TN 6th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 2.5 – பெயர்ச்சொல்

2.5 பெயர்ச்சொல்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 2.5 – பெயர்ச்சொல். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

6th Standard Tamil Guide - peyarchchol

6th Std Tamil Text Book – Download

மதீப்பிடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது

1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக

  1. பறவை
  2. மண்
  3. முக்காலி
  4. மரங்கொத்தி

விடை : மண்

2. காரணப்பெயரை வட்டமிடுக

  1. மரம்
  2. வளையல்
  3. சுவர்
  4. யானை

விடை : வளையல்

3. இடுகுறிசிறப்புப்பெயரை வட்டமிடுக

  1. வயல்
  2. வாழை
  3. மீன்கொத்தி
  4. பறவை

விடை : வாழை

குறு வினா

1. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

பெயர்ச் சாெல் ஆறு வகைப்படும். அவையாவன

  1. பொருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. காலப்பெயர்
  4. சினைப்பெயர்
  5. பண்புப்பெயர்
  6. தாெழிற்பெயர்

2. இடுகுறிப்பெயர் என்றால் என்ன?

ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும்.

(எ.கா.) மா, கருவேலங்காடு.

3. காரணப்பெயர் என்றால் என்ன?

நம் முன்னாேர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தாேடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காணப்பெயர் எனப்படும்.

(எ.கா.) நாற்காலி, கரும்பலகை

சிறு வினா

1. அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.

பொருட்பெயர்

பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.

(எ.கா.) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.

மனிதர்கள் பெயர்கள் பொருட்பெயர் வகையையே சாரும்.

உயர்திணைப் பொருட்பெயர்: (எ.கா.) அக்ஸா, ஜோசப், மாறன் & மகாலட்சுமி

இடப்பெயர்

ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்.

(எ.கா.) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.

காலப்பெயர்

காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.

(எ.கா.) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.

சினைப்பெயர்

பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்.

(எ.கா.) கண், கை, இலை, கிளை.

பண்புப்பெயர்

பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்.

(எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.

தாெழிற்பெயர்

தாெழிலைக் குறிக்கும் பெயர் தாெழிற்பெயர் எனப்படும்.

(எ.கா.) படித்தல், ஆடுதல், நடித்தல்.

2. அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகள் தருக.

ராம் புத்தகம் படித்தான் – பொருட்பெயர்

சந்தியா பள்ளிக்குச் சென்றாள் – இடப்பெயர்

மாலா மாலையில் விளையாடினாள் – காலப்பெயர்

விவேக் தலை அசைத்தான் – சினைப்பெயர்

சந்தியா இனிமையாகப் பேசுவாள் – பண்புப்பெயர்

சீதாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் – தொழிற்பெயர்

கூடுதல் வினாக்கள்

1. இடுகுறிப் பொதுப்பெயர், இடுகுறிப் சிறப்புப்பெயர் என்றால் என்ன?

இடுகுறிப் பொதுப்பெயர்

ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்.

(எ.கா.) மரம், காடு.

இடுகுறிப் சிறப்புப்பெயர்

ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும்.

(எ.கா.) மா, கருவேலங்காடு.

2. காரணப் பொதுப்பெயர், காரணப் சிறப்புப்பெயர் என்றால் என்ன?

காரணப் பொதுப்பெயர்

காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும்.

(எ.கா.) பறவை, அணி

காரணப் சிறப்புப்பெயர்

குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச் சிறப்புப்பெயர் ஆகும்.

(எ.கா.) வளையல், மரங்கொத்தி

மொழியை ஆள்வோம்

அகராதியை பயன்படுத்தி பொருள் எழுதுக

1. கருணை

  • உயிர்களிடத்தில் கொள்ளும் ஒருவகை பரிவு உணர்வு

2. அச்சம்

  • பயம், மனதில் ஏற்படும் ஓர் உணர்வு, தைரியத்தை இழக்கும் நிலைமை

3. ஆசை

  • வேண்டும் பொருள் மீது செல்லும் விருப்பம்

பெயர்ச்சாெற்களை அகரவரிசையில் எழுதுக.

பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்

விடை :

ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம்,  பூனை, மனிதன், மாணவன், மான், வெளவால்

வாக்கியங்களிலுள்ள அறுவகைப் பெயர்களை எழுது

1. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவுதே எனச் சான்றோர்கள் கருதினர்

  • இரண்டுமே,  சான்றோர் – பண்புப்பெயர்
  • கைகள் – சினைப்பெயர்
  • உதவவே, கருதினர் – தொழிற்பெயர்

2. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும்.

