TN 6th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 3.3 – வளரும் வணிகம்

3.3 வளரும் வணிகம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 3.3 – வளரும் வணிகம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

6th Standard Tamil Guide - Valarum Vanigam

6th Std Tamil Text Book – Download

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பாெருள் வாங்குபவர்_______

  1. நுகர்வோர்
  2. தொழிலாளி
  3. முதலீட்டாளர்
  4. நெசவாளி

விடை: நுகர்வோர்

2. “வணிகம் + சாத்து” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. வணிகசாத்து
  2.  வணிகம்சாத்து
  3. வணிகச்சாத்து
  4. வணிகத்துசாத்து

விடை: வணிகச்சாத்து

3. “பண்டம் + மாற்று” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. பண்டமாற்று
  2. பண்டம்மாற்று
  3. பண்மாற்று
  4. பண்டுமாற்று

விடை: பண்டமாற்று

4. “வண்ணப்படங்கள்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. வண்ணம்+படங்கள்
  2. வண்ணப்+படங்கள்
  3. வண்ண+படங்கள்
  4. வண்ணமான+படங்கள்

விடை: வண்ணம்+படங்கள்

5. “விரிவடைந்த” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. விரி + வடைந்த
  2. விரி + அடைந்த
  3. விரிவு + அடைந்த
  4. விரிவ் + அடைந்த

விடை: விரிவு + அடைந்த

சொற்றொடரில் எழுதுக

1. வணிகம்

  • ஒரு பொருளை பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும்  வணிகம் ஆகும்.

2. ஏற்றுமதி

  • ஒரு நாட்டில் தேவைகளுக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

3. சில்லறை

  • சில்லறை கொள்முதல் செய்வது சிறுவணிகம் ஆகும்

4. கப்பல்

  • ஒட்டகம் பாலைவன கப்பல் என அழைக்கப்படுகிறது.

குறு வினா

1. வணிகம் என்றால் என்ன?

மனிதன் தனக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. தனக்குத் தேவையான சில பொருள்களை பிறரிடமிருந்து வாங்குவான்.

தன்னிடம் உள்ள சில பொருள்களை பிறருக்கு தருவான். இவ்வாறு ஒரு பொருளை பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும்  வணிகம் ஆகும்.

2. பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டு தருக?

நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களை பிறருக்க கொடுத்து, தனக்கு தேவையான பொருள்களை பிறரிடம் இருந்து பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகமுறை ஆகும்.

எ.கா.

  • நெல்லை கொடுத்து அதற்குப் பதிலாக உப்பை பெறுதல்
  • ஆட்டின் பாலைக் கொடுத்து தானியத்தை பெறுதல்

3. சிறுவணிகப் பொருட்கள் யாவை?

சிறு முதலீட்டல் பொருட்களை வாங்கி வந்து வீதிகளில் வைத்து விற்பனை செய்வதும்; தலையில் சுமந்து சென்று விற்பதும்; தரைக்கடை அமைத்து விற்பதும்; தள்ளுவண்டியின் மூலம் விற்பதும்; போன்ற முறைகளில் விறகும் பொருட்கள் சிறுவணிகப் பொருட்கள் ஆகும்.

சிறு வினா

1. சிறுவணிகம், பெருவணிகம் வேறுபடுத்துக

சிறு வணிகம் பெரு வணிகம்
1. சிறு முதலீட்டில் பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்வது பெரு முதலீட்டில் அதிக அளவு பொருட்களை வாங்கி விற்பனை செய்வது
2. வீதியில் கொண்டு சென்று விற்பது பெரிய அளவில் கடைகள் அமைத்து விற்பது
3. சில்லறை கொள்முதல் செய்வது மொத்தமாக கொள்முதல் செய்வது
4. பெருவணிகர்களிடம் பொருட்களை வாங்குவார்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் பொருட்களை வாங்குவார்கள்
5. சிறு லாபம் கிடைக்கும் பெரு லாபம் கிடைக்கும்
6. நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்வது அதிகம் நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்வது குறைவு

2. பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?

  • பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு போன்றவைகளை பிறநாட்டுக்கு ஏற்றுமதி செய்தனர்.
  • பழங்காலத்தில் சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. அரேபியாவில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன

சிந்தனை வினா

1. வணிகப் பொருள்கள் தற்காலத்தில் எவ்வாறெல்லாம் மக்களை வந்தடைகின்றன?

