1.2 புத்தியைத் தீட்டு
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 8th Standard Tamil Lesson 1.2 – புத்தியைத் தீட்டு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
சொல்லும் பொருளும்
- தடம் – அடையாளம்
- அகம்பாவம் – செருக்கு
- புத்தி – அறிவு
- உள்ளம் – மனம்
- லாபம் – பலன்
- எண்ணி – நினை
நூல் வெளி
- ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராக புகழ் பெற்றவர்
- சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்
- தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் ________ இன்றி வாழ்ந்தார்.
- சோம்பல்
- அகம்பாவம்
- வருத்தம்
- வெகுளி
விடை : அகம்பாவம்
2. ‘கோயிலப்பா‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- கோ + அப்பா
- கோயில் + லப்பா
- கோயில் + அப்பா
- கோ + இல்லப்பா
விடை : கோயில் + அப்பா
3. ‘பகைவன் + என்றாலும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________
- பகைவென்றாலும்
- பகைவனென்றாலும்
- பகைவன்வென்றாலும்
- பகைவனின்றாலும்
விடை : பகைவனென்றாலும்
குறு வினா
1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது ஆகும்
2. பகைவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை யாது?
பகைவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை அன்பு காட்டுவது ஆகும்
சிறு வினா
புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
- கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்.
- ஆத்திரம் கண்ணை மறைந்து விடும் என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்து அமைதி காக்க வேண்டும்.
- பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்.
- மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கல் போன்றது.
- இதனை மறந்து வாழ்பவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
- வாழும் வாழ்க்கை சில காலமே! அதற்குள் ஏன் அகம்பாவம்? இதனால் இலாபமும் கிடைக்காது. எனவே, அகம்பாவத்தைக் காட்டாமல் வாழ வேண்டும்.
- இவற்றை எண்ணிப் பார்த்தால் வாழ்க்கை தெளிவாகும்.
சிந்தனை வினா
உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
- முதலில் வெறுப்புக்கு காரணம் என்ன? என்பதைப் பற்றி ஆராய்வேன்.
- அவரிடம் சென்று அன்பாக, என் மீது நீங்கள் வெறுப்பு காட்ட, நான் செய்துள்ள பிழையை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
- நான் மனம் புண்படும்படியாகப் பேசியிருந்தால் அதனைப் பொறுத்துக் கொண்டு எனக்கு நல்வழி காட்டுங்கள் என்று கூறுவேன்.
கற்பவை கற்றபின்
அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளை திரட்டுக
- அறிவே ஆற்றல்
- அறிவே ஆயுதம்
- அறிவே பலம்
- பேரறிவு பெருமை தரும்
- அறிவுடையார் எல்லாம் உடையார்
- மெய்ப்பொருள் காண்பதறிவு
- அறிவே ஆனந்தம்
கூடுதல் வினாக்கள்
சரியான விடையை தேர்ந்தெடு
1. புத்தியைத் தீட்டு என்னும் கவிதைப் பேழை பகுதியை எழுதியவர் ________
- ஆலங்குடி சோமு
- ஆலங்குடி வங்கனார்
- வாணிதாசன்
- குமரகுருபரர்
விடை : ஆலங்குடி சோமு
2. புத்தியை தீட்ட வேண்டும் என்று கூறியவர் ________
- உடுமலை நாராயணகவி
- பட்டுகோட்டை கல்யாண சுந்தரனார்
- ஆலங்குடி சோமு
- பாரதியார்
விடை : ஆலங்குடி சோமு
3. பகைவனுக்கு ________ பாதை விட வேண்டும்.
- துன்ப
- நடக்க
- ஓட
- அன்பு
விடை : பகைவன்
4. “அடையாளம்” என்ற பொருள் தரும் சொல் ________
- ஆணவம்
- தடம்
- சினம்
- செருக்கு
விடை : தடம்
5. ஆலங்குடி சோமு அவர்கள் பெற்ற விருது ________
- பத்மபூஷன்
- பாரதரத்னா
- பத்மவிபூஷன்
- கலைமாமணி
விடை : கலைமாமணி
6. சரியானவற்றை தேர்ந்தெடு
- தடம் – அடையாளம்
- அகம்பாவம் – அறிவு
- புத்தி – மனம்
- உள்ளம் – செருக்கு
விடை : தடம் – அடையாளம்
பொருத்துக
1. புத்தி | அ. செருக்கு |
2. அகம்பாவம் | ஆ. அறிவு |
3. லாபம் | இ. நினை |
4. எண்ணி | ஈ. பலன் |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 -அ |
குறு வினா
1. அறிவே ஆற்றல் என்பது யாருடைய கூற்றாகும்?
அறிவே ஆற்றல் என்பது ஆன்றோர் கூற்றாகும்.
2. எவ்வாறு பிறரை வெல்வது சரியன்று?
அறிவும் உழைப்புமே ஒரு மனிதனை வாழ்வில் உயரச் செய்யும். வன்முறையால் பிறரை வெல்வது சரியான செயலன்று.
3. எந்த வெற்றி நமக்கு பெருமை தரும்?
அறிவினாலும் அன்பினாலும் பிறரை வெல்லும் வெற்றியே நமக்குப் பெருமை தரும்.
4. கண்ணியம் தவறாமல் எவற்றில் தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்?
கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்.
5. ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது என்ன செய்ய வேண்டும் என ஆலங்குடி சோமு கூறுகிறார்
ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும் என ஆலங்குடி சோமு கூறுகிறார்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…