TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 8.2 – முகம்

8.2 முகம்

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 8.2 – முகம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Mugam

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • ’சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள்’ என்னும் தொகுப்பில் இக்கவிதை இடம்பெற்றிருக்கிறது.
  • தமிழின் நவீன பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சுகந்தி சுப்ரமணியன்.
  • கோவை புறநகரின் ஆலாந்துறை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவர், உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாத நிலையில் திருமணமாகி, கணவர் தந்த நம்பிக்கையில் எழுதத் தொடங்கினார்.
  • தனித்து விடப்பட்ட பெண்ணின் அனுபவங்களால் நிரம்பியுள்ள இவருடைய படைப்புகள் புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
  • இவருடைய மறைவுக்குப் பிறகு இவரின் கவிதைகளும் சில சிறுகதைகளும் ’சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளன.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

நான் வெற்றுவெளியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனது முகத்தைத் தேடியபடி என்று சுகந்தி சுப்பிரமணியன் தேடுவதாகக் குறிப்பிடுவது

  1. தமது வீட்டு முகவரியை
  2. தமது குடும்பத்தை
  3. தமது அடையாளத்தை
  4. தமது படைப்புகளை

விடை : தமது அடையாளத்தை

குறு வினா

முகம் முகவரியற்றுப் போனதற்கு சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.

என்குள்ளே என்னைத் தொலைத்தக் காரணத்தால் என் முகவரியற்று போனது என்கிறார்.

கூடுதல் வினாக்கள்

உங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? உங்கள் வலிமையென்று நீங்கள் எவற்றைக் கருதுவீர்கள்?

“எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலம் அதை என்னால் சாதிக்க முடியும்” என்ற மன உறுதியோடு அச்செயலை செய்து முடிக்க வேண்டும். முதலில் என்னுடைய வலியை என்னவென்று நான் அறிந்திருக்க வேண்டும். ஒரு செயல்பாடு முழுமை பெற வெற்றியடைய உடல் வலிமை மட்டுமல் மனத்தின் வலிமையுநதான்.

அரிய பெரிய சாதனைகள் மனத்தின் விமையினாலேயே சாதிக்கப்படுகின்றன என்ற உண்மையினை மறந்து விடக்கூடாது. மனத்தை பல வழிகளில் செலவழித்து விடாமல் ஒரே நோக்கில் ஒரே குறிக்கோளில் பயன்படுத்தும் போது மனம் பொலிவு பெறும்.

மனத்தின் எண்ணங்கள் ஒருமுகப்படுத்தும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் எந்தச்செயலையும் எளிதாகச் செய்ய முடியும். நல்ல எண்ணங்கள் குவியும் போது உள்ளத்திற்கு அமைதி கிடைக்கும். இதன் மூலம் சிறந்த வலிமைப் பெற்று எதையும் சாதிக்க முடியும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்

என்றார் வள்ளுவர்

நம் வலிமையைக் கொஞ்சம் கூட உணராதவர்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் தோற்றுப் போகிறார்கள்.

கூடுதல் வினாக்கள்

சுகந்தி சுப்பிரமணியன் குறிப்பு வரைக

  • தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்படத்தகுந்தவர் சுகந்தி சுப்பிரமணியன்.
  • சுகந்தி சுப்பிரமணியன் கோவை புறநகரின் ஆலாந்துறை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.
  • உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முழுமை செய்யாதவர்.
  • புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் ரகசியம் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment