TN 6th Standard Tamil Book Back Answers | Term – 2 | Lesson 2.2 – கண்மணியே கண்ணுறங்கு

2.2 கண்மணியே கண்ணுறங்கு

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 6th Standard Tamil Lesson 2.2 – கண்மணியே கண்ணுறங்கு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

6th Standard Tamil Guide - kanmaniye kannurangu

6th Std Tamil Text Book – Download

சொல்லும் பொருளும்

  • நந்தவனம் – பூஞ்சோலை
  • பார்  – உலகம்
  • பண் – இசை
  • இழைத்து – செய்து

தொகைச் சொற்கள்

முத்தேன்

  • கொம்புத்தேன்
  • பொந்துத்தேன்
  • கொசுத்தேன்

முக்கனி

  • மா
  • பலா
  • வாழை

முத்தமிழ்

  • இயல்
  • இசை
  • நாடகம்

பாடலின் பொருள்

  • தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயோ!
  • தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ! இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியோ!
  • குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ!  கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக!

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ‘பாட்டிசைத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. பாட்டி + சைத்து
  2. பாட்டி + இசைத்து
  3. பாட்டு + இசைத்து
  4. பாட்டு+சைத்து

விடை : பாட்டு + இசைத்து

2. ‘கண்ணுறங்கு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. கண் + உறங்கு
  2. கண்ணு + உறங்கு
  3. கண் + றங்கு
  4. கண்ணு + றங்கு

விடை : கண் + உறங்கு

3. “வாழை + இலை” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. வாழையிலை
  2. வாழைஇலை
  3. வாழலை
  4. வாழிலை

விடை : வாழையிலை

4. “கை + அமர்த்தி” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. கைமர்த்தி
  2. கைஅமர்த்தி
  3. கையமர்த்தி
  4. கையைமர்த்தி

விடை : கையமர்த்தி

5. “உதித்த” என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்________

  1. மறைந்த
  2. நிறைந்த
  3. குறைந்த
  4. தோன்றிய

விடை : மறைந்த

குறு வினா

1. இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை?

சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு

2. நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?

நமது வீட்டிற்கு வந்தவரை இன்முகத்தாேடு வரவேற்று அறுசுவை உணவளித்து உபசரிக்க வேண்டும் என நாட்டுப் புறப்பாடல் கூறுகிறது.

3. “கண்மணியே கண்ணுறங்கு” பாடலில் உள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

  • ந்தவன் – ற்றமிழ்
  • ந்தத்திலே – ங்கத்திேல
  • பாட்டிசைத்து – பார்
  • குளிக்க – குளம்
  • ண்ணே – ண்ணுறங்கு

சிறு வினா

தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறார்?

தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயாே!

தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தாெட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேர நாட்டின் முத்தேனோ! இல்லம் வந்தவளை இன்முகத்தாேடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியாே!

குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் பாேக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழாே! கண்வண கண்மணியே கண்மூடி உறங்குவாயாக! என்று, தாய் தன் குழந்தையைப் பாராட்டுகிறாள்.

சிந்தனை வினா

1. வாய்மொழி இலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுக்க.

  1. கதைகள்
  2. கதைப்பாடல்கள்
  3. பாடல்கள்
  4. பழமொழிகள்
  5. விடுகதைகள்
  6. புராணக் கதைகள்

2. குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுக.

நிலவே முத்தே
ஓவியமே களிறே
பெருங்கடலே சூரியனே
கிளியே மயிலே
பொன்னே கண்ணே
மாணிக்கமே வைரமே
இரத்தினமே கண்மணியே
குழலே தேனே
மாதுளையே கரும்பே
அமுதமே பெட்டகமே
அனிச்சமே ஆருயிரே
மழையே முகிலே
கற்பூரமே தெய்வமே
அல்லியே மல்லியே
அரும்பே கனிச்சாறே
மணிப்புறாவே மாடப்புறாவே
சித்திரமே மரகதமே
பிடியே வைடூரியமே
நட்சத்திரமே மாம்பழமே
அன்னமே அழகே
பூவே தென்றலே
நந்தவனமே ரோஜாவே
கனியே, அன்பே தாமரையே

கூடுதல் வினாக்கள் 

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ________ என்ற சொல்லின் பொருள் உலகம்

  1. கலம்
  2. நாடு
  3. ஊர்
  4. பார்

விடை : பார்

2. பண்” என்ற சொல்லின் பொருள்_______________

  1. கண்
  2. இசை
  3. காண்
  4. பன்

விடை : இசை

3. “நாக்கு” என்னும் சொல் தரும் பொருள் ____________

  1. தால்
  2. கண்
  3. வாய்
  4. காது

விடை : தால்

4. ________ வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று

  1. சங்க இலக்கியங்களுள்
  2. நன்னெறி நூல்களுள்
  3. தாலாட்டு
  4. நீதி நூல்களுள்

விடை : தாலாட்டு

5. “மூன்று + தேன்” என்னும் சொல்லை சேர்த்து எழுதக்கிடைப்பது ____________

  1. முத்தேன்
  2. மூன்று தேன்
  3. மூன்றுத்தேன்
  4. மூன்றுதான்

விடை : முத்தேன்

6. குழந்தையின் ____________, குழந்தைகளை ____________ பாடும் பாட்டு தாலாட்டு

  1. அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும்
  2. தூக்கத்தை நிறுத்தவும், அழ வைக்கவும்
  3. தூங்க வைக்கவும், அழ நிறுத்தவும்
  4. உண்ணவும், தூங்க வைக்கவும்

விடை : அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும்

குறு வினா

1. முந்நாடுகளின் சிறப்புகள் எவை?

  • சேரநாடு – முத்து
  • சோழ நாடு – முக்கனி
  • பாண்டிய நாடு – முத்தமிழ்

2. “பாண்டிய நாட்டு முத்தமிழோ” இதில் முத்தமிழ் எவை?

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்

3. முக்கனி தொகைச்சொல்லின் விரிவாக்கத்தை எழுது.

மா, பலா, வாழை

4. தாலாட்டு பற்றிய குறிப்பினை எழுதுக

  • தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
  • தால் என்பதற்கு நாவு (நாக்கு) என்று பொருள்.
  • நாவை அசைத்து பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு) எனப் பெயர் பெற்றது.
  • குழந்தையின் அழுகையை நிறுத்தவும், குழந்தைகளை தூங்க வைக்கவும் பாடும் பாட்டு தாலாட்டு

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment