேடையின் வகைகளை எழுதுக?

சிலேடைகள் இரு வகைப்படும்

  • செம்மொழிச் சிலேடை
  • பிரிமொழிச் சிலேடை

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment