TN 12th Standard Tamil Book Back Answers | Lesson 5.2 – தெய்வமணிமாலை

5.2 தெய்வமணிமாலை

Hello Students and Parents, In this section, you can clarify your doubt on 12th Standard Tamil Lesson 5.2 – தெய்வமணிமாலைWe have listed all book back questions with answers and some additional questions for self-practice.

12th Standard Tamil Guide - Deivamanimalai

12th Std Tamil Text Book – Download

நூல் வெளி

  • பாடப்பகுதியிலுள்ள பாடல், இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்ற தெய்வமணிமாலை என்னும் பாமாலையில் உள்ளது.
  • இப்பாடல் சென்னை, கந்தகோட்டத்து முருகப்பெருமானின் அருளை வேண்டும் தெய்வமணிமாலையின் 8ஆம் பாடல்.
  • சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும் பசிப்பிணி போக்கியவருமான அடிகள் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார்.
  • சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார்.
  • இம்மண்ணில் ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தவர் அடிகளார்.
  • வாடிய பயிரைக் கண்டபோது வாடிய அவ்வள்ளலின் பாடல்கள் ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையவை.
  • திருவருட்பா, ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
  • ‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகியவை இவருடைய உரைநடை நூல்கள்.

இலக்கணக்குறிப்பு

  • மலரடி – உவமைத்தொகை
  • வளர்தலம் – வினைத்தொகை

உறுப்பிலக்கணம்

1. நினைக்கின்ற = நினை + க் + கின்று + அ

  • நினை – பகுதி
  • க் – சந்தி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி.

2. வைத்து = வை + த் + த் + உ

  • வை – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி.

3. பேசுவார் = பேசு + வ் + ஆர்

  • பேசு – பகுதி
  • வ் – எதிர் கால இடைநிலை
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதி

1. உள்ளொன்று = உள் + ஒன்று

  • தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “உள்ள + ஒன்று” என்றாயிற்று
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “உள்ளொன்று” என்றாயிற்று

2. ஒருமையுடன் = ஒருமை + உடன்

  • இ ஈ ஐ வழி யவ்வும்”  என்ற விதிப்படி “ஒருமை + ய் + உடன்” என்றாயிற்று
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “ஒருமையுடன்” என்றாயிற்று

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக.

1) உள்ளொன்று வைத்துப் புறம்பாென்று பேசுவார் இத்தொடர் உணர்த்தும் பண்பு

  1. நேர்மறைப் பண்பு
  2. எதிர்மறைப் பண்பு
  3. முரண் பண்பு
  4. இவை அனைத்தும்

விடை : முரண் பண்பு

குறு வினா

‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே’ – தொடருக்குப் பதவுரை எழுதுக.

அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துக் திருக்கோவிலில் எழுந்தருளயிருக்கும் கந்தவேளே!

சிறு வினா

இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?

  • சென்னை கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தையுடைய தூய்மையான மாணிக்க மணியே! அருள் நிறைந்த சைவமணியே!
  • எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன் மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றும் பேசும் வங்சகர் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.
  • சிறந்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்ற எனக்கு அருள் புரிய வேண்டும். மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும். பெண்ணாசையை என் மனம் துறக்க வேணடும். என்றும் உன்னை மறவாதிருக்கு வேண்டும்.
  • நின் கருணையாகிய நிதி, நோயற்ற வாழ்வு உடைவனாக இருக்க வேண்டும் என்று கந்தக்கோட்டத்துக்க கந்தவேளிடம் இராமலிங்கர் வேண்டுகிறார்.

நெடு வினா

சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்த கோட்டப் பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப்படுகின்றன?

மயிலாப்பூர்:-

  • இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளை உடைய பெரிய ஊர் திருமயிலை.
  • அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும் மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா அன்று முதல் இன்று வரை சிறப்பாக நடைபெறுகிறது. அவ்விழாவினைக் கண்குளிரக் காண வேண்டும்.

கந்தக்கோட்டம்:-

  • அறம் செய்வோர்கள் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத் தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே! மணிகளுள் அருள் நிறைந்த சைவமணியே!
  • எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றும் பேசும் வஞ்சகரின் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.
  • உனது புகழைப் பேச வேண்டும்; பொய் பேசாமல் இருக்க வேண்டும். சிறந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்ற எனக்கு அருள வேண்டும். மதப்பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும் பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும்.
  • நல்ல அறிவும், கருணாயாகிய நிதியும் நோயற்ற வாழ்வும் உடையவனாக நான் இருக்க வேண்டும். ஆறுமுகங்கள் உடைய தெய்வமாகிய மணியே இத்தகைய சிறப்புகளை எனக்கு அருள்வாயாக என்று கந்தக் கோட்டத்தில் பெருமானிடம் வேண்டுகிறார்.

கற்பவை கற்றபின்…

தெய்வமணிமாலைப் பாடல் கருத்துகளுக்கு இணையான திருக்குறள்களைத் தொகுத்து வருக.

புறங்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும் (குறள் – 183)

பருகுவார் போலினும்பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது (குறள் – 811)

பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றர் நீடுவாழ் வார் (குறள் – 6)

இனையர்இவர் எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு (குறள் – 790)

மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் – 3)

அந்தணர் என்போர் அறவோர்மற்(று) எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் – 30)

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் – 297)

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் – 350)

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • மறவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • மறக்க – எதிர்மறைப் பெயரெச்சம்
  • பெருநெறி – பண்புத்தொகை

உறுப்பிலக்கணம்

1. ஒழுக = ஒழுகு + அ

  • ஒழுகு – பகுதி
  • அ – பெயரெச்ச விகுதி.

2. பிடித்து = பிடி + த் + த் + உ

  • பிடி – பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்த கால இடைநிலை
  • உ – வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதி

1. பெண்ணாசை =  பெண் + ஆசை

  • தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “பெண் + ண் + ஆசை” என்றாயிற்று
  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “பெண்ணாசை” என்றாயிற்று

2. நோயற்ற = நோய் + அற்ற

  • உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”  என்ற விதிப்படி “நோயற்ற” என்றாயிற்று

குறு வினா

1. ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம் எது?

ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம் சென்னை.

2. ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உவுண்மை நெறியை உருவாக்கி வளர்த்தவர் யார்?

வள்ளலார்

3. வள்ளலார் ஆன்மிக மையத்தை ஏற்படுத்திய இடம் எது?

வடலூர்

4. வள்ளலார் சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்தது எது?

வள்ளலார் சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்தது கந்தகோட்டம்.

5. இராமலிங்க அடிகளார் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?

மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்

6. திருவருட்பா குறிப்பு வரைக

  • திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய பாடல்களின் தொகுப்பு
  • திருவருட்பாவில் 5818 பாடல்களை கொண்டது
  • பா – ஆசிரியவிருத்தம்
  • ஆறு திருமுறையாக தொகுக்கப்பட்டது.
  • நமது பாடப்பகுதியில் உள்ள தெய்வமணிமாலை ஐந்தாம் திருமுறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

சில பயனுள்ள பக்கங்கள்

If you can any doubts about the section Just comment below the Comment Section. We will clarify as soon as possible. Al the Best…

Leave a Comment