5.4 அகநானூறு
Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 5.4 – அகநானூறு. We have listed all book back questions with answers and some additional questions for self-practice.
நூல் வெளி
- பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் அகநானூறு.
- இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது.
- களிற்றியானைநிரையில் 120, மணிமிடை பவளத்தில் 180, நித்திலக்கோவையில் 100 எனப் பாடல்கள் உள்ளன.
- அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்;
- நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
- இவரின் பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.
சொல்லும் பொருளும்
- வேட்டம் – மீன் பிடித்தல்
- கழி – உப்பங்கழி
- செறு – வயல்
- கொள்ளை – விலை
- என்றூழ் – சூரியனின் வெப்பம்
- விடர – மலைவெடிப்பு
- கதழ் – விரைவு
- உமணர் – உப்பு வணிகர்
- எல்வளை– ஒளிரும் வளையல்
- தெளிர்ப்ப – ஒலிப்ப
- விளிஅறி – குரல்கேட்ட
- ஞமலி – நாய்
- வெரீஇய– அஞ்சிய
- மதர்கயல்– அழகிய மீன்
- புனவன் – கானவன்
- அள்ளல் – சேறு
- பகடு– எருது
இலக்கணக்குறிப்பு
- பெருங்கடல் – பண்புத்தொகை
- உழாஅது – செய்யுளிசை அளபெடை
- வெரீஇய – சொல்லிசை அளபெடை
உறுப்பிலக்கணம்
1. செய்த = செய் + த் + அ
- செய் – பகுதி
- த் – இறந்தகால இடைநிலை
- அ – பெயரெச்சவிகுதி
2. சாற்றி = சாற்று + இ
- சாற்று – பகுதி
- இ – வினையெச்ச விகுதி.
புணர்ச்சி விதி
பெருங்கடல் = பெருமை + கடல்
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி “பெரு + கடல்” என்றாயிற்று.
- “இனமிகல்” என்ற விதிப்படி “பெருங்கடல்” என்றாயிற்று
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1. விளியறி ஞமலி இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது?
- எருது
- குதிரை
- நாய்
- யாழி
விடை : நாய்
சிறு வினா
‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு’ – இத்தொடரின் வழி பண்டமாற்று வணிகத்தை விளக்குக.
உப்புக்குப் பதிலாக (மாற்றாக) நெல்லை விற்றனர் என்ற செய்தியின் மூலம் சங்க காலத்தில் பண்டமாற்று வாணிகம் நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது
விளக்கம்:-
உமணர் ஒருவரின் மகள் அழகும் இளமையும் வாய்ந்தவள். தன் கைகளில் அணிந்திருந்த வளையல்கள் ஒலிக்க வீதிக்குச் சென்றாள். அப்போது அந்த வீதி வழியாக வந்த வணிகனை நோக்கி
“உப்புக்கு மாற்றாக நெல்லை தந்து உப்பினைப்
பெற்றுக் கொள் வாரீரோ! என்று கூவினார்”.
“நெல்லின் நேரே வெண்கல உப்பு எனச்”
“சேரி விலைமாறு கூறுலின் மனைய்”
என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.
கற்பவை கற்றபின்…
1. தற்காலத்தில் வணிகத்தில் சிறந்து விளங்கும் மகளிர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.
ஒரு பெண் நம் சமூகத்தில் வெற்றி பெற வேண்டுமானல் 100 சதவீதம் வேலை செய்தால் போதாது. 200 சதவீதம் உண்மையான கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டுமு். அதன் அடிப்படையில் இன்றையக் காலத்தில் திருவாரூரில் பெண்கள் தங்கள் வாழ்க்கையை வணிகத்திலும் ஈடுபடுத்தி, சிறந்து வளங்கின்றனர்.
அவ்வகையில் திருவாரூரில் பிறந்து சென்னையில் பிழைப்புத்தேடி வந்த பெண் இன்று வணிகத்தில் சிற்நது விளங்குகிறாள். அவரைப்பற்றி சில வரிகள்.
வறுமை, கல்வி, பொருளாதாரம், கலை, சோகச்சூழல் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய சூழலில் சென்னை வந்த பெண் ஏதாவது செய்யத் துடிக்கிறாள்.
முன் அனுபவர் இல்லா நிலையில் வட மாநில தோழி மூலம் பினாயில் தயாரிக்க ஆரம்பித்தார். பிறகு 500 ரூபாய் கடன் வாங்கி மூலப்பொருட்கள் வாயிலாக தாமே தனியாக தொழில் செய்ய ஆரம்பித்தார். தான் தயாரித்த பினாயிலை அரசு அலுவலங்கள், தபால் நிலையங்கள், உணவகங்களில் நேரிடையாக சென்று விற்க ஆரம்பித்தார். போதிய வருமானம் கிட்டியது. வியாபாரத்தை மேலும் சிறக்க செய்ய அதிக மூலதனம் வைத்து இரண்டு பெண்களை உதவிக்கு வைத்துக் கொண்டார்.
தரம் உயர்தரம் என்ற நோக்கோடு உழைத்த பெண்மணி தன்னிடம் ஐம்பதுக்கு மேற்பட்ட பெண்களையும் வணிகத்தில் ஈடுபடச் செய்தார். தன் நிறுவனங்களுக்கு நிலை ஏஜென்ஸி என்ற பெயர் வைத்து பினாயில் வணிகத்தில் சிறந்து விளங்குகிறார் எனறால் மிகையாது.
ஆணுக்கு பெண் சமம் என்று மகளிர் தற்காலத்தில் வணிகத்தில் சிறந்து விளங்குகின்றனர் என்பதற்கு இதுவே சான்றாகும்.
2. பழங்காலத் தொழில்கள் குறித்துக் கருத்தரங்க உரை உருவாக்குக.
பழந்தமிழ் மக்கள் வாழ்வதற்காகப் பொருள் தேடுவதைப் கடமையாகக் கொண்டனர். அதற்காகப் பற்பல தொழில் வகைகளை மேற்கொண்டார். தம் வாழிடங்களுக்கு ஏற்ப தொழில்களை தேர்ந்தெடுத்தனர். மலைநாட்டு மக்கள் தேனெடுப்பது தினை விதைப்பது, காட்டுப் பகுதியில் வாழ்பவர் நிரை மேய்ப்பது; பால் கடைவது, வயல் வெளியில் உள்ளோர் உழவு செய்து நகர் அமைத்து ஆட்சி செய்வது போன்ற பணிகளையும் செய்தனர். கடற்கரைப் பகுதியில் வாழ்வோர் உப்பு விளைத்தல்; முத்துக்குளித்தல்; அலைகடல் எறி வாணிகம் செய்தல்.
தொழில் செய்தே பொருள் தேடுவதே அவர் கொள்கை. பசுக்களுக்கு நீர் வேண்டும என்று கருதி இரத்தல் கூட இழிவான செயலாக கருதினர். தாமே முயற்சி செய்து நீரைப் பெற்றுத் தர வேண்டும் என்றனர்.
தாமே முயன்று தேடும் பொருளையே தமக்குரியதாகக் கருதினார். எளிய முயற்சியில் வருவதை ஏற்க மறத்தனர்.
முயற்சி உடையார் இகழ்ச்சியுடையார் என்பதற்கு ஏற்ப இயன்று பழந்தமிழர் தொழில்கள் செய்தனர்.
கூடுதல் வினாக்கள்
உறுப்பிலக்கணம்
வீசி = வீசு + இ
- வீசு – பகுதி
- இ – வினையெச்ச விகுதி.
அழுந்திய = அழுந்து + இ (ன்) + ய் +அ
- அழுந்து– பகுதி
- இன் – இறந்தகால இடைநிலை; “ன்” புணர்ந்து கெட்டது.
- ய் – உடம்படுமெய்
- அ – பெயரெச்சவிகுதி
புணர்ச்சி விதி
சிறுகுடி = சிறுமை + குடி
- “ஈறுபோதல்” என்ற விதிப்படி “சிறுகுடி” என்றாயிற்று.
எவ்வந்தீர = எவ்வம் + தீர
- “உயிர்வரின்…. இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “எவ்வந்தீர” என்றாயிற்று.
5. வாங்குந்தந்தை = வாங்கும் + தந்தை
- “உயிர்வரின்…. இ ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “வாங்குந்தந்தை” என்றாயிற்று
பலவுள் தெரிக.
1. “மீன்” என பொருள் தரும் சொல்
- கயல்
- உழை
- இரவி
- கதிர்
விடை : கயல்
2. பாடல் வைப்பு முறையில் பாடல் எண்ணிற்க ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்து தொகுக்கப்ட்ட நூல்
- அகநானூறு
- புறநானூறு
- குறுந்தொகை
- நற்றிணை
விடை : அகநானூறு
3. பொருந்தியவற்றை எழுதுக
- வேட்டம் – மீன் பிடித்தல்
- கயல்- மான்
- உமணர் – வயல்
- புனவர் – உப்பு வணிகம்
விடை : வேட்டம் – மீன் பிடித்தல்
4. பொருந்தியவற்றை எழுதுக
- பகடு – விலை
- அள்ளல் -அகழ்தல்
- ஞமலி – நாய்
- கொள்ளை – எருது
விடை : ஞமலி – நாய்
5. பொருந்தாதவற்றை எழுதுக
- களியாற்றின் நிரை – 120 பாடல்கள்
- மணிமிடை பவளம் – 180 பாடல்கள்
- நித்திலக்கோவை – 90 பாடல்கள்
விடை : நித்திலக்கோவை – 90 பாடல்கள்
6. சரியான கூற்றைக் கண்டறிக
1. அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்.
2. நெய்தல் திணை பாடல்களை பாடுவதில் வல்லவர் அம்மூவனார்.
3. இவரது பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலம் தொகுக்கப் பெற்றுள்ளன.
- 1 மட்டும் சரி
- 2 மட்டும் சரி
- 3 மட்டும் சரி
- மூன்றும் சரி
விடை : மூன்றும் சரி
குறு வினா
1. தொழில் எத்தகைய தன்மையுடையது?
மக்கள் வாழும் சூழலுக்குத் தக்கவாறு அமையக்கூடிய தன்மை உடையது தொழில்.
2. பழந்தமிழர்களின் தொழில் எதனை சார்ந்து அமைந்திருந்தது?
பழந்தமிழர்களின் தொழில் நிலத்தின் இயல்பைச் சார்ந்து அமைந்திருந்தது.
3. கடற்கரையில் வாழும் மக்கள் எவ்வகையான தொழில்களைச் செய்து வருகிறார்கள்?
கடற்கரையில் வாழும் மக்கள் மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் போன்ற தொழில்களைச் செய்து வருகிறார்கள்.
4. நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர் யார்?
நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர் அம்மூவனார்.
5. அகநானூறு- குறிப்பு வரைக
- பாடல்வைப்பு முறையில் பாடல் எண்ணிற்கு ஏற்பத் திணைகள் வரிசையாக வைத்துத் தொ குக்கப்பட்ட நூல் அகநானூறு.
- இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது.
- களிற்றியானைநிரையில் 120, மணிமிடை பவளத்தில் 180, நித்திலக்கோவையில் 100 எனப் பாடல்கள் உள்ளன.
5. அம்மூவனார் – குறிப்பு வரைக
- அகப்பாடல்கள் மட்டுமே பாடியவர்களுள் ஒருவர் அம்மூவனார்;
- நெய்தல் திணை பாடல்களைப் பாடுவதில் வல்லவர்.
- இவரின் பாடல்கள் எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றிலும் தொகுக்கப்பெற்றுள்ளன.
சில பயனுள்ள பக்கங்கள்
If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…