TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 8.5 – கோடை மழை

8.5 கோடை மழை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 8.5 – கோடை மழை. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Kodai Malai

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • சாந்தா தத் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்படைப்பாளர்.
  • அமுதசுரபியில் வெளியான ‘கோடை மழை’ என்னும் இச்சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருதைப் பெற்றது.
  • இவர் தற்போது ஹைதராபாத்தில் வசிக்கிறார்.
  • சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத் துறைக்குத் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.
  • பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் ஹைதராபாத்தில் வெளியாகும் ‘நிறை’ மாத இதழின் ஆசிரியராக உள்ளார்.
  • ‘திசை எட்டும்’ என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்.
  • இவருடைய மொழிபெயர்ப்புகளைச் சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது.
  • மனித நேயம் இவர் கதைகளில் வெளிப்படும் அடிப்படைப் பண்பாகும்.

பாடநூல் வினாக்கள்

நெடு வினா

1. கோடை மழை கதை வாயிலாக விளக்கப்படும் மனிதநேயப் பண்புகளை விளக்குக.

கதைமாந்தர்கள்
ஆறுமுகம் (முதியவர்), குழந்தை, பாபு (மருந்தக ஊழியர்), டாக்டர், நர்ஸ்

முன்னுரை:-

சாந்தாதத்தின் “கோடை மழை” எனும் சிறுகதையில் மனைவி இறந்த துக்ககம் தாளாது கணவனும் விஷமருந்தி போனாதால் பச்சியளம் குழந்தையை முதியவர் ஆறுமுகம் வளர்க்கிறார் தள்ளாத வயதில் தனக்குப் பின் இக்குழந்தையின் நிலை என்ன ஆகுமோ என்று எண்ணி தத்துக் கொடுக்கட முடிவு செய்கிறார். அவ்வாறு தத்துக் கொடுக்கும் போது ஏற்படுகின்ற மனிதநேயப் பண்புகளை இக்கட்டுரை வாயிலாக அறியலாம்.

மருத்துவமனையில் குழந்தை அழுதல்:-

விழிகளை அகல விரித்து எந்தவித இலக்கும் இல்லாமல் அப்படியும் இப்படியும் பாரத்து கண்ணைச் சுழற்றி குழந்தை அழ ஆரமம்பித்தது. இது போலவே அரை மணி நேரமாக அவஸ்திப்படும் குழந்தைக்கு பசியா, காய்ச்சலா, அசதியா தெரியவில்லை என்று ஏங்குகிறார் முதியவர் ஆறுமுகம்

முதியவரின் புலம்பல்:-

குழந்தைக்கு ரெண்டு சொட்டு டீத்தண்ணீர் கொடுக்கனும் தானும் குடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். டீ விற்கும் பையனையும் உள்ளே விடமாட்டார்கள். வெளியே போய்விட்டு வந்தால் இடம் போய்விடும் என்ன செய்றது. பரபரத்து ஓடி வந்தும் பலன் இல்லை என்று தமக்குத் தாமே எண்ணிக் குழந்தையைத் தோளில் சரி செய்து கொண்டு சமாதானம் ஆனார்.

முதியவரின் பொறுமை:-

ஆஸ்பிட்டலில் வரிசை ஆமை வேகத்தில் சென்றதால் முதியவருக்கு அலுப்பு கூடியது. வீட்டுக்குப் போலாமா என்ற எரிச்சல் இரண்டு நாளா குழந்தைக்கு கை வைத்தியம் பாரத்தும் பிடிபடல, தனியார் ஆஸ்பத்திரிக்கு போக வசதியு இல்ல, மனுச ஆதரவும் இல்ல இன்னும் என்ன நடக்கப் போகுதோ பொறுமையாய் இருப்போம் காசா பணமா.

முதியவரின் நிலைப்பாடு:-

அடிப்பாவமே ஆண்டவன் கொடுத்த உசுரு தன்னையும் பாரத்துக் கொள்ள யாரும் இல்ல, தன்னையே தானும் பாரத்துக் கொள்ளவும் முடியல ஆயுசு பூராவும் இந்தக குழந்தையோடு இந்தக் கிழடு அல்லாட வேண்டியது தான். உனக்கு நான் எனக்கு நீ என்றாகிவிட்ட நாதியற்ற அவஸ்தை, தகப்பனையும் பிள்ளையும் பாதுகாக்க வேண்டிய வாரிசு நட்டாத்துல விட்டுட்டுப் போய்விட்டார். நாலு நாள் காய்ச்சல் கட்டியவள் கண் மூடிய பின் தானும் குழந்தையை அனாதை ஆக்கிவிட்டு சென்று விட்டான்.

முதியவரின் தனிமை:-

அனாதை ஆகிவிட்ட குழந்தையை எண்ணி முதியவரின் ஓயாத புலம்பல். ஆனால் தன் பிள்ளையைப் பிரிந்த துயரம் துளியும் இல்லை. அந்த அளவுக்கு பெறுப்பு. என்னையும் குழந்தையும தனியாக்கிட்டு போயிட்டானே என்ற கோபம். பாசம் பசிபோல் மூடிவிட்டது. பிஞ்சுப் பிள்ளைக்கூட நினைக்காமல் பொண்டாட்டி மேல பாசம். எத்தனையோ ஆண்கள் மனைவியை இழந்து வாழல. இவனெல்லாம் ஒரு கோழை.

மருத்துவரிடம் செல்லுதல்:-

மீண்டும் குழந்தை சினுங்க ஆரம்பித்துவிட்டது அப்போது உள்ளேயிருந்து ஒரு தாய் உள்ளேயிருந்து தன் தோளில் கோழிக்குஞ்சு போல் தூக்கிக் கொண்டு வந்தாள். அவனைப் பார்க்கவும் நினைக்கவும் முடியாமல் மூச்சு விடுவதை தவிர ஏதும் தெரியாமல் உள்ளே சென்றார்.

மருத்துவரின் அறிவுரை:-

பெரியவரே! நெஞ்சில் சளி கட்டி இருக்கு அதான் காய்ச்சல் பயப்பட வேண்டாம் பக்குவமாய் பார்த்துக் கொண்டால் இரண்டு நாளில் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு மருந்து சீட்டு எழுதிக் கொடுத்தார்.

நர்ஸ் நலம் விசாரித்தல்:-

ஏன் பெரியவரே உங்க கை இப்படி நடுங்குது. வீடல் வேற யாரும் இல்லையா? என்று கேட்க பதில் கூற முடியாமல் ஊசிபோட்ட குழந்தை வலியால் அழுவதை அணைத்துக் கொண்டு சிரிப்பை மட்டும் பதிலாக்கி விட்டு வெளியேறினார்.

மருந்துகம் செல்லுதல்:-

வாங்கய்யா உட்காருங்க குழந்தைக்கு உடம்பு சரியில்லையா! ஆமாம் பாபு மூணு நாளா ரொம்ப கஷ்டப்படுது டாக்டர் ஊசி போட்டிருக்கார். மருந்து கொடுத்தா சரியாயிடும்னு சொன்னார். பாபு…. நான் மருந்து மட்டும் வாங்க வரல ரொம்ப நாளா சொல்லணும் நினைச்சேன். இப்பதான் நேரம் வந்தது. பாபு நான் ரொம் நாள் உசிரோட இருக்கணும்னு தான் ஆசை நெஞசில் உரம் இருந்தாலும் உடம்பு கேட்கனுமே? சாவோட மல்லுக்கு நிற்கிற வயசா இது முடியலப்பா. நாளைக்கு நீ அவங்கள கூட்டிட்டு வா.

தாய் பாசம்:-

அம்மா என்கிற பாசம் தெரியாமல் இருக்க இது மட்டும் என்ன பாவம் செய்தது. பெண்ணோட பரிவும் பாசமும் ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம்னு இப்பதான பாபு புரியுது. என் சுயநலத்துக்ககாக குழந்தையை அனாதையாக விட்டுட்டு போறது பெரிய பாவம். சரி பாபு கொஞ்சம் தாமதித்தாலும் மனசு மாறிடும் மருந்தும் குழந்தையுமாய் விடுவிடுவென நடந்தார்.

முதியவரின் குமுறல்கள்:-

பாபுவுடன் வந்தவர்களைப் பார்த்த போது பிள்ளை பாக்கியம், ஏக்கம் தவிப்பு, அத்தனையும் உணர்ந்த போது குழந்தையின் பாதுகாப்பு உறுதியானது. நெடுநாள் தயக்கத்துக்குப் பின் தன் முடிவுக்கு இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. நெருடல் எல்லாம் பிள்ளையைப் பிரிந்து இருக்க வேண்டுமே என்பதுதான் பெரியவருக்கு உறுத்தல்.

பாபுவின் மனிதநேயம்:-

ஐயா! இனிமேல் உங்களுக்குத் கவலை வேண்டாம். உங்களுடைய வேதனை எங்களால் தாங்க முடியல. நீங்க எங்க வாழ்க்கைக்குப் பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிங்க. நன்றி செல்றதுக்கு பிலா நான் உதவி கேட்கிறேன் நீங்களும் குழந்தையைப் பிரிந்து இருக்காம எங்களோட வந்திருங்க தயங்காதீங்க.

முதியவரின் தடுமாற்றம்:-

இறைஞ்சும் பாபுவைக் கண்டு தடுமாறினார். பாருக்கு யார் உதவி? எவ்வளவு பெரிய விஷயம் பாபு இப்போதைக்கு எனக்கு சாவு வராது பாபு இப்போதைக்கு எனக்கு சாவு வராது பாபு கூறினார்.

முடிவுரை:-

இக்காலக்கட்டதில் தன்னைப் பெற்ற தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் விடும் ஆண்களைப் போல் இல்லாம் தாய் தந்தையை இழந்த பச்சிளம் குழந்தையையும், முதியவரையும் அரவணைத்துத் தம் இல்லத்திற்கு அழைத்துச் செல்லும் பாபுவின் மனிதநேயப் பண்பு, கோடை மழை – கதை வாயிலாக அறிய முடிகிறது.

கற்பவை கற்றபின்…

பொது இடங்களில் நீவிர் பார்த்த மனிதநேய நிகழ்வை வகுப்பறைச் சூழலில் பகிர்ந்து கொள்க.

எங்கள் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் நின்று கொண்டிருந்தேன். அவ்விடம் அதிகமாக மக்கள் கூடுவார்கள். பேருந்து நிறுத்த்தின்  அருகில் 50 வயதுள்ள ஒருவர் கரித்துண்டால் கோவில், திருச்சபை, பள்ளிவாசல் என வரைந்து கொண்டிரந்தார். ஓவியம் அற்புதம். முழுமையாக அவரைப் பார்த்தேன். கால்கள் இரண்டும் இல்லை. இது என்ன சோதனை என்று நினைத்துக் கொண்டேன். அப்போது பத்து வயது சிறவன் அவருக்குச் சிற்றுண்டி வாங்கி வந்து ஊட்டுவதை பார்த்தேன். விசாரித்ததில் அவர் நல்ல ஓவியர். விபத்தில் கால்களை இழந்ததால் மனைவும், உறவினரும் இவரைக் கைவிட்டுவிட்டதாகவும் சொன்னார்கள். இந்தப் பையனும் அனாதை. ஆனால் இவருக்கு கிடைக்கும் பணத்தில் அந்த பணத்தில் அந்தப் பையன் தானும் சாப்பிட்டக் கொண்டு இவரையும் கவனத்தில் கொள்கிறான் கவனித்துக் கொள்கிறான் என்றார்கள். இதுதான் மனித நேயம்.

ஒரு வாரம் கழித்து நானும் இவர்களை ஓர் அனாதை ஆசிரத்தில் சேர்ந்தேன். அவர்கள் சென்ற வர அரசிடம் பரிந்துரை செய்த மூன்று சக்கர வாகனம் பெற்றுக் கொடுத்தேன். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரையும் பார்த்தேன். எவ்வளவோம மாற்றம்! நன்றி உணர்ச்சியல் அவர்கள் இருவரின் கண்களில் கண்ணீர்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1. சாந்தா தத் எவ்விடத்தை சார்ந்தவர்?

  1. மதுரை
  2. தஞ்சை
  3. திருநெல்வேலி
  4. காஞ்சிபுரம்

விடை : காஞ்சிபுரம்

2. சாந்தா தத்தின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளது

  1. நியூ புக் செஞ்சுரி
  2. சாகித்திய அகாதெமி
  3. கிழக்கு பதிப்பகம்
  4. மணிவாசகம் பதிப்பகம்

விடை : சாகித்திய அகாதெமி

3.  மனிதநேயம் அடிப்படை பண்பினை வெளிப்படுத்துபவர்

  1. ஜகந்நாதன்
  2. சாந்தா தத்
  3. மீரா
  4. இளங்குமரனார்

விடை : சாந்தா தத்

4. கோடை மழை கதையின் உட்பொருள்

  1. இளைஞர்களின் காதல்
  2. வறண்ட நிலத்தின் நிலை
  3. முதியோர்களை அரவணைப்பது
  4. ஏழைகளின் கண்ணீர்

விடை : முதியோர்களை அரவணைப்பது

5. குழந்தைகள் எவரால் கொண்டாடப்படுகிறார்கள்.

  1. தந்தையால்
  2. தாயல்
  3. பெற்றோரால்
  4. சொந்தங்களால்

விடை : பெற்றோரால்

குறு வினா

1. சாந்தா தத் மொழிபெயர்ப்புகளை வெளியிட்ட அமைப்பு எது?

சாந்தா தத் மொழிபெயர்ப்புகளைச் சாகித்திய அகாதெமி வெளியிடப்படுள்ளது.

2. சாந்தா தத் – குறிப்பு வரைக

  • சாந்தா தத் காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் படைப்பாளர்.
  • இவர் தற்போது ஹைதரபாத்தில் வசிக்கிறார்.
  • சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்துறைக்குத் தன் பங்களிப்பை செய்து வருகிறார்.
  • பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் ஹைதராபத்தில் வெளியாகும் “நிறை” மாத இதழின் ஆசிரியராக உள்ளார்.
  • “திசை எட்டும்” என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார்.
  • இவருடைய மொழிபெயர்ப்புகளைச் சாகித்திய அகாதெமி வெளியிடப்படுள்ளது.
  • மனித நேயம் இவர் கவிதைகளில் வெளிப்படும் அடிப்படைப் பண்பாகும்.

 

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment