6.3 சிலப்பதிகாரம்
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 6.3 – சிலப்பதிகாரம். We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
நூல் வெளி
- சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்று காதையின் ஒருபகுதி பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
- தமிழரின் கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றை உள்ளடக்கிய கருவூலமாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது.
- அரசகுடி அல்லாதவர்களைக் காப்பியத்தின் தலைமக்களாக வைத்துப் பாடியதால் இது ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது.
- புகார், மதுரை, வஞ்சிக் காண்டங்கள் முறையே சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் பற்றியவை என்பதால் ‘மூவேந்தர் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
- முதன் முதலாகப் பெண்ணை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு, அவள் அரசனை எதிர்த்து வழக்காடியதைப் பாடியதால் ‘புரட்சிக் காப்பியம்’ எனப்படுகிறது;
- இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கூறுகளும் இடம்பெற்றுள்ளதால் ‘முத்தமிழ்க் காப்பியம்’ எனப்படுகிறது.
- செய்யுளாகவும் பாடலாகவும் உரைநடையாகவும் பாடப்பட்டுள்ளதால் இது ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ எனப்படுகிறது.
- மேலும், இந்நூல் ‘பொதுமைக் காப்பியம்’, ‘ஒற்றுமைக் காப்பியம்’, ‘வரலாற்றுக் காப்பியம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
- சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலையில் காணப்படுவதால் இவை இரண்டும் ‘இரட்டைக் காப்பியங்கள்’ என அழைக்கப்படுகின்றன.
- சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
- ‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று பாரதி குறிப்பிடுகிறார்.
- வரந்தரு காதையில் இளங்கோவடிகள் தன்னைப்பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
சொல்லும் பொருளும்
- புரிகுழல் – சுருண்ட கூந்தல்
- கழை – மூங்கில்
- கண் – கணு
- விரல் – ஆடவர் கைப் பெருவிரல்
- உத்தரப் பலகை – மேல் இடும் பலகை
- பூதர் – ஐம்பூதங்கள்
- ஓவிய விதானம் – ஓவியம் தீட்டப்பட்ட பந்தல்
- நித்திலம் – முத்து
- விருந்து – புதுமை
- மண்ணிய – கழுவிய
- நாவலம்பொலம் – சாம்பூநதம் என்னும் உயர்ந்த வகைப் பொன்
- தலைக்கோல் – நாடகக் கணிகையர் பெறும் பட்டம்
- ஓடை – முக படாம்
- அரசு உவா – பட்டத்து யானை
- பரசினர் – வாழ்த்தினர்
- பல்இயம் – இன்னிசைக் கருவி
- குயிலுவ மாக்கள் – இசைக் கருவிகள் வாசிப்போர்
- தோரிய மகளிர் – ஆடலில் தேர்ந்த பெண்கள்
- வாரம் – தெய்வப்பாடல்
- ஆமந்திரிகை – இடக்கை வாத்தியம்
- இலைப்பூங்கோதை – அரசன் அணிந்துள்ள பச்சை மாலை
- கழஞ்சு – ஒரு வகை எடை அளவு
இலக்கணக்குறிப்பு
- ஆடலும் பாலும் – எண்ணும்மை
- தொல்நெறி – பண்புத்தொகை
உறுப்பிலக்கணம
தாெழுதனர் = தாெழு + த + அன் + அர்
- தாெழு – பகுதி
- த் – இறந்தகால இடைநிலை
- அன் – சாரியை
- அர் – படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதி.
புணர்ச்சி விதி
தலைக்காேல் = தலை + கோல்
- “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “தலைக்காேல்” என்றாயிற்று
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்… தொடர்களில் வெளிப்படும் செய்திகள்
1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
- 1 சரி, 2 தவறு
- 1 தவறு, 2 சரி
- 1 தவறு, 2 தவறு
- 1 சரி, 2 சரி
விடை : 1 சரி, 2 சரி
2. பொருத்துக.
அ) ஆமந்திரிகை | 1) பட்டத்து யானை |
ஆ) அரசு உவா | 2) மூங்கில் |
இ) கழஞ்சு | 3) இடக்கை வாத்தியம் |
ஈ) கழை | 4) எடை அளவு |
- 3, 1, 4, 2
- 4, 2, 1, 3
- 1, 2, 3, 4
- 4, 3, 2, 1
விடை : 3, 1, 4, 2
குறு வினா
ஒருமுக எழினி, பொருமுக எழினி – குறிப்பு எழுதுக.
ஒருமுக எழினி:-
நாட்டிய மேடையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு செல்லுமாறு அமைக்கப்படும் முகத்திரை
பொருமுக எழினி:-
மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை
சிறு வினா
நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக.
சிலம்பு காட்டும் நாட்டிய அரங்கத்திற்கான இடம்:-
“எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர்”
கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்பு மாறாத நன்னிலத்தை ஆடல் அரங்கிற்காக தேர்ந்தெடுத்தனர்.
மூங்கில் கொணர்தல்:-
பொதிகைமலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களில், ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கில்களை கொண்டு வந்தனர்.
ஆடல் ஆரங்கம் அமைந்தல்:-
“நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்”
நூல்களில் கூறப்பட்ட முறையில் மூங்கில் கோல் அளவு கொண்டு அரங்கம் அமைத்தல்.
மூங்கில் அளவுகோல்:-
கைப்பெருவிரலில் இருபத்து நான்கு அளவு கொண்டதாக அம்மூங்கில வெட்டினார். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டனர். அதில் ஏழுகோல் அகலமும், எட்டுகோல் நீளமும், ஒருகோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கம் அமைக்கபட்டது.
கற்பவை கற்றபின்…
ள்ளி விழாக்கள், ஊர்த்திருவிழா, பட்டிமன்றம், தொலைக்காட்சி நிகழ்வுகளுக்கான அரங்கம், அரசு விழாக்களுக்கான மேடை போன்றவற்றின் அரங்க அமைப்பு, ஒலி ஒளி அமைப்பு, திரை அலங்காரம் குறித்துக் கலந்துரையாடுக.
பங்கு பெறுவோர்கள் : நேசன், வாசன், ராசன்
நேசன் | நான் நேற்று எனது பள்ளியின் ஆண்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு நான் கண்ட மேடை பற்றிக் கூறுகிறேன். தரையிலிருந்து பத்து அடி உயர மேடை போட்டிருந்தது. மேடையானது இருபது அடி அகலமும், 12 அடி அகல உயரம் கொண்டதாக இருந்தது. இரு புறத்திலிருந்தும் வருமாறும், மேலே ஏறுமாறும் திரைச்சீலைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேடையின் பின்பக்கம் மற்ற இரண்டு பக்கங்களும் ஒரு தெருவுக்குள் நடந்து செல்வது போன்ற ஒரு ஓவியம் வரையப்பட்டிருந்தது. மேடையின் மேல் பக்கத்தில் வட்ட வடிவிலான ஓவியம் இருந்தது. மேடையின் முன்பக்க ஓரத்தில் இரண்டு ஒலி வாங்கிகள், மேடையின் முன் பக்த்தில் வண்ண வண்ண ஒளிகளைப் பாய்ச்சும் சுழல் விளக்குகள், மேடையை ஒட்டி, இரு பெரும் ஒலி பெருக்கிகள் என மேடை அற்புதமாக அமைக்கப்பட்டிருந்தது. |
வாசன் | இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் ஊர்த் திருவிழாவிற்குச் சென்றிருந்தே்ன். அங்கே பரதநாட்டிய மேடை அமைத்திருந்தார்கள். 4 அடி உயரத்தில் ஒரு மேடை முன்பக்கம் தவிர மற்ற 3 பக்கங்களும் ஓவியம் தீட்டப்பட்ட துணிகளால் மறைக்கப்பட்டிருந்தன. மேலும் வண்ண விளக்குகளால் மேடை அலங்கரிக்கப்ட்ட இருந்தது. மேடையின் மேல் இருபுறமும் நட்டு வாங்கும், வாய்பாட்டு, மிருதங்களம், மோர்சிங், வீணை வாசிப்பவர்களுக்கு என கலைஞர்களுக்கு இடம் ஒதுக்கப்ட்டிருந்தது. |
ராசன் | எங்கள் ஊரில் பட்டிமன்ற நிழ்வைப் பார்க்க நேற்று சென்றிருந்தேன். மிக உயரமான மேடை, கீழே தரை விரிப்பு, மேடையின் பின்பக்கம் அடைப்பில் நடுவர் மற்றம் பேச்சாளர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. மேடையின் இரு பக்கங்களிலும் ஆயத்த ஒலி வாங்கி மேடைகள், கண்ணைப் பறிக்கும ஒளி விளக்குகள், நடுவர் அமர்வதற்கு மிகப் பெரிய அமர்வு இருக்கை என்று பார்க்க அழகாக இருந்தது. |
நேசன் | ஆமாம் நண்பர்களே முற்காலங்களில் போல் இல்லாமல் இன்று மேடைகள் அலங்காரமாகவும் விளக்கின் ஒளியில் பகல் போலவும், மேடையில் கண்ணைக் கவரும் சில ஓவியங்களும் தெளிவாக ஒலி வாங்கியன்று வெளிவிடும் ஒலிப்பெருக்குப் பெட்டிகள் என இதைப் பற்றிய ஒரு பார்வை நம்மை வியக்க வைக்கிறது. அது மட்டுமா, இத்தனையையும் அமைக்க அந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற கைவினைக் கலைஞர்கள், இவர்களின் ஒத்துழைப்பாலேயே இத்தகைய மேடைகள் கண்ணைக் கவருகின்றன. தெருக்கூத்தாக இருந்த மேடை இன்று திரைப்படத்தை நேரில் பார்க்கும் உளப்பாங்கினை உண்டாக்கும் அளவிற்கு மேடையில் வடிவமைக்கப்படுகிறன்றன. |
“ஆடத் தெரியாதவனுக்கு தெருக் கோணல் என்பானாம்” இந்தப் பழமொழி பொய்த்து வி்ட்டது இந்த நாளில்
கூடுதல் வினாக்கள்
இலக்கணக் குறிப்பு
- காட்டல் – தொழிற்பெயர்
- புரிகுழல், சூழ்கடல் – வினைத்தொகைகள்
- வழாஅது, வழாஅ – செய்யுளிசை அளபெடைகள்
- பெற்றான் – படர்க்கை பெண்பால் இறந்தகால வினைமுற்று
- பெருந்தேர், நெடுவரை, நன்னீர், நல்நூல் – பண்புத்தொகைகள்
- வருகிறோம் – தன்மைப்பன்மை வினைமுற்று
- நூல்நெறி, தூண்நிழல் – ஆறாம் வேற்றுமைத் தொகைகள்
உறுப்பிலக்கணம்
1. இயம்ப = இயம்பு + அ
- இயம்பு – பகுதி
- அ – பெயரெச்ச விகுதி.
2. பெற்றனள் = பெறு (பெற்று) + அன் +அள்
- பெறு– பகுதி
- பெற்று – என ஒள்று இரட்டித்து, இறந்தகாலம் காட்டியது
- அன் – சாரியை
- அள் – படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதி.
3. கொடுப்ப = கொடு + ப் + ப் + அ
- கொடு – பகுதி
- ப் – சந்தி
- ப் – எதிர்கால இடைநிலை
- அ – பெயரெச்ச விகுதி.
புணர்ச்சி விதி
1. வழக்கென= வழக்கு + என
- “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” என்ற விதிப்படி “ வழக்க் + என” என்றாயிற்று.
- “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வழக்கென” என்றாயிற்று.
2. கண்ணிடை = கண் + இடை
- “தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “கண்ண் + இடை” என்றாயிற்று.
- “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “கண்ணிடை” என்றாயிற்று.
3. வலக்கை = வலம் + கை
- “மவ்வீறு ஒற்றுஅழிந்த உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி “வல + கை” என்றாயிற்று.
- “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “வலக்கை” என்றாயிற்று.
4. இடத்தூண் = இடம் + தூண்
- “மவ்வீறு ஒற்றுஅழிந்த உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி “இட + தூண்” என்றாயிற்று.
- “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “இடத்தூண்” என்றாயிற்று.
5. பூங்கொடி = பூ + கொடி
- “பூப்பெயர் முன்இன மென்மையும் தோன்றும்” என்ற விதிப்படி “பூங்கொடி” என்றாயிற்று
6. நெடுவரை = நெடுமை + வரை
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி “நெடுவரை” என்றாயிற்று.
7. தொன்னெறி = தொன்மை + நெறி
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி “தொன் + நெறி” என்றாயிற்று.
- “இனமிகல்” என்ற விதிப்படி “தொன்னெறி” என்றாயிற்று.
8. பேரிசை = பெருமை + இசை
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி “பெரு + இசை” என்றாயிற்று.
- “உயிர்வரின்….. முற்றும் அற்று” என்ற விதிப்படி “ பேர் + இசை” என்றாயிற்று.
- “உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “பேரிசை” என்றாயிற்று.
9. இந்நெறி = இ + நெறி
- “எகரவினா முச்சுட்டின் முன்னர்… பிறவரின் அவையும் தோன்றுதல் நெறியே” என்ற விதிப்படி “இந்நெறி” என்றாயிற்று.
பலவுள் தெரிக
1. இரட்டைக்காப்பியங்கள் என அழைக்கப்படுபவை
- நீலகேசி, குண்டலகேசி
- உதயணகுமாரகாவியம், நாககுமாரகாவிம்
- சிலப்பதிகாரம், மணிமேகலை
- சிந்தாமணி, சூளாமணி
விடை : சிலப்பதிகாரம், மணிமேகலை
2. தவறான இணையைத் தேர்க
- கழை – மூங்கில்
- விதானம் – பந்தல்
- நித்திலம் – முத்து
- விருந்து – பழமை
விடை : விருந்து – பழமை
3. தவறான இணையைத் தேர்க
- நாவலம்பொலம் – சாம்பூந்தம் என்னும் உயர்ந்த வகைப் பொன்
- அரசு உவா – பட்டத்து யானை
- குயிலுவமாக்கள் – நாடகம் நடிப்போர்கள்
- தலைக்கோல் – நாடகக் கணிகையர் பெறும்பட்டம்
விடை : குயிலுவமாக்கள் – நாடகம் நடிப்போர்கள்
4. ஆடல் கற்பதற்கான சடங்களை மாதவி செய்தபோது வயது
- 7
- 12
- 9
- 15
விடை : 12
5. மேடையின் மேலிருந்து வேண்டும்போது கீழே இறக்கும் வகையில் அமைக்கப்படுவது
- பொரு முகத்திரை
- ஒரு முகத்திரை
- கரந்துவால் நிரை
- இவற்றில் எதுவுமில்லை
விடை : கரந்துவால் முகத்திரை
6. ஆமந்திரிகை – என்பதன் பொருள்
- வலக்கை வாத்தியம்
- இடக்கை வாத்தியம்
- இருகை வாத்தியம்
- இவற்றில் எதுமில்லை
விடை : இடக்கை வாத்தியம்
பொருத்துக
1.பேரியாழ் | அ. 7 நரம்புகளை கொண்டது |
2. மகரயாழ் | ஆ. 16 நரம்புகளை கொண்டது |
3. சகோடயாழ் | இ. 17 நரம்புகளை கொண்டது |
4. செங்கோட்டியாழ் | ஈ. 21 நரம்புகளை கொண்டது |
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – ஆ, 4 – அ |
குறு வினா
1. பிற உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக்காட்டுவது எது?
பிற உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக்காட்டுவது கலை.
2. கலை என்பது எதனை உள்ளடக்கியது?
கலை நுட்பமான தன்மையையும் திறனையும் உள்ளடக்கியது.
3. தமிழர்களால் போற்றப்பட்டுக் கற்கப்பட்ட கலை எது?
கலைகளில் நடனக் கலை தமிழர்களால் போற்றப்பட்டுக் கற்கப்பட்டது.
4. கலை எவற்றையெல்லாம் வெளிப்படுத்துகிறது?
கலை ஒரு சமூகத்தின் பண்பாடு, வரலாறு, அழகியல் போன்ற கூறுகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது.
5. தலைக்கோள் பட்டம் பெற்றவள் யார்? ஏன்?
- தலைக்கோள் பட்டத்தை வென்றவள் மாதவி.
- தன் ஆடல் அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடித்ததன் காரணமாகச்ச சிறப்பிக்கப்பட்டாள்.
6. பாரதியார் இளங்கோவையும், சிலம்பையும் எவ்வாறு புகழ்கிறாா்?
“சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்” என்று பாரதி இளங்கோவையும், சிலம்பையும் புகழ்கிறார்.
7. குடிமக்கள் காப்பியம் பெயர்க்காரணம் தருக
அரசக்குடி அல்லாதவர்களை காப்பியத்தின் தலைமக்களாக வைத்து பாடியதால் குடிமக்கள் காப்பியம் எனப் பெயர் பெற்றது.
8. யாழின் வகைகளையும் அவை கொண்டுள்ள நரம்புகளின் எண்ணிக்கையையும் எழுதுக
யாழ் வகை | நரம்புகளின் எண்ணிக்கை |
1. பேரியாழ் | 21 |
2. மகரயாழ் | 17 |
3. சகோடயாழ் | 16 |
4. செங்கோட்டியாழ் | 4 |
9. சிலப்பதிகாரம் குறிப்பு வரைக
- சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
- கண்ணகியின் கால் சிலம்பால் உருவான கதை
- மூன்று காண்டங்கள், முப்பது காதைகள் கொண்டது. அவை முறையே புகார் காண்டம் – 10, மதுரைக் காண்டம் – 13, வஞ்சிக்காண்டம் – 7, என 30 காண்டங்களை கொண்டது.
- இரட்டைக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், மூவேந்தர் காப்பியம், பொதுமைக் காப்பியம், புரட்சிக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், முத்தமிழ் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம், உரையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பன இதன் வேறுபெயர்கள்
- அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினைய உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் ஆகிய சிலப்பதிகாரம் கூறும் உண்மைகள் ஆகும்.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…