  • அறம், பொருள், இன்பம், வீடு, நூல் – பொருட்பெயர்
  • அடைதல் – தொழிற்பெயர்

3. அறிஞர்களுக்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்.

  • அழகு – பண்புப்பெயர்
  • அறிஞர் – பொருட்பெயர்
  • கற்றுணர்ந்து, அடங்கல் – தொழிற்பெயர்

4. நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்.

  • நீதிநூல், பாரதியார் – பண்புப்பெயர்
  • பயில் – பொருட்பெயர்

5. மாலை முழுவதும் விளையாட்டு.

  • மாலை- காலப்பெயர்
  • உடையவர்கள் – விளையாட்டு

6. அன்பு நிறைய உடையவர்கள் மேலாேர்

  • அன்பு, மேலாேர் – பண்புப்பெயர்
  • உடையவர்கள் – பொருட்பெயர்

அடிக்கோடிட்ட சாெல் எவ்வகைப் பெயர்ச்சொல் என்பதை எழுது

1. விடியலில் துயில் எழுந்தவன்.

  • துயில் – காலப்பெயர்

2. இறைவனைக் கை தாெழுதேன்.

  • கை – சினைப்பெயர்

3. புகழ்பூத்த மதுரைக்குச் சென்றேன்

  • மதுரைக்குச் – இடப்பெயர்

4. புத்தகம் வாங்கி வந்தேன்

  • புத்தகம் – பொருட்பெயர்

5. கற்றலைத் தாெடர்வாேம் இனி

  • கற்றலைத் – தொழிற்பெயர்

6. நன்மைகள் பெருகும் நனி

  • நன்மைகள் – பண்புப்பெயர்

மொழியோடு விளையாடு

கட்டங்களிலுள்ள வார்த்தைகளால் தொடர்களை அமை

வெல்லும் கேளிர் தீதும்
வாரா நன்றும் யாவரும்
யாதும் ஊரே பிறர்தர வாய்மையே
  1. வாய்மையே வெல்லும்
  2. யாதும் ஊரே யாவரும் கேளிர்
  3. தீதும் நன்றும் பிறர்தர வாரா

சொற்றொடரை வரிசைப்படு

1. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்

2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்

3. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்

4. அமுதசுரபியைப் பெற்றாள்

5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்

விடை :-

  1. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
  2. அமுதசுரபியைப் பெற்றாள்
  3. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்
  4. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்
  5. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்

ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமை

1. அரம் – அறம்

  • அரம் – மரத்தை அறுக்க அரம் பயன்பட்டது.
  • அறம் – உதவி என்று வருபவருக்கு அறம் செய்ய வேண்டும்.

2. மனம் – மணம்

  • மனம் – என் தவறினை எண்ணி மனம் நொந்துவிட்டேன்.
  • மணம் -என் தோட்டத்தில பூக்களின் மணம் வீசியது.

இருபொருள் தருக

1. ஆறு

  • நதி
  • எண்

2. திங்கள்

  • சந்திரன்
  • வாரத்தின் இரண்டாம் நாள்

3. ஓடு

  • வீட்டின் கூரையில் அமைப்பது
  • வேகமாக ஓடுதல்

4. நகை

  • சிரி
  • அணிகலன்

புதிர்ச்சொல் கண்டுபிடி

இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துக்கள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள் தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொலின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?

விடை – அறம்

கட்டத்திலுள்ள சொற்களால் தொடர்களை உருவாக்கு

மாலையில்
பிறருக்கு உதவி
பெரியோரை
நூல் பல
உடற்பயிற்சி
அதிகாலையில்
கற்போம்
எழுவோம்
விளையாடுவோம்
செய்வோம்
புரிவோம்
வணங்குவோம்
  • மாலையில் விளையாடுவோம்.
  • பிறருக்கு உதவி புரிவோம்.
  • பெரியோரை வணங்குவோம்.
  • நூல் பல கற்போம்.
  • உடற்பயிற்சி செய்வோம்.
  • அதிகாலையில் எழுவோம்.

நிற்க அதற்குத் தக…

கலைச்சாெல் அறிவாேம்

  • Trust – அறக்கட்டளை
  • Volunteer – தன்னார்வலர்
  • Junior Red Cross – இளம் செஞ்சிலுவைச் சங்கம்
  • Scouts & Guides – சாரண சாரணியர்
  • Social Worker – சமூகப்பணியாளர்

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment