வெற்றி வேற்கை
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 4th Standard Tamil Lesson 7 – வெற்றி வேற்கை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
வாங்க பேசலாம்
உனக்கு உனது நண்பன் செய்த சிறிய உதவி, அந்த நேரத்தில் பெரிதாக நினைத்த அனுபவத்தை பற்றி பேசுக.
ஆண்டு இறுதித் தேர்வு அன்று, நான் வைத்திருந்த பேனா காணாமல் போய்விட்டது. தேர்வு எழுத நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. சில நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் ஒரு பேனா தான் வைத்திருப்பதாகக் கூறினார்கள். செய்வதறியாது கண் கலங்கினேன். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு நண்பன் எனக்குப் பேனாவைக் கொடுத்து உதவினான். நானும் நல்ல முறையில் தேர்வினை எழுதியும் பெற்றேன். அவன் செய்தது சிறிய உதவியாக இருப்பினும், அந்த நேரத்தில் பெரியதாக எனக்குத் தோன்றியது.
நீ பிறருக்கு செய்த உதவி, அவருக்குப் பெரியதாக நினைத்து நன்றி கூறிய நிகழ்வை வகுப்பறையில் பகிர்ந்து கொள்க
ஒரு முறை நான் பேருந்து நிறுதத்தில் ஒரு முதியவரைப் பாரத்தேன். அவர் வெகு நேரமாய் ஒவ்வொரு நபரிடமும் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு எந்த பதிலும் யாரும் சரியாக தராததைப் பார்த்து, அவர் அருகில் சென்று காரணம் கேட்டேன். அவர் அருகில் உள்ள ஊருக்குச் செல்ல வேண்டுமாம். பையில் வைத்திருந்த காசு எங்கேயோ விழுந்து விட்டதாம். அதனால் ஊருக்குச் செல்ல காசு கேட்டுக் கொண்டிருப்பதாகக் கூறினார். நான் எவ்வளவு தேவை என்று கேட்டபோது, ரூபாய் 15 என்று கூறினார் வருத்தத்துடன். நான் வேகமாக வீட்டிற்குச் சென்று என் அம்மாவிடம் செய்தியைச் சொல்லி 15 ரூபாய் வாங்கி வந்து அந்த முதியவரிடம் கொடுத்தேன். அவர் கண் கலங்கியபடியே வாங்கிக் கொண்டு, எனக்கு நன்றி கூறி வாழ்த்தியும் சென்றார். நான் செய்தது சிறிய உதவியாக இருந்தாலும், அது அவருக்குப் பெரியதாக தோன்றியது.
சிந்திக்கலாமா?
சிறு சிறு உதவிகளை பிறருக்குச் செய்வது பற்றி உனது கருத்து என்ன? வகுப்பில் கலந்துரையாடுக
பாபு | கோபு! சிறு சிறு உதவிகளை பிறருக்குச் செய்வது பற்றி நீ என்ன நினைக்கிறாய்? |
கோபு | கட்டாயம் நாம் அவற்றை நாம் செய்ய வேண்டும். நீ என்ன நினைக்கிறாய்? |
பாபு | செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறேன். |
கோபு | சரி அப்படி நீ செய்யும் போது என் மனநிலை எப்படியிருக்கும்? |
பாபு | அப்படி உதவி செய்யும் போது மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கும். ஏதோ பெரிய சாதனை புரிந்தது போல் மனதில் தோன்றும். உனக்கு எப்படியிருக்கும்? |
கோபு | பாபு எனக்கு அதே மனநிலைதான் இருக்கும். நமக்குள் பல ஒற்றுமை இருக்கிறதே! |
பாபு | ஆமாம் |
கோபு | நமக்கு மட்டுமல்ல, நம்மைப்போல உதவி செய்கின்ற அனைவருக்குள்ளும் இதே ஒற்றுமையிலிருக்கும். இப்படி உதவி செய்கிறவர்களால் தான் இன்றளவும் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. |
பாபு | ஆமாம் கோபு! சரியாகச் சொன்னாய். மனிதர்கள் மனிதருக்கு உதவி செய்வது தான் மானுடத்தின் மாண்பு. ஆனால் இதைப் புரிந்து எல்லோரும் நடந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். |
கோபு | ஆமாம்பா சரியாக சொல்கிறாய். நாம் செய்கிற சிறிய உதவி கூட பலருக்கு பேருதவியாக அமைந்து விடுகிறது. |
பாபு | நாம் இருவரும் இணைந்து செயல்பட நான் விரும்புகிறேன். நீ என்ன நினைக்கிறாய்? |
கோபு | நல்லது செய்ய இணைவது தப்பேயில்லை நண்பா! இணைவோம்! செயல்படுவோம்! நன்றி நண்பா! |
சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?
1. “தெண்ணீர்” இச்சொல்லின் பொருள் ………………………………
- கலங்கிய நீர்
- இளநீர்
- தெளிந்த நீர்
- வெந்நீர்
விடை : தெளிந்த நீர்
2. “ஆல்” இச்சொல்லின் பொருள் ……………………………
- வேலமரம்
- ஆலமரம்
- அரசமரம்
- வேப்ப மரம்
விடை : ஆலமரம்
3. “கயம்” இச்சொல்லின் பொருள் ……………………………………….
- நீர்நிலை
- பயம்
- வானிலை
- பருவநிலை
விடை : நீர்நிலை
4. “புரவி” இச்சொல்லின் பொருள் …………………………..
- யானை
- பூனை
- ஆள்
- குதிரை
விடை : குதிரை
5. “பெரும்படை” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________________
- பெருமை + படை
- பெரும் + படை
- பெரு + படை
- பெரிய + படை
விடை : பெருமை + படை
6. “நிழல் + ஆகும்” என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
- நிழல்ஆகும்
- நிழலாகும்
- நிழல்லாகும்
- நிழலாஆகும்
விடை : நிழலாகும்
வினாக்களுக்கு விடையளி
1. ஆலமரத்தின் விதை எவ்வாறு இருக்கும் என்று அதிவீரராமபாண்டியர் குறிப்பிடுகிறார்?
ஆலமரத்திலுள்ள சிறு பழத்தின் ஒரு விதையானது, தெளிந்த நீருள்ள குளத்தின் சிறிய மீனின் முட்டையைவிடச் சிறியதாகும் என்று அதிவீரராமபாண்டியர் குறிப்பிடுகிறார்.
2. ஆலமரத்தின் நிழலில் தங்கும் படைகள் யாவை?
ஆலமரத்தின் நிழலில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப் படை, காலாட்படை போன்ற படைகள் தங்கும்.
3. இப்பாடலின் பொருள் எதனுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது?
இப்பாடலின் பொருள் பிறருக்கு செய்யும் உதவியுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது?
பொருத்தமான நிறுத்தக்குறி இடுக.
1. ஆகா என்ன சுகம் தெரியுமா
விடை : ஆகா! என்ன சுகம் தெரியுமா?
2. என்னைக் கட்டிப் போடுகிறார்கள்
விடை : என்னைக் கட்டிப் போடுகிறார்கள்.
3. ஆகா இது என்ன பிரமாதம்
விடை : ஆகா! இது என்ன பிரமாதம்?
4. நான் என்ன வேலை செய்ய வேண்டும்
விடை : நான் என்ன வேலை செய்ய வேண்டும்?
5. காய்கறிக்கடையில் தேவையான தக்காளி கத்தரி புடலை ஆகியவற்றை வாங்கி வந்தேன்
விடை : காய்கறிக்கடையில் தேவையான தக்காளி, கத்தரி, புடலை ஆகியவற்றை வாங்கி வந்தேன்.
மொழியோடு விளையாடு
சொல் ஒன்று, பொருள் இரண்டு – கண்டுபிடி
1. வயலில் மேய்வது – ஆடு
அழகாய் நடனம் – ஆடு
2. மாதத்தின் மறுபெயர் – திங்கள்
நிலவைக் குறிப்பது – திங்கள்
3. வகுப்பில் பாடம் – படி
மாடி செல்ல உதவும் – படி
4. வளைந்து ஓடுவது – ஆறு
6 – இந்த எண்ணின் பெயர் – ஆறு
5. பூக்களைத் தொடுத்தால் – மாலை
அந்தி சாயும் பொழுது – மாலை
6. சோற்றின் மறுபெயர் – அன்னம்.
அழகிய பறவை – அன்னம்
கூடையில் இருக்கும் சொற்களுள் முதல் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எடுத்து முதல் பழத்தில எழுதுக. இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எடுத்து இரண்டாம் பழத்தில் எழுதுக.
|
|
அறிந்து கொள்வோம்
இணைப்புச் சொற்களை அறிவோமா?
இரண்டு தொடர்களை இணைக்கப் பயன்படும் சொற்கள் இணைப்புச் சொற்கள் ஆகும்.
சில இணைப்புச் சொற்களையும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் அறிவோம்.
|
|
1. பருவ மழை பெய்தது அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின.
2. காற்று பலமாக வீசியது ஆகவே மரங்கள் வேரோடு சாய்ந்தன.
3. அப்பா விரைவாக வந்துவிடுகிறேன் என்றார் ஆனால் வரவில்லை.
4. பூக்கள் அழகாகப் பூத்திருந்தன எனினும் பறிக்க மனமில்லை.
5. நான் தாய் நாட்டிலேயே பணிபுரிய விரும்புகிறேன் ஆகையால் வெளிநாடு செல்லமாட்டேன்.
6. தினமும் காலையில் எழுந்து நன்றாகப் படித்தேன் எனவே நான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன்.
பயிற்சி
ஆகவே, எனவே, ஆகையால், ஆனால் ஆகிய இணைப்புச் சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குக
1. ஆகவே
அரசுத் தேர்வுகள் கடினமாக இருக்கும் ஆகவே விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற வேண்டும்.
2. எனவே
தீண்டாமை தீயைப் போன்றது எனவே அதனை உலகை விட்டு ஓட்டுவது நம் கடமை.
3. ஆகையால்
நான் நல்லவனாக வாழ விரும்புகிறேன் ஆகையால் தீயோரிடம் நட்பு பாராட்ட மாட்டேன்.
4. ஆனால்
ராமு செல்வந்தன் ஆனால் எளிமையாய் வாழ்கின்றான்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…