மாட்டு வண்டியிலே
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 9 – மாட்டு வண்டியிலே. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
வாங்க பேசலாம்
1. மாட்டு வண்டியில் அல்லது வேறு ஏதேனும் வாகனத்தில் வெளியூர் சென்றிருக்கிறாயா? அப்படி நீ சென்று வந்த அனுபவம் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
பாலன் | நண்பர்களே! நீங்கள் மாட்டு வண்டிப் பயணம் சென்ற உள்ளீர்களா? |
ரகு | நாங்கள் இதுவரை சென்றதில்லை |
பாலன் | எங்கள் அப்பா மாட்டு வண்டி என்று சொல்லப்படும் கட்டை வண்டி வைத்துள்ளார். |
கலை | இந்த மாட்டுவண்டியின் என்னென்னன பயன்கள் உண்டு? |
ரமேஷ் | எங்கள் அப்பா மாட்டு வண்டி வைத்திருக்கிறார். விவசாயப் பொருட்களையும், கல், மண், கம்புகள் கொண்டு செல்லவும் பயன்படுத்துவார் என் அப்பா. |
ராஜேஷ் | மாட்டுவண்டிய இயங்க என்னென்ன வேண்டும்? |
பாலன் | கடையாணி, அல்லைப்படல், குடம், நுகத்தடி, வட்டை, சவாரித்ப்பை, பட்டா, இருசு, ஏர்க்கால், மூக்கேர், ஏர்கால் சட்டம், பூட்டாங்கயிறு, பட்டாங்குச்சி, முனைக்குச்சி, கொலுப்பலகை போன்றவை மாட்டுவண்டி இயங்க தேவை |
கலை | எங்கள் ஊரான அன்னவாசலில் கோவில் கொடை விழாவில் இரவு கூத்து பார்க்க என் அப்பா, நான், அம்மா, தங்கை ஆகியோார் சென்றோம். ஜல் ஜல் என்று சலங்களைகள் ஆட மாட்டு வண்டியில் சென்றது சுகமான அனுபவம். |
சுசிலன் | கயிற்றின் உதவியுடன் மாடுகள் வண்டியில் பிணைக்கப்பட்டு இருக்கும். இப்போது பெரும்பாலான மாட்டு வண்டிகள் உருளிப் பட்டைகளால் ஆனவை. பயணம் சுகமாக இருக்க எங்கள் வீட்டு மாட்டு வண்டியில் வைக்கோலை வண்டியில் நிரப்பி அதன் மேல் அமர்ந்து பயணிப்போம். |
கார்மேகம் | எங்கள் வீட்டு மாட்டு வண்டியில் காங்கேயம் காளைகள் பூட்டப்பட்டு இருக்ககும். |
மதன் | என் அப்பா மாட்டுவண்டியை நின்று கொண்டே ஓட்டுவார். சில நேரம் அண்ணனும் மாட்டு வண்டியை ஓட்டுவான். |
முகிலன் | வயல்வெளிகளுக்கு இடையே மாட்டுவண்டிப் பயணம் செய்வோம். இயற்கையோடு இணைவோம். |
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. “தண்ணீர்” இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ______________
- தண் + ணீர்
- தண் + நீர்
- தண்மை + நீர்
- தன் + நீர்
விடை : தண்மை + நீர்
2. “மேலே” இச்சொல்லின் எதிர்ச்சொல் ……………………….
- உயரே
- நடுவே
- கீழே
- உச்சியிலே
விடை : கீழே
3. “வயல் + வெளிகள்” இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
- வயல்வெளிகள்
- வயவெளிகள்
- வயற்வெளிகள்
- வயல்வளிகள்
விடை : வயல்வெளிகள்
4. “கதை + என்ன” இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
- கதைஎன்ன
- கதையன்ன
- கதையென்ன
- கதயென்ன
விடை : கதையென்ன
5. “வெயில்” இச்சொல்லின் எதிர்ச் சொல் ______________
- நிழல்
- பகல்
- வெப்பம்
- இருள்
விடை : நிழல்
இணைக்கலாமா?
1. அச்சாணி | பச்சை நிறம். |
2. பசுமை | நெற்பயிரின் உலர்ந்த தாள் |
3. வைக்கோல் | வண்டிச்சக்கரம் உருண்டு செல்ல உதவும் ஆணி |
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ |
சொல் கோபுரம் அமைப்போம்
1. இதனைக் ’கரம்’ என்றும் கூறலாம் (1)
விடை : கை
2. பசு கொடுக்கும் பானம் (2)
விடை : பால்
3. ஆறுகள் சென்று சேருமிடம் (3)
விடை : கடல்
4. வண்டியில் சக்கரம் கழன்று விழாமல் பாதுகாப்பது (4)
விடை : அச்சாணி
5. பாலைவனக்கப்பல் (5)
விடை : ஒட்டகம்
பொருத்தமான படங்களை மரத்திலிருந்து பறித்துப் பொருத்தலாமா!
1. எட்டுக் கைகள் விரிந்தால் ஒற்றைக்கால் தெரியும் அது என்ன? ……………………
விடை : குடை
2. அடிமலர்ந்து, நுனி மலராத பூ என்ன பூ? ……………………
விடை : வாழைப்பூ
3. கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை அது என்ன? ……………………
விடை : புத்தகம்
4. அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும் அது என்ன? ……………………
விடை : கோலம்
5. என்னோடு இருக்கும் சிறுமணி, எனக்குத் தெரியாது ஆனால் உனக்குத் தெரியும் அது
என்ன? ……………………
விடை : கண்
6. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது. அது என்ன? ……………………
விடை : பட்டாசு
7. அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு அது என்ன? ……………………
விடை : நெல்
8. ஒளி கொடுக்கும் விளக்கல்ல, வெப்பம் தரும் நெருப்பல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல அது என்ன? ……………………
விடை : சூரியன்
செயல் திட்டம்
வீட்டில் உள்ள தாத்தா பாட்டியிடம் மூன்று புதிர்களைக் கேட்டறிந்து குறிப்பேட்டில் எழுதி வருக.
1. கூரை வீட்டை பிரித்தால் ஓட்டு வீடு, ஓட்டு வீட்டுக்குள் வெள்ளை மாளிகை, வெள்ளை மாளிகை நடுவில் ஓர் குளம் நான் யாா்?
விடை : தேங்காய்
2. சாப்பிட எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். ஆனால் நீரைக் குடிக்க தந்தால் இறப்பேன் நான் யார்?
விடை : நெருப்பு
3. ஓயாமல் சத்தம் போடுவேன். நான் இயந்திரம் அல்ல. உருண்டு உருண்டு வருவேன். பந்து இல்லை நான் யார்?
விடை : கடல்
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…