TN 5th Standard Tamil Book Back Answers | Term – 3 | Lesson 3.2 – புதுவை வளர்த்த தமிழ்

3.2 புதுவை வளர்த்த தமிழ்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 5th Standard Tamil Lesson 3.2 – புதுவை வளர்த்த தமிழ்.  We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

மதிப்பீடு

சரியான சொல்லைத் தெரிவு செய்

1. குயில்பாட்டு நூலை எழுதியவர் யார் _______

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. வாணிதாசன்
  4. புதுவை சிவம்

விடை : பாரதியார்

2. தமிழுக்கு அமுதென்று பேர் எனப் பாடியவர் _______

  1. பாரதிதாசன்
  2. வாணிதாசன்
  3. கண்ணதாசன்
  4. பிரபஞ்சன்

விடை : பாரதிதாசன்

3. பாரதிநாள் இன்றடா, பாட்டிசைத்து ஆடடா எனப் பாடியவர் _______

  1. பாரதிதாசன்
  2. வாணிதாசன்
  3. கண்ணதாசன்
  4. திருமுருகன்

விடை : வாணிதாசன்

4. பாட்டிசைத்து இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

  1. பாட்டு + இசைத்து
  2. பாடல் + இசைத்து
  3. பா + இசைத்து
  4. பாட + இசைத்து

விடை : பாட்டு + இசைத்து

5. மூன்று + தமிழ் இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______

  1. மூன்றுதமிழ்
  2. முத்துத்தமிழ்
  3. முதுதமிழ்
  4. முத்தமிழ்

விடை : முத்தமிழ்

பொருத்துக

1. பாரதிதாசன் கொடி முல்லை
2. தமிழ்ஒளி பாஞ்சாலி சபதம்
3. பாரதியார் பாவலர் பண்ணை
4. வாணிதாசன் மாதவி காவியம்
5. திருமுருகன் இருண்ட வீடு
விடை : 1 – உ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ, 5 – இ 

வினாக்களுக்கு விடையளிக்க.

1. பாரதியார் படைத்த முப்பெருங் காவியங்கள் யாவை?

பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு ஆகிய முப்பெருங் காவியங்களைப் பாரதியார் படைத்தளித்தார்.

2. பாரதிதாசன் – பெயர்க் காரணம் தருக.

பாரதியார் மீது அன்பும் பாசமும், பற்றும் உடையவர். அதனால்தான், தன் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக்கொண்டார்.

3. பிரபஞ்சனுக்குச் சிறப்பைச் சேர்த்த நூல் எது?

பிரபஞ்சன் எழுதிய “வானம் வசப்படும்” என்ற நூலுக்குச் “சாகித்திய அகாதெமி” விருது கிடைத்துள்ளளது.

4. பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் யாவர்?

பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் வாணிதாசனும், புதுவை சிவமும் ஆவர்.

5. தமிழ் ஒளியின் படைப்புகளை எழுதுக.

சிற்பியின் கனவு, வீராயி, கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீதியோ வீணையோ, முன்னும்-பின்னும், அணுவின் ஆற்றல், மாதவி காவியம் ஆகியவை தமிழ் ஒளியின் படைப்புகளாகும்.

சிந்தனை வினா

தமிழின் வளர்ச்சிக்குக் கவிஞர்கள் எவ்வாறெல்லாம் தொண்டாற்றியுள்ளனர்?

  • தமிழில் பல கவிதை நூல்களைப் படைத்துள்ளனர்.
  • நாடகங்கள் பல படைத்து நாடகத்தமிழை வளர்த்தனர்.
  • மக்களுக்கு விழுமியத்தையும், விழிப்புணர்வையும் தங்கள் கவிதைகள் மூலம் வளர்த்தனர்.
  • விடுதலை பேராட்டத்திலும், மக்களைத் தம் பாடல்கள் மூலம் கலந்திட அழைத்தனர்.

இன்றும் சமுதாய மாற்றத்திற்கு பல கவிஞர்கள் தம் பாடல்களால் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்

1. பாஞ்சாலி சபதம் என்னும் காவியத்தின் ஆசிரியர்

  1. பாரதிதாசன்
  2. வாணிதாசன்
  3. பாரதியார்
  4. புதுவை சிவம்

விடை : பாரதியார்

2. புரட்சிக்கவி என்னும் பட்டத்தை பாரதிதாசனுக்கு வழங்கியவர்

  1. அறிஞர் அண்ணா
  2. காமராஜர்
  3. தந்தை பெரியார்
  4. இராஜாஜி

விடை : தந்தை பெரியார்

3. தமிழியக்கம் நூலின் ஆசிரியர்

  1. பாரதியார்
  2. வாணிதாசன்
  3. பாரதிதாசன்
  4. புதுவை சிவம்

விடை : பாரதிதாசன்

3. ரமி என்னும் புனைப்பெயரில் எழுதியவர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. சுரதா
  4. வாணிதாசன்

விடை : வாணிதாசன்

4. பாரதிநாள் இன்றடா பாட்டிசைத்து ஆடடா என்ற பாடல் வரிகளை பாடியவர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. சுரதா
  4. வாணிதாசன்

விடை : வாணிதாசன்

வினாக்களுக்கு விடையளி

1. பாரதிதாசன் சிறப்பு பெயர்கள் யாவை?

  • புரட்சிக்கவிஞர்
  • பாவேந்தர்

2. புதுவைக்கு புகழ் சேர்த்த கவிஞர்களைக் குறிப்பிடுக

பாரதிதாசன், வாணிதாசன், புதுவை சிவம், தமிழ் ஒளி, இரா.திருமுருகன், பிரபஞ்சன்

3. பாரதிதாசன். பாரதியார் முன் பாடிக்காட்டிய பாடல் எது?

பாரதியார் முன் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்ற பாடலைப் பாடிக்காட்டினார்.

4. பாரதிதாசன் “சாகித்திய அகாதெமி” விருது பெற்ற நூல் எது?

‘பிசிராந்தையார்’ (நாடக நூல்)

5. சிறந்த தமிழறிஞர்களுக்கு தமிழக அரசு செய்யும் சிறப்பினை எழுதுக.

புதுவை தந்த பாவேந்தர் பாரதிதாசன் பெயரால், தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த தமிழறிஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பு செய்கிறது.

6. பாரதிதாசன் எழுதிய நூல்கள் யாவை?

  • அழகின் சிரிப்பு
  • பாண்டியன் பரிசு
  • தமிழியக்கம்
  • குறிஞ்சித்திட்டு
  • புரட்சிக்கவி
  • இசையமுது
  • பிசிராந்தையார்

7. பெரியார் பாரதிதாசனுக்கு கொடுத்த பட்டம் யாது?

பெரியார் பாரதிதாசனுக்கு “புரட்சிக்கவி” என்ற பட்டத்தினை கொடுத்தார்.

8. பாரதியார் பற்றி கவிஞர் தமிழ்ஒளி கூற்றினை கூறுக.

“சறி அடித்துச் சுழன்ற அலைகளில் சிக்கிய ஒரு படகாய் தடுமாறி இளைத்து மடிந்த மகாகவி தன் சரிதம் உரைப்பேன்” என்று பாரதியாரைப் பற்றி கவிஞர் தமிழ் ஒளி கூறினார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment