2.4 தமிழர் இசைக்கருவிகள்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 2.4 – தமிழர் இசைக்கருவிகள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
மதிப்பீடு
காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.
முன்னுரை
மக்களின் மனதிற்கு எழுச்சியை தருபவை இசைக்கருவிகள். கருவிகளில் தோல், நரம்பு, காற்று, கஞ்சக் கருவிகள் என பல வகை உள்ளன. அவற்றுள் காற்றுக் கருவிகள் குறித்துக் காண்போம்.
காற்றுக் கருவிகள்
காற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுபவை காற்றுக்கருவிகளாகும். குழல், சங்கு, கொ்பு ஆகியவை காற்றுக் கருவிகளாகும்.
குழல்
காடுகளில் வளரும் மூங்கிலில் வண்டுகள் துளையிடும். அவற்றின் வழியாகக் காற்று வீசும்போது இன்னிசை எழும்பும். இதனைக் கேட்டு மகிழ்ந்த நம் முன்னோர் அமைத்துக் கொண்டவையே குழல்கள். இதனை வேய்ங்குழல், புல்லாங்குழல் என்றும் அழைப்பர். குழல் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும். இது சுமார் இருபது விரல் நீளம் உடையதாக இருக்கும். மூங்கில் மட்டுமன்றிச் சந்தனம், செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
கொம்பு
மனிதர்கள் தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே பிற்காலத்தில் கொம்பு என்னும் இசைக்கருவிக்கு அடிப்படையாயிற்று. இக்காலத்தில் பித்தளை அல்லது வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்படுகின்றன. இதனை வேடர் வேட்டையின் போது ஊதுவர். கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும் மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின்போது இசைக்கப்படுகின்றன.
சங்கு
இஃது ஓர் இயற்கைக் கருவி. கடலில் இருந்து எடுக்கப்படுவது. வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்களில் இதனைப் பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கோயில் திருவிழாக்களின் போதும் சமயச் சடங்குகளில் போதும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு.
முடிவுரை
அழிந்து வரும் இவ்வகைக் காற்றுக் இசைக்கருவிகளைக் காப்பாற்ற, நாம் ஒவ்வொருவரும் காற்றுக்கருவிகள் ஏதேனும் ஒன்றினைக் கற்று, அதனைப் பயன்படுத்த வேண்டும்.
கற்பவை கற்பின்
இக்கால இசைக்கருவிகள் குறித்து கலைக்களஞ்சிய வடிவில் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
வயலின்
வில் போட்டு வாசிக்கப்டும் மரத்திலான தந்திக் கருவி ஆகும். இது பழங்காலத்தில் பிடில் எனப்பட்டது. இம்மேலைத் தேயம், கீழைத் தேயம் என இருவகைப் பிராந்திய இசைகளால் கருவி. இது நான்கு தந்திகளை கொண்டுள்ளது.
தம்புரா
கம்பி கட்டப்பட்ட இசைக்கருவி தம்புரா. இது ராகம் இசைக்கும் நேரம் முழுவதும் நிலையான தொனியில் இசைக்கப்படுகின்றது.
நாதசுவரம்
நாகஸ்வரம், நாகசு, நாயனம் ஆகிய வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. தென்னிந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பெருமளவு இசைக்கப்படும் வாத்தியம் இவை வட்ட வடிவமாக விரிந்து காணப்படும் உள் நீண்ட மரக்குழலால் ஆன உடல், உடல் மேல் பகுதியில் செப்புத் தகடு பொருத்தப்பட்ட இருக்கும்.
தவில்
நாதஸ்வரத்திற்கு துணையா இசைக்கப்படும் கருவி ஆகும். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தை கொண்டு ஓட்டில் கட்டப்பட்டு இருக்கும்.
கூடுதல் வினாக்கள்
பொருத்துக
1. குடமுழா | அ. பாண்டில் |
2. சங்கு | ஆ. சேமங்கலம் |
3. சாலரா | இ. பாணி |
4. சேகண்டி | ஈ. பணிலம் |
5. திமிலை | உ. பஞ்சமகா சப்தம் |
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ, 5 -இ |
பொருத்துக
1. மண்ணமை முழவு | அ. மதுரைக்காஞ்சி |
2. மாக்கண் முரசம் | ஆ. மகேந்திரவர்மன் |
3. பரிவாதினி | இ. பொருநாராற்றுப்படை |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ |
குறு வினா
1. இசையின் இரு பிரிவுகளை எழுதுக
- குரல்வழி இசை
- கருவிவழி இசை
2. இசைக்கருவிகளின் வகைகளை கூறுக
இசைக்கருவிகள் தோல்கருவி, நரம்புக்கருவி, காற்றுக்கருவி, கஞ்சக்கருவி என நான்கு வகைப்படும்.
3. இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் பாணர் என அழைக்கப்பட்டனர்
4. தவண்டை என்பது யாது?
பெரிய உடுக்கையைத் தவண்டை என்பர்.
5. குடுகுடுப்பை என்பது யாது?
- சிறு உடுக்கையைக் குடுகுடுப்பை என்பர்.
6. சிலப்பதிகாரம் கூறப்படும் குழல்களின் வகைகளை கூறுக
கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல்
7. திமிலை என்றால் என்ன?
பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி திமிலை ஆகும்.
மணற்கடிகார வடிவத்தில் இக்கருவி அமைந்திருக்கும். இதனைப் பாணி என்னும் பெயரால் அழைப்பர்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…