TN 10th Standard Tamil Book Back Answers | Lesson 1.2 – தமிழ்ச்சொல் வளம்

1.2 தமிழ்ச்சொல் வளம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 10th Standard Tamil Lesson 1.2 – தமிழ்ச்சொல் வளம்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

10th Standard Tamil Guide - Tamilsol valam

10th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • “மொழிஞாயிறு” என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணரின் “சொல்லாய்வுக் கட்டுரைகள்” நூலில் உள்ள “தமிழ்ச்சொல் வளம்” என்னும் கட்டுரையின் சுக்கமாக பாடம் இடம்பெற்றுள்ளது.
  • பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
  • தமிழ்ச்சொல் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டவர்.
  • செந்தமிழ்ச் சொற்பிறப்பியில் அகரமுதலி திட்ட இயக்குநராக பணியாற்றியவர்.
  • உலக தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.

பாட நூல் மதிப்பீட்டு வினா

பலவுள் தெரிக

1. காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது

  1. இலையும் சருகும்
  2. தோகையும் சண்டும்
  3. தாளும் ஓலையும்
  4. சருகும் சண்டும்

விடை : சருகும் சண்டும்

2. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை

  1. குலை வகை
  2. மணி வகை
  3. கொழுந்து வகை
  4. இலை வகை

விடை : மணி வகை

குறு வினா

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

சரியான தொடர்கள் பிழையான தொடர்
  • இரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
  • ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன

பிழைக்கான காரணம்

தாறு – வாழைக்குலை

சீப்பு – வாழைத்தாற்றின் பகுதி

சிறு வினா

‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’
இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

  • பிள்ளை – தென்னம் பிள்ளை வாங்கி வந்தேன்.
  • வடலி – காட்டில் பனை வடலியைப் பார்த்தேன்.
  • நாற்று – நெல் நாற்று நட்டேன்
  • கன்று – வாழைக்கன்று நட்டேன்
  • பைங்கூழ் – சோளப் பைங்கூழ் பசுமையாக உள்ளது.

நெடு வினா

தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

குறிப்புச்சட்டம்
  • அறிமுக உரை
  • சொல்வளம்
  • சொல்லாக்கத்திற்கான தேவை
  • நிறைவுரை

அறிமுகவுரை:-

வணக்கம்! அன்னைமொழியே! அழகார்ந்த செந்தமிழே! எனப் போற்றப்படும் தமிழ்மொழி பிறமொழிகளுக்கெல்லாம் தலைச்சிறந்த மொழியாகும். அம்மாெழியின் சொல் வளத்தைப் பற்றி காண்போம்.

சொல் வளம்:-

  • இலக்கியச் செம்மொழிகளக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலை சிறந்ததாகும்.
  • தமிழ்ச்சொல் வளத்தைப் பலதுறைகளில் காணலாம்.
  • ஒரு பொருட் பல சொல் வரிசைகள் தமிழைத் தவிர வேறு எந்தத் திராவிட மொழிகளின் அகாராதிகளிலும் காணப்படவில்லை.
  • “பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களம் தமிழில் உள” என்கிறார் கால்டுவெல்

சொல்லாக்கத்திற்கான தேவை:-

  • சொல்லாக்கத்கத்திற்கான தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது.
  • இன்றைய அறவியல் வளர்ச்சிக்கேற்ப நூல்களை புதிய சொல்லாக்கத்துடன் படைத்தல் வேண்டும்.
  • இலக்கிய மேன்மைக்கு மக்கள் அறிவுடையவர்களாக உயர்வதற்கும், புதிய சொல்லாக்கம் தேவை.
  • மொழி என்பது உலகின் போட்டி பேராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். அக்கருவி காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.
  • தமிழன் பெருமையும் மொழியின் சிறப்பும் குன்றாமல் இருக்க தமிழில் சொல்லாக்கம் தேவை.
  • உலகின் பிற ஆய்வுச் சிந்தனைகளைத் தமிழர்படுத்தி எழுதும் போது பிறமொழி அறியாத தமிழரும் அவற்றைக் குறித்த அறிந்து கொள்ள முடியாது.
  • மொழியே கலாச்சாரத்தின் வழிகாட்டி அதை நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவை.
  • மக்களிடையே பரந்த மன்பான்மையையும், ஆளுமையும் நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவைப்படுகிறது.
  • பிறமொழிச் சொற்கள் கலவாமல் இருக்க காலத்திற்கேற்ப புதிய கலைச் சொல்லாக்கம் ஏற்படுத்த வேண்டும்.

நிறைவுரை:-

மென்மையான தமிழை மேன்மையான தமிழாக்க அறிவியல் தொழில்நுடபச் சொற்களை தமிழ்ப்படுத்தி தமிழன் பெருமையை உலகிற்ககு கொண்டு செல்வோம்.

புதிய சொல்லாக்கத்தின் சேவை
இன்றைய தமிழுக்குத் தேவை

நன்றி!

கற்பவை கற்றபின்

1. பின்வரும் நிலவகைகளின் பெயர்களுக்கான காரணங்களைக்
கேட்டறிந்து வகுப்பறையில் பகிர்க.

தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம்போக்கு, சுவல், அவல்.

தரிசு பயிர் செய்யாத நிலம்
சிவல் செந்நிலம் அல்லது சிவந்த நிலம்
கரிசல் கரிய நிறமுடைய மண கொண்ட நிலம் கரிசல் நிலம் (அ) கரிந்த பாலை நிலம்
முரம்பு பருக்கைக் கற்கள் கொண்ட மேட்டுநிலம்
புறம்போக்கு ஊர்புறத்தே குடிகள் வாழ்தலில்லாத நிலம்
சுவல் மேட்டு நிலம்
அவல் அவல் என்பதன் பொருள் ‘பள்ளம்’. ஆகவே பள்ளமான நிலப்பகுதி அவர் என அழைக்கப்படுகிறது. விளை நிலமாகவும் அமைகிறது.

2. ஒரு பொருள் தரும் பல சொற்களைப் பட்டியலிடுக.

எ.கா.

சொல்லுதல் – பேசுதல், விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல்

மலர்தல் அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், விள்ளல், விரிதல்
ஞாயிறு சூரியன், கதிரவன், வெய்யோன், பகலவன், பரிதி
அரசன் கோ, கொற்றவன், வேந்தன், ராஜா, கோன்
அழகு அணி, வடிவி, பொலிவு, எழில்
அடி கழல், கால், தாள், பதம், பாதம்
தீ அக்கினி, நெருப்பு, தழல்
அச்சம் பயம், பீதி, உட்கு
துன்பம் இன்னல், அல்லல், இடும்பை
அன்பு கருணை, நேசம், ஈரம், பரிவு, பற்று
செய்யுள் பா, கவிதை, யாப்பு
பெண் நங்கை, வனிதை, மங்கை
வயல் கழனி, பழனம், செய்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. “திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்” என்னும் நூலை எழுதியவர் ________

  1. திரு.வி.க
  2. பாவணர்
  3. கால்டுவெல்
  4. இரா. இளங்குமரன்

விடை : கால்டுவெல்

2. “திருவள்ளுவர் தவச்சாலை” அமைந்துள்ள இடம் ________

  1. அல்லூர்
  2. கல்லூர்
  3. நெல்லூர்
  4. திருவள்ளூர்

விடை : அல்லூர்

3. தும்பி – இச்சொல்லின் பொருள்

  1. வண்டு
  2. தும்பிக்கை
  3. துந்தபி
  4. துன்பம்

விடை : வண்டு

4. “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்று பாடியவர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. பெருஞ்சித்திரனார்
  4. தேவநாயப்பாவணர்

விடை : பாரதியார்

5. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் _________

  1. தேவநேயப் பாவாணர்
  2. இளங்குமரனார்
  3. திரு.வி.க.
  4. மறைமலையடிகள்

விடை : இளங்குமரனார்

6. பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் _________

  1. தேவநேயப் பாவாணர்
  2. திரு.வி.க.
  3. மறைமலையடிகள்
  4. இளங்குமரனார்

விடை : இளங்குமரனார்

7. தமிழ்வழித் திருமணங்களைத் நடத்தி வருபவர் _________

  1. தேவநேயப் பாவாணர்
  2. இளங்குமரனார்
  3. திரு.வி.க.
  4. மறைமலையடிகள்

விடை : இளங்குமரனார்

8. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர் _________

  1. தேவநேயப் பாவாணர்
  2. திரு.வி.க.
  3. இளங்குமரனார்
  4. மறைமலையடிகள்

விடை : இளங்குமரனார்

9. திரு.வி.க போல விழிகளை மூடியபடி எழுதும் ஆற்றல் வாய்ந்தவர் __________

  1. தேவநேயப் பாவாணர்
  2. திரு.வி.க.
  3. இளங்குமரனார்
  4. மறைமலையடிகள்

விடை : இளங்குமரனார்

10. தமிழ்த்தென்றல் என்று போற்றப்பட்டவர் __________

  1. தேவநேயப் பாவாணர்
  2. இளங்குமரனார்
  3. திரு.வி.க.
  4. மறைமலையடிகள்

விடை : திரு.வி.க.

11. “பன்மொழிப் புலவர்” என்றழைக்கப்பட்டவர் __________

  1. தேவநேயப் பாவாணர்
  2. க.அப்பாத்துரையார்
  3. இளங்குமரனார்
  4. ஜி.யு.போப்

விடை : க.அப்பாத்துரையார்

12. சம்பா நெல்லின் உள் வகைகள் __________

  1. 80
  2. 70
  3. 60
  4. 50

விடை : 60

13. “மொழிஞாயிறு” என்றழைக்கப்பட்டவர் __________

  1. தேவநேயப் பாவாணர்
  2. க.அப்பாத்துரையார்
  3. இளங்குமரனார்
  4. ஜி.யு.போப்

விடை : தேவநேயப் பாவாணர்

14. “தமிழ்ச்சொல் வளம்” எனும் கட்டுரை இடம் பெற்றுள்ள நூல் __________

  1. மொழி மரபு, மு.வ
  2. தேவநேயம், இளங்குமரனார்
  3. ஆய்வியல் நெறிமுறைகள், பொற்கோ
  4. சொல்லாய்வுக் கட்டுரைகள், தேவநேயப் பாவாணர்

விடை : சொல்லாய்வுக் கட்டுரைகள், தேவநேயப் பாவாணர்

15. ஒரு நாட்டின் வளத்திற்கேற்ப அம்மக்களின் ………………. அமைந்திருக்கும்.

  1. அன்பொழுக்கம்
  2. களவொழுக்கம்
  3. அறிவொழுக்கம்
  4. கற்பொழுக்கம்

விடை : அறிவொழுக்கம்

16. பொருந்தா இணையைக் கண்டறிக

  1. சண்டு – காய்ந்த தாளும் தோகையும்
  2. சருகு -காய்ந்த இலை
  3. தாள் – புளி, வேம்பு முதலியவற்றின் இலை
  4. தோகை – சோளம், கம்பு முதலியவற்றின் இலை

விடை : தாள் – புளி, வேம்பு முதலியவற்றின் இலை

17. “செந்தமிழ்ச் சொற்பிறப்பியில் அகரமுதலி திட்ட இயக்குநராக” பணியாற்றியவர் __________

  1. தேவநேயப் பாவாணர்
  2. க.அப்பாத்துரையார்
  3. இளங்குமரனார்
  4. ஜி.யு.போப்

விடை : தேவநேயப் பாவாணர்

18. உலக தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் __________ 

  1. க.அப்பாத்துரையார்
  2. இளங்குமரனார்
  3. ஜி.யு.போப்
  4. தேவநேயப் பாவாணர்

விடை : தேவநேயப் பாவாணர்

19. ____________ நாட்டின் தலைநகர் லிசுபன்

  1. ரஷ்ய
  2. சீன
  3. போர்ச்சுகீசு
  4. இங்கிலாந்து

விடை : லிசுபன்

20. முதன்முதலாக “கார்டிலா” என்னும் போர்ச்சுகீசிய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுவது ____________

  1. நான்காம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
  2. செம்மொழி மாநாட்டு மலர்
  3. ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
  4. தமிழிலக்கிய வரலாறு மு.வ.

விடை : ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

21. இந்திய மொழிகளிலேயே முதலில் மேலைநாட்டு எழுத்துருவில் அச்சேறிய மொழி ________

  1. தமிழ்
  2. மலையாளம்
  3. தெலுங்கு
  4. கன்னடம்

விடை : லிசுபன்

22. ________ மொழிக்காக மாநாடு நடத்திய நாடு மலேசியா

  1. ஆங்கில
  2. சமஸ்கிருத
  3. தமிழ்
  4. மலையாள

விடை : மலேசியா

23. கொழுந்தாடை என்பது யாது?

  1. நெல், புல் ஆகியவற்றின் கொழுந்து
  2. புளி, வேம்பு ஆகியவற்றின் கொழுந்து
  3. தென்னை, பனை ஆகியவற்றின் கொழுந்து
  4. கரும்பின் நுனிப்பகுதி

விடை : கரும்பின் நுனிப்பகுதி

24. தும்பி – இச்சொல்லின் பொருள்

  1. தும்பிக்கை
  2. வண்டு
  3. தந்துபி
  4. துன்பம்

விடை : வண்டு

பொருத்துக

1. தாள் அ. குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
2. தண்டு ஆ. நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
3. கோல் இ. தண்டு, கீரை முதலியவற்றின் அடி
4. தூறு ஈ. நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

பொருத்துக

1. தட்டு அ. கரும்பின அடி
2. கழி ஆ. புளி, வேம்பு முதலியவற்றின் அடி
3. கழை இ. கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
4. அடி ஈ. மூங்கிலின் அடி
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

பொருத்துக

1. கவை அ. அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் களை
2. கொம்பு ஆ. கிளையின் பிரிவு
3. சினை இ. கவையின் பிரிவு
4. போத்து ஈ. சினையின் பிரிவு
விடை : 1 – அ, 2 – இ, 3 – ஆ, 4 – ஈ

பொருத்துக

1. இலை அ. தென்னை, பனை முதலியவற்றின் இலை
2. சருகு ஆ. கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
3. கழை இ. புளி, வேம்பு முதலியவற்றின் அடி
4. அடி ஈ. நெல், புல் முதலியவற்றின் இலை
விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

பொருத்துக

1. இளநீர் அ. வாழைப்பிஞ்சு
2. நுழாய் ஆ. இளநெல்
3. கருக்கல் இ. இளம்பாக்கு
4. கச்சல் ஈ. முற்றாத தேங்காய்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ

குறு வினா

1. தாவரத்தின் அடிப்பகுதிகளைக் குறிப்பதற்கான சொற்கள் எவை?

தாள், தண்டு, கோல், தூறு, தட்டு, கழி, கழை, அடி

2. தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?

கவை, காெம்பு, கொப்பு, கிளை, சினை, போத்து, குச்சி, இணுக்கு

3. தாவரங்களின் காய்ந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?

சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை

4. தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?

இலை, தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு

5. பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?

அரும்பு, போது, மலர், வீ, செம்மல்

6. கோதுமையின் வகைகளில் சிலவற்றைக் கூறு

சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை

7. தேவநேயப்பாவாணர் பற்றி நீவீர் அறிந்தவற்றை எழுதுக

  • தேவநேயப்பாவணர் சிறப்புப் பெயர் மொழி ஞாயிறு
  • இலக்கணக் கட்டுரைகள், மொழியாராச்சி கட்டுரைகள், சொல்லாய்வுக் கட்டுரைகள்.
  • செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர், உலக கழகத் தலைவர் இவர் ஆற்றிய பணிகள் ஆகும்.

8. கார்டிலா – நூல் குறிப்பு வரைக

1554-ல் கார்டிலா என்னும் நூல் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. ரோமன் வரி வடிவில் அச்சிடப்பட்ட நூல் இதனை Carthila de lingo Tamul e Portugues என்பர் இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ் மொழி.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment