2.6 திருக்குறள்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 2.6 – திருக்குறள். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
மதீப்பிடு
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. ஏழைகளுக்கு உதவி செய்வதே ________ ஆகும்.
- பகை
- ஈகை
- வறுமை
- கொடுமை
விடை : ஈகை
2. பிற உயிர்களின் ________க் கண்டு வருந்துவேத அறிவின் பயனாகும்.
- மகிழ்வதை
- செல்வத்தை
- துன்பத்தை
- பகையை
விடை : துன்பத்தை
3. உள்ளத்தில் _________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
- மகிழ்ச்சி
- மன்னிப்பு
- துணிவு
- குற்றம்
விடை : குற்றம்
இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
1. வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்
குறியெதிரப்பை உடைத்து நீரது
விடை :
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிரப்பை நீரது உடைத்து
2. எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்
மானாசெய் தலை யாமை
விடை :
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மானாசெய் யாமை தலை
குறு வினா
1. அறிவின் பயன் யாது?
பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதுவதை அறிவின் பயன் ஆகும். [பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதாவிட்டால் தாம் பெற்றுள்ள அறிவால் எந்த பயனும் இல்லை.]
2. பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?
தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.
3. ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது?
இல்லாதவர்க்கு தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.
இல்லாதவர்க்குத் தருவதால் உண்டாகும் இன்பத்தை அறியாதவர்கள் பொருளைச் சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து விடுவார்கள்.
பின்வரும் நிகழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குறள் எதுவெனக் காண்க.
நிறைமதி அவளுடைய தாேழிகளுடன் பூங்காவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின் கீழ் அமரந்து தான் கொண்டு வந்திருந்த உணவைத் தாேழிகளுடன் பகிர்ந்து உண்டாள். அவர்களின் அருகே பறவைகள் பறந்து வந்தன. தன்னி்டம் இருந்த உணவைப் பறவைகளுக்கும் அளித்தாள்.
1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீல பிற.
2. எனத்தானும் எஞ்ஞான்றும் யாரக்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலாேர்
தாெகுத்தவற்றுள் எல்லாம் தலை.
விடை :
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலாேர்
தாெகுத்தவற்றுள் எல்லாம் தலை.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடு
1. உள்ளத்தில் _____________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
- பகைமை
- குற்றம்
- அன்பு
- நல்லெண்ணம்
விடை : குற்றம்
2. _________________ தருவதே ஈகை ஆகும்.
- இருப்பவர்க்கு
- நல்லவர்க்கு
- வலியவர்க்கு
- இல்லாதவர்க்கு
விடை : இல்லாதவர்க்கு
3. ஆற்றுவார் ஆற்றல் _____________ போற்றுவார்/போற்றலுள் எல்லாம் தலை
- புகழ்தல்
- இகழ்தல்
- பலியாமை
- இகழாமை
விடை : இகழாமை
4. “நன்னயம்” பிரித்தெழுத கிடைப்பது ___________
- நன்ன + நயம்
- நன்மை + நயம்
- நன் + னயம்
- நன்ன + யம்
விடை : நன்மை + நயம்
5. “மாசிலன்” பிரித்தெழுத கிடைப்பது ___________
- மாசு + இலன்
- மாசி + லன்
- மாசில + லன்
- மாச் + இலன்
விடை : மாசு + இலன்
6. “பல + உயிர்” சேர்த்தெழுத கிடைப்பது ___________
- பல்உயிர்
- பல்லுயிர்
- பல்லு உயிர்
- பல் உயிர்
விடை : பல்லுயிர்
6. “பகுத்து + உண்டு” சேர்த்தெழுத கிடைப்பது ___________
- பகுத்து உண்டு
- பகுத்உண்டு
- பகு துண்டு
- பகுத்துண்டு
விடை : பகுத்துண்டு
பொருத்துக
1. குற்றம் | அ. அவா |
2. பேராசை | ஆ. மாசு |
3. கொடை | இ. ஒறுத்தல் |
4. தண்டித்தல் | ஈ. ஈகை |
விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 – இ |
குறு வினா
1. வாழ்வின் அறம் என்பது யாது?
பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சாெல் பேசுதல் ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே அறம் ஆகும்.
2. தம்மைத் தீங்கிலிருந்து காக்க சிறந்த வழியென வள்ளுவர் கூறும் கருத்து யாது?
ஆற்றல் உடையவர்களை இகழக் கூடாது. இதுவே தம்மைத் தீங்கிலிருந்து காத்துக் கொள்ளும் சிறந்த வழியென வள்ளுவர் கூறும் கருத்து ஆகும்.
3. நமக்கு துன்பம் செய்தவரை தண்டிக்கும் வழியென்பது யாது?
நமக்கு துன்பம் செய்தவர் நாணும்படி அவருக்கு நன்மை செய்வது தான் அவரை தண்டிக்கும் வழியாகும்.
4. எவர் தப்ப முடியாது என வள்ளுவர் கூறுகிறார்?
தீயினால் சுடப்பட்டவர் கூட பிழைத்துக்கொள்ள முடியும். ஆனால் பெரியவர்களுக்குத் தீங்கு செய்தவர் தப்ப முடியாது.
5. அறங்களுள் சிறந்த அறம் எது?
தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். அதுவே அறநூல்களில் கூறப்படும் அறம் ஆகும்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…