சான்றோர் மொழி
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 3rd Std Tamil Lesson 7 சான்றோர் மொழி. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
வாங்க பேசலாம்
1. பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்துக்காட்டுக.
2. கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
உலகு | கற்றவரே உலகில் பெரியவர். அனைத்தும் அறிந்தவர் |
கணேஷ் | காமராசர் என்ன மெத்தப் படித்தவரா? |
உலகு | அதனால்தான், காமராசர் தான் படிக்காததால் தமிழ்நாட்டு மக்ள் படிக்க வேண்டும் என்பதற்காக 30,000 பள்ளிக்கூடங்களை உருவாக்கினார். |
கிருஷ்ணராஜ் | கொத்தனார், தச்சர், கொல்லர் போன்றவர்கள் என்ன படித்து வந்தார்கள்? |
சதீஷ் | நீ சொல்கிறவர்கள் படித்திருந்தால் தங்கள் தொழிலை மேம்பட்ட நிலைக்கு கொண்டு சென்றிருப்பார்கள். |
கலையரசி | இல்லாதவர்கள் விளைச்சல் இல்லாத தரிசு நிலத்தை போன்றவரகள் என்கிறார் வள்ளுவர். |
சுந்தர் | கற்றவர் ஒரு செயலை செய்யும் முன் நன்மை, தீமை பயன்கள், விளைவுகள், வளர்ச்சி போன்றவற்றை ஆராய்ந்து செய்ய தொடங்குவார்கள். |
மலர்விழி | கற்றவர்கள் உடல் உழைப்பு செய்யத யங்குகிறார்களே? |
உதயகுமார் | அப்படியெல்லாம் இல்லை. கற்றவர்கள் வேலை செய்தால் விரைந்தும் பிழையின்றியும் செய்வார்கள் கல்லாதவர் சரியாக செய்தாலும் அதற்குரிய செல்வத்தை பெற மாட்டார்கள். |
3. உன் நண்பனின் தேவை அறிந்து அவன் கேட்காமலேயே உதவிய அனுபவம் உனக்கு உண்டா? அதில் உனக்கு மகிழ்ச்சியா? வருத்தமா? ஏன்? கலந்துரையாடு.
செல்வம் | நான் துரைப்பாண்டிக்கு பென்சில் கொடுத்தேன். அவனுடைய பென்சில் சீவும்போது உடைந்து விட்டது. |
கோபி | நான் ஆறுமுகத்திற்கு அழிப்பான் கொடுத்தேன். அவன் வீட்டில் இருந்து எடுத்து வர மறந்து விட்டான். |
தேன்மொழி | செங்கொடிக்கு வண்ணப் பென்சில் கொடுத்தேன். |
கமலா | உனக்கு வண்ணமிட வேறு பென்சில் வைத்திருந்தாயா? |
தேன்மொழி | செங்கொடி வண்ணமிட்ட பின் நான் வாங்கி வண்ணமிட்டேன் |
ராகுல் | என் நண்பன் கதிரேசனுக்கு நான் ப்ரென்ஷீட் கொடுத்தேன். அவனுடைய புத்தகத்தில் மேலட்டை கிழிந்து இருந்தது. |
விஜய் | நான் என் நண்பன் ஆனந்துக்கு கடலை உருண்டை கொடுத்தேன். |
தானப்பன் | நாம் அனைவரும் கேட்காமலேயே கொடுத்துள்ளோம். மிக்க மகிழ்ச்சி |
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
1. “உரைத்தல்” என்ற சொல் குறிக்கும் பொருள் _____________
- பாடுதல்
- வரைதல்
- சொல்லுதல்
- எழுதுதல்
விடை : சொல்லுதல்
2. “ஈதல்” என்ற சொல் குறிக்கும் பொருள் _____________
- கொடுத்தல்
- எடுத்தல்
- தடுத்தல்
- வாங்குதல்
விடை : கொடுத்தல்
3. “மிக்காரை” என்ற சொல்லின் எதிர்ச்சொல் _____________
- அறிவிலாதார்
- அறிந்தோரை
- கற்றோரை
- அறிவில்மேம்பட்டவர்
விடை : அறிவிலாதார்
4. “இரவாது” என்ற சொல் குறிக்கும் பொருள் _____________
- பிறரிடம் கேட்டுப் பெறாது
- பிறரிடம் கேட்டுப் பெறுவது
- பிறருக்கு கொடுக்காது
- பிறரிடம் கொடுப்பது
விடை : பிறரிடம் கேட்டுப் பெறாது
5. “சேர்தல்” என்ற சொல் குறிக்கும் பொருள் _____________
- தேடுதல்
- பிரிதல்
- இணைதல்
- களைதல்
விடை : இணைதல்
பொருள்பட எழுதிப் படித்து மகிழ்க
எனக்கு இனிப்பு பிடிக்கும்
உழைப்பு உயர்வு தரும்
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
சுத்தம் சுகம் தரும்
இனிய தமிழில் பேசுங்க
நீ எதை விரும்புவாய்? ஏன்? கலந்துரையாடு
பசுமையான தோட்டத்தோடு கூடிய வீட்டையே நான் விரும்புவேன்
தாரிகா | எங்கள் வீட்டில் இரண்டு தென்னைமரம், இரண்டு எலுமிச்சை மரம், மூன்று கொய்யா மரம், ஒரு சப்போட்டா மரம் உள்ளது. |
வேரிக் | எங்களுடைய வீட்டில் இரண்டு நெல்லிமரம், இரண்டு வாழை மரம், ஒரு மா மரம், இரண்டு கறிவேப்பிலை மரம் உள்ளது. |
தேன்மொழி | எங்கள் வீட்டில் செடி கொடிகள் வைக்க இடமே இல்லை. அனைத்து இடத்தையும் சிமெண்டால் பூசி விட்டார்கள். |
கமலா | இப்படி அனைத்து இடத்தையும் சிமெண்டால் பூசிவிட்டால் மழைத்தண்ணிர் எப்படி பூமிக்கடியில் செல்லும். |
வித்யா | எங்கள் வீட்டில் மழைநீரை சேமிக்க தொட்டி அமைத்துள்ளோம். அதில் கூழாங்கற்கள், மணல் சேர்த்துள்ளோம். |
ராகுல் | எங்கள் வீட்டில் துளி மழைநீருையும் வீணாக்கமாமல் அனைத்து நீரையும் தோட்டத்திற்குள் செலுத்தி காய்கறிகள் பயிரிட்டு வருகிறோம். மாடித் தோட்டம் போட்டு இருக்கிறோம். கத்தரி, வெண்டை, புடலை, தக்காளி போன்ற வீட்டிற்கு தேவையான காய்கறிகளை மாடித் தோட்டத்தில் இருந்தே பறிக்கிறோம். நான் தினமும் காலை, மாலை வேளைகளில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவேன். |
விஜய் | நான் எங்கள் வீட்டில் பூங்செடிகள் வளர்த்து வருகிறேன் |
தானப்பன் | நாம் அனைவரும் மழை நீரைச் சேமிக்கும் முறையை அறிந்துள்ளோம். ஆகவே, ஒவ்வொரு துளி நீரையும் சேமிப்போம். |
அறிந்து கொள்வோம்
1. உன் நண்பனை உனக்குப் பிடிக்கக் காரணங்கள் எவை?
- அன்பாகப் பழகுவான்.
- பகிர்ந்து உண்ணுவான்.
- சண்டை போட மாட்டான்.
- ஓடி ஆடி விளையாடுவான்.
2. உன்னிடத்தில் உனக்குப் பிடிக்காதது எது?
கோபம், பிடிவாதம், கீழ்படியாமை
சிந்திக்கலாமா?
காதரும் அப்துலும் சகோதரர்கள், இருவரும் தங்களுக்குக் கிடைக்கும் சிறு தொகையைச் சேமித்து வருகின்றனர். அந்த ஆண்டு ஏற்பட்ட புயல் பாதிப்பினை அறிந்த காதர் புயல் நிவாரண நிதிக்காக, தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொடுக்க நினைக்கிறான். அவனின் தம்பி அப்துல், தனது சேமிப்பில் இருந்து கிடைத்த தொகையினைக் கொண்டு பிடித்தமான பொருளை வாங்கிக் கொள்ள நினைக்கிறான். இவர்கள் இருவரில் நீ யாராக இருக்க விரும்புகிறாய்? அதற்குரிய காரணங்களைக் கூறு.
நான் காதராக இருக்க விரும்புகிறேன்
- பிறருக்கு உதவுவது.
- துயருற்றோருக்கு ஆறுதல்.
- பிணியுற்றோருக்கு உதவி.
- ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுதல்.
- வருந்தியோருக்கு வாழ்வு.
- சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பது போல சின்னச்சின்ன உதவிகள் பெரிய பலனைத் தரும்.
- இன்னல்களில் இணைந்திருத்தல்.
- உடனிருத்தல்.
போன்ற செயல்களில் கடவுள் நம்மோடு உள்ளார் என்பதால் தான்.
செயல் திட்டம்
‘கல்வி’ என்ற அதிகாரத்தில் இருந்து எவையேனும் ஐந்து திருக்குறள்களைப் படித்து, எழுதி வருக.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
எண்ணென்ப ஏனை ஏழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்தது.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல் மற்றை யவை.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…