நூலகம்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 8 – நூலகம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
அறிந்து கொள்வோம்
● படிப்புதான் ஒருவன் உயர வழி – காமராசர்
● புத்தகங்கள் படிப்பதையே வழக்கமாக்குங்கள். -அப்துல்கலாம்
வாங்க பேசலாம்
1. பள்ளி நூலகத்தில் உள்ள நூலகளுள் நீ படித்த ஏதேனும் ஒரு நூல் / கதை பற்றி வகுப்பறையில் கலந்துரையாடு.
கலை | நான் நாள்தோறும் நூலகத்திற்கு என் தந்தையுடன் சென்று சிறுவர் நீதிக் கதைகள் என்னும் புத்தகம் படித்தேன். |
ரகுமான் | புத்தகத்தில் படித்த கதையொன்றை சொல்லேன் |
கலை
ஓர் அழகிய கிராமம். அங்கு முத்து என்ற விவசாயி தன் குடும்பத்துடன் வாழந்து வந்தார். அவர் தினம் தன்னுடைய ஆடுகளை காட்டிற்கு கூட்டிச் சென்று மேய்ப்பது வழக்கம். காலையில் சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவான். முத்து சில நாள்கள் தன்னுடைய சொந்த வேலையின் காரணமாக வெளியூர் செல்ல வேண்டிய இருந்தது. தன் மகனான ராமுவிடம் ஆடு மேய்கும் பொறுப்பை கொடுத்தார். பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் ராமுவும் ஆடகளை சென்றான். ராமு முதல் நாள் காலையில் பக்கத்தில் உள்ள காட்டிற்கு ஆடுகளை ஓட்டிச் சென்றான். காட்டை அடைந்ததும் ஆடுகள் புற்களை மேயத் தொடங்கின. ராமு ஒரு பாறை மேல் அமரந்தான். பொழுது போகவில்லை. தூரத்தில் ஒரு சிலர் வயல் வேலை செய்து கொண்டிருந்தனர். வேலை செய்பவர்களின் கவனத்தை ஈர்க்க எண்ணிய ராமு, திடீரென “புலி வருது, புலி வருது” என கூச்சலிட்டான். ராமுவின் அலறலைக் கேட்டு வயிலில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் புலியை விரட்ட கைகளில் கட்டை ஒன்றை எடுத்துக் கொண்டு ராமு இருக்கும் இடத்தை நோக்கி விரைவாக வந்தனர். வந்தவர்கள் அனைவரும் புலி எங்கே? என்று ராமுவிடம் கேட்டனர். ராமுவோ புலியும் வரவில்லை கிளியும் வரவில்லை என்றான். மேலும் எனக்கு பொழுது போகவில்லை எனவே நான் உங்களை அழைத்தேன் என்றான். மறுநாள் ராமு ஆடுகளை மேய்க்க விட்டு அதே பாறையின் மேல் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து சற்று தொலைவில் உண்மையகாவே புலி வருவதைப் பார்த்தான். ஒரு பாறையின் பின் ஒளிந்து கெண்டு “புலி, புலி” என அலறினான். ஆனால் உதவிக்கு யாரும் வரவில்லை. பாய்ந்து வந்த புலி ஒரு ஆட்டுக்குட்டியை தூக்கி கொண்டு காட்டிற்குள் சென்று விட்டது. |
|
சேகர் | கதை அருமையாக இருந்தது. |
சதீஷ் | கதை உணர்ந்தும் நீதி என்ன? |
கலை | ஒருவன் வார்த்தையில் உண்மை இல்லை என தெரிந்தால் அவன் எப்போது உண்மை சொன்னாலும் அதை யாரும் உண்மை என நம்ப மாட்டார்கள். |
சுந்தர் | நூலகத்தில் வேறு என்ன பார்த்தாய்? |
கலை | நூலகத்தில் இலக்கியங்கள், கதைகள், வரலாறு , அறிவியல், கண்டுபிடிப்புகள். சுகாதாரம். சட்டம், சிறுவர் இல்க்கியம் என பல தலைப்புகளின் கீழ் புத்தகங்களை அலமாரிகளில் அடுக்கி வைத்திருக்கின்றனர். நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் தனித்தனியாக அடுக்கப்பட்டு உள்ளன. |
உதயகுமார் | வேறு சிறப்புகள் ஏதாவது உண்டா? |
கலை | பின் நூலகம், போட்டித் தேர்வுகளுக்கு தயாரிக்க உதவும் புத்தகங்கள் தனியாக இருந்தது. என் தந்தையார் பொன்னியின் செல்வன், கொற்கை போன்ற நூல்களை படிப்பதற்காக பதிவு செய்து எடுத்து வந்துள்ளார். அமைதியா படிக்க நூலகத்தில் பல வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. |
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. “நூல்” இச்சொல் உணர்த்தும் பொருள் …………………….
- புத்தகம்
- கட்டகம்
- ஒட்டகம்
- கோல்
விடை : புத்தகம்
2. “அறிஞர்” இச்சொல் உணர்த்தும் பொருள் …………………………
- அறிவில் சிறந்தவர்
- கவிதை எழுதுபவர்
- பாடல் பாடுபவர்
- மருத்துவம் பார்ப்பவர்
விடை : அறிவில் சிறந்தவர்
3. “தேனருவி” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
- தேன் + அருவி
- தே + னருவி
- தே + அருவி
- தேனி + அருவி
விடை : தேன் + அருவி
4. “புத்துணர்ச்சி” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
- புதுமை + உணர்ச்சி
- புத்து + உணர்ச்சி
- புதிய + உணர்ச்சி
- புது + உணர்ச்சி
விடை : புதுமை + உணர்ச்சி
5. “அகம்” இச்சொல்லின் எதிர்ச்சொல் ……………….
- உள்ளே
- தனியே
- புறம்
- சிறப்பு
விடை : புறம்
6. “தேன் + இருக்கும்” இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………….
- தேன்இருக்கும்
- தேனிருக்கும்
- தேனிறுக்கும்
- தேனிஇருக்கும்
விடை : தேனிருக்கும்
வினாக்களுக்கு விடையளி
1. நூலகத்தின் வேறு பெயர்கள் யாவை?
வாசகசாலை, படிப்பகம், சுவடிச்சாலை,நூல் நிலையம், புத்தகச் சாலை, சுவடியகம்
2. நூலகத்தின் பயன்கள் யாவை?
- நம் அறிவு வளர்கிறது.
- நம்முடைய நேரம் பயனுள்ள முறையில் அமைகிறது.
- வேலைவாய்ப்புத் தொடர்பான நூல்களைப் படிப்பதால் நல்ல வேலையில் சேரவும் முடிகிறது.
- மூளை புத்துணர்ச்சி பெறுகிறது.
- தன்னம்பிக்கை ஏற்படுகிறது.
3. நூலகத்தில் குழந்தைகளுக்கான சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளன?
- குழந்தைகளுக்கான பிரிவு தனியாகவே உள்ளது.
- நூலகத்தில் உள்ள ” வாசகர் வட்டம்” மூலமாக “நூலக தினத்தன்று” குழந்தைகளுக்கான போட்டிகள் அனைத்து நூலகங்களிலும் நடத்தப்படுகின்றன.
- போட்டிகளில் கலந்து கொள்வோருக்காகவும், போட்டித் தேர்வினை எழுதுவோருக்காகவும் தனியே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
- ஒவ்வொரு குழந்தையும் அவரவர் வீட்டில் நூலகம் அமைக்க வேண்டும். அதில் நிறைய புத்தகங்களைச் சேமித்து வைத்து புத்தகம் படிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4. நீ நூலகத்திற்குச் சென்று வந்ததைப் பற்றி எழுதுக
நான் எங்கள் ஊரில் உள்ள ஊர்ப்புற நூலகத்திற்குச் சென்றேன். அம்புலிமாமா, யானைச்சவாரி, சிறுவர்மலர், தங்கமலர் நூல்களை படித்தேன். சிறுவர் மலர், தங்க மலலர் பழைய புத்தகங்களில் நூலகரினம் கேட்டு வண்ணமிட்டு மகிழ்ந்தேன். மிகவும் அமைதியாக படிக்கச் சொன்னார்கள். தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், மரியாதை ராமன், கதைகளைப் படித்தேன். மகிழ்ச்சியாய் இருந்தது. என் நண்பர்களுக்கு கதைகள் கூறினேன்.
சொற்களை உருவாக்குவோமா?
1. வரிக்குதிரை
- வரி
- குதிரை
- குதி
- திரை
- வரை
2. பனிப்புயல்
- பனி
- புயல்
- புல்
- பனிப்பு
- பல்
3. திருநெல்வேலி
- நெல்
- வேலி
- திரு
- வேல்
- நெல்லி
- தில்லி
எழுத்துகளை முறைப்படுத்தி சொல் உருவாக்குக
1. கூ க் ட ளி ம் ப ள்
விடை : பள்ளிக்கூடம்
2. நூ க தி ல ம் ன
விடை : நூலகதினம்
3. ள் ழ ந் கு தை க
விடை : குழந்தைகள்
4. ம வ ன மை ம்
விடை : நூலகதினம்
5. பு து ர் த் ச் ண சி
விடை : புத்துணர்ச்சி
நிறுத்தக் குறியீடுகளைப் பயன்படுத்திப் படிப்போமா?
நூலகத்திற்கு நீ சென்றுள்ளாயா? அங்குப் பலவகையான நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறுகதைப் புத்தகங்கள், புதினங்கள், வரலாற்று நூல்கள், இலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள் என வரிசைப்படுத்தி வைத்திருப்பர். சிறுவர் இதழ்கள் செய்தித்தாள்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் போன்ற இதழ்களும் உண்டு. ஆஹா! அங்குச் சென்று படிக்கத் தொடங்கினால் நேரம்போவதே தெரியாது. நூலகத்தின் பொறுப்பாளர் நூலகர் ஆவார். நூலகத்தில் அமைதி காத்திடல் வேண்டும்.
படித்து வினாக்களுக்கு விடையளி
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாள் பூமலர். விளையாடுவதற்காகத் தன் தோழி மாலதியின் வீட்டிற்குச் சென்றாள் வழியில் இரண்டு சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தனர். பூமலர் அவர்களிடம், ஓணானை அடிக்காதீர்கள், உங்களை அடித்தால் உங்களுக்கு வலிக்கும் அல்லவா? அது போல அதற்கும் வலிக்கும். எனவே உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்றாள். சற்றுச் சிந்தித்த அச்சிறுவர்கள் கற்களைக் கீழே போட்டுவிட்டுத் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.
1. பூமலர் யார் வீட்டிற்கு விளையாடச் சென்றாள்?
பூமலர் தன் தோழியான மாலதி வீட்டிற்கு விளையாடச் சென்றாள்
2. சிறுவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?
சிறுவர்கள் வேலியில் உள்ள ஓணானை அடிப்பதற்குக் கையில் கல்லோடு குறிபார்த்துக் கொண்டிருந்தனர்.
3. உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று கூறியவர் யார்?
வள்ளுவர், வள்ளலார், புத்தர்
4. இவ்வுரைப்பகுதியிலிருந்து நீ அறிந்து கொண்டது என்ன?
எவ்வுயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது.
பொருத்தமான சொல்லால் நிரப்புக
( ஓடாது, சமைக்க, வளராத )
செயல் திட்டம்
அருகில் உள்ள நூலகத்திற்குச் சென்று உனக்கு விருப்பமான சிறுவர் இதழ்களைப் படித்து அதில் உனக்குப் பிடித்த இ்தழ்களின் பெயர்களை எழுதி வருக.
சுட்டிவிகடன், தங்கமலர், சிறுவர்மலர், சிறுவர்மணி
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…