வணிகப் பொருள்கள் தற்காலத்தில் தரைவழி மார்க்கமாவும், கடல்வழி மார்க்கமாகவும், வான்வெளி மார்க்கமாவும், இணையவழி மக்களை வந்தடைகின்றன.

2. உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்களைப் பட்டியலிடுக.

கைத்தறி, நெசவு, தீப்பெட்டி, பட்டாசு, பால்பண்ணை, அரிசி, எண்ணெய் உற்பத்தி செய்தல், சிமெண்ட் ஆலை, சுண்ணாம்பு உற்பத்தி செய்தல், சர்க்கரை ஆலை, பீடித் தொழிற்சாலை, நூற்பாலை, நார், கயிறு ஆலை, பீடித் தொழிற்சாலை, நூற்பாலை, நார், கயிறு ஆலை, சோப்பு தயாரித்தல், உழவுத்தொழில், இனிப்பு மிட்டாய் ஆலை, பாய் முடைதல், செருப்பு தயாரித்தல், மீன் பிடித்தல், காகித அட்டை தயாரிப்பு, பின்னலாடைகள் போன்ற பல தொழில்கள் எங்கள் பகுதியல் நடைபெறுகின்றன.

ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக

(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரவோலை, வங்கி, மின்னணு மயம், பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)

ஆங்கிலச் சொல் தமிழ்ச்சொல்
கரன்சிநோட் பணத்தாள்
பேங்க் வங்கி
செக் காசோலை
டிமாண்ட் டிராப்ட் வரவோலை
டிஜிட்டல் மின்னணு மயம்
டெபிட் கார்டு பற்று அட்டை
கிரெடிட் கார்டு கடன் அட்டை
ஆன்லைன் ஷாப்பிங் இணையத்தள வணிகம்
ஈ-காமர்ஸ் மின்னணு வணிகம்

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. தமிழ்நாட்டின் தலைசிறந்த காப்பிய கால துறைமுகம் ______________

  1. சென்னை
  2. நாகப்பட்டினம்
  3. பூம்புகார்
  4. எண்ணூர்

விடை : பூம்புகார்

2. ______________ இருந்து வாங்கப்பட்டவை குதிரைகள்

  1. பிரான்ஸ்
  2. அரேபியா
  3. இலங்கை
  4. இங்கிலாந்து

விடை : அரேபியா

3. “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என வணிகரைப் பாராட்டும் நூல் ______________

  1. திருக்குறள்
  2. குறுந்தொகை
  3. அகநானூறு
  4. பட்டினப்பாலை

விடை : பட்டினப்பாலை

4. தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களில் ஒன்று ________________

  1. அரிசி
  2. பட்டு
  3. மருந்து
  4. பட்டு

விடை : அரிசி

5. கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு ____________ உதவுகிறது.

  1. தரைவழி வணிகம்
  2. நீர்வழி வணிகம்
  3. இணையவழி வணிகம்
  4. வான்வெளி வணிகம்

விடை : இணையவழி வணிகம்

சிறு வினா

1. துறைமுக நகரங்களை எவ்வாறெல்லாம் குறிக்கின்றன?

துறைமுக நகரங்களை பட்டினம் என்றும் பாக்கம் என்றும் குறிக்கின்றன

2. வணிகத்தின் வகைகளை எழுதுக.

வணிகத்தை இருவகையாக பிரிக்கலாம் தனிநபர் வணிகம், நிறுவன வணிகம்

3. தனிநபர் வணிகம் என்றால் என்ன?

தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் தனிநபர் வணிகம் எனப்படும்

4. வணிகச்சாத்து என்பது யாது

வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை சுற்றி  வெளியூர்களுகுச் செல்லும்போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை வணிகசாத்து என்பர்

5. தமிழ்நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் யாவை?

  • தேக்கு
  • மயில்தோகை
  • அரிசி
  • சந்தனம்
  • இஞ்சி
  • மிளகு

6. தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் யாவை?

  • சீனா – கண்ணாடி, கற்பூரம், பட்டு
  • அரேபியா -குதிரைகள்

7. பெருவணிகம் என்றால் என்ன?

பெருந்தொகையை முதலீடு செய்து பொருள்களை அதிக அளவில் திரட்டி வைத்து விற்பனை செய்வது பெருவணிகம் ஆகும்